தமிழக பள்ளிக்கல்விப் பிரச்சினைகள் குறித்து சில கருத்துகள்


தமிழக பள்ளிக்கல்விப் பிரச்சினைகள் குறித்து சில கருத்துகள்

                                                                                                  – மு.சிவகுருநாதன்

(இக்குறிப்பு அ.மார்க்ஸ் அவர்களின் முகநூல் பக்கத்தில் மே 19 (19.05.2015) அன்று வெளியானது. இது ஒரு பகுதிதான்; இன்னும் விரிவாக ஆய்வு செய்யப்படவேண்டும். தோழர் அ.மார்க்ஸ் அவர்களது அன்புக்கு நன்றி. அவரது குறிப்பு கூச்சத்தைத் தருகிறது; உருப்படியாக எதுவும் செய்யாமல் வெறுமனே பொழுதைக் கழிப்பதை நினைத்து.)

(சிவகுருநாதன் முனியப்பன் என முகநூலில் செயல்படும் இனிய நண்பர். சிவகுருநாதன் ஓர் ஆசிரியர் மட்டுமல்ல; ஒரு சமூகப் பொறுப்பு மிக்க சிந்தனையாளரும், எழுத்தாளரும் கூட. பாட நூல்களில் உள்ள பிழைகள் குறித்து அவர் சமீபத்தில் தமிழ் இந்து நாளிதழில் எழுதியிருந்த கட்டுரை முக்கியமான ஒன்று. கீழே பதிவிட்டுள்ள கட்டுரையில் நமது கல்வியமைப்பில் உள்ள குறைபாடுகளில் ஆசிரியர், பெற்றோர், சமூகம், ஆசிரியர் இயக்கம், அரசு ஆகியோரின் பங்கைத் துல்லியமாகத் தொகுத்துள்ளார். நமது பிள்ளைகள் எப்படியாவது அதிக மதிப்பெண்கள் பெற்று தேறினால் போதும் என எண்ணாமல் நமது பிள்ளைகளைக் ‘கற்றோர்கள்’ என்கிற சொல்லின் உண்மைப் பொருளில் கற்றோர்கள்ஆக்க முயற்சிப்போம். இனி சிவகுருநாதன். – அ.மார்க்ஸ்)

1. ஆசிரியர்கள்

1. பெரும்பான்மையான ஆசிரியர்கள் இன்னும் பழமைவாத சமூக மதிப்பீடுகளிலிருந்து மீண்டு வரவில்லை. குறிப்பாக குருகுலக்கல்வி முறை.

2. செயல் வழி கற்றல், CCE மதிப்பீடு முறை போன்ற புதிய அணுகுமுறைகளுக்கு இவர்கள் எதிராகவே உள்ளனர்.

3. பணி அறம் இல்லை.

4. பன்மைத்துவத்தை உணர்வதேயில்லை.

5. நிர்வாகம் கொடுக்கும் தேர்ச்சி விழுக்காடு அழுத்தம் காரணமாக 10,12 வகுப்புக்களை மட்டும் கவனிக்கும் தனியார் பள்ளி பார்முலாவை அரசுப்பள்ளிகளும் தற்போது பின்பற்றத் தொடங்கியுள்ளன. இதனால் 6 -9 மற்றும் 11 ஆம் வகுப்புப் பாடங்கள் பெருமளவில் நடத்தப்படுவதே இல்லை. அந்த வகுப்புகளுக்கு ஆசிரியர்கள் செல்வது கூட கிடையாது.

6. மாணவர்கள் தங்களது அடிமைகள் என்ற குருகுல மனப்பான்மையே நிலவுகிறது. தங்களது அனைத்து வேலைகளையும் மாணவர்கள் செய்யவேண்டும், அதுதான் அவன்/ அவள் கடைமையென ஆசிரியர்கள் நினைப்பதுதான் வேதனை.

7. தனிப்பயிற்சி நடத்திகிறார்கள்.

8. ரியல் எஸ்டேட், வட்டிக்கடை என பல தொழில்கள் நடத்துகிறார்கள்.

9. தங்களது குழந்தைகளை அரசுப்பள்ளிகளில் படிக்க வைப்பதில்லை.

10. தமிழ் வழியிலும் படிக்க விடுவதில்லை. ஆனால் தமிழை முதன்மைப்பாடமாக வைக்கவேண்டும் எனக் கோருவதில் மட்டும் குறைச்சலில்லை.

