மரிச்சாபி மற்றும் இதர வன்கொடுமைகளுக்கான நீதி, இழப்பீடு கேட்டு தொடர் இயக்கம்


மரிச்சாபி மற்றும் இதர வன்கொடுமைகளுக்கான நீதி, இழப்பீடு கேட்டு தொடர் இயக்கம்

வழக்கறிஞர் பொ.இரத்தினம்

அமைப்பாளர்,

பகத்சிங் மக்கள் சங்கம்.

தொடர்புக்கு: 9443458118

‘அறிவை ஆயுதமாக்குவோம்!”

“நம்மிடம் முழு நியாயமும் வலுவான நேர்மையும் இருக்கும்போது நாம் ஏன் தயங்கவேண்டும்?”

– மானிதர் அம்பேத்கர்

இந்தியாவெங்கும் பல்வேறு காலகட்டங்களில் நிகழ்த்தப்பட்ட மரிச்சாபி போன்ற வன்கொடுமைகளுக்காக “ஆகஸ்ட் 14 -ல் 5 நிமிடங்கள் அஞ்சலி செலுத்துவோம்!”, என்ற துண்டறிக்கையை வெளியிட்டோம். தோழமை சக்திகளை ஒருங்கிணைத்து இதனை ஓர் மக்கள் இயக்கமாக முன்னெடுக்க வேண்டிய தேவை இருக்கிறது. நாம் அதற்காக பலகட்ட பணிகளைச் செய்யவேண்டியுள்ளது.

1979 இல் கொல்கத்தாவிலிருந்து 75 கி.மீ. தொலைவில் இருக்கும் மரிச்சாபி தீவில் சுமார் 20,000 பேர் படுகொலை செய்யப்பட்ட இக்கொடிய நிகழ்வை அம்பலப்படுத்த, அடுத்த கட்டமாக நூற்றுக்கணக்கான வழக்கறிஞர்கள், சமூக ஆர்வலர்கள் கையொப்பமிட்ட வேண்டுகோள் கடிதம் பிரதமர், மேற்கு வங்க முதல்வர் ஆகியோருக்கு அனுப்பட உள்ளது.

தலித்கள் மீதான வன்கொடுமைகள் ஆய்வு செய்து பட்டங்கள் பெறுவதற்கும் நூற்கள் வெளியிடுவதற்குமான ஓர் அவலநிலை இங்குள்ளது. அதனை அடுத்த கட்டத்திற்கு நகர்த்தவும், அம்மக்களுக்கு நீதியும் இழப்பீடும் வாங்கித்தரவும், ஆக்கப்பூர்வமான காரியம் செய்வதற்கும் பலர் கவனம் செலுத்துவதில்லை. தலித்கள் சந்திக்கும் அவலங்களை புத்தகங்கள் போட்டு பணக்காரர்கள் ஆகிவிடுவதை, ஆனந்த தெல்தும்டே வருத்தத்துடன் ஒருமுறை பதிவு செய்தார்.

மதுரையைச் சேர்ந்த ‘நெம்புகோல்’ பதிப்பகம், பகத்சிங் படைப்புகளை அழகான தமிழில் வெளியிட்டுள்ளது. பகத்சிங் அந்த வயதிலும் நல்ல நோக்கத்திற்காக தெளிவாக செயல்பட்டுள்ளார். பகத்சிங் இருட்டடிப்பு செய்யப்பட்ட மாபெரும் போராளி. இவது எழுத்துகளை இனிய தமிழில் மொழிபெயர்த்து வெளியிட்டுள்ளதை மக்களிடம் கொண்டு சேர்ப்போம்.

(“கேளாத செவிகள் கேட்கட்டும்’ தியாகி பகத்சிங் கடிதங்கள், கட்டுரைகள் மற்றும் பிற ஆவணங்கள் வெளியீடு: நெம்புகோல் பதிப்பகம், மதுரை. அலைபேசி எண்: 9443080634)

1984 இல் நிகழ்த்தப்பட்ட சீக்கியர்களுக்கு எதிரான வன்கொடுமைகளில் பாதிக்கப்பட்டவர்களுக்கு மோடி அரசு நிவாரணம் வழங்கியது. வழிப்பறித் திருடனால் கொல்லப்பட்ட தலைமைக்காவலருக்கு ஜெயலலிதா ஒரு கோடி இழப்பீடு வழங்கியுள்ளார். ஆண்டுகள் பல ஆனாலும் இம்மக்களுக்கு உரிய நீதி நிலைநாட்டப்படவேண்டும்.

அரசியல் சட்டம் எதிர்பார்ப்பதைவிடக்க் கூடுதலாக இந்த வேலைகளைச் செய்பவர்கள், அரசியல் சட்டத்தைப் பின்னுக்கு தள்ளிவிடுவதில் முன்னணியில் இருக்கிறார்கள். இது முகமுடி அரசியலுக்குப் பயன்படுத்தப்படுகிறது. நாம் இதனை அம்பலப்படுத்த வேண்டும்.

வெண்மணி சம்பவங்களை தங்கள் இயக்கத்தை வளர்க்கும் வழியாகவே இடதுசாரிகள் பார்க்கின்றனர். அம்மக்களுக்கான நீதி, நிவாரணம் குறித்து யோசிக்கவில்லை. அரசியல் கட்சிகளைப் போலவே குழுக்களும் சீரழிந்து கிடக்கின்றன. இவற்றை மக்களுக்குப் புரியவைத்து பெருந்திரள் மக்கள் இயக்கமாக செலுத்தும் வேலையை தோழமை சக்திகளுடன் இணைந்து ‘பகத்சிங் மக்கள் சங்கம்’ செய்ய விழைகிறது.

Advertisements

About பன்மை

நான் ஒரு வாசகன். படிப்பதுதான் எனது பொழுதுபோக்கு.எப்போதாவது கொஞ்சம் எழுதுபவன்.
This entry was posted in அறிக்கை, Uncategorized and tagged . Bookmark the permalink.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s