கம்யூனிஸ்ட்டாக வாழ்ந்த காந்தியவாதி!

கம்யூனிஸ்ட்டாக வாழ்ந்த காந்தியவாதி! அஞ்சலி: தோழர் என். சங்கரய்யா (15.07.1922 – 15.11.2023) மு.சிவகுருநாதன்              விடுதலைப் போராட்ட வீரரும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முதுபெரும் தோழர் என்.சங்கரய்யா (102) வயது முதிர்வின் காரணமாக இயற்கையில் (நவம்பர் 15, 2023) கலந்தார். தற்போதைய தூத்துக்குடி மாவட்டத்தின் ஆத்தூர் கிராமத்தில் பிறந்த (ஜூலை 15, 1922) பிறந்த சங்கரய்யாவிற்கு முதலில் பெற்றோர் வேறு பெயர் (பிரதாப சந்திரன்) சூட்டினாலும் அவரது தாத்தாவின் பெயரே நிலைத்தது. பணியின் காரணமாக குடும்பம்“கம்யூனிஸ்ட்டாக வாழ்ந்த காந்தியவாதி!”-ஐ படிப்பதைத் தொடரவும்.

அப்பாவும் தஞ்சாவூரும்

அப்பாவும் தஞ்சாவூரும் மு.சிவகுருநாதன்                 அப்பா மிகுந்த சிரமங்களுக்கிடையே தொடக்கக் கல்வி முடித்து,  பள்ளிக்காகக் காத்திருந்து எட்டாம் வகுப்பை (ESLC) நிறைவு செய்து ஆசிரியர் பயிற்சிக்குச் செல்கிறார். இது 1948-1950 காலகட்டமாக இருக்கலாம். தஞ்சாவூர் அரண்மனை வளாகத்தில் அரசினர் ஆதாரப் பயிற்சிப் பள்ளி செயல்பட்டிருக்கிறது. அங்குதான் இடைநிலை ஆசிரியர் பயிற்சியை முடித்தார். அதனால்தான் என்னவோ தஞ்சை அவருக்கு மிகவும் பிடித்த ஊராக மாறியிருந்தது.          எங்களை தஞ்சாவூர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும்போது பயணநேரத்தில் அது பற்றிய சம்பவங்களை“அப்பாவும் தஞ்சாவூரும்”-ஐ படிப்பதைத் தொடரவும்.

அம்பேத்கரும்  கல்வியும்

அம்பேத்கரும்  கல்வியும் மு.சிவகுருநாதன்             கல்வி என்றால் என்ன என்பதை முதலில் வரையறுத்துக் கொள்வது நல்லது. அதாவது, கல்வி ஒருவருக்கு நிர்வாணமான சிந்தனா சக்தியை அளிக்க வேண்டும். பற்றற்ற நிலையிலிருந்து சிந்திக்கத் தக்கவராக அவரை ஆக்க வேண்டும் என்று பெரியார் சொன்னார். இக்கருத்துகள்  இங்கு  சிந்திக்கத் தக்கன.          கல்வியின் நோக்கம் ஏதேனும் ஒன்றை திணிப்பதல்ல. மாறாக ஏற்கனவே இந்த சமூகத்தால் திணிக்கப்பட்டிருப்பதை வெளிக்கொணர்ந்து விடுவித்து அவர்களை நிர்வாணமாக்குவதே கல்வி. எத்தகைய பற்றுகளும் முன்முடிவுகளும் துறந்து நிர்வாணமாவதே“அம்பேத்கரும்  கல்வியும்”-ஐ படிப்பதைத் தொடரவும்.

