விளிம்புநிலை மக்களின் வாழ்வும் கலையும்

விளிம்புநிலை மக்களின் வாழ்வும் கலையும் (சிவகுமார் முத்தய்யாவின் ‘குரவை’ நாவல் விமர்சனம்) மு.சிவகுருநாதன்          குரவைக் கூத்து பழங்காலத்திருந்து தொடரும் ஒரு கலை வடிவம். துணங்கை, தழூஉ  என்றெல்லாம் வகைப்படுத்தியுள்ளனர். குடக்கூத்து எனப்படும் கரகாட்டமும் கூத்தின் ஒரு வகைதான். காலப்போக்கில் அக்கால மக்களின் அன்றாட நிகழ்வாக இருந்த கலைகளில் சில மேனிலையாக்கம் பெறவும் சில அடித்தட்டு மக்களின் தலையில் சுமையாகவும் திணிக்கவும் வழிவகுக்கப்பட்டது. கிராமியக் கலை  நிகழ்ச்சி, கரகாட்டம் என்றெல்லாம் அழைக்கப்பட்டாலும் குறவன் குறத்தி ஆட்டத்தை மையப்படுத்தியே“விளிம்புநிலை மக்களின் வாழ்வும் கலையும்”-ஐ படிப்பதைத் தொடரவும்.

பாசிஸ்ட்கள் கைகளில் கல்வி

பாசிஸ்ட்கள் கைகளில் கல்வி மு.சிவகுருநாதன்            தேசியக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம்  (NCERT) ஒன்றிய அளவில்  பள்ளிகளுக்கான கலைத்திட்டம், பாடத்திட்டம் போன்றவற்றை வடிவமைத்து,  1-12 வகுப்புகளுக்கான பாடநூல்களையும் தயாரித்து வெளியிடுகிறது. ஒன்றிய அரசின் கல்வித்துறையின் கீழ் இவ்வமைப்பு செயல்படுகிறது. இந்தப் பாடநூல்களையே மத்தியக் கல்வி வாரியம் (CBSE), கேந்திரிய வித்யாலயா (KV), நவோதயா (NV) போன்ற பள்ளிகள் பயன்படுத்துகின்றன.           மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் (SCERT) மாநில வாரியத்திற்கான பாடத்திட்டம்“பாசிஸ்ட்கள் கைகளில் கல்வி”-ஐ படிப்பதைத் தொடரவும்.

திருவாரூர் தாஜ்மஹால்!

திருவாரூர் தாஜ்மஹால்! திருவாரூர் அம்மையப்பன் ஜெய்லானி பீவி மஹால் (ஜெயிலானியா மர்கஸ்) மு.சிவகுருநாதன் திருவாரூர் அருகே அம்மையப்பன் என்ற கிராமத்தில் தாயின் நினைவாக ரூபாய் 5 கோடி செலவில் தாஜ்மஹால் போன்ற வடிவமைப்பில் நினைவிடம் உருவாக்கப்பட்டு, திறக்கப்பட்ட செய்தி நேற்று (09/06/2023) காட்சியூடகங்களில் செய்தியாக வெளியானது. இன்றைய (10/06/2023) அச்சு ஊடகங்களில் அச்செய்தி இடம்பெற்றுள்ளது. இன்று (10/06/2023) மாலை நிலாக்களுடன் அங்கு கிளம்பினோம். அம்மையப்பனிலிருந்து திருக்கண்ணமங்கை செல்லும் சாலையில் இந்த மர்கஸ் அமைந்துள்ளது. மாலை வேளையில் நல்ல“திருவாரூர் தாஜ்மஹால்!”-ஐ படிப்பதைத் தொடரவும்.

