சமூக இடைவெளி!

சமூக இடைவெளி! மு.சிவகுருநாதன்            கொரோனா காலத்தில் பிரபலமானது சமூக இடைவெளி எனும் சொல்லாடல். நாம் இங்கு அந்தச் சமூக இடைவெளியைப் பற்றிப் பேசப்போவதில்லை. ஏழை – பணக்காரன், கிராமம் – நகரம், அறம் சார் வாழ்க்கை – போக்கிரி வாழ்வு, சாதி, மதம், மொழி, இனம் சார்ந்த இடைவெளிகள் தொடர்கின்றன. “இப்பெல்லாம் யாரு சாதி பாக்குறா”, என்பது மேம்போக்கான பார்வையாக நிலைத்துவிட்டது. சாதிகள் முன்பைவிட தீவிரமாக துலக்கம் பெற்றுள்ளன. பண்பாட்டு அடையாளங்களைத் தேடுதல் என்கிற பெயரில்“சமூக இடைவெளி!”-ஐ படிப்பதைத் தொடரவும்.

மாஃபியாக்கள் – காவிகள் பிடியில் தமிழகக் கல்வி

மாஃபியாக்கள் – காவிகள் பிடியில் தமிழகக் கல்வி   மு.சிவகுருநாதன்           பீகார், உத்திரப்பிரதேசம் போன்ற வடமாநிலங்களை ஒப்பிட்டு தமிழ்நாடு கல்வியில் முன்னணியில் இருப்பதாக புகழ்வதும் பெரியார் மண் எனப் பெருமிதம் கொள்வதும் நமது வாடிக்கையாகிவிட்டது. ‘திராவிட மாடல்’ அரசு என்கிற தற்புகழ்ச்சியும் இதில் சேர்ந்துகொண்டுள்ளது. ஒன்றிய அரசின் புதிய கல்விக் கொள்கையை நிராகரித்து நமக்கான கல்விக்கொள்கையை உருவாக்க ஒரு குழுவை அமைத்த முதலும் கடைசியுமான மாநிலமாகத் தமிழகம் இருக்கிறது. இருப்பினும் தமிழ்நாட்டுக் கல்வியின் நிலை எவ்வாறுமாஃபியாக்கள் – காவிகள் பிடியில் தமிழகக் கல்வி-ஐ படிப்பதைத் தொடரவும்.

பெண்கள் மீதான வன்கொடுமைகளில் இரட்டை நிலைப்பாடு

பெண்கள் மீதான வன்கொடுமைகளில் இரட்டை நிலைப்பாடு – மு.சிவகுருநாதன் தில்லி துணை மருத்துவப்படிப்பு மாணவி பேருந்தில் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு பல நாட்கள் உயிருக்குப் போராடி சிங்கப்பூர் மருத்துவமனையில் உயிரிழந்தார். இந்த நிகழ்விற்குப் பிறகு ஊடகங்களும் பொதுமக்களும் கிளர்ந்தெழுந்து பல்வேறு வகையான போராட்டங்களில் ஈடுபட்டனர். இது ஒரு வகையில் பாராட்டிற்குரியது என்றாலும் இதன் மறுபக்கத்தையும் நாம் விமர்சிக்கவேண்டியுள்ளது. மத்திய, மாநில அரசுகள் துரித நடவடிக்கைகள் எடுப்பதாக நாடகமாடின. இத்தகைய நடவடிக்கைகளுக்கு ஏதோ ஓர் வகையில் காரணமாக இருக்க்க்கூடிய“பெண்கள் மீதான வன்கொடுமைகளில் இரட்டை நிலைப்பாடு”-ஐ படிப்பதைத் தொடரவும்.

இன்னும் விலகாத – தொடரும் மர்ம முடிச்சுகள்

இன்னும் விலகாத – தொடரும் மர்ம முடிச்சுகள்                                                              – மு.சிவகுருநாதன் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம், ஆசிரியர் தேர்வு வாரியம் போன்றவை எந்தத் தேர்வு நடத்தினாலும் வினாத்தாள்கள் முன்கூட்டியே வெளியாகிவிடுகிறது. தொகுதி-2 வினாத்தாள் வெளியான விவகாரம் சந்தி சிரித்து நாறுகிறது. இவ்விவகாரத்தில் வினாத்தாளை வெளிக்கொண்டு வந்தவர்கள் இன்னும் பிடிபட்டபாடில்லை. வினாத்தாளை பொறுப்பானவர்களிடமிருந்து வாங்கி விற்றவர், அதை வாங்கித்“இன்னும் விலகாத – தொடரும் மர்ம முடிச்சுகள்”-ஐ படிப்பதைத் தொடரவும்.

