கல்விப்புலம் காணாத பாடங்கள்!

கல்விப்புலம் காணாத பாடங்கள்! மு.சிவகுருநாதன் பகுதி: ஒன்று           “உலகின் ஆபத்தான விலங்கு மனிதன்”, என்று குழந்தைகளிடம் நேரடியாகச் சொன்னால் சரிவருமா?  எனவே முகம் பார்க்கும் கன்ணாடியை வழியே  அதன் மூடியைக் கவனமாகத் திறந்து பார்க்கச் சொல்லி புதிர் போடுவதன் மூலமாக உண்மைநிலை இயல்பாக உணர்த்தப்படுகிறது.  இதைப் படிக்கும் குழந்தைகள் கூடுதல் ஆர்வம் தொற்றிக் கொள்ள நூலில் எளிதாக நுழைந்துவிடுகிறார்கள். புவியில் கடைசியாக தோன்றிய மனிதன் கோடிக்கணக்கான ஆண்டுகளாக இப்புவியில் வாழ்ந்துவரும் உயிரினங்களின் அழிவுக்குக் காரணமாக உள்ளான்“கல்விப்புலம் காணாத பாடங்கள்!”-ஐ படிப்பதைத் தொடரவும்.

தொன்மையைத் தேடி… (முதல் பகுதி)

தொன்மையைத் தேடி… (முதல் பகுதி) மு.சிவகுருநாதன் வெறும் மனப்பாடத் தேர்வுகள், மதிப்பெண்கள் என்று வட்டமடிக்கும் சூழலை மாற்ற பாட இணைச்செயல்பாடுகள் ஓரளவிற்கு உதவும். எனவே இதை வரவேற்பதில் தப்பில்லை. ஆனால் இவை இங்கு எவ்விதம் புரிந்து கொள்ளப்படுகின்றன, மாணவர்களுக்கு அறிமுகம் செய்யப்படுகின்றன என்பது கேள்விக்குரிய ஒன்று. உதாரணமாக தமிழ் இலக்கிய மன்றங்கள் பலவற்றை தவறாகவே அறிமுகம் செய்கின்றன. இதிலுள்ள இலக்கியம் என்ற சொல்லை நீக்குவது நலம். இங்கு பேச்சுக்கலை இயல்பான ஒன்றை, மிகைப்படுத்தி, நாடகீயமாக செயற்கைத்தனம் நிரம்ப“தொன்மையைத் தேடி… (முதல் பகுதி)”-ஐ படிப்பதைத் தொடரவும்.

தமிழ் நாவல் உலகின் புதிய பாணி ‘ஆவண நாவல்கள்’

தமிழ் நாவல் உலகின் புதிய பாணி ‘ஆவண நாவல்கள்’   மு.சிவகுருநாதன்     (இன்று செப்டம்பர் 18, 2016 நாகப்பட்டினம் சாம் கமல் அகாடமியில் நடைபெற்ற முக்கூடல் 134 வது நிகழ்வு குறித்த பதிவு.)   எழுத்தாளர், மொழிபெயர்ப்பாளர் இரா.முருகவேளின் ‘மிளிர்கல்’, ‘முகிலினி’ ஆகிய இரு நாவல்கள் அறிமுகக் கூட்டத்தை கவிஞர் தெ.வெற்றிச்செல்வன் ஒருங்கிணைத்தார். இந்நிகழ்விற்கான ஏற்பாடுகளை அரிமா அருண், நாகை ஜவகர் போன்ற நண்பர்கள் ஏற்பாடு செய்திருந்தனர். இரா.முருகவேளின் ‘மிளிர்கல்’, நக்கீரனின் ‘காடோடி’, குமார“தமிழ் நாவல் உலகின் புதிய பாணி ‘ஆவண நாவல்கள்’”-ஐ படிப்பதைத் தொடரவும்.

என்ன செய்கிறது தமிழ்நாடு?