கதைக் கட்டுரைகளும் கட்டுரைக் கதைகளும்

கதைக் கட்டுரைகளும் கட்டுரைக் கதைகளும் (நூல் விமர்சனம்: அஞ்ஞை நீ ஏங்கி அழல் – பூமணி) மு.சிவகுருநாதன்                 பா.ஜெயப்பிரகாசத்தின் ‘தெக்கத்தி ஆத்மாக்கள்’ குறித்த ‘புது வாசனை’ எனும் கட்டுரையில், “இயல்பான அனுபவங்கள் அமுங்கி கருத்துச் சவாரியில் படைப்பு நிலை நீர்த்துப் போய் கட்டுரைத் தன்மை மேலொங்கியிருக்கும் கதைகளைக் கட்டுரைக் கதைகள் என்று சொல்லலாம். உணர்வுகள் கோர்க்கப்பட்ட, கதையம்சங்கள் நிறைந்த கட்டுரைகளை கதைக் கட்டுரைகள் என்று சொல்லலாமல்லவா. அப்படியானால் இவை கதைக் கட்டுரைகளே”, என்கிறார் பூமணி. இது“கதைக் கட்டுரைகளும் கட்டுரைக் கதைகளும்”-ஐ படிப்பதைத் தொடரவும்.

இன்னும் எவ்வளவு காலம் ஏமாறுவது?

இன்னும் எவ்வளவு காலம் ஏமாறுவது? மு.சிவகுருநாதன்          தேசியக் கல்விக் கொள்கை 2020ஐ ஏற்கவில்லை எனவும் அதை அமல்படுத்த மாட்டோம் என்று தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. மேலும் தமிழ்நாட்டிற்கென தனியாக கல்விக் கொள்கையை உருவாக்க ஓர் உயர்மட்டக் குழு ஒன்றையும் அமைத்துள்ளது. தமிழக முதல்வர், உயர்கல்வி மற்றும் பள்ளிக்கல்வி அமைச்சர்கள் நமது கல்விக் கொள்கையின் படியே நாம் செயல்படுவோம் என்று அடிக்கடி கூறி வருகின்றனர்.          ஆனால் அரசின் பல கல்வித் திட்டங்கள் அரசின் தேசியக் கல்விக்கொள்கை“இன்னும் எவ்வளவு காலம் ஏமாறுவது?”-ஐ படிப்பதைத் தொடரவும்.

பாடநூல்களில் வெறுப்பு அரசியல்

பாடநூல்களில் வெறுப்பு அரசியல் மு.சிவகுருநாதன்          குழந்தைகளுக்கான பாடநூல்கள் மிகுந்த கவனத்துடனும் பொறுப்பு உணர்வுடனும் எழுதப்பட வேண்டியது அவசியம். தவறான செய்திகளும் கருத்துகளும் ஒருபுறமிருக்க, சனாதனத்துக்கு, இந்துத்துவத்துக்கு வலுச் சேர்க்கும் கருத்தோட்டங்கள் பள்ளிப் பாடநூல்களில் தூவப்பட்டிருப்பது அதிர்ச்சியளிக்கக் கூடியதாகும். பாடப் புத்தகங்களில் வெறுப்பு அரசிலைப் புகுத்தி குழந்தைகளின் மனத்தில் நஞ்சை விதைக்க அனுமதிக்கக் கூடாது. அப்படியான நச்சுக் கருத்துகளை இனங்கண்டு அகற்ற வேண்டியது காலத்தின் கட்டாயம்.           தமிழ்நாட்டுப் பாடநூல்களில் காணப்படும் இத்தகைய விஷயங்களிலிருந்து சிலவற்றை இங்கு“பாடநூல்களில் வெறுப்பு அரசியல்”-ஐ படிப்பதைத் தொடரவும்.

தமிழ்நாட்டுக் கல்விக் கொள்கையின் எதிர்காலம்?

தமிழ்நாட்டுக் கல்விக் கொள்கையின் எதிர்காலம்? மு.சிவகுருநாதன்            பெரும் எதிர்பார்ப்புகளை உருவாக்கியிருந்த தமிழ்நாட்டின் கல்விக்கொள்கைக் குழுவில் முழுவீச்சில் செயல்பட்ட கல்வியாளர் லெ.ஜவகர்நேசன் இக்குழுவிலிருந்து வெளியேறியிருக்கிறார். அரசின் குழுக்களின் நிலை இதுதான் என்றாலும் கல்வி சார்ந்து இயங்குவோருக்கு இது பெரிய அதிர்ச்சியாக உள்ளது. கல்வி பற்றிய அக்கறையின்மையால் இப்பிரச்சினை ஒரு சிறிய வட்டத்தைத் தவிர வேறெங்கும் பெரிய சலனத்தை ஏற்படுத்தவில்லை. தொடர்ந்த மறுப்பறிக்கைகளுடன் இப்பிரச்சினை கைவிடப்பட்டுள்ளது.               பொதுவாக கல்விக்குழு என்பது முன்னாள், இந்நாள் கல்வி அலுவலர்கள், துணைவேந்தர்கள்,“தமிழ்நாட்டுக் கல்விக் கொள்கையின் எதிர்காலம்?”-ஐ படிப்பதைத் தொடரவும்.