2.ஆசிரிய இயக்கங்கள்

1. இயக்கங்கள் ஆசிரியர் பிரச்சினைகளை மட்டும் பேசி மாணவர்கள் மற்றும் சமூகப் பிரச்சினைகளைக் கண்டுகொள்ள மறுக்கின்றன.
2. அதிகாரத்துடன் இணைந்து ஊழல் போன்றவற்றில் சமரசம் செய்துகொள்கின்றனர்.
3. மாணவர்களைத் தண்டிக்கும் உரிமைகேட்டுப் போராடுகிறார்கள்.
4. பள்ளிக்கல்வியில் 50 க்கு மேறபட்ட இயக்கங்கள் உள்ளன. இவர்களிடத்தில் ஒருங்கிணைப்பு இல்லை. தற்போது கூட்டமைப்பு தொடங்கப்பட்டிருந்தாலும் போராட்டங்கள் தாண்டிய ஒருங்கிணைப்பு, கோரிக்கைகளை முன்னெடுத்தல், சமூக இணக்கம் போன்றவை அறவே இல்லை.
5. ஆறாவது ஊதியக்குழுவின் பரிந்துரை, பின்னர் அமைக்கப்பட்ட ஒரு நபர் குழுவின் பரிந்துரை ஆகியவற்றிலுள்ள பல்வேறு பாதிப்புகள் மற்றும் முரண்பாடுகளைக் கண்டுகொள்ளாமல் சட்டமேலவை உறுப்பினர் பதவிகளுக்காக காத்திருந்ததுதான் இவர்களிடமிருந்த மிகப்பெரிய ஒற்றுமை.

3.அரசுகள் – துறைகள்

1. நிர்வாகத்தில் கீழிருந்து மேல்மட்டம் வரை ஊழல் மலிந்து கிடக்கிறது. ஊழல் அதிகார்கள் பட்டியலில் பள்ளிக்கல்வித்துறைச் செயலாளர் ஆறாவது இடத்தில் இருக்கிறார்.

2. ஆசிரியர் பணியிட மாறுதலில் பெரும் ஊழல் நடைபெறுகிறது. காலைப்பணியிடங்களை முன்பே பணம் பெற்றுக்கொண்டு மறைத்துப் போலியான கலந்தாய்வு கண்துடைப்பாக நடக்கிறது.

3. ஆறாவது ஊதியக்குழுவில் தொடக்கப்பள்ளிகளில் பணியாற்றும் இடைநிலை ஆசிரியர்களது தரஊதியத்தில் பெருத்த அநீதி இழைக்கப்பட்டது. இது அவர்களது வேலைத்தரத்தை பெருமளவு பாதித்துள்ளது.

4. இலவச கட்டாயக் கல்வி உரிமைச்சட்டம் (2009) ஐ நடைமுறைப்படுத்தும் ஆரவம் இல்லை.

5. அனைவருக்கும் தொடக்கக் கல்வித்திட்டம் (SSA), அனைவருக்கும் இடைநிலைக் கல்வித்திட்டம் (RMSA) போன்ற திட்டங்களின் முன்னேற்றம் ஏட்டில் இருக்கிறதே தவிர நடைமுறையில் இல்லை.

6. திட்டங்கள், உத்திகள் எல்லாம் மேலிருந்து திணிக்கப்படுகிறது. எனவே தோற்றுப்போகிறது.

7. நபார்டு கடனுதவி, SSA – RMSA நிதியுதவி போன்ற எந்த திட்டத்தின் கீழ் கட்டப்பட்டுள்ள பள்ளிக் கட்டடங்கள் அனைத்தும் தரமற்றவை. காரணம் ஊழல். இவை 10 ஆண்டுகள் கூட தாக்குபிடிப்பதில்லை. இங்கு கட்டப்படும் கழிப்பறைகள் ஓராண்டு கூட பயன்படுத்த முடியாதவை. மாடி வகுப்பறை இருக்கும் பள்ளிகளில் கூட மேற்புரம் திறந்த கழிப்பறைகள் அமைக்கும் அவலம்.

4.பாடத்திட்டங்கள்

1. பாடநூற்கள் பிழைகள் மலிந்தவை. இவற்றைச் சரிசெய்ய எந்த முயற்சியும் இல்லை.

2. அரத பழசான தேர்வு முறையை மாற்றுவது குறித்து யாரும் பேசுவதில்லை.

3. CCE மதிப்பீடு முறை 1 முதல் 9 முடிய உள்ள வகுப்புகளுக்கு இருந்தாலும் அங்கும் தொகுத்தறி மதிப்பீட்டிற்கு அளிக்கும் முக்கியத்துவம் மீண்டும் பழைய முறையில் சரண்டைவதைத்தான் காட்டுகிறது.

4. 11, 12 பாடநூற்கள் பல ஆண்டுகளாக மாற்றப்படாமல் உள்ளது. இந்த வேலை ஒவ்வொரு ஆண்டும் ஒத்திவைக்கப்படுகிறது.

5. ஆசிரியர் கல்வியியல் பட்டயம் மற்றும் பட்டப்படிப்புகளுக்கான பாடத்திட்டங்களும் மாற்றுக்கல்வி போன்ற நவீன சிந்தனைகள், உத்திகள் ஆகியவற்றை உள்வாங்கியதாக இல்லை.