தேர்வில் காப்பியடிக்கும் கலாச்சாரம் : யார் காரணம்? என்ன செய்யலாம்?

தேர்வில் காப்பியடிக்கும் கலாச்சாரம் : யார் காரணம்? என்ன செய்யலாம்?                                                             – மு. சிவகுருநாதன் தேர்வு முறைகள் தொடங்கியதிலிருந்தே காப்பியடிக்கும் பழக்கமும் தொடங்கியிருக்க வேண்டும். இங்கொன்றும் அங்கொன்றுமாக நடைபெறும் சிறு நிகழ்வுகள் இப்போது பூதாகரமாக உருவெடுத்திருக்கின்றன. மாணவர்கள் பார்த்து கேட்டு எழுதுவதை கண்டு கொள்ளாமலிருப்பது, மாணவர்களுக்கு பிட் சப்ளை செய்வது, நன்றாக படிக்கும் மாணவனின் விடைத்தாளை தேர்வறையில் உள்ள அனைவருக்கும் வழங்குவது, அறைக்கண்காணிப்பாளர்களே சொல்லித் தருவது, குறிப்பிட்ட பாட ஆசிரியரிடமிருந்து குறுஞ்செய்தி (SMS) மூலம் விடைகள்“தேர்வில் காப்பியடிக்கும் கலாச்சாரம் : யார் காரணம்? என்ன செய்யலாம்?”-ஐ படிப்பதைத் தொடரவும்.

சென்னை வேளச்சேரி என்கவுன்டர் கொலைகள் உண்மை அறியும் குழு – இடைக்கால அறிக்கை

சென்னை வேளச்சேரி என்கவுன்டர் கொலைகள் உண்மை அறியும் குழு – இடைக்கால அறிக்கை பிப்ரவரி 27, 2012 சென்னை. வேளச்சேரியில் கடந்த 22 தேதியன்று இரவு (23 அதிகாலை) நடந்துள்ள என்கவுன்டர் கொலைகளில் ஐவர் பலியாகியுள்ள செய்தி தொடர்பாக தமிழகத்தில் இருந்து வெளிவரும் ஊடகங்கள் பல நியாயமான அய்யங்களை எழுப்பியுள்ளன. இதுகுறித்து ஆய்வு செய்ய மனித உரிமை அமைப்புகளைச் சேர்ந்த கீழ்க்கண்ட 10 பேர் கொண்ட குழு ஒன்று அமைக்கப்பட்டது. 1. பேரா. அ. மார்க்ஸ், தலைவர்,“சென்னை வேளச்சேரி என்கவுன்டர் கொலைகள் உண்மை அறியும் குழு – இடைக்கால அறிக்கை”-ஐ படிப்பதைத் தொடரவும்.

ஒன்பதாம் வகுப்பு மாணவனுக்கு பியர் புட்டிகள் விற்கும் அரசு டாஸ்மாக் கடைகள்

ஒன்பதாம் வகுப்பு மாணவனுக்கு பியர் புட்டிகள் விற்கும் அரசு டாஸ்மாக் கடைகள் – மு. சிவகுருநாதன் திருவாரூர் மாவட்டம் விளமல் அரசு உயர்நிலைப்பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படிக்கும் தியானபுரம் நடுத்தெருவைச் சேர்ந்த சசிகுமார் என்பவரின் மகன் கெளசிகன் (15) நேற்று (27.02.2012) மதிய உணவு இடைவேளையின்போது பியர் குப்பிகள் வாங்கிக் கொண்டு சைக்கிளில் செல்லும்போது அப்பாட்டில்கள் வெடித்துச் சிதறி அம்மாணவன் மாண்டு போயுள்ளான். சென்னையைச் சேர்ந்த ஒரு தனியார் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு மாணவன் வகுப்பறையிலேயே ஆசிரியையைக்“ஒன்பதாம் வகுப்பு மாணவனுக்கு பியர் புட்டிகள் விற்கும் அரசு டாஸ்மாக் கடைகள்”-ஐ படிப்பதைத் தொடரவும்.

