மீளும் நினைவுத்தடங்கள் (இரண்டாம் பகுதி)

மீளும் நினைவுத்தடங்கள் (இரண்டாம் பகுதி) (ஆடுதுறை ஆசிரியர் பயிற்சி வெள்ளி விழா நினைவுகள்: 1992 – 2017) மு.சிவகுருநாதன் (இது ஒரு அனுபவப் பகிர்வு; சுயபுராணம். முந்தைய பதிவின் தொடர்ச்சி. விருப்பம் இல்லையேல் தாண்டிச் (Skip) செல்ல வேண்டுகிறேன். நன்றி!) இடைநிலை ஆசிரியர் பயிற்சிக்கு தற்போது தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம் புத்தகங்களை வெளியிடுகிறது. ஆனால் அன்று கிடையாது. ‘பதிப்புச் செம்மல்’ கணபதியின் சாந்தா பப்ளிஷர்ஸ் நோட்ஸ்கள் போல நூல் வெளியிட அனுமதி பெற்றிருந்தனர்.“மீளும் நினைவுத்தடங்கள் (இரண்டாம் பகுதி)”-ஐ படிப்பதைத் தொடரவும்.

மீளும் நினைவுத்தடங்கள் (முதல் பகுதி)

மீளும் நினைவுத்தடங்கள் (முதல் பகுதி) (ஆடுதுறை ஆசிரியர் பயிற்சி வெள்ளி விழா நினைவுகள்: 1992 – 2017)   மு.சிவகுருநாதன்            ஜூலை 13, 2017 (13.07.2017) கதிராமங்கலம் செல்லும் வழியில் ஆடுதுறை ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தைக் கடக்க நேரிட்டது. ஒரு நல்வாய்ப்பாக பேருந்திலிருந்து இறங்கி நடந்த முன்னாள் முதல்வரும் எங்களுக்கு முதுநிலை விரிவுரையாளராகவும் (தமிழ்) இருந்த மணல்மேடு முனைவர் கே.கலியமூர்த்தி அவர்களை சாலையில் சந்தித்தேன். 2001 இல் பணி ஓய்வு பெற்று“மீளும் நினைவுத்தடங்கள் (முதல் பகுதி)”-ஐ படிப்பதைத் தொடரவும்.

போராடத் தூண்டும் அரசுகள்

போராடத் தூண்டும் அரசுகள் மு.சிவகுருநாதன் ஒரு முதுமரத்தைத் தேடி அகரத்திருநல்லூர் சுடுகாட்டிற்குச் சென்றபோது அவ்விடத்திற்கு சிறிதும் தொடர்பில்லாத ஒரு கட்டடம் காணப்பட்டது. இது என்ன என்று வினவியபோது டாஸ்மாக் என்று பதில் வந்தது. கடந்த ஒரு மாதமாகவே அங்கு கடை திறக்கப்போவதாக தகவல் வந்து கொண்டிருந்தது. அந்தக் கட்டடம் கட்டத் தொடங்கியதிலிருந்து பிரச்சினையும் ஆரம்பமானது. தொடர் போராட்டம் நடந்தபிறகு காவல்துறை குவிக்கப்பட்டது. பிறகு வேறு வழியின்றி கடை மூடிக்கிடக்கிறது. இந்த மூடல் தற்காலிமானதா. நிரந்தரமா எனத் தெரியவில்லை.“போராடத் தூண்டும் அரசுகள்”-ஐ படிப்பதைத் தொடரவும்.

தொன்மையைத் தேடி… (இரண்டாம் பகுதி)

தொன்மையைத் தேடி… (இரண்டாம் பகுதி) மு.சிவகுருநாதன் திருவாரூர் மாவட்டத் தொன்மைப் பாதுகாப்பு மன்ற பள்ளி ஒருங்கிணைப்பாளர்களுக்கு ஒருநாள் பயிற்சி 22.07.2017 மன்னார்குடி பின்லே மேனிலைப்பள்ளியில் நடைபெற்றது. நம்முடைய அச்சத்தை மெய்பிக்க இங்கு பேசப்பட்ட செய்திகளே போதுமான சான்றுகளாகும். அமர்வதற்கு இடவசதி மற்றும் இருக்கை வசதிகள் இன்றி இம்மாதிரி கூட்டங்களும் பயிற்சிகளும் ஏன் ஏற்பாடு செய்யப்படுகின்றன என்று தெரியவில்லை? 100 பெருக்கு என்றால் அங்கு 50 பேருக்குத்தான் வசதிகள் இருக்கும். மீதிப்பேர் வரமாட்டார்கள் என்கிற எண்ணமா என்று கேட்கத்“தொன்மையைத் தேடி… (இரண்டாம் பகுதி)”-ஐ படிப்பதைத் தொடரவும்.

தொன்மையைத் தேடி… (முதல் பகுதி)

தொன்மையைத் தேடி… (முதல் பகுதி) மு.சிவகுருநாதன் வெறும் மனப்பாடத் தேர்வுகள், மதிப்பெண்கள் என்று வட்டமடிக்கும் சூழலை மாற்ற பாட இணைச்செயல்பாடுகள் ஓரளவிற்கு உதவும். எனவே இதை வரவேற்பதில் தப்பில்லை. ஆனால் இவை இங்கு எவ்விதம் புரிந்து கொள்ளப்படுகின்றன, மாணவர்களுக்கு அறிமுகம் செய்யப்படுகின்றன என்பது கேள்விக்குரிய ஒன்று. உதாரணமாக தமிழ் இலக்கிய மன்றங்கள் பலவற்றை தவறாகவே அறிமுகம் செய்கின்றன. இதிலுள்ள இலக்கியம் என்ற சொல்லை நீக்குவது நலம். இங்கு பேச்சுக்கலை இயல்பான ஒன்றை, மிகைப்படுத்தி, நாடகீயமாக செயற்கைத்தனம் நிரம்ப“தொன்மையைத் தேடி… (முதல் பகுதி)”-ஐ படிப்பதைத் தொடரவும்.

