சென்னைப் புத்தகக் காட்சி: தொடரும் துயரங்கள்

  சென்னைப் புத்தகக் காட்சி: தொடரும் துயரங்கள் மு.சிவகுருநாதன்           ‘பபாசி’ என்று அழைக்கப்படும்  தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கம் (BAPASI) சென்னைப் புத்தகக் காட்சியை தொடர்ந்து நடத்தி வருகிறது. 1976 இல்  மிகச்சிறிய அளவில் சுமார் 30 கடைகள் என்றளவில் தொடங்கிய  இப்புத்தகத் திருவிழா 46 ஆண்டுகளில் 900க்கும் மேற்பட்ட கடைகளில் என்கிற பிரமாண்ட அளவில் விரிவடைந்துள்ளது. இதற்கு நூல்களை வாங்கி வாசிக்கும் பெரும் வாசகர் கூட்டமே காரணமாகும். தமிழ் அறிவுலகம் பெருமை”  சென்னைப் புத்தகக் காட்சி: தொடரும் துயரங்கள்”-ஐ படிப்பதைத் தொடரவும்.

110 ஆண்டு ஓடம்போக்கி இயக்கு அணை!

110 ஆண்டு ஓடம்போக்கி இயக்கு அணை! மு.சிவகுருநாதன்           விளமல் கல் பாலம் என்றழைக்கப்படும் விளமல் இயக்கு அணை (ரெகுலேட்டர்) திருவாரூர்  ஓடம்போக்கி ஆற்றில் அமைந்துள்ளது.         இது 110 ஆண்டு பழமையானது. பிரிட்டிஷ் ஆட்சியில்  1912 இல் கட்டப்பட்டது. இன்று நாங்கள் மூவரும் (கவி, கயல்) இந்த இயக்கு அணையைப் பார்வையிட்டோம். சில படங்கள்… 100 வயதை  நெருங்கும் ரெகுலேட்டருடன் கூடிய விளமல் கல் பாலம்                                                     கட்டப்பட்ட ஆண்டு :1912                                                        100 வது“110 ஆண்டு ஓடம்போக்கி இயக்கு அணை!”-ஐ படிப்பதைத் தொடரவும்.

பாரதியின் தலைமறைவு வாழ்க்கையில்…

பாரதியின் தலைமறைவு வாழ்க்கையில்… மு.சிவகுருநாதன்         104 ஆண்டுகளுக்கு முன்பு 1918 இல் பாரதியின் தலைமறைவு வாழ்க்கையில் 10 நாள்கள் தங்கியிருந்த இடம் மேலநாகை என்னும் கிராமம்.  திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி வட்டம் நெடுவாக்கோட்டை ஊராட்சிக்கு உள்பட்ட மேலநாகை என்னும் இச்சிற்றூர் உள்ளது.     அங்கு  தியான மண்டபம் ஒன்றைக்  கட்டியிருக்கிறார்கள்.     27.05.2018  அன்று  மாலை எனது மூத்த மகள் கவிநிலாவுடன் ஒருமுறை  மேலநாகை சென்று வந்தேன். அப்போது எடுக்கப்பட்ட மூன்று படங்களும் இங்கே உள்ளன.“பாரதியின் தலைமறைவு வாழ்க்கையில்…”-ஐ படிப்பதைத் தொடரவும்.

கிரிக்கெட்  திடலான யுனெஸ்கோ மரபுச்சின்னம்!

கிரிக்கெட்  திடலான யுனெஸ்கோ மரபுச்சின்னம்! மு.சிவகுருநாதன்          09/07/2022 சனியன்று கவிநிலா, கயல்நிலாவுடன் தஞ்சை சென்று வரலாம் என்று கிளம்பினோம். மதியம் 2:10 (14:10) காரைக்கால்-திருச்சிராப்பள்ளி பயணியர் தொடர்வண்டியில் (எண்:56711)  செல்லலாம் என்று நினைத்தோம். கொரோனாவால் நிறுத்தப்பட்ட அத்தொடர்வண்டி இன்னும் இயக்கப்படவே இல்லையாம்! பேருந்துகளின் நிலையும் அவ்வாறுதான் உள்ளது. இயல்புநிலைக்குத் திரும்பிவிட்டதாக நாம் நினைத்துக் கொண்டுள்ளோம். மணிக்கணக்கில் காத்திருந்தும் தஞ்சாவூர்-திருச்சி வழியில் செல்லும் பேருந்துகள் வரவில்லை.           நேரமாகிவிட்டதால் தஞ்சை சென்று திரும்புவதில் காலதாமதம் ஏற்படும் என்பதால்“கிரிக்கெட்  திடலான யுனெஸ்கோ மரபுச்சின்னம்!”-ஐ படிப்பதைத் தொடரவும்.

