தென்னாப்பிரிக்காவில்  காந்தி

தென்னாப்பிரிக்காவில்  காந்தி (மகாத்மாவின் கதை தொடரின் ஏழாவது அத்தியாயம்.) மு.சிவகுருநாதன்          பிரிட்டோரியாவில் வசித்த ஓராண்டு காலத்தில் மதிப்புமிக்க அனுபவங்கள் காந்திக்கு கிடைத்தன. பொதுப்பணியைச் செய்வதற்கான வாய்ப்பையும் அதற்கான ஆற்றலை பெற்ற இடமிது. சமய உணர்ச்சி உயிர் சக்தியானது இவ்விடத்தில்தான். பேக்கர், கன்னி ஹாரிஸ், கன்னி கார். கோட்ஸ் போன்ற கிருஸ்தவ சமயப் பரப்பாளர்கள் தொடர்பும் ஏற்பட்டது. வழக்கறிஞர் தொழில் தொடர்பான ஞானத்தையும் தொழில் ரகசியத்தையும் தன்னாலும் வழக்கறிஞர் தொழில் செய்ய முடியும் என்கிற நம்பிக்கையும் ஏற்பட்டது.“தென்னாப்பிரிக்காவில்  காந்தி”-ஐ படிப்பதைத் தொடரவும்.

பாசிஸ்ட்கள் கைகளில் கல்வி

பாசிஸ்ட்கள் கைகளில் கல்வி மு.சிவகுருநாதன்            தேசியக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம்  (NCERT) ஒன்றிய அளவில்  பள்ளிகளுக்கான கலைத்திட்டம், பாடத்திட்டம் போன்றவற்றை வடிவமைத்து,  1-12 வகுப்புகளுக்கான பாடநூல்களையும் தயாரித்து வெளியிடுகிறது. ஒன்றிய அரசின் கல்வித்துறையின் கீழ் இவ்வமைப்பு செயல்படுகிறது. இந்தப் பாடநூல்களையே மத்தியக் கல்வி வாரியம் (CBSE), கேந்திரிய வித்யாலயா (KV), நவோதயா (NV) போன்ற பள்ளிகள் பயன்படுத்துகின்றன.           மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் (SCERT) மாநில வாரியத்திற்கான பாடத்திட்டம்“பாசிஸ்ட்கள் கைகளில் கல்வி”-ஐ படிப்பதைத் தொடரவும்.

இன்னும் எவ்வளவு காலம் ஏமாறுவது?

இன்னும் எவ்வளவு காலம் ஏமாறுவது? மு.சிவகுருநாதன்          தேசியக் கல்விக் கொள்கை 2020ஐ ஏற்கவில்லை எனவும் அதை அமல்படுத்த மாட்டோம் என்று தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. மேலும் தமிழ்நாட்டிற்கென தனியாக கல்விக் கொள்கையை உருவாக்க ஓர் உயர்மட்டக் குழு ஒன்றையும் அமைத்துள்ளது. தமிழக முதல்வர், உயர்கல்வி மற்றும் பள்ளிக்கல்வி அமைச்சர்கள் நமது கல்விக் கொள்கையின் படியே நாம் செயல்படுவோம் என்று அடிக்கடி கூறி வருகின்றனர்.          ஆனால் அரசின் பல கல்வித் திட்டங்கள் அரசின் தேசியக் கல்விக்கொள்கை“இன்னும் எவ்வளவு காலம் ஏமாறுவது?”-ஐ படிப்பதைத் தொடரவும்.