என்ன செய்கிறது தமிழ்நாடு?   மு.சிவகுருநாதன்   பான்பராக் விற்பனைக்குத் தடை, பேரரறிவாளன் உள்ளிட்ட ஆயுள் தண்டனைக் கைதிகள் விடுதலை என எந்தப் பிரச்சினையிலும் தமிழக அரசிற்கு முடிவெடுக்கும் அதிகாரம் இல்லையென உச்சநீதிமன்றம் முடிவு செய்கிறது. இப்போது கெயில் நிறுவனம் விவசாய நிலங்களில் குழாய் பதிப்பது தொடர்பான வழக்கில் “மத்திய அரசின் திட்டங்களில் தமிழ்நாடு மாநில அரசு தலையிடுவதற்கு அதிகாரம் இல்லை. எரிவாயு கொண்டுசெல்லும் பாதையை மாற்றுவதற்கும் தமிழக அரசுக்கு உரிமையில்லை”, என்று நேற்று (பிப். 02,“என்ன செய்கிறது தமிழ்நாடு?”-ஐ படிப்பதைத் தொடரவும்.

யாருக்கு சூழலியல் அறிவு தேவை?

யாருக்கு சூழலியல் அறிவு தேவை? – மு.சிவகுருநாதன் (மார்ச் 29, 2015 அன்று மருதம் ஹால், ஹோட்டல் காசி’ஸ் இன், திருவாரூரில் நடைபெற்ற ‘காலநிலை மாற்றம்’ (Workshop on Climate Justice) குறித்த சூழலியல் பயிலரங்கு பற்றிய பதிவு.) திரு ‘நெல்’ ஜெயராமன் பல்வேறு சுழலியல் எழுத்தாளர்கள், ஆர்வலர்கள் பங்கேற்ற ‘காலநிலை மாற்றம்’ (Workshop on Climate Justice) குறித்த சூழலியல் பயிலரங்கு Pipal Tree அமைப்பின் உதவியால் திருவாரூர் பகுதி (நன்னிலம்) சூழலியல் எழுத்தாளர், நாவலாசிரியர்“யாருக்கு சூழலியல் அறிவு தேவை?”-ஐ படிப்பதைத் தொடரவும்.

இன்னும் மிச்சமிருக்கும் பால கெண்டை மீனின் சுவை…

இன்னும் மிச்சமிருக்கும் பால கெண்டை மீனின் சுவை… (அலையாத்திக்காடுகளும் அனல் மின்நிலையங்களும் – நக்கீரன் – குறு நூல் அறிமுகம்) – மு.சிவகுருநாதன் இந்நூலுக்குள் செல்வதற்கு முன்பு பாடநூற்கள் மாணவர்களை எவ்வாறு மழுங்கடிக்கின்றன என்பதற்கு தொடர்புடைய சில எடுத்துக்காட்டுகள். ஒன்பதாம் வகுப்பு சமூக அறிவியல் பாடநூல் புவியியல் பகுதியில் “பிச்சாவரம் மற்றும் முத்துப்பேட்டைப் பகுதியிலுள்ள அடர்ந்த சதுப்புநிலக்காடுகள் மனிதனின் பொறுப்பற்ற செயலால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.” (இவ்விடங்களைப் பாதித்த மனித செயல்களை ஆராய்ந்து அறிக.) என்று ‘சுற்றுச்சூழலும் அதன்“இன்னும் மிச்சமிருக்கும் பால கெண்டை மீனின் சுவை…”-ஐ படிப்பதைத் தொடரவும்.

அணு உலை வெறியர்கள் எங்கே போயினர்?

அணு உலை வெறியர்கள் எங்கே போயினர்?                               -மு.சிவகுருநாதன் 11.04.2012 அன்று தேதி இ‌ந்‌திய நேரப்படி பிற்பகல் சுமார் 2.15 மணி‌க்‌கு இந்தோனேஷியாவின் கடல் பகுதியில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. இ‌ந்த ‌நிலநடு‌க்க‌ம் ரிக்டர் அளவுகோலில் 8.9 ஆக பதிவானது. இந்த நிலநடுக்கத்தின் தாக்கம் தமிழகம் உட்பட இந்தியா முழுவதும் உணரப்பட்டது. மேலும் இந்தோனேஷியாவின் சுமத்ரா தீவில் அடுத்தடுத்து இரண்டு தடவை பெரிய நிலநடுக்கம் ஏற்பட்டது. நிலநடுக்கத்தையொட்டி முதலில் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது. பின்னர் அது திருப்பப்“அணு உலை வெறியர்கள் எங்கே போயினர்?”-ஐ படிப்பதைத் தொடரவும்.

