புத்தகங்கள் வாங்க அரசு மானியம்

புத்தகங்கள் வாங்க அரசு மானியம் -மு.சிவகுருநாதன் அண்மையில் புதுச்சேரியில் நடைபெற்ற புத்தகக் கண்காட்சிக்குச் சென்றிருந்தேன். புதுச்சேரி அரசின் கலை பண்பாட்டுத்துறை 27.09.2013 முதல் 08.10.2013 முடிய ரோடியர் மில் திடலில் இக்கண்காட்சியை ஏற்பாடு செய்திருந்தது. தமிழகத்தில் நடைபெறும் கண்காட்சிகளில் வெளியீட்டாளர்கள், விற்பனையாளர்கள் நூற்களுக்கு 10% தள்ளுபடி வழங்குவது வாடிக்கையான நிகழ்வு. ஆனால் இங்கு புத்தகங்களுக்கு 25% தள்ளுபடி வழங்கப்பட்டது. இதில் வெளியீட்டாளர்கள், விற்பனையாளர்கள் நூற்களுக்கு 10% வழங்கும் தள்ளுபடி போக மீதம் 15% தள்ளுபடியை புதுச்சேரி அரசு“புத்தகங்கள் வாங்க அரசு மானியம்”-ஐ படிப்பதைத் தொடரவும்.

வாக்ரிகளின் வதைபடும் வாழ்வு

வாக்ரிகளின் வதைபடும் வாழ்வு – மு. சிவகுருநாதன் ஒரு முன் குறிப்பு: குருவிக்காரர்கள், நரிக்குறவர்கள் என்று சமூகத்தால் இழிவாகப் பார்க்கப்படும் நாடோடிக் கூட்டத்தினர் (Gypsies) தங்களை நெறிக்குறவர்கள் என்றும் அழைத்துக் கொள்கின்றனர் (உபயம்: மு. கருணாநிதி). இவர்கள் பேசும் மொழி ‘வாக்ரி போலி’. ‘ வாக்’ என்றால் மராத்தியில் ‘புலி’ என்று பொருள்; ‘வாக்ரி’ என்றால் ‘புலியினத்தவ’ர் என்றும் பொருள். மொழியடிப்படையில் மக்களை அடையாளப்படுத்தும் மரபின்படி இச்சமூகத்தை ‘வாக்ரிகள்’ என்றழைப்பதே மிகப் பொருத்தமாக இருக்க முடியும். இனி“வாக்ரிகளின் வதைபடும் வாழ்வு”-ஐ படிப்பதைத் தொடரவும்.

ஒற்றுமை!

ஒற்றுமை!     – மு.சிவகுருநாதன் ஜெ.ஜெயலலிதாவும் மு.கருணாநிதியும் தங்களுக்குள்ள ஒற்றுமைகளை அடிக்கடி நிருபித்து வருகிறார்கள். பள்ளிக் கல்வித்துறையில் முதுகலை, பட்டதாரி ஆசிரியர் பணியிடத்தில் தொகுப்பூதிய நியமனம் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதில் தமிழ், சமூக அறிவியல் ஆகிய பாடங்கள் புறக்கணிப்பிற்கு உள்ளாகியுள்ளது. மு.கருணாநிதி முதல்வராக இருந்தபோது புதிதாக தொடங்கப்பட்ட மேல்நிலைப்பள்ளிகளுக்கு முதுகலைத் தமிழாசிரியர் பணியிடத்தை வழங்க மறுத்தார். அத்துடன் கூடவே பொருளியல், வணிகவியல்-கணக்கியல், வரலாறு ஆகிய பாடங்களும் புறந்தள்ளப்பட்டன. ஆனால் சமீபகாலமாக புதிய மேல்நிலைப்பள்ளிகளுக்கு தமிழ்,“ஒற்றுமை!”-ஐ படிப்பதைத் தொடரவும்.

உழைப்பைச் சுரண்டும் அழகு

உழைப்பைச் சுரண்டும் அழகு – மு.சிவகுருநாதன் இன்றைய (19.09.2013) தி இந்துவில் சமஸ் எழுதிய சின்ன விஷயங்களின் அற்புதம் என்ற கட்டுரை படித்தேன். மறமடக்கி சலூன் தொழிலாளி ரமேஷ் பற்றிய சித்தரிப்புகளினூடாக மன்மோகன் சிங், ப.சிதம்பரம், மாண்டேக் சிங் அனுவாலியா, சுப்பாராவ், ரகுராம் ராஜன் போன்ற பொருளாதாரப் பெரு மேதைகளின் (?!) வியாக்கியானங்கள் ஒளிந்திருப்பது கண்டு அதிர்ச்சியடைந்தேன். ஆனால் இந்த மாதிரியான அதிர்ச்சிகளை அடிக்கடி அனுபவிக்கவேண்டிதான் உள்ளது. இத்துடன் தொடர்புடைய சில அதிர்ச்சிகளை மட்டும் இங்கே குறிப்பிடுகிறேன்.“உழைப்பைச் சுரண்டும் அழகு”-ஐ படிப்பதைத் தொடரவும்.