தரங்கம்பாடி டேனிஷ் கோட்டை

தரங்கம்பாடி டேனிஷ் கோட்டை   மு.சிவகுருநாதன்     நேற்று முன்தினம் ஆகஸ்ட் 12, 2018 (12.08.2018) மாலை வேளையில் எனது மூத்த மகள் கவிநிலா மற்றும் இணையர் ரம்யாவுடன் தரங்கம்பாடி சென்றோம். சுமார் ஒரு மணிநேரம் கோட்டை மற்றும் கடற்கரையில் இளைப்பாறினோம். சில ஆண்டுகளுக்கு முன்பு அ.மார்க்ஸ் மற்றும் ஜெயா அம்மாவுடன் அனல் மின்நிலையங்களுக்கான ஒரு உண்ணாவிரதப் போராட்டத்தின்போது மதிய உச்சி வெயிலில் டேனிஷ் கோட்டைக்குச் (Fort Dansborg) சென்றோம். தரங்கம்பாடி அரசு மருத்துவமனையில் பணியாற்றிய“தரங்கம்பாடி டேனிஷ் கோட்டை”-ஐ படிப்பதைத் தொடரவும்.

போராடத் தூண்டும் அரசுகள்

போராடத் தூண்டும் அரசுகள் மு.சிவகுருநாதன் ஒரு முதுமரத்தைத் தேடி அகரத்திருநல்லூர் சுடுகாட்டிற்குச் சென்றபோது அவ்விடத்திற்கு சிறிதும் தொடர்பில்லாத ஒரு கட்டடம் காணப்பட்டது. இது என்ன என்று வினவியபோது டாஸ்மாக் என்று பதில் வந்தது. கடந்த ஒரு மாதமாகவே அங்கு கடை திறக்கப்போவதாக தகவல் வந்து கொண்டிருந்தது. அந்தக் கட்டடம் கட்டத் தொடங்கியதிலிருந்து பிரச்சினையும் ஆரம்பமானது. தொடர் போராட்டம் நடந்தபிறகு காவல்துறை குவிக்கப்பட்டது. பிறகு வேறு வழியின்றி கடை மூடிக்கிடக்கிறது. இந்த மூடல் தற்காலிமானதா. நிரந்தரமா எனத் தெரியவில்லை.“போராடத் தூண்டும் அரசுகள்”-ஐ படிப்பதைத் தொடரவும்.

தொன்மையைத் தேடி… (இரண்டாம் பகுதி)

தொன்மையைத் தேடி… (இரண்டாம் பகுதி) மு.சிவகுருநாதன் திருவாரூர் மாவட்டத் தொன்மைப் பாதுகாப்பு மன்ற பள்ளி ஒருங்கிணைப்பாளர்களுக்கு ஒருநாள் பயிற்சி 22.07.2017 மன்னார்குடி பின்லே மேனிலைப்பள்ளியில் நடைபெற்றது. நம்முடைய அச்சத்தை மெய்பிக்க இங்கு பேசப்பட்ட செய்திகளே போதுமான சான்றுகளாகும். அமர்வதற்கு இடவசதி மற்றும் இருக்கை வசதிகள் இன்றி இம்மாதிரி கூட்டங்களும் பயிற்சிகளும் ஏன் ஏற்பாடு செய்யப்படுகின்றன என்று தெரியவில்லை? 100 பெருக்கு என்றால் அங்கு 50 பேருக்குத்தான் வசதிகள் இருக்கும். மீதிப்பேர் வரமாட்டார்கள் என்கிற எண்ணமா என்று கேட்கத்“தொன்மையைத் தேடி… (இரண்டாம் பகுதி)”-ஐ படிப்பதைத் தொடரவும்.

வாக்ரிகளின் வதைபடும் வாழ்வு

வாக்ரிகளின் வதைபடும் வாழ்வு – மு. சிவகுருநாதன் ஒரு முன் குறிப்பு: குருவிக்காரர்கள், நரிக்குறவர்கள் என்று சமூகத்தால் இழிவாகப் பார்க்கப்படும் நாடோடிக் கூட்டத்தினர் (Gypsies) தங்களை நெறிக்குறவர்கள் என்றும் அழைத்துக் கொள்கின்றனர் (உபயம்: மு. கருணாநிதி). இவர்கள் பேசும் மொழி ‘வாக்ரி போலி’. ‘ வாக்’ என்றால் மராத்தியில் ‘புலி’ என்று பொருள்; ‘வாக்ரி’ என்றால் ‘புலியினத்தவ’ர் என்றும் பொருள். மொழியடிப்படையில் மக்களை அடையாளப்படுத்தும் மரபின்படி இச்சமூகத்தை ‘வாக்ரிகள்’ என்றழைப்பதே மிகப் பொருத்தமாக இருக்க முடியும். இனி“வாக்ரிகளின் வதைபடும் வாழ்வு”-ஐ படிப்பதைத் தொடரவும்.