காந்தியின் தென்னாப்பிரிக்கப் பயணம்

காந்தியின் தென்னாப்பிரிக்கப் பயணம் (மகாத்மாவின் கதை தொடரின் ஆறாவது அத்தியாயம்.) மு.சிவகுருநாதன்             காந்திக்கு உலக அனுபவம் ஏற்பட்டுவிட்டபடியால் இங்கிலாந்து கிளம்பும் முன் ஏற்பட்ட பிரிவுத்துயர் தென்னாப்பிரிக்கா கிளம்பும்போது இல்லை. மனைவி மற்றும் குழந்தைகளைப் பிரியும் துயரம் மட்டும் இருந்தது. தாதா அப்துல்லா கம்பெனி மூலம் கப்பல் பயணச்சீட்டு ஏற்பாடானது. முதல் வகுப்புப் பயணச்சீட்டு கிடைக்கவில்லை. மூன்றாம் வகுப்புச்சீட்டும் முதல்வகுப்பு உணவும் ஏற்பாடு செய்யலாம் என்று கூறப்பட்டது. காந்திக்கு நம்பிக்கையில்லாமல் நேரடியாக கப்பல் கேப்டனைச் சந்தித்துப் பேசினார்.“காந்தியின் தென்னாப்பிரிக்கப் பயணம்”-ஐ படிப்பதைத் தொடரவும்.

தனிமையின் உரையாடல்

தனிமையின் உரையாடல் நூல் விமர்சனம்: கொய்யாவின் வாசனை (மொ) பிரம்மராஜன் மு.சிவகுருநாதன்            கொலம்பியா நாட்டைச் சேர்ந்த கேப்ரியல் கார்சியா மார்க்வெஸ் (1927-2014) தமிழுக்கு நன்கு அறிமுகமானவர். எழுத்தாளராகவும் பத்தரிக்கையாளராகவும் இயங்கியவர். அவரது சில படைப்புகள் தமிழில் மொழியாக்கம் செய்யப்பட்டுள்ளன. தமிழ்ச் சிறுபத்தரிக்கைச் சூழலில் வெகுவாக பேசப்பட்டவர். கல்குதிரை, புதுஎழுத்து போன்ற சிற்றிதழ்கள் இவருக்கு சிறப்பிதழ்களைக் கொண்டு வந்தன. இவரது மந்திர எதார்த்தவாதம் (Magical Realism) இங்கு பரந்த கவனிப்பைப் பெற்றது. பல தமிழ் எழுத்தாளர்கள் இதன்“தனிமையின் உரையாடல்”-ஐ படிப்பதைத் தொடரவும்.

பண்டைய வரலாற்றுக்கான ஆய்விதழ்

பண்டைய வரலாற்றுக்கான ஆய்விதழ் (சாசனம் 1-6 : இருமொழி ஆய்விதழ் அறிமுகம்) மு.சிவகுருநாதன்            உண்மையான ஆய்விதழ்கள் தற்போது அதிகம் வெளிவருவதில்லை. வேறு சில நோக்கங்களுக்காக இந்த இதழ்கள் வெளியிடப்படுகின்றன. தமிழக அரசின் தொல்லியல் துறை வெளியிட்ட ‘கல்வெட்டு’ எனும் ஆய்விதழும் தற்போது வெளிவரவில்லை என்று தெரிகிறது.          இந்த நிலையில் ‘சாசனம்’ ஆய்விதழ் 2019லிருந்து தமது பயணத்தைத் தொடங்கியிருக்கிறது. ஆண்டுக்கு இருமுறை மற்றும் இருமொழி இதழான ‘சாசனம்’ இதுவரை ஆறு இதழ்கள் வெளிவந்துள்ளது. 2020க்கான இரு“பண்டைய வரலாற்றுக்கான ஆய்விதழ்”-ஐ படிப்பதைத் தொடரவும்.