தேர்வில் காப்பியடிக்கும் கலாச்சாரம் : யார் காரணம்? என்ன செய்யலாம்?

தேர்வில் காப்பியடிக்கும் கலாச்சாரம் : யார் காரணம்? என்ன செய்யலாம்?                                                             – மு. சிவகுருநாதன் தேர்வு முறைகள் தொடங்கியதிலிருந்தே காப்பியடிக்கும் பழக்கமும் தொடங்கியிருக்க வேண்டும். இங்கொன்றும் அங்கொன்றுமாக நடைபெறும் சிறு நிகழ்வுகள் இப்போது பூதாகரமாக உருவெடுத்திருக்கின்றன. மாணவர்கள் பார்த்து கேட்டு எழுதுவதை கண்டு கொள்ளாமலிருப்பது, மாணவர்களுக்கு பிட் சப்ளை செய்வது, நன்றாக படிக்கும் மாணவனின் விடைத்தாளை தேர்வறையில் உள்ள அனைவருக்கும் வழங்குவது, அறைக்கண்காணிப்பாளர்களே சொல்லித் தருவது, குறிப்பிட்ட பாட ஆசிரியரிடமிருந்து குறுஞ்செய்தி (SMS) மூலம் விடைகள்“தேர்வில் காப்பியடிக்கும் கலாச்சாரம் : யார் காரணம்? என்ன செய்யலாம்?”-ஐ படிப்பதைத் தொடரவும்.

தினமணி – எக்ஸ்பிரஸ் நிர்வாகத்தின் பகற்கொள்ளை

தினமணி – எக்ஸ்பிரஸ் நிர்வாகத்தின் பகற்கொள்ளை                                                                              – மு. சிவகுருநாதன் தமிழர்களின் கெட்ட காலம், மாற்று இதழுக்கு வேறு வழியின்றி தினமணியை வாங்கிப் படித்தாக வேண்டிய கட்டாயம். அதற்காக தினமணியை நம்பகமான நாளிதழ் என்று யாரும் தவறாக நினைத்து விட வேண்டாம். பார்ப்பன தினமலரின் அசிங்கங்களை ஒப்பிடும்போது தினமணி தேவலாம் என்கிற நிலைதான். எக்ஸ்பிரஸ் – தினமணி குழுமம் இரு நாளிதழ்களுக்கும் சேர்த்து சலுகை ஆண்டு சந்தா என சென்ற ஆண்டு ரூ. 650 என்று“தினமணி – எக்ஸ்பிரஸ் நிர்வாகத்தின் பகற்கொள்ளை”-ஐ படிப்பதைத் தொடரவும்.

பல்கிப் பெருகும் சிறுபத்திரிக்கை வீச்சு

சிற்றிதழ் அறிமுகம்: அடவி – 7, ஜனவரி – 2012. பல்கிப் பெருகும் சிறுபத்திரிக்கை வீச்சு                                                    – மு. சிவகுருநாதன்   இன்றுள்ள நவீன கணினி யுகத்தில் கிடைக்கும் பலதரப்பட்ட வசதிகளைக் கொண்டு பணம் இருந்தால் மட்டும் சிறுபத்திரிக்கைகளைச் செம்மையாக, அழகுற அச்சிட்டு வெளிக் கொண்டு வர முடியும். அவற்றை வாசகர்களின் கையில் சேர்ப்பது, தொடர்ந்து பொருளாதார நெருக்கடியில் சிக்காமல் மீண்டு வருவது போன்ற பல்வேறு படிகளைத் தாண்டி வர வேண்டியுள்ளது. திருவண்ணாமலையிலிருந்து தில்லை முரளி“பல்கிப் பெருகும் சிறுபத்திரிக்கை வீச்சு”-ஐ படிப்பதைத் தொடரவும்.

போராளி கென் சரோ விவா

போராளி கென் சரோ விவா                                                 – மு. சிவகுருநாதன் (2009இல் ‘பயணி’ வெளியீடாக யூமா. வாசுகி மொழி பெயர்ப்பில் வெளியான ‘ஒகோனிக்கு எதிரான யுத்தம் – ஷெல்லின் கொலைக்களம் – கென் சரோ விவா’ நூல் பற்றிய அறிமுகப்பதிவு) 200 -க்கு மேற்பட்ட இனங்களைக் கொண்ட நைஜீரியா நாட்டின ஒகோனி (Ogoni) இன மக்கள் வசிக்கும் நைகர் நதி பாயும் 404 சதுர மைல் பரப்பு, ஒரு சதுர மைலுக்கு 1500 மக்கள் அளவில் மிக“போராளி கென் சரோ விவா”-ஐ படிப்பதைத் தொடரவும்.

