திருத்துறைப்பூண்டி காவல்நிலையச் சாவு உண்மை அறியும் குழு அறிக்கை

திருத்துறைப்பூண்டி காவல்நிலையச் சாவு உண்மை அறியும் குழு அறிக்கை      திருவாரூர்                                                                                                          28.12.2013 திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி வட்டத்திலுள்ள ஆலிவலம் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட கீரக்களூர் சிற்றூராட்சி நங்காளி கிராமத்தைச் சேர்ந்த சுந்தர் (34) என்பவர் சென்ற டிசம்பர் 23 இரவு விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டபோது மர்மமான முறையில் இறந்துபோனதை ஒட்டி அவ்வூர் மக்கள் சாலைமறியல் செய்த செய்தி பத்தரிகைகளில் வந்தது. இது தொடர்பான உண்மைகளை மறைக்க காவல்துறை முயற்சிப்பதாக செய்திகள் கிடைத்ததையொட்டி இதுகுறித்த உண்மைகளை அறிய“திருத்துறைப்பூண்டி காவல்நிலையச் சாவு உண்மை அறியும் குழு அறிக்கை”-ஐ படிப்பதைத் தொடரவும்.

தமிழக காவல்துறை செய்த கொலை

தமிழக காவல்துறை செய்த கொலை                                                                              -மு.சிவகுருநாதன் அண்மையில் சென்னையில் தமிழக முதல்வர் ஜெ.ஜெயலலிதாவின் தலைமையில் நடைபெற்ற மாவட்டக் காவல்துறை கண்காணிப்பாளர்கள் கூட்ட்த்தில் லாக்கப் மரணங்கள் தவிர்க்கப்படவேண்டும் என்பதை வலியுறுத்தியது நினைவிருக்கலாம். உயர்நீதி மன்றம், உச்சநீதிமன்றம், மனித உரிமை ஆணையங்கள் பலமுறை அளித்துள்ள நெறிமுறைகளை காவல்துறை பின்பற்றுவதேயில்லை. தமிழகத்தில் லாக்கப் கொலைகள் அன்றாட நிகழ்வுகளாகிவிட்டன. திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி வட்டம் ஆலிவலம் காவல் சரகம் கீரக்களூர் சிற்றூராட்சிக்குட்பட்ட நங்காளி கிராமத்தைச் சேர்ந்த்த 34 வயது இளைஞர் சுந்தர்“தமிழக காவல்துறை செய்த கொலை”-ஐ படிப்பதைத் தொடரவும்.

ஜெயமோகனின் வழக்குரைஞரான புரட்சி எழுத்தாளர்!

ஜெயமோகனின் வழக்குரைஞரான புரட்சி எழுத்தாளர்!                                                                           – மு.சிவகுருநாதன் இனிய உதயம் டிசம்பர் 2013 இதழில் புரட்சி எழுத்தாளர் பவா.செல்லதுரை அவர்களின் நேர்காணல் வெளியாகியுள்ளது. இலக்கிய உலகில் பேச்சருவி, பேச்சுப்புயல், இடிமுரசு என்றெல்லாம் விளம்பர விரும்பிகள் பெருகிவிட்டார்கள் என்று அங்கலாய்க்கும் இவர் மட்டும் புரட்சி எழுத்தாளரான புதிர்தான் நமக்கு விளங்கவில்லை. இவரது முன்னோடிகளான சுந்தர ராமசாமி, ஜெயமோகன் ஆகியோர் கூட இம்மாதிரியான பட்டங்களைப் போட்டுக்கொண்டதாக தெரியவில்லை. இவ்வளவிற்கும் பிறகு மூன்றாம்தர படைப்பாளிகளையும் சினிமாக்காரர்களையும் இலக்கிய உலகம் சகிப்பதை“ஜெயமோகனின் வழக்குரைஞரான புரட்சி எழுத்தாளர்!”-ஐ படிப்பதைத் தொடரவும்.