6. 10 ஆம் வகுப்பு வரை பாடத்தை மிகவும் குறைத்து 11, 12 இல் அதிகளவு பாடச்சுமையை ஏற்றும் போக்கு உள்ளது.

7. ஆசிரியர்களுக்கு வழங்கப்படும் பணியிடைப்பயிற்சிகள் வெறும் நாட்களை நகர்த்துவதாக உள்ளது. இதில் புதியன எதுவுமில்லை.

5.பெற்றோர் – சமூகம்

1. தங்கள் குழந்தைகள் நிறைய படிக்கவேண்டும் என பெற்றோர் எதிர்பார்க்கின்றனர். குழந்தைகளின் மனநலம் குறித்த புரிதல் அவர்களுக்கு இல்லை.
2. இலவசமாக வருவது தரமற்றது என்கிற மனப்பான்மை மேலோங்கியிருக்கிறது.
3. சமச்சீர் பாடங்கள் என்றாலும் தனியார் பள்ளிகளில் கூடுதலாக சொல்லிக் கொடுக்கப்படிகிறது என்ற தப்பெண்ணம் மற்றும் மோகம் நடுத்தர வர்க்கத்தினரை தனியார் பள்ளிகளை நோக்கித் தள்ளுகிறது.
4. போட்டி மிகுந்த இன்றைய சூழலில் எத்தகைய குறுக்கு வழிகளையும் பின்பற்றி வெற்றி பெற விரும்பும் மேல்தட்டு, நடுத்தர வர்க்க மனப்பான்மை அனைவரையும் ஆட்டுவிக்கிறது.
5. அரசுப்பள்ளிகளில் உள்கட்டமைப்பு வசதிகள் மிகவும் குறைவு. நிதி செலவிடப்படுகிறதே தவிர தரத்தில் மேம்பாடில்லை. இதுவும் பெற்றோர் தனியார் பள்ளிகளை நாட ஓர் காரணம்.

என்ன செய்யலாம்?

1. தனியார் பள்ளிகளை புற்றீசல் போல் பெருக வைத்துவிட்ட அரசுகள் அவற்றைக் கண்காணிக்கவேண்டிய பொறுப்பு இருப்பதை மறந்துவிடுகின்றன. இவற்றை ஒழுங்குப்படுத்தி கட்டுப்படுத்த வேண்டியது அரசின் கடமையாகும்.
2. சுயநிதிப்பள்ளிகளின் கல்விக் கொள்ளையைத் தடுக்கவேண்டும். அரசு உதவி பெறும் பள்ளிகள் முக்கால் பங்கு சுயநிதிப் பள்ளிகளாக மாறியதற்கும் அரசே காரணம். இவற்றையும் ஒழுங்குபடுத்தி இடஒதுக்கீடு அமல் செய்யபடுவதையும் உறுதி செய்யவேண்டும்.
3. 10 ஆம் வகுப்பு அரசு பொதுத்தேர்வை ஒழித்தல். CCE மதிப்பீடு முறையை மேம்படுத்தி 11, 12 வகுப்புக்களுக்கும் அமல் செய்தல்.
4. ஆசிரியர்களுக்கு முறையான பயிற்சியளித்தல்.
5. ஊழலை ஒழித்தல். வெளிப்படையான நிர்வாகம்.
6. பாடத்திட்டங்களை சீர்மைப்படுத்துதல்; குறைகளைக் களைதல்.
7. தொடக்கப்பள்ளிகளுடன் மழலையர் வகுப்புகளைத் தொடங்குதல்.
8. பள்ளிக்கல்வியை முற்றிலும் அரசுடைமையாக்குதல். முதல் கட்டமாக தொடக்கக் கல்வி நிலையங்களை அரசே ஏற்று நடத்துதல்.

மு.சிவகுருநாதன் பணி அனுபவம்: 20 ஆண்டுகள்

ஊ.ஒ.தொடக்கப்பள்ளி – இடைநிலை ஆசிரியர் – 1 ஆண்டு – வகுப்புகள்: 1 – 5

அரசு மேனிலைப்பள்ளி – இடைநிலை ஆசிரியர் – 13 ஆண்டுகள் – வகுப்புகள்: 6 – 8

அரசு மேனிலைப்பள்ளி – பட்டதாரி ஆசிரியர் (சமூக அறிவியல்) – 6 ஆண்டுகள் – வகுப்புகள்: 6 – 10

நன்றி: அ.மார்க்ஸ்

Advertisements

About பன்மை

நான் ஒரு வாசகன். படிப்பதுதான் எனது பொழுதுபோக்கு.எப்போதாவது கொஞ்சம் எழுதுபவன்.
This entry was posted in கல்வியியல் and tagged , . Bookmark the permalink.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s