தலைமுறை நினைவுகள்

தலைமுறை நினைவுகள் மு.சிவகுருநாதன்       எங்களது மூத்த பெரியம்மா திருமதி முத்துலெட்சுமி அம்மாள் 11/09/2020 அன்று மதியம் வயது முதிர்வால் காலமானார். இன்று மதியம் (12/09/2020) அவரது உடலைத் தகனம் செய்து திரும்பினோம். அவரது வயது கண்டிப்பாக 90 ஐத் தாண்டும். அதன் வழியே மூன்று தலைமுறைகளின் கதையும் விரியும். பல்வேறு இன்ப, துன்பங்களைத் தாங்கிப் பெருவாழ்வு வாழ்ந்து மறைந்திருக்கிறார்.     நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யம் வட்டம் கரியாப்பட்டினம் கா.சந்தானம் – சிவக்கொழுந்து தம்பதிகள் எங்களது தந்தைவழி“தலைமுறை நினைவுகள்”-ஐ படிப்பதைத் தொடரவும்.

கார்மேகங்களின் நடனம்

 கார்மேகங்களின் நடனம் மு.சிவகுருநாதன்      வளிமண்டல மேலடுக்கு சுழற்சி / வெப்பச் சலனம் காரணமாக கோடை மழை பரவலாக தமிழகத்தை ஈரப்படுத்தியுள்ளது. இந்த கொரோனா காலத்தில் இது மட்டுமே ஒரே ஆறுதல்.     ஆனால் திருவாரூர் நகரம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் மழை, மாவட்டத்தின் பிற பகுதிகளான திருத்துறைப்பூண்டி, முத்துப்பேட்டை, மன்னார்குடி, நீடாமங்கலம், வலங்கைமான், குடவாசல், நன்னிலம் போன்றவற்றை ஒப்பிடும்போது குறைவு என்றே சொல்ல வேண்டும்.      வெப்பநிலை உயர்வு காரணமாக இருக்க முடியுமா? இந்த“கார்மேகங்களின் நடனம்”-ஐ படிப்பதைத் தொடரவும்.

ஆன்லைன் வகுப்புக் கொடுமைகள்!

 ஆன்லைன் வகுப்புக் கொடுமைகள்! மு.சிவகுருநாதன் ஆன்லைன் வகுப்புகளுக்கு ஒரு வாரம் விடுமுறையாம்! (செப்.21 முதல் செப்.25 முடிய) ஆன்லைன் வகுப்புகளுக்குத் தடை விதிக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுத்துவிட்டது. ஒன்று முதல் எட்டு வகுப்பு வரை வாரத்திற்கு மூன்று வகுப்புகள் என்று வரையறுத்த கொடுமை என்ன சொல்வது? 6-14 வயதெல்லைக் குழந்தைகளை ஒன்றாகக் கருதுவது சரியா? 1-5 க்கு ஒரு வகுப்பு 6-8 க்கு இரு வகுப்புகள் 9,10 க்கு மூன்று வகுப்புகள் +1,+2 க்கு நான்கு வகுப்புகள்“ஆன்லைன் வகுப்புக் கொடுமைகள்!”-ஐ படிப்பதைத் தொடரவும்.

புதிய கல்விக்கொள்கையை ஆராயும் குழுக்கள்?

 புதிய கல்விக்கொள்கையை ஆராயும் குழுக்கள்? மு.சிவகுருநாதன் உயர்கல்விக்குழு: புதிய கல்விக்கொள்கையை ஆராய தமிழக உயர்கல்வித்துறை சார்பில் அதிகாரிகள், முன்னாள் துணைவேந்தர்கள் அடங்கிய குழு காலம் கடந்து அமைக்கப்பட்டுள்ளது. இவர்கள்தான் கல்வியாளர்கள் என்றால் முடிவு எப்படி இருக்கும் என்று சொல்ல வேண்டியதில்லை. ‘முன்னாள்’களை விட்டால் வேறு ஆள்கள் கிடையாதா? பள்ளிக்கல்வியில் புதிய கல்விக் கொள்கை இல்லையோ! அதை யார் ஆய்வு செய்வது? தனிக்குழு அமைக்கப்படுமா? பள்ளிக்கல்விக் குழு: புதிய கல்விக்கொள்கை 2020 இல் பள்ளிக்கல்வி தொடர்பாக ஆய்வு செய்ய“புதிய கல்விக்கொள்கையை ஆராயும் குழுக்கள்?”-ஐ படிப்பதைத் தொடரவும்.

வெறும் சடங்கான ஆசிரியர் தினம்

 வெறும் சடங்கான ஆசிரியர் தினம் மு.சிவகுருநாதன் ஆசிரியர் தின வாழ்த்துகள் பரிமாறப்படுகின்றன. இது ஒரு சடங்காக மாறிப்போனது கல்வியின் பெருஞ்சோகம். இன்று கல்வி எதிர்கொள்ளும் நெருக்கடிகள் மிக அதிகம். புதிய கல்விக்கொள்கை 2020 நமது கல்வியை இதுவரை அடைந்த வளர்ச்சியை சில நூறாண்டுகள் பின்னோக்கி இழுக்கிறது. இந்துத்துவமும் பாசிசமும் கல்விக்கு எதிரானது; ஆளும் இந்துத்துவ அரசு கல்வியை மக்களிடமிருந்து பறிக்கத் திட்டமிடுகிறது. ஆசிரியர்கள் இதை வெறுமனே வேடிக்கை பார்க்க இயலாது. தில்லி தயவிலும் அவர்களது ஆதிக்கத்தின் கீழ்“வெறும் சடங்கான ஆசிரியர் தினம்”-ஐ படிப்பதைத் தொடரவும்.