என்கவுன்ட்டர் கொலைகள் சாதிப்பதென்ன?

என்கவுன்ட்டர் கொலைகள் சாதிப்பதென்ன? -மு.சிவகுருநாதன் சென்னையில் நடந்த இருவேறு வங்கிக் கொள்ளைகளில் ஈடுபட்டதாக நம்பப்படும் ஐந்து பேரை தமிழக காவல்துறை சுட்டுக் கொன்றுள்ளது. தேசிய மனித உரிமை ஆணையம்,உச்சநீதிமன்றம் ஆகியற்றின் பல்வேறு தீர்ப்புகள், ஆணைகள் எவற்றையும் இந்தியாவிலுள்ள எந்த மாநில காவல்துறையும் அரசுகளும் மதிப்பதில்லை. நாட்டில் பல மாநிலங்களில் போலி என்கவுன்ட்டர்கள் அரங்கேறுகின்றன. என்கவுன்ட்டரில் ஈடுபடும் அதிகாரிகளுக்கு வீர தீரப்பரிசுகள், பதவி உயர்வுகள் வழங்கப்படக்கூடாது என்கிற உத்தரவுகள் இருக்கும் நிலையிலும் எந்த அரசும் இவற்றை கடைபிடிக்காத காரணத்தால்“என்கவுன்ட்டர் கொலைகள் சாதிப்பதென்ன?”-ஐ படிப்பதைத் தொடரவும்.

நமது கல்விமுறை எங்கே செல்கிறது?

நமது கல்விமுறை எங்கே செல்கிறது? -மு.சிவகுருநாதன் ஆசிரியை உமா மகேஸ்வரி   சென்னையில் ஒரு தனியார் பள்ளி வகுப்பறையில் ஆசிரியை மாணவர் ஒருவரால் குத்திக் கொலை செய்யப்பட்ட நிகழ்வு அதிர்ச்சி அலைகளை எழுப்பியுள்ளது. சென்னை பாரிமுனை அரண்மனைக்காரத் தெருவில் உள்ள செயின்ட் மேரீஸ் ஆங்கிலோ இந்தியன் மேல்நிலைப் பள்ளியில் இந்தி மற்றும் வேதியியல் ஆசிரியையாகப் பணிபுரிந்த மந்தைவெளி நார்மன் தெருவைச் சேர்ந்த ஆசிரியை உமா மகேஸ்வரியை (39) ஒன்பதாம் வகுப்புச் சேர்ந்த மாணவர் ஒருவர் கழுத்து மற்றும்“நமது கல்விமுறை எங்கே செல்கிறது?”-ஐ படிப்பதைத் தொடரவும்.

தமிழக காவல்துறையின் அட்டூழியங்கள்

தமிழக காவல்துறையின் அட்டூழியங்கள் – மு. சிவகுருநாதன் (இன்று டிசம்பர் 10, உலக மனித உரிமைகள் நாள்)   உலகம், இந்தியா, தமிழ்நாடு என எந்தப் பகுதியை எடுத்துக்கொண்டாலும் பேரளவில் மனித உரிமை மீறல்களில் ஈடுபடுவது ராணுவமும் காவல்துறைகளும் என்பதை அன்றாட நிகழ்வுகள் நிரூபிக்கின்றன. ஈராக் குடிமக்களை கொடுமைகளுக்குள்ளாக்கிய அபு கிரைப் சிறையில் அமெரிக்க ராணுவ வீரர்களின் வீடியோக்களை நாம் அவ்வளவு எளிதில் மறந்து விட முடியாது. இலங்கையில் நமது அமைதிப்படை வீரர்கள் பண்ணிய அக்கிரமங்கள் பழங்கதை.“தமிழக காவல்துறையின் அட்டூழியங்கள்”-ஐ படிப்பதைத் தொடரவும்.