ஆதித்யா – ஆருஷி கொலை வழக்குகள் :- வெளிவர மறுக்கும் உண்மைகள்.

ஆதித்யா – ஆருஷி  கொலை வழக்குகள் :- வெளிவர மறுக்கும் உண்மைகள். – மு. சிவகுருநாதன் நான்கு வயதுச் சிறுவன் ஆதித்யாவை கடத்திக் கொலை செய்த வழக்கில் பூவரசிக்கு சென்னை கூடுதல் செ­ன்ஸ் நீதிமன்ற நீதிபதி சேதுமாதவன், சிறுவன் ஆதித்யாவைக் கடத்தியதற்கு 7 ஆண்டு சிறைத் தண்டனை, ரூ. 50000/- அபராதமும் கொலை செய்ததற்கு ஆயுள் தண்டனை, ரூ.50000/- அபராதமும் விதித்து இத்தண்டனையை ஏக காலத்தில் அனுபவிக்க வேண்டும் என்றும் அபராதத் தொகையில் ரூ. 90000/-ஐ சிறுவனின்“ஆதித்யா – ஆருஷி கொலை வழக்குகள் :- வெளிவர மறுக்கும் உண்மைகள்.”-ஐ படிப்பதைத் தொடரவும்.

யாருக்கும் சொரணை இல்லை!

யாருக்கும் சொரணை இல்லை!     -மு.சிவகுருநாதன் நாம் எதிர்பார்த்ததைப் போலவே ஊழல் கண்காணிப்பு ஆணையராக பி.ஜே.தாமஸ் நியமனம் செய்யப்பட்டதை உச்சநீதிமன்ற மூவர் பெஞ்ச் ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது.இது மிகவும் வரவேற்கபடவேண்டிய தீர்ப்பு. தலைமை ஊழல் கண்காணிப்பு ஆணையர் என்ற அரசியலமைப்பு உயர் பதவி நியமனம் பிரதமர், உள்துறை அமைச்சர், எதிர்க்கட்சி தலைவர் ஆகியோர் அடங்கிய மூவர் குழுவால் முடிவு செய்யபடுகிறது. எதிர்க்கட்சி தலைவர் சுஷ்மா சுவராஜ் -ன்  எதிர்ப்பை மீறி இந்த நியமனம் செய்யப்படுகிறது. பி.ஜே. தாமஸின் நியமனத்திற்கு“யாருக்கும் சொரணை இல்லை!”-ஐ படிப்பதைத் தொடரவும்.

செயல்வழிக் கல்வி, படைப்பாற்றல் கல்வி ஆகியன மாற்றுக்கல்வியாக பரிணமிக்காதது ஏன்?

செயல்வழிக் கல்வி, படைப்பாற்றல் கல்வி ஆகியன மாற்றுக்கல்வியாக பரிணமிக்காதது ஏன்? – மு. சிவகுருநாதன் தமிழகப் பள்ளிக் கல்வித் துறை செயல்வழிக் கல்வி (ABL), படைப்பாற்றல் கல்வி (ALM) போன்ற கற்பித்தல் முறைகளை அறிமுகம் செய்துள்ளது.  மேலும் இவ்வாண்டு முதல் சமச்சீர் கல்வி என்ற பெயரில் முதல் மற்றும் ஆறாம் வகுப்பிற்கு புதிய பாடநூற்களும் வெளியிடப்பட்டுள்ளன.  இவற்றைச் சிலர் பாவ்லோ ஃப்ரெய்ரே அறிமுகப்படுத்திய மாற்றுக் கல்விக்கு இணையாக வைத்து பாராட்டுகின்றனர்.  சிலர் மாற்றுக் கல்வியை நோக்கிய பயணத்தின்“செயல்வழிக் கல்வி, படைப்பாற்றல் கல்வி ஆகியன மாற்றுக்கல்வியாக பரிணமிக்காதது ஏன்?”-ஐ படிப்பதைத் தொடரவும்.

அம்பேத்கர் வாழ்வின் மூலம் அரசியலைப் புரிந்துகொள்ளும் முயற்சி.

அம்பேத்கர் வாழ்வின் மூலம் அரசியலைப் புரிந்துகொள்ளும் முயற்சி.  – மு. சிவகுருநாதன் (‘அம்பேத்கர் வாழ்வில் அறிந்து கொள்ளப்பட வேண்டிய சில அம்சங்கள்’ என்ற அ. மார்க்ஸ்-இன் குறுநூல் குறித்த பார்வை) தமிழகத்தில் தந்தை பெரியாருக்குக் கிடைக்காத நல்வாய்ப்பாய் அண்ணல் அம்பேத்கரின் பேச்சும் எழுத்தும் மற்றும் நாடாளுமன்ற விவாதங்கள் முழுமையும் 37 தொகுதிகளாக பல்லாயிரம் பக்கங்கள் மலிவு விலையில் இந்திய அரசால் வெளியிடப்பட்டுள்ளது.  ஆனால் அம்பேத்கரின் வாழ்க்கை வரலாறு என்று பார்த்தால் தனஞ்செய கீரின் நூல் மட்டுமே தமிழாக்கம்“அம்பேத்கர் வாழ்வின் மூலம் அரசியலைப் புரிந்துகொள்ளும் முயற்சி.”-ஐ படிப்பதைத் தொடரவும்.