கல்விக் கொள்கையா? காவிக்கொள்கையா?

கல்விக் கொள்கையா? காவிக்கொள்கையா?              மேலே கண்ட தலைப்பிலான எனது கல்வி குறித்த 15 கட்டுரைகள் அடங்கிய நூல் 46வது சென்னைப் புத்தகக் காட்சியை ஒட்டி வெளியிடத் திட்டமிடப்பட்டுச் சற்றுத் தாமதமாக கண்காட்சி முடிந்ததும் வெளியாகியுள்ளது.       இந்நூலை ‘நன்னூல் பதிப்பகம்’ வெளியிட்டுள்ளது. நண்பர் நன்னூல் மணலி அப்துல்காதர் நூலை அழகாக வெளியிட்டுள்ளார். அட்டை மற்றும் நூல் வடிவமைப்பு நண்பர் சு.கதிரவன்.       இந்நூலில் இடம்பெறும் கட்டுரைகள் 2019 – 2022 காலகட்டங்களில் காக்கைச் சிறகினிலே, பேசும்“கல்விக் கொள்கையா? காவிக்கொள்கையா?”-ஐ படிப்பதைத் தொடரவும்.

ஒரு நாள் போதுமா?

ஒரு நாள் போதுமா? மு.சிவகுருநாதன் இவ்வாண்டு சென்னைப் புத்தகக் காட்சிக்கு பொங்கல் விடுமுறையில் செல்லலாம் என்று நினைத்திருந்தேன். தவிர்க்க இயலாத காரணங்களால் ஞாயிறன்று (08/01/2023) புத்தகக் காட்சிக்கு சென்று திரும்பினேன். கண்காட்சி தொடங்கி மூன்றாவது நாள். எனவே புதிய நூல்களின் வரவு குறைவு. புத்தகக் கண்காட்சியின் கடைகள் பட்டியல் (site map) கூட இல்லை. உள்ளே நுழைய முடியாத குறுகலான