கோரிக்கைகளுக்கு ஏன் கட்டுப்பாடு?

கோரிக்கைகளுக்கு ஏன் கட்டுப்பாடு? மு.சிவகுருநாதன் அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கைக் குழு இன்றிலிருந்து (18.07.2017) பல கட்டப் போராட்டங்களை அறிவித்துள்ளன. போராடாமல் வாழ்க்கையில்லை; வரவேற்போம். ஆனால் சில ஆதங்கங்களைப் பகிர்ந்து கொள்வது அவசியமென்று கருதுகிறேன். இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு (2015) ஆசிரியர் இயக்கங்கள் போராட்டத்தில் 15 கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன. அவற்றின் போதாமைகளை விளக்கி எனது கருத்தை இப்பகுதியில் தெரிவித்திருந்தேன். இப்போது அரசு ஊழியர்கள் இயக்கங்களும் சேரும்போது கோரிக்கைகள் இன்னும் குறைவாக 3 என“கோரிக்கைகளுக்கு ஏன் கட்டுப்பாடு?”-ஐ படிப்பதைத் தொடரவும்.

கதிராமங்கலம் எரிவாயுக் கசிவும் மக்கள் போராட்டமும்

கதிராமங்கலம் எரிவாயுக் கசிவும் மக்கள் போராட்டமும்   (இன்று குடந்தையில் வெளியிடப்பட்ட எங்களின் உண்மை  அறியும் குழு அறிக்கை)                                                                                                                                               கும்பகோணம் ஜூலை 15, 2017                                                         கும்பகோணம் – மயிலாடுதுறை சாலையில் குத்தாலத்திற்குச் சற்று முன்னதாக, அங்கிருந்து வடக்கே சுமார் இரண்டு கல் தொலைவில் வற்றிக் காய்ந்து கிடக்கும் காவிரியின் வட கரையில் அமைந்துள்ள இயற்கை வளம் மிக்க கிராமம் கதிராமங்கலம். கடந்த ஜூன் 30 முதல் இந்த ஊர் மக்கள் இப்பகுதியில் செயல்பட்டு வருகிற“கதிராமங்கலம் எரிவாயுக் கசிவும் மக்கள் போராட்டமும்”-ஐ படிப்பதைத் தொடரவும்.

அனைவருக்கும் தொடக்கக் கல்வி இயக்க வதை முகாம்

அனைவருக்கும் தொடக்கக் கல்வி இயக்க வதை முகாம் மு.சிவகுருநாதன் ஆசிரியர்களுக்கான பயிற்சிகள் எவ்வாறு திட்டமிடப்படுகின்றன என்பது பல்லாண்டுகளாக புரியாத புதிர். போராட்டம் நடத்துபவர்களை கைது செய்து பகல் முழுக்க திருமண மண்டபங்களில் அடைத்து வைப்பது (தடுப்புக் காவல்) போன்ற நோக்கத்தைத் தவிர வேறு ஒன்றும் இருப்பதாகத் தெரியவில்லை. கல்வித்துறையை புரட்டிப் போடுவதாகச் சொல்லிக்கொள்பவர்கள் எந்த புதிய உத்திகளையும் கைக்கொள்ளவில்லை. ஒருநாள் பகல் பொழுதை வெறுமனே எப்படி போக்குவது என்கிற செயல்திட்டத்தைத் தவிர வேறு சிந்தனையில்லை. அனைவருக்கும் தொடக்கக்“அனைவருக்கும் தொடக்கக் கல்வி இயக்க வதை முகாம்”-ஐ படிப்பதைத் தொடரவும்.

பள்ளிகளில் சாதி, பாலினப் பாகுபாடுகள்: சில குறிப்புகள்

பள்ளிகளில் சாதி, பாலினப் பாகுபாடுகள்: சில குறிப்புகள் மு.சிவகுருநாதன் சில நாள்களுக்கு முன்பு ‘தி இந்து’ நாளிதழில் அனைத்திற்கும் ஆதார் எண்ணை கேட்பதால் நெற்றில் பச்சைக் குத்திக் கொண்டதாகச் சொல்லும் கேலிச்சித்திரம் வெளியாகியிருந்தது. ஆதாராவது சமீப நடைமுறை; பல ஆயிரம் ஆண்டுகளாக நமது உடம்பில் பச்சைக் குத்தாமல் உயிராகவே சுமந்து வரும் ஒன்று உண்டு. அதுதான் சாதி. “இப்பெல்லாம் யாரு சாதி பாக்குறா”, என்று கண்ணை மூடிக்கொண்டு வேண்டுமானால் சொல்லிக் கொள்ளலாம். சிபிஎம்மின் தீண்டாமை ஒழிப்பு முன்னணி“பள்ளிகளில் சாதி, பாலினப் பாகுபாடுகள்: சில குறிப்புகள்”-ஐ படிப்பதைத் தொடரவும்.