03. மொழியாக்கப் புலிகள்!


03. மொழியாக்கப் புலிகள்!

– மு.சிவகுருநாதன்

7-ss-ii

தமிழ் மன்னர்களின் வட இந்திய மற்றும் அந்நிய படையெடுப்புகள், வெற்றிகள், கொள்ளையிடல்கள், மக்கள் சிறைப்பிடிக்கப்படுதல் அனைத்தையும் இங்கு சாதனையாக, வீரமாக, மொழி மற்றும் இனப் பெருமையாகக் கட்டமைக்க நமது பாடநூற்கள் தவறுவதேயில்லை.

ஆனால் மறுபுறம் கஜினி முகமதுவின் சோமநாதபுரம் படையெடுப்புகள், முகமது கோரியின் படையெடுப்புகள் போன்றவைகள் பற்றி வெறுப்புணர்வை ஊட்டும் வகையில் வரலாற்றுப் பாடங்கள் எழுதப்படுகின்றன.

வரலாற்றறிஞர் ரொமிலா தாப்பர் ‘Somanathan The Many Voices of a History’ என்னும் நூலில் வரலாற்றின் நோக்குநிலைகளையும் பலகுரல்கள் ஒலிப்பதையும் பதிவு செய்கிறார். ‘கஜினி முகமது: சோமநாதா படையெடுப்பு – வரலாற்றின் பல குரல்கள்’ நூலை (ரொமிலா தாப்பர் நூலை முன்வைத்து.. சஃபி) பாரதி புத்தகாலயம் வெளியிட்டுள்ளது. இதைப் பற்றி வெறொரு சமயத்தில் பார்ப்போம்.

இங்கு கஜினி முகமது தொடர்பான ஏழாம் வகுப்பு சமூக அறிவியல் பாடத்தில் உள்ள மொழியாக்கக் குளறுபடியை நோக்குவோம்.

“Muhammad – bin – Baktiyar Khilji, one of the commanders of Muhammad of Ghori, destroyed Vikramasila and Nalanda Universities 1202 – 1023 A.D.

He also captured Nadia in Bengal and parts of Bihar”.

(page: 138, சமூக அறிவியல், ஏழாம் வகுப்பு, ஆங்கில வழி, இரண்டாம் பருவம், திருத்தப்பட்ட பதிப்பு – 2016)

இப்பாடப்பகுதியை ஒட்டி கோடிட்ட இடங்களை நிரப்புக (Fill in the blanks) வினா ஒன்று கேட்கப்படுகிறது.

4. Muhammad – bin – Baktiyar Khilji captured Nadia in ———-. (Answer: Bengal or 1202 – 1203 A.D.)

(page: 138, , சமூக அறிவியல், ஏழாம் வகுப்பு, ஆங்கில வழி, இரண்டாம் பருவம், திருத்தப்பட்ட பதிப்பு – 2016)

இதற்கு மேலே கொடுக்கப்பட்ட இரண்டு விடைகள் சாத்தியமெனினும் “He also captured Nadia in Bengal”, என்ற வரியைக் கொண்டு Bengal என்ற விடையே பொருத்தமானது. மேலும் ‘in’ என்ற இடைச்சொல்லுக்குப் (Preposition) பிறகு கி.மு. (B.C.) அல்லது கி.பி. (A.D.) என்ற குறிப்பு இருந்தால் ஆண்டு மட்டுமே சரியானது என்று சொல்லமுடியும். 2 வது வினா அப்படித்தான் கேட்கப்படுகிறது. அவ்வினாவும் கீழே தரப்படுகிறது.

2. Muhammad – bin – Quasim invade sind in ——— A.D. (Answer: 712)

(page: 138, , சமூக அறிவியல், ஏழாம் வகுப்பு, ஆங்கில வழி, இரண்டாம் பருவம், திருத்தப்பட்ட பதிப்பு – 2016)

இப்போது தமிழ் வழிப் பாடாநூலுக்குள் செல்வோம்.

“ முகமது கோரியின் தளபதி முகமது – பின்- பக்தியார் கில்ஜி என்பார், கி.பி. 1202 – 1203 ஆண்டுகளில் விக்ரமசீலா, நாளந்தா ஆகிய பலகலைக்கழகங்களை இடித்துத் தள்ளியதோடு வங்காளத்தில் நடியா பகுதியையும் பீகார் பகுதியையும் கைப்பற்றினார்”

(பக். 142, சமூக அறிவியல், ஏழாம் வகுப்பு, தமிழ் வழி, இரண்டாம் பருவம், திருத்தப்பட்ட பதிப்பு – 2016)

இதில் 4 வது வினா கீழ்க்கண்டவாறு மொழியாக்கப்படுகிறது.

4. முகமது – பின் – பக்தியார் கில்ஜி ————— ஆண்டில் நடியா பகுதியைக் கைப்பற்றினார். (விடை: கி.பி. 1202 – 1203)

(4. Muhammad – bin – Baktiyar Khilji captured Nadia in ———-. )

இரண்டாவது வினாவையொட்டி 4 வது வினாவும் ஒரே மாதிரியாக மொழிபெயர்க்கப்படுகிறது. இதில் ஆண்டை தேவையின்றி நுழைக்க வேண்டிய அவசியமென்ன? ஒரே வினாவிற்கும் தமிழில் ஒரு பதிலும் ஆங்கிலத்தில் வேறு பதிலும் இருக்கலாமா? இதுதான் வினாவின் நம்பகமா?

2. முகமது – பின் – காசிம் ————- ஆண்டில் சிந்து மீது படையெடுத்தார்.

(விடை: 712)

2. Muhammad – bin – Quasim invade sind in ——— A.D.

இன்னும் கொஞ்சம். இங்கு ‘parts of Bihar’ என்பது பீகார் பகுதியா அல்லது பீகாரின் சில பகுதிகளா? இவற்றிற்கிடையே நுண்மையான வேறுபாடு உள்ளது. பழங்காலத்திலும் பிரிட்டிஷ் ஆட்சியிலும் வங்காளத்துடன் இணைந்த பகுதியாகவே பீகார் இருந்தது அல்லவா!

இது ஓர் உதாரணம் மட்டுமே. பாடநூற்களைக் கூர்ந்து அவதானித்தால் நிறைய தட்டுப்படும் என்று மட்டும் இப்போதைக்கு சொல்லி வைப்போம்.

Advertisements

About பன்மை

நான் ஒரு வாசகன். படிப்பதுதான் எனது பொழுதுபோக்கு.எப்போதாவது கொஞ்சம் எழுதுபவன்.
This entry was posted in கல்விக்குழப்பங்கள், Uncategorized and tagged . Bookmark the permalink.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s