சிபிசிஐடி விசாரணையை உயர்நீதிமன்றம் கண்காணிக்க வேண்டும்!

சிபிசிஐடி விசாரணையை உயர்நீதிமன்றம் கண்காணிக்க வேண்டும்! மு.சிவகுருநாதன்       கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் கனியாமூர் பள்ளி மாணவியின்  மரண விசாரணையை சிபிசிஐடி நடத்தும்விதம் விமர்சனத்திற்குரியதாக உள்ளது. இதன்மூலம் நீதி கிடைக்கும் என்கிற நம்பிக்கை பொய்த்துப் போயுள்ளது.        நீதிமன்றக் காவலில் இருக்கும் குற்றஞ்சாட்டுக்கு உள்ளானவர்களை  காவலில் எடுத்து விசாரிப்பது இயல்பான வழக்கு நடைமுறையாகும். பொதுவாக காவல்துறை கேட்கும் நாள்களில் சில நாள்களைக் குறைத்து நீதிமன்றம் உத்தரவிடும்.       இந்த வழக்கில் 72 மணி நேரம் அதாவது மூன்று“சிபிசிஐடி விசாரணையை உயர்நீதிமன்றம் கண்காணிக்க வேண்டும்!”-ஐ படிப்பதைத் தொடரவும்.

கிரிக்கெட்  திடலான யுனெஸ்கோ மரபுச்சின்னம்!

கிரிக்கெட்  திடலான யுனெஸ்கோ மரபுச்சின்னம்! மு.சிவகுருநாதன்          09/07/2022 சனியன்று கவிநிலா, கயல்நிலாவுடன் தஞ்சை சென்று வரலாம் என்று கிளம்பினோம். மதியம் 2:10 (14:10) காரைக்கால்-திருச்சிராப்பள்ளி பயணியர் தொடர்வண்டியில் (எண்:56711)  செல்லலாம் என்று நினைத்தோம். கொரோனாவால் நிறுத்தப்பட்ட அத்தொடர்வண்டி இன்னும் இயக்கப்படவே இல்லையாம்! பேருந்துகளின் நிலையும் அவ்வாறுதான் உள்ளது. இயல்புநிலைக்குத் திரும்பிவிட்டதாக நாம் நினைத்துக் கொண்டுள்ளோம். மணிக்கணக்கில் காத்திருந்தும் தஞ்சாவூர்-திருச்சி வழியில் செல்லும் பேருந்துகள் வரவில்லை.           நேரமாகிவிட்டதால் தஞ்சை சென்று திரும்புவதில் காலதாமதம் ஏற்படும் என்பதால்“கிரிக்கெட்  திடலான யுனெஸ்கோ மரபுச்சின்னம்!”-ஐ படிப்பதைத் தொடரவும்.

மாணவர்களுக்கு விகிதாச்சாரப் பகிர்வின் மூலம் இடஒதுக்கீடு வேண்டும்.

                 மாணவர்களுக்கு விகிதாச்சாரப் பகிர்வின் மூலம் இடஒதுக்கீடு வேண்டும். பேரா. பிரபா கல்விமணி @ பா.கல்யாணி (கல்வியாளர், மனித உரிமைப் போராளி, செயல்பாட்டாளர், பேராசிரியர் பிரபா கல்விமணியுடன் ஒரு  நேர்காணல்.) நேர்காணல்: மு.சிவகுருநாதன்            ‘திண்டிவனத்து வக்கீல்’ என்று மக்கள் அன்புடன் அழைக்கும் பேரா.பா.கல்யாணி எனும் பிரபா.கல்விமணி உண்மையில் வழக்கறிஞர் அல்ல;  விழுப்புரம், திண்டிவனம் அரசுக்கல்லூரிகளில் இயற்பியல் பேராசிரியராகப் பணியாற்றிவர்.  திருநெல்வேலி மாவட்டம் ராதாபுரம் வட்டம் சௌந்தரபாண்டியபுரத்தில் பிறந்த இவர் தற்போது வசிப்பது திண்டிவனம். திருமணம் செய்துகொள்ளாமல்“மாணவர்களுக்கு விகிதாச்சாரப் பகிர்வின் மூலம் இடஒதுக்கீடு வேண்டும்.”-ஐ படிப்பதைத் தொடரவும்.