‘டெட்’ (TNTET 2017) தேர்வு வன்முறை!

‘டெட்’ (TNTET 2017) தேர்வு வன்முறை! முசிவகுருநாதன் பொதுவாகவே தேர்வு என்றாலே அது வன்முறைதான்! மாணவர்களுக்குத்தானே தேர்வு, ஆசிரியர்களுக்கு ஏன் தேர்வு? என்று கேள்வி கேட்கும் ஆசிரியர் சமூகத்திற்கு நடந்த தேர்வு வன்முறை குறித்தும் பேசவேண்டியுள்ளது ஒரு நகை முரண். தேர்வுகளை நியாயப்படுத்தும் எவருமே கூட இந்த வன்முறைகளை கண்டுகொள்ளாமல் இருக்க முடியாது. ஆண்டுக்கு இருமுறை ‘டெட்’ எனப்படும் ஆசிரியர் தகுதித்தேர்வுகளை நடத்துவதாகச் சொல்லி, பல ஆண்டுகள் நடத்தாமல் வெறுமனே இருந்துவிட்டு, தற்போது திடீரென அறிவித்து ஏப்ரல்“‘டெட்’ (TNTET 2017) தேர்வு வன்முறை!”-ஐ படிப்பதைத் தொடரவும்.

ஏஜிகே: பெரியாரிய, மார்க்சியப் போராளி

ஏஜிகே: பெரியாரிய, மார்க்சியப் போராளி   (மதிப்பீடு – விமர்சனம் – அஞ்சலி – நினைவுத் தொகுப்பு)   தேர்வும், தொகுப்பும்: மு.சிவகுருநாதன்           கீழத்தஞ்சை மாவட்டத்தில் தலித், அடித்தட்டு விவசாயக் கூலிகளுக்காக மக்கள் திரள் இயக்கம் கட்டிப் போராடி அவர்களுடைய தன்மானத்தையும் அடிப்படை வாழ்வுரிமைகளையும் மீட்டெடுத்ததில் பி.எஸ்.ஆர்., மணலி கந்தசாமி, ஏ.ஜி.கஸ்தூரிரெங்கன் ஆகிய ஆளுமைகளுக்குப் பெரும்பங்கு உண்டு. “செழுமைப்படுத்தப்பட்ட மார்க்சியமே பெரியாரியம்”, என்று களப்போராளியாக பணி செய்தவர் ஏஜிகே. ஏஜிகே வின் முதலாண்டு“ஏஜிகே: பெரியாரிய, மார்க்சியப் போராளி”-ஐ படிப்பதைத் தொடரவும்.

பெரியார் கொள்கை என்ற முகமூடியில் அரசியல் பண்ணும் நடிகர்

பெரியார் கொள்கை என்ற முகமூடியில் அரசியல் பண்ணும் நடிகர் பொ. இரத்தினம், வழக்கறிஞர், நிறுவனர், சமத்துவ மக்கள் படை. தொடர்புக்கு: 94434 58118 7010281861 ஒன்பது ஆண்டுகளுக்கு முன்பு காவிரிப் பிரச்சினையில் நடிகர் சத்யராஜின் பேச்சைக் கண்டித்து, அவர் நடித்து ஏப்ரல் 28 –ல் வெளியாகும் பாகுபலி 2 படத்தைத் திரையிட கன்னட சலுவாளி கட்சித் தலைவரும் கன்னட அமைப்புகள் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளருமான வாட்டாள் நாகராஜ் தலைமையில் கூடி, எதிர்ப்பு தெரிவித்துப் போராட்டம் அறிவித்தனர். இதனையடுத்து கன்னட“பெரியார் கொள்கை என்ற முகமூடியில் அரசியல் பண்ணும் நடிகர்”-ஐ படிப்பதைத் தொடரவும்.

தொண்டி கோவிந்தராசு என்கவுன்டர் படுகொலை உண்மை அறியும் குழு அறிக்கை

தொண்டி கோவிந்தராசு என்கவுன்டர் படுகொலை உண்மை அறியும் குழு அறிக்கை மதுரை, ஏப்ரல் 22, 2017 இராமநாதபுரம் மாவட்டம் தொண்டி அருகே உள்ள உசிலன்கோட்டை கிராமத்தைச் சேர்ந்த விறகு மற்றும் கரி வியாபாரம் செய்யும் கோவிந்தன் எனப்படும் கோவிந்தராசு (42) என்பவர் கடந்த ஏப்ரல் 13 அன்று இரவு இராமநாதபுரம் நகர் B2 காவல் நிலைய சார்பு ஆய்வாளர் (SI) தங்க முனியசாமி என்பவர் தலைமையில் சென்ற மூன்று பேர் அடங்கிய குழுவால் சுட்டுக் கொல்லப்பட்டது அப்பகுதியில்“தொண்டி கோவிந்தராசு என்கவுன்டர் படுகொலை உண்மை அறியும் குழு அறிக்கை”-ஐ படிப்பதைத் தொடரவும்.

சுவரொட்டிக் கனவான்களே! மூடப்பட்ட டாஸ்மாக் கடைகளை வேறிடத்தில் திறப்பதற்கும் நன்றி சொல்லுங்கள்!!

சுவரொட்டிக் கனவான்களே! மூடப்பட்ட டாஸ்மாக் கடைகளை வேறிடத்தில் திறப்பதற்கும் நன்றி சொல்லுங்கள்!!. மு.சிவகுருநாதன் சில நாள்களுக்கு ((ஏப்ரல் 08, 2017) முன்பு டாஸ்மாக் நன்றி சுவரொட்டிகள் பற்றிய பதிவிட்டிருந்தேன். இது தொற்று வியாதியாகத் தொடர்கிறது. மூடப்பட்ட டாஸ்மாக் கடைகள் அனைத்தையும் நெடுஞ்சாலைகள் தவிர்த்து குக்கிராம மூலை முடுக்குகளில் திறந்திட அயராது உழைத்துக் கொண்டிருக்கும் மாவட்ட ஆட்சியர், டாஸ்மாக் மேலாளர் ஆகியோருக்கு நன்றி சொல்ல அபார துணிச்சல் வேண்டும்; மாறாக மனச்சாட்சிதான் தேவையில்லை. நகரங்களில் உள்ள கடைகளை மூடிவிட்டார்களாம்!“சுவரொட்டிக் கனவான்களே! மூடப்பட்ட டாஸ்மாக் கடைகளை வேறிடத்தில் திறப்பதற்கும் நன்றி சொல்லுங்கள்!!”-ஐ படிப்பதைத் தொடரவும்.

அரசியல், மத ஆதிக்கங்களை ஒழுக்கங்கெட்டவர்களும், குற்றவாளிகளும் நடத்துகிறார்களா?

அரசியல், மத ஆதிக்கங்களை ஒழுக்கங்கெட்டவர்களும், குற்றவாளிகளும் நடத்துகிறார்களா?     (மூத்த வழக்கறிஞர் திரு பொ.இரத்தினம் அவர்கள் வெளியிட்ட துண்டறிக்கை.) “நானும் தமிழந்தான், தமிழ்நாட்டு அரசை பெங்களூரு சிறைத்தண்டனைக் கைதி இயக்குகிற கொடுமை நடக்கிறது. தமிழர்கள் ஏன் வேடிக்கை பார்க்கிறார்கள்? நான் நாடு திரும்பியதும் தமிழ்நாட்டில் உண்ணாவிரதம் இருந்து செயல்பட உள்ளேன்”,   இந்தியத் தலைமை நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி திரு மார்கண்டேய கட்சு.   இப்படி நல்லவர்கள் பலர் தமிழ்நாட்டின் அரசியல் போக்கு கண்டு“அரசியல், மத ஆதிக்கங்களை ஒழுக்கங்கெட்டவர்களும், குற்றவாளிகளும் நடத்துகிறார்களா?”-ஐ படிப்பதைத் தொடரவும்.

யாருக்கு நன்றி சொல்வது?

யாருக்கு நன்றி சொல்வது? மு.சிவகுருநாதன் திருவாரூர் மாவட்ட ஆட்சியரகம் அமைந்துள்ள தண்டலை ஊராட்சிக்குட்பட்ட பகுதிகளில் “டாஸ்மாக் இல்லாத தண்டலை ஊராட்சியாக மாற்றிக்கொடுத்த திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அவர்களுக்கும் டாஸ்மாக் மேலாளர் அவர்களுக்கும் நன்றி… நன்றி… நன்றி…”, என சுவரொட்டிகள் ஒட்டப்படுள்ளன. தண்டலை ஊராட்சி கிராமவாசிகள் மற்றும் அனைத்து மகளிர் குழு, சேவை சங்கங்கள் என்கிற போர்வையில் இவர்கள் தங்களுக்கு தாங்களே இவ்வாறு போஸ்டர் அடித்து ஒட்டியுள்ளனர்! இது மிகவும் அபத்தமானது மட்டுமல்ல; இழிவாகவும் உள்ளது. டாஸ்மாக் மதுக்கடைகள்“யாருக்கு நன்றி சொல்வது?”-ஐ படிப்பதைத் தொடரவும்.