சோலை  சுந்தரபெருமாள் நூல்கள்

சோலை  சுந்தரபெருமாள் நூல்கள் (புத்தகத் திருவிழாப் பரிந்துரைகள் – 014) மு.சிவகுருநாதன்           எழுத்தாளர் சோலை சுந்தரபெருமாள் (1953-2021) கிராவின் கரிசல் பாணியில் வட்டார மொழியில் மருதநில மக்களின் வாழ்வைப் பதிவு செய்தார். வண்டல் எழுத்து என தனி வகைமையை உருவாக்க பல்வேறு வழிகளில் முயன்றார். வெறும் படைப்பாளியாக மட்டும் இருந்துவிடாமல், தஞ்சை வட்டாரச் சொல்லகராதி, வாய்மொழி வரலாறு, வண்டல் உணவுகள், வண்டல் இலக்கிய வட்டம் போன்றவை இவ்வழியில் அவரது தொடர் நடவடிக்கைகளாகும்.         10 நாவல்கள்,“சோலை  சுந்தரபெருமாள் நூல்கள்”-ஐ படிப்பதைத் தொடரவும்.

17 ஆம் ஆண்டு நினைவில்…

17 ஆம் ஆண்டு நினைவில்… திருமிகு ச.முனியப்பன் தோற்றம்: 07/03/1931  மறைவு: 19/11/2005             இன்று (19/11/2022) அப்பாவின் நினைவு நாள். அவர் மறைந்து 17 ஆண்டுகள் உருண்டோடி விட்டன. அம்மாவும் மறைந்து விரைவில் ஓராண்டு ஆகப்போகிறது. அப்பாவின் இந்த நினைவுநாளில் அம்மாவும் இல்லை.        எனது தந்தையார் திரு ச.முனியப்பன் (1931-2005) இடைநிலை ஆசிரியர் மற்றும் தொடக்கப் பள்ளித் தலைமையாசிரியராக பணியாற்றியவர். வ.உ.சி. அரசு உதவிபெறும் தொடக்கப்பள்ளியைத் தொடங்கி (1952) அப்பகுதி மக்களுக்கு கல்வி கிடைக்கக்“17 ஆம் ஆண்டு நினைவில்…”-ஐ படிப்பதைத் தொடரவும்.

பாரதியின் தலைமறைவு வாழ்க்கையில்…

பாரதியின் தலைமறைவு வாழ்க்கையில்… மு.சிவகுருநாதன்         104 ஆண்டுகளுக்கு முன்பு 1918 இல் பாரதியின் தலைமறைவு வாழ்க்கையில் 10 நாள்கள் தங்கியிருந்த இடம் மேலநாகை என்னும் கிராமம்.  திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி வட்டம் நெடுவாக்கோட்டை ஊராட்சிக்கு உள்பட்ட மேலநாகை என்னும் இச்சிற்றூர் உள்ளது.     அங்கு  தியான மண்டபம் ஒன்றைக்  கட்டியிருக்கிறார்கள்.     27.05.2018  அன்று  மாலை எனது மூத்த மகள் கவிநிலாவுடன் ஒருமுறை  மேலநாகை சென்று வந்தேன். அப்போது எடுக்கப்பட்ட மூன்று படங்களும் இங்கே உள்ளன.“பாரதியின் தலைமறைவு வாழ்க்கையில்…”-ஐ படிப்பதைத் தொடரவும்.

ஓர் இரங்கல் குறிப்பு

ஓர் இரங்கல் குறிப்பு மு.சிவகுருநாதன்          நேற்று (15/06/2022) எனது ஆசிரியர் பயிற்சி நண்பரும் தொடக்கப்பள்ளி தலைமையாசிரியருமான திரு ச.ராஜூ சாலையில் நடந்து செல்லும்போது சிறுவன் ஓட்டிவந்த அதிகத்திறன் கொண்ட இரு சக்கர வாகனம் மோதி நிகழ்விடத்திலேயே மரணமடைந்துள்ளார். செய்தியறிந்தவுடன் நண்பர் தியாகசுந்தரம் துயரத்தைப் பகிர்ந்துகொண்டார்.          மிகவும் அன்பாகவும் அமைதியாகவும் பேசக்கூடிய மனிதர். அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல். சட்டத்தை மீறி சிறுவர்களை வாகனம் இயக்க அனுமதிப்பது, அதிகத்திறன் கொண்ட பைக்குகளை வாங்கிக்“ஓர் இரங்கல் குறிப்பு”-ஐ படிப்பதைத் தொடரவும்.