‘இந்துத்துவா தமிழி’ன் லீலைகள்!

 ‘இந்துத்துவா தமிழி’ன் லீலைகள்! மு.சிவகுருநாதன்    ‘இந்துத்துவா தமிழை’த் தெரியாதவர்கள் இருக்க முடியாது. (அதாங்க ‘இந்து தமிழ் திசை’; முன்பு ‘தி இந்து’) தமிழ் நாளிதழ்களில் ‘தின மல’த்திற்குப் போட்டியாக வளர்ந்து வரும் நாளிதழ் இது.    வாசகர் கடிதப்பகுதி முற்றிலும் நீக்கப்பட்டு, எப்போதாவது ஒரு கடிதம் பிரசுரமாகிறது. ‘தின மலம்’ எதோ ஒரு பெயரில் தானே தயாரித்து வெளியிட்டுக் கொள்ளும். அதே உத்தியை ‘இந்துத்துவா தமிழும்’ பின்பற்றத் தொடங்கியுள்ளது.    வாஞ்சிநாதனின் கர்ப்பிணி மனைவியை கூண்டு“‘இந்துத்துவா தமிழி’ன் லீலைகள்!”-ஐ படிப்பதைத் தொடரவும்.

‘கொரோனா’ காலத்தில் கல்வி

‘கொரோனா’ காலத்தில் கல்வி மு.சிவகுருநாதன் ‘கொரோனா’விலிருந்து மீண்டாலும் அதன் தாக்கங்களிலிருந்து மீள்வது நெடுங்காலம் பிடிக்கும். இதன் தாக்கம் எல்லாத்துறைகளைப் போன்று கல்வியிலும் எதிரொலிக்கவேச் செய்யும். பள்ளி, கல்லூரிகளை எப்போது திறக்கலாம் என்பதை இன்று முடிவு செய்ய முடியாத சூழல் தொடர்கிறது. இந்தக் கல்வியாண்டை நிறுத்திவைக்கும் (zero academic year) முடிவை எடுக்க மத்திய அரசு தயாராக இல்லை. அதைத் தாண்டி மாநிலங்கள் ஏதாவது செய்திடுமா என்ன? சில மாதங்களாவது பள்ளிகளைத் திறந்து பள்ளிகளில் ஒரே தேர்வு, கல்லூரிகளில்“‘கொரோனா’ காலத்தில் கல்வி”-ஐ படிப்பதைத் தொடரவும்.

இந்தியை நுழைக்கும் முயற்சி

 இந்தியை நுழைக்கும் முயற்சி மு.சிவகுருநாதன்     கோவை மாநகராட்சிப் பள்ளிகளின் மாணவர்கள் சேர்க்கைக்கான விண்ணப்ப படிவம் ஒன்று வெளியாகியுள்ளது.     இதில் “மூன்றாவது மொழி (ஹிந்தி) எடுத்துக் கொள்ள விரும்புகிறாரா அல்லது கைத்தொழில் ஒன்றை அதிகப்படியாக எடுத்துக் கொள்ள விரும்புகிறாரா?”, என்று கேட்கப்பட்டுள்ளது.    மூன்றாவது மொழி அதுவும் ஹிந்தி எங்கு எப்படி நுழைந்தது? கைத்தொழில் எங்கு வந்தது?     “இது எங்களால் வழங்கப்படவில்லை முதல் வகுப்புச் சேர்க்கைக்கு விண்ணப்பமே இல்லை”, என்று மாநகராட்சி ஆணையர் மறுக்கிறார்.“இந்தியை நுழைக்கும் முயற்சி”-ஐ படிப்பதைத் தொடரவும்.

காவல்துறையும் ரவுடியிசமும்

 காவல்துறையும் ரவுடியிசமும் மு.சிவகுருநாதன்     தூத்துக்குடி மாவட்டத்தில் நாட்டுவெடி குண்டு வீசி காவலர் படுகொலை என்று செய்தி வந்தது…    சில மணி நேரத்தில் வெடிகுண்டு வீசிய நபரும் பலி என்று சொல்கிறார்கள்.    உண்மையில் என்னதான் நடந்தது? தற்போது மோதல் படுகொலைகளுக்கு நாட்டு வெடிகுண்டும் பயன்படுகிறதா?    போக்கிரிகளை உருவாக்குவதும் அவர்களைப் பாதுகாப்பதும் தேவைப்படும்போது போட்டுத் தள்ளுவதும் காவல்துறையின் பணியாக இருக்க முடியாது.    இரு கொலை மற்றும் 5 கொலை வழக்குகளில் தொடர்புடையவர்களை ஏன்“காவல்துறையும் ரவுடியிசமும்”-ஐ படிப்பதைத் தொடரவும்.