அறிவியலையும் மக்களையும் ஒரு சேர சாகடிக்கும் போலி விஞ்ஞானிகள்

அறிவியலையும் மக்களையும் ஒரு சேர சாகடிக்கும் போலி விஞ்ஞானிகள்                                                                                     – மு. சிவகுருநாதன்     (சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்கான மருத்துவர் குழு, பூவுலகின் நண்பர்கள், அணுசக்திக்கு எதிரான மக்கள் இயக்கம், எதிர் வெளியீடு ஆகியவை இணைந்து வெளியிட்டுள்ள ‘கூடங்குளம் அணுமின் திட்டம் – இந்திய அணுமின் குழுமம் மேற்கொண்டிருக்கும் அறிவியலுக்குப் புறம்பான ஆய்வுமுறையும் தமிழக – கேரள மக்களின் வாழ்வு மீதான அச்சுறுத்தலும்’ – நூலாசிரியர்கள் : மரு. ரா. ரமேஷ், வி.டி. பத்பநாபன், மரு.“அறிவியலையும் மக்களையும் ஒரு சேர சாகடிக்கும் போலி விஞ்ஞானிகள்”-ஐ படிப்பதைத் தொடரவும்.

வேதாந்தா – ஸ்டெர்லைட்டுடன் சேர்த்து விரட்டப்பட வேண்டியவர்கள்

வேதாந்தா – ஸ்டெர்லைட்டுடன் சேர்த்து விரட்டப்பட வேண்டியவர்கள் – மு. சிவகுருநாதன் (பூவுலகின் நண்பர்கள், எதிர் வெளியீடு ஆகியோர் இணைந்து வெளியிட்ட சூழலியல் குற்றவாளி ஸ்டெர்லைட் (அட்டையில் – விரட்டப்பட வேண்டிய ஸ்டெர்லைட்) குறுநூல் பற்றிய விமர்சனப்பதிவு.) வேதாந்தா ரிசோர்சஸ் என்ற பன்னாட்டுத் தொழில் குழுமம் இந்தியாவில் தாமிரம், இரும்பு, நிலக்கரி போன்ற இயற்கை வளங்களைக் கொள்ளையடிக்கும் பெருச்சாளியாக வளர்ந்துள்ளது. இந்நிறுவனம் இந்தியாவில் மட்டுமல்லாது ஆப்பிரிக்கா கண்டத்திலும் இயற்கை வளங்களைக் கொள்ளையிடுகின்றது. நமது பிரதமர் மன்மோகன் சிங்,“வேதாந்தா – ஸ்டெர்லைட்டுடன் சேர்த்து விரட்டப்பட வேண்டியவர்கள்”-ஐ படிப்பதைத் தொடரவும்.

மெத்தப் படித்த மூஞ்சுறுகள் !

மெத்தப் படித்த மூஞ்சுறுகள் -மு.சிவகுருநாதன்   கூடங்குளம் அணு உலைப் பிரச்சினையில் முதலில் முன்னாள் குடியரசுத் தலைவரும் ஏரோ நாட்டிகல் எஞ்சினியரிங் படித்த அப்துல் கலாம் களமிறங்கினார் அல்லது இறக்கப்பட்டார். அணு உலை பாதுகாப்பானது; இதனால் எவ்வித கதிரியக்கம் உள்ளிட்ட பாதிப்புகள் இல்லையென்றார். நிலவியல் படித்தவர் போல நிலநடுக்கம் வரவே வராதென்றார். பயப்படுபவர்கள் வரலாறு படிக்கமுடியாது என்று சொல்லி தனக்கு சம்மந்தம் இல்லாத அனைத்துத் துறைகளுக்கும் தானே விஞ்ஞானி என்ற புதிய வரலாற்றைப் படித்தார். இதைப்பற்றி நிறைய“மெத்தப் படித்த மூஞ்சுறுகள் !”-ஐ படிப்பதைத் தொடரவும்.