சாரதா என்கிற அக்கம்மா

சாரதா என்கிற அக்கம்மா (தோற்றம்: 30-06-1940 –  மறைவு:  01-01-2022) மு.சிவகுருநாதன் 01           அன்றும் மளிகைக்கடைகளில் கடலைமிட்டாய், முறுக்கு, பிஸ்கட் போன்ற பல்வேறு தின்பண்டங்கள் இருக்கும். இவற்றை ஒவ்வொன்றாக எடுத்துக்காட்டி கெஞ்சியபிறகும் கொஞ்சமும் விடுவதாக இல்லை. “எனக்குப் பலாச்சுளைதான் வேணும்”, என்று மேலும் கீழும் குதித்து அடம்பிடிக்கத் தொடங்கியதைக் கண்டவுடன் கடையை அப்படியே விட்டுவிட்டு சைக்கிளை எடுத்துக் கொண்டு முத்துப்பேட்டையை நோக்கி மிதிக்கத் தொடங்கினார். பலாச்சுளை வந்தபிறகுதான் அவளது அடம் நின்றது. இது எப்போதும் நடக்கின்ற“சாரதா என்கிற அக்கம்மா”-ஐ படிப்பதைத் தொடரவும்.

கவிதாசரண்: இதழாய் ஒர் எழுத்தியக்கம்

கவிதாசரண்: இதழாய் ஒர் எழுத்தியக்கம் (21.10.1935 – 28.11.2021) மு.சிவகுருநாதன் என்னைத் தமிழ் அன்னை பெற்றாள், ஏடெடுத்து வாழ்ந்திருப்பேன்; இன்னுயிரைத் தோற்ற பின்னே என் குழியில் பூத்திருப்பேன்.                      என்ற முத்தாய்ப்பு வரிகள் மற்றும் பூக்கள், மயிலிறகு படங்களுடன் ‘தமிழில் படைப்பிலக்கிய மாத இதழ்’ என்ற அடைமொழியோடு அக்டோபர் 1991இல் தொடங்கியது ‘கவிதாசரண்’ இதழ்.  “மனித நேயம் வளர்க்கும் இலக்கியத் தெளிவின் ஊற்றுக்கண்” என்னும் கூடுதல் வரிகளும் உள்ளே இணைக்கப்பட்டிருக்கும்.  இதழின் பெயர் மட்டுமல்ல; வெளியீட்டாளர் மற்றும்“கவிதாசரண்: இதழாய் ஒர் எழுத்தியக்கம்”-ஐ படிப்பதைத் தொடரவும்.

ஒரு நினைவுக் குறிப்பு

ஒரு நினைவுக் குறிப்பு மு.சிவகுருநாதன்             வேதாரண்யம் ஒன்றியம் சரபோஜிராஜபுரம் ஊ.ஒ.நடுநிலைப் பள்ளியில் (1983-1986)  நான் 6-8 வகுப்புகளைப் படித்தேன். அப்பள்ளி இன்று மேனிலைப்பள்ளி.  அப்போதெல்லாம் எட்டாம் வகுப்பிற்கு மாவட்ட அளவிலானப் பொதுத்தேர்வு உண்டு. அத்தேர்வை அருகிலுள்ள உயர்நிலை அல்லது மேனிலைப் பள்ளிகளில்தான் எழுத வேண்டும். நாங்கள் தகட்டூர் அரசு உயர்நிலைப்பள்ளியில் (இப்போது அது மேனிலைப்பள்ளியாக உள்ளது.)  எட்டாம் வகுப்புத் தேர்வுகளை எழுதினோம்.          ஒன்பதாம் வகுப்பிற்கு“ஒரு நினைவுக் குறிப்பு”-ஐ படிப்பதைத் தொடரவும்.