புத்தகங்களுடனான வாழ்க்கை – பகுதி 0001

புத்தகங்களுடனான வாழ்க்கை – பகுதி 0001                                                   -மு.சிவகுருநாதன்      (இன்று ஏப்ரல்-23 உலக புத்தக தினம்) எழுத்துக் கூட்டிப் படிக்க அப்போது வீட்டில் ‘சுதேசமித்திரன் ‘ கிடைத்தது. அது நின்றுபோன பிறகு அப்பா ‘அலைஓசை ‘ வாங்கினார். பின்னர் அதுவும் மரணிக்க ‘தினமணி’க்கு மாறவேண்டிய கட்டாயம் அப்பாவுக்கு. அன்றிலிருந்து தினமணி படிப்பது தலைவிதியாகிவிட்டது. ஏறத்தாழ அனைத்துத் தமிழர்களின் தலைவிதியும் இதுதான். இந்தியாவில் ஆங்கில மொழி நாளிதழ்களுக்கும் வேறுமொழி நாளிதழ்களுக்கும் தேர்ந்தெடுக்க வேறுபட்ட சாய்ஸ் உண்டு. ஆனால்“புத்தகங்களுடனான வாழ்க்கை – பகுதி 0001”-ஐ படிப்பதைத் தொடரவும்.

அக்னி 5 : 100 கோடி இந்தியர்களின் வயிற்றிலடித்த சாதனை!

அக்னி 5 : 100 கோடி இந்தியர்களின் வயிற்றிலடித்த சாதனை!                                                                                          -மு.சிவகுருநாதன்   அக்னி 5 ஏவுகணை வெற்றி கிரிக்கெட் வெற்றிக்கு இணையான தேசியப் பெருமிதமாகக் கொண்டாடப்படுகிறது. ராணுவத்தில் நடைபெறும் ஊழல் உள்ளிட்ட பல்வேறு குளறுபடிகளை மறக்கடிக்க இந்தப் போலியான வெற்றிப் பெருமிதம் நமது அரசியல்வாதிகளுக்கு பெரிதும் உதவுகிறது. அக்னி 5 ஏவுகணை ஏவப்பட்டதன் மூலம் அமெரிக்கா, ரஷ்யா,சீனா, பிரான்ஸ், இங்கிலாந்து ஆகிய வல்லரசுகளின் பட்டியலில் நாமும் சேர்ந்துவிட்டோமாம்! வெட்கமாக இல்லை! கல்வி, சுகாதாரம், மனித“அக்னி 5 : 100 கோடி இந்தியர்களின் வயிற்றிலடித்த சாதனை!”-ஐ படிப்பதைத் தொடரவும்.

அணு உலை வெறியர்கள் எங்கே போயினர்?

அணு உலை வெறியர்கள் எங்கே போயினர்?                               -மு.சிவகுருநாதன் 11.04.2012 அன்று தேதி இ‌ந்‌திய நேரப்படி பிற்பகல் சுமார் 2.15 மணி‌க்‌கு இந்தோனேஷியாவின் கடல் பகுதியில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. இ‌ந்த ‌நிலநடு‌க்க‌ம் ரிக்டர் அளவுகோலில் 8.9 ஆக பதிவானது. இந்த நிலநடுக்கத்தின் தாக்கம் தமிழகம் உட்பட இந்தியா முழுவதும் உணரப்பட்டது. மேலும் இந்தோனேஷியாவின் சுமத்ரா தீவில் அடுத்தடுத்து இரண்டு தடவை பெரிய நிலநடுக்கம் ஏற்பட்டது. நிலநடுக்கத்தையொட்டி முதலில் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது. பின்னர் அது திருப்பப்“அணு உலை வெறியர்கள் எங்கே போயினர்?”-ஐ படிப்பதைத் தொடரவும்.

திருவாரூரில் அம்பேத்கர் பிறந்த நாள் கருத்தரங்கம்

திருவாரூரில் அம்பேத்கர் பிறந்த நாள் கருத்தரங்கம்                                                                     -மு.சிவகுருநாதன் விடுதலைக்குயில்கள் (கலை இலக்கிய இயக்கம்) நடத்தும் , புரட்சியாளர்  அம்பேத்கர் பிறந்த நாள் கருத்தரங்கம் இன்று (15.04.2012) காலை 11 மணிக்கு திருவாரூர் , ராயல் பார்க் ஹோட்டலின் செனட் ஹாலில் தொடங்கி நடைபெற்று வருகிறது. காலை அமர்விற்கு தலைமையேற்ற கம்பீரன் வேலூர் மாவட்டத்திலும் தருமபுரி மாவட்டம் அருரிலும் புரட்சியாளர் அம்பேத்கர் பிறந்த நாள் பெரும் கொண்டாட்டங்களுடன் நிகழ்ந்ததைக் குறிப்பிட்டுப் பேசினார். அம்பேத்கரின் நூல் தொகுப்பு –“திருவாரூரில் அம்பேத்கர் பிறந்த நாள் கருத்தரங்கம்”-ஐ படிப்பதைத் தொடரவும்.