கோயில் – மதம் – யானைகள்

கோயில் – மதம் – யானைகள் – மு. சிவகுருநாதன் (ச. முகமது அலி, க. யோகானந்த் ஆகியோரின் அழியும் பேருயிர் : யானைகள் (இரண்டாம் பதிப்பு) நூல் குறித்த பதிவு) ஜெ. ஜெயலலிதா ஆட்சிக்கு வந்தவுடன் கோயிலுக்கு யானையைத் தானமாக அளிக்கும் படலம் தொடங்கிவிட்டது. கூடவே இந்த யானைகளுக்கு முதுமலையில் புத்துணர்ச்சி முகாமும் நடத்துகிறார்கள். சிங்காரச் சென்னை என்று சொல்லி பிச்சைக்காரர்களை ஒழித்துக் கட்டும் இந்த ஆட்சியாளர்கள் கோயில், பக்தி என்ற பெயரால் யானைகளை பிச்சையெடுக்க“கோயில் – மதம் – யானைகள்”-ஐ படிப்பதைத் தொடரவும்.

ஏனிந்த இன – மொழி (கொல) வெறி?

ஏனிந்த இன – மொழி (கொல) வெறி? – மு. சிவகுருநாதன் (கூடங்குளம் மற்றும் முல்லைப் பெரியாறு அணை போன்ற பிரச்சினைகளின் ஊடாக இங்கு நடக்கும் இரு வேறு கண்ணோட்டங்கள் மற்றும் வெறித்தனங்கள் பற்றி எனது பார்வை)   “ஈடேற வழி: பாஷாபிமானம், தேசாபிமானம், மதாபிமானம், குலாபிமானம் ஆகியவற்றை விட்டொழிப்பதே” – தந்தை பெரியார் ஈ.வெ.ராமசாமி.   தமிழ் ஒரு காட்டுமிராண்டி மொழி என்று சொன்னதோடு நில்லாது, இனவெறி, மொழி வெறி, தேச வெறி, சாதி வெறி“ஏனிந்த இன – மொழி (கொல) வெறி?”-ஐ படிப்பதைத் தொடரவும்.

எனது கவிதை முயற்சிகள் – தலைப்பிடப்படாத இரு கவிதைகள்

எனது கவிதை முயற்சிகள் தலைப்பிடப்படாத இரு கவிதைகள் -மு.சிவகுருநாதன் 01 எவ்வளவோ வழிகள் சென்று திரும்ப அடைபட்டுப்போயினதென்றாலும் கிடைத்துவிட்டதாக முடியாத ஒன்றை சொல்லியும் விடலாந்தான் வந்து விட்டதற்கான சுய அடையாளங்களைத் தவிர்த்து எஞ்சியதையும் மாற்ற முடிந்தால்… இருப்பினும் விட்டுவிடத் தோன்றுகிறது இதுவும் நடக்கக்கூடும் பிடிமானம் கூடியிருக்காத வரையில்… 02 சாந்துப் பொட்டெடுத்து தூணில் எதோ எழுதிப் பார்க்கிறாள் தோளில் தொங்குகிற குழந்தையோடு எழுத்துக்கள் ஒன்றோடொன்று பிணைந்து குழந்தையைவிட வேகமாக அலறுகின்றன அவள் எழுதுவது எவன் பெயரை அறியத்துடிக்கும்“எனது கவிதை முயற்சிகள் – தலைப்பிடப்படாத இரு கவிதைகள்”-ஐ படிப்பதைத் தொடரவும்.

தமிழக காவல்துறையின் அட்டூழியங்கள்

தமிழக காவல்துறையின் அட்டூழியங்கள் – மு. சிவகுருநாதன் (இன்று டிசம்பர் 10, உலக மனித உரிமைகள் நாள்)   உலகம், இந்தியா, தமிழ்நாடு என எந்தப் பகுதியை எடுத்துக்கொண்டாலும் பேரளவில் மனித உரிமை மீறல்களில் ஈடுபடுவது ராணுவமும் காவல்துறைகளும் என்பதை அன்றாட நிகழ்வுகள் நிரூபிக்கின்றன. ஈராக் குடிமக்களை கொடுமைகளுக்குள்ளாக்கிய அபு கிரைப் சிறையில் அமெரிக்க ராணுவ வீரர்களின் வீடியோக்களை நாம் அவ்வளவு எளிதில் மறந்து விட முடியாது. இலங்கையில் நமது அமைதிப்படை வீரர்கள் பண்ணிய அக்கிரமங்கள் பழங்கதை.“தமிழக காவல்துறையின் அட்டூழியங்கள்”-ஐ படிப்பதைத் தொடரவும்.

சில்லறை வணிகத்தில் நேரடி அந்நிய முதலீடு: காங்கிரஸ், பா.ஜ.க.வின் பொய் முகங்கள்

சில்லறை வணிகத்தில் நேரடி அந்நிய முதலீடு: காங்கிரஸ், பா.ஜ.க.வின் பொய் முகங்கள் – மு. சிவகுருநாதன்   சில்லறை வணிகத்தில் நேரடி அந்நிய முதலீட்டை (FDI) 51 சதவீதமாக அதிகரிக்க ஐக்கிய முன்னணி அமைச்சரவை முடிவு செய்தது. இதனை எதிர்த்து சென்ற டிசம்பர 01, 2011 தேசியஅளவில் மிகப் பெரிய கடையடைப்பை வணிகர்கள் நடத்தியிருக்கிறார்கள். சுமார் 10 நாட்களாக நாடாளுமன்றம் முடங்கிப் போன பிற்பாடு இத்திட்டத்தை தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாக அரசு அறிவித்துள்ளது. திருணாமூல் காங்கிரஸ் போன்ற“சில்லறை வணிகத்தில் நேரடி அந்நிய முதலீடு: காங்கிரஸ், பா.ஜ.க.வின் பொய் முகங்கள்”-ஐ படிப்பதைத் தொடரவும்.

பாம்புகளைப் புரிந்து கொள்வோம்!

பாம்புகளைப் புரிந்து கொள்வோம்! – மு. சிவகுருநாதன் (பொள்ளாச்சி இயற்கை வரலாறு அறக்கட்டளை வெளியிட்ட ச.முகமது அலியின் ‘பாம்பு என்றால்?’ என்ற நூல் குறித்த பதிவு) நமது நாட்டில் பாம்புகளைப் பற்றிய புனைவுகளுக்கும் புராணங்களுக்கும் பஞ்சமில்லை. உலகெங்கிலும் கூட இதே நிலைதான். இங்கு மண் புழுக்கள் மட்டுமே உழவனின் நண்பனாகப் போதிக்கப்பட்டு வந்துள்ளது. எலிகளைப் பெருமளவில் கட்டுப்படுத்துகின்ற காரணத்தால் பாம்புகளும் விவசாயிகளின் தோழனாக அறியப்பட்டிருக்க வேண்டும். இது ஏன் நடைபெறவில்லை என்பதை தனியே ஆய்வு செய்ய வேண்டும்.“பாம்புகளைப் புரிந்து கொள்வோம்!”-ஐ படிப்பதைத் தொடரவும்.

இந்திய வரலாற்றில் ஒடுக்கப்பட்டோரின் விடுதலையை முன்னகர்த்திய தலைவர்

இந்திய வரலாற்றில் ஒடுக்கப்பட்டோரின் விடுதலையை முன்னகர்த்திய தலைவர் – மு. சிவகுருநாதன்     ‘உன்னதம்’ இதழின் ஆசிரியரும் எழுத்தாளருமான கெளதம சித்தார்த்தன் இன்றைய கல்வி முறையிலுள்ள குறைபாடுகளைச் சுட்ட, இன்று பள்ளியில் படிக்கும் மாணவியொருத்திக்கு விவேகானந்தரைப் பற்றி தெரிந்திருக்கவில்லை என்று அங்கலாய்த்திருக்கிறார். இதற்கு வேறு எந்த அர்த்தமிருப்பினும் விவேகானந்தரை நமது பாடத்திட்டம் உரிய முறையில் மாணவர்களுக்கு அறிமுகம் செய்யவில்லை என்ற ஆதங்கமும் உண்டு தானே!   பத்தாம் வகுப்பு சமச்சீர் கல்வி சமூக அறிவியலில் ’19ஆம்“இந்திய வரலாற்றில் ஒடுக்கப்பட்டோரின் விடுதலையை முன்னகர்த்திய தலைவர்”-ஐ படிப்பதைத் தொடரவும்.

டேம் 999: – தடை தீர்வாகுமா….?

டேம் 999: – தடை தீர்வாகுமா….?                                          -மு. சிவகுருநாதன்     மக்கள் எதைப் படிக்க வேண்டும், எதைப் பார்க்க வேண்டும் என்று முடிவு செய்யும் அதிகாரத்தை நமது ஆட்சியாளர்களும் அரசியல்வாதிகளும் தாங்களாகவே எடுத்துக் கொண்டுள்ளனர். நமது ஜனநாயக அமைப்பில் வழங்கப்பட்டுள்ள கருத்துரிமை இதன் மூலம் நிராகரிக்கப்படுகிறது. சல்மான் ருஷ்டி, தஸ்லிமா நஸ்ரின் போன்றோரது நூல்களும் டாவின்சி கோட் போன்ற திரைப்படங்களும் இங்கு தடை செய்யப்பட்டது பழங்கதை. இப்போது டேம் 999 என்ற திரைப்படம் ஒட்டுமொத்த“டேம் 999: – தடை தீர்வாகுமா….?”-ஐ படிப்பதைத் தொடரவும்.

கனிமொழிக்கு பிணை:- 2G அலைக்கற்றை வழக்கின் எதிர்காலம்?

கனிமொழிக்கு பிணை:- 2G அலைக்கற்றை வழக்கின் எதிர்காலம்? -மு.சிவகுருநாதன் 2 G அலைக்கற்றை வழக்கில் கனிமொழிக்கு தில்லி உயர்நீதிமன்றம் பிணை வழங்கியுள்ளது. கனிமொழிக்கு மட்டுமின்றி 2G அலைக்கற்றை வழக்கில் தொடர்புடைய கலைஞர் டிவி நிர்வாக இயக்குநர் சரத்குமார், பாலிவுட் சினிமா தயாரிப்பாளர் கரீம் மொரானி, ஸ்வான் டெலிகாம் நிர்வாகி சாகித் உஸ்மான் பால்வா, குசேகான் புருட்ஸ் அண்ட் வெஜிடபிள்ஸ் நிறுவன இயக்குநர் ஆசிப் பால்வா, ராஜீவ் அகர்வால் ஆகியோர்க்கும் பிணை வழங்கப்பட்டுள்ளது. முன்னாள் தொலைத் தொடர்புத்துறைச் செயலாளர்“கனிமொழிக்கு பிணை:- 2G அலைக்கற்றை வழக்கின் எதிர்காலம்?”-ஐ படிப்பதைத் தொடரவும்.