பாடநூல்களில் வெறுப்பு அரசியல்

பாடநூல்களில் வெறுப்பு அரசியல் மு.சிவகுருநாதன்          குழந்தைகளுக்கான பாடநூல்கள் மிகுந்த கவனத்துடனும் பொறுப்பு உணர்வுடனும் எழுதப்பட வேண்டியது அவசியம். தவறான செய்திகளும் கருத்துகளும் ஒருபுறமிருக்க, சனாதனத்துக்கு, இந்துத்துவத்துக்கு வலுச் சேர்க்கும் கருத்தோட்டங்கள் பள்ளிப் பாடநூல்களில் தூவப்பட்டிருப்பது அதிர்ச்சியளிக்கக் கூடியதாகும். பாடப் புத்தகங்களில் வெறுப்பு அரசிலைப் புகுத்தி குழந்தைகளின் மனத்தில் நஞ்சை விதைக்க அனுமதிக்கக் கூடாது. அப்படியான நச்சுக் கருத்துகளை இனங்கண்டு அகற்ற வேண்டியது காலத்தின் கட்டாயம்.           தமிழ்நாட்டுப் பாடநூல்களில் காணப்படும் இத்தகைய விஷயங்களிலிருந்து சிலவற்றை இங்கு“பாடநூல்களில் வெறுப்பு அரசியல்”-ஐ படிப்பதைத் தொடரவும்.

அம்பேத்கரும்  கல்வியும்

அம்பேத்கரும்  கல்வியும் மு.சிவகுருநாதன்             கல்வி என்றால் என்ன என்பதை முதலில் வரையறுத்துக் கொள்வது நல்லது. அதாவது, கல்வி ஒருவருக்கு நிர்வாணமான சிந்தனா சக்தியை அளிக்க வேண்டும். பற்றற்ற நிலையிலிருந்து சிந்திக்கத் தக்கவராக அவரை ஆக்க வேண்டும் என்று பெரியார் சொன்னார். இக்கருத்துகள்  இங்கு  சிந்திக்கத் தக்கன.          கல்வியின் நோக்கம் ஏதேனும் ஒன்றை திணிப்பதல்ல. மாறாக ஏற்கனவே இந்த சமூகத்தால் திணிக்கப்பட்டிருப்பதை வெளிக்கொணர்ந்து விடுவித்து அவர்களை நிர்வாணமாக்குவதே கல்வி. எத்தகைய பற்றுகளும் முன்முடிவுகளும் துறந்து நிர்வாணமாவதே“அம்பேத்கரும்  கல்வியும்”-ஐ படிப்பதைத் தொடரவும்.

மொழி அரசியல்: அன்றும் இன்றும்

    மொழி அரசியல்: அன்றும் இன்றும் மு.சிவகுருநாதன்             வரி வடிவம் இல்லாத தொல் பழங்காலங்களில் பாறை ஓவிய மொழியே உணர்வுகளை வெளிப்படுத்தும் வழியாக இருந்தது. இந்த ஓவியங்கள் ஒரு கட்டத்தில் சித்திர எழுத்துகளாக உருமாற்றம் அடைகின்றன. இதுவே சிந்துவெளி சித்திர எழுத்துக் குறியீடுகளாக நமக்குக் கிடைத்துள்ளது. அவை ஓவியத்தைப் போலவே மறைபொருளைக் கொண்டதாக இருந்தது; இன்றும் இருக்கிறது. ஐராவதம் மகாதேவன், அஸ்கோ பர்போலா போன்றோர் இந்தப் புதிர்களை ஓரளவு விடுவித்துள்ளனர். எழுத்தும் வரி வடிவங்களும் உருவான“மொழி அரசியல்: அன்றும் இன்றும்”-ஐ படிப்பதைத் தொடரவும்.

தமிழர் – தமிழ் –  தமிழகம்: தொன்மையும் வரலாறும்

தமிழர் – தமிழ் –  தமிழகம்: தொன்மையும் வரலாறும் (விவாதத்திற்கான சில குறிப்புகள்) மு.சிவகுருநாதன்           தமிழர் – தமிழ் – தமிழகம் என்ற இணைவின் தொன்மை, வரலாறு, மானுடவியல், நிலம், அரசியல், பண்பாடு, மெய்யியல், கலைகள், பொற்காலம், இருண்ட காலம், அந்நியர் போன்ற பல்வேறு தளங்களில் நமக்கான தெளிவை உண்டாக்க வேண்டிய தேவையிருக்கிறது. தமிழர்களின் வரலாற்றை எங்கிருந்து தொடங்குவது? சிந்துவெளியிலிருந்தா அல்லது கீழடியிலிருந்தா? எதிலிருந்து தொடங்குவது சரியாக இருக்கும்?         ஹரப்பா (பஞ்சாப்), மொகஞ்சதாரோ (சிந்து),“தமிழர் – தமிழ் –  தமிழகம்: தொன்மையும் வரலாறும்”-ஐ படிப்பதைத் தொடரவும்.

இந்திய அரசியலமைப்பிற்கு மாற்றாக சனாதனம்!

இந்திய அரசியலமைப்பிற்கு மாற்றாக சனாதனம்! மு.சிவகுருநாதன்             ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் முழுநேர மற்றும் பகுதிநேர ஊழியர்கள் தேசிய கல்விக் கொள்கை வகுக்கும் குழுவில் இடம்பெற்றனர். நாக்பூர் வழிகாட்டுதலில் கல்விக்கொள்கை உருவாக்கப்பட்டு அமலுக்கு வந்துள்ளது. வலதுசாரி பாசிசவாதிகளுக்கு வரலாறு, அறிவியல், இலக்கியம் எல்லாம் என்றும் ஆகாது. அவற்றைத் தங்களுக்கேற்ப வளைப்பதையும் திணிப்பதையும் கருத்தியலாகக் கொண்டு செயலாற்றுபவர்கள் இவர்கள். அடல் பிஹாரி வாஜ்பாய் காலம் தொட்டு இத்தகைய மோசடித் திணிப்புகள் தொடர்ந்து கொண்டுள்ளன. ஆய்வு நிறுவனங்கள், உயர்கல்வி அமைப்புகள் போன்றவற்றைச்“இந்திய அரசியலமைப்பிற்கு மாற்றாக சனாதனம்!”-ஐ படிப்பதைத் தொடரவும்.

புதிய பாதையில் தேசிய கல்விக்கொள்கை?

புதிய பாதையில் தேசிய கல்விக்கொள்கை? மு.சிவகுருநாதன்          வெறும் எழுத்தர்களை உருவாக்குவது மெக்காலே கல்விமுறை என்ற விமர்சனம் தொடர்ந்து வைக்கப்படுகிறது. இந்த அடிப்படைவாதிகள் இதற்கு மாற்றாக முன்வைப்பது குருகுலக்கல்வி முறைதான். பெரும்பாலானோரின் கனவிலும் நனவிலும் இக்கருத்துகள் உறைந்துள்ளதை அவதானிக்க முடிகிறது. ஒன்றிய அரசின் கருத்தியலுடன் இணைந்தது குருகுலக்கல்வி முறை. எனவே அவர்களது கல்வித்திட்டத்திலும் கொள்கையிலும் இதற்கு இடமிருக்கிறது. ஆனால் திராவிட மாடலில் அதற்குரிய இடம் கேள்விக்குரியது. பெரியார் சொன்னதுபோல் நமது மூளைகளில் தேங்கிப்போன கசடுகளை அகற்றுவது அவ்வளவு“புதிய பாதையில் தேசிய கல்விக்கொள்கை?”-ஐ படிப்பதைத் தொடரவும்.

தகைசால் பள்ளிகளும் பிஎம் ஶ்ரீ பள்ளிகளும்

தகைசால் பள்ளிகளும் பிஎம் ஶ்ரீ பள்ளிகளும் மு.சிவகுருநாதன்              தமிழகத்தில் திமுக அரசு பதவியேற்று ஓராண்டு நிறைவடைந்ததை முன்னிட்டு, அரசு, ஊராட்சி ஒன்றிய, நகராட்சி மற்றும் மாநகராட்சி தொடக்கப் பள்ளி மாணவர்களுக்கு காலைச் சிற்றுண்டி, குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து மருத்துவ பரிசோதனை, தகைசால் பள்ளிகள், நகர்ப்புற மருத்துவ நிலையம், ‘உங்கள் தொகுதியில் முதல்வர்’ திட்ட விரிவாக்கம் உள்ளிட்ட ஐந்து  திட்டங்களை  மே 07, 2022 அன்று சட்டப்பேரவையில் 110 விதியின்கீழ் முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.             “ஏப்ரல் மாதம்தகைசால் பள்ளிகளும் பிஎம் ஶ்ரீ பள்ளிகளும்-ஐ படிப்பதைத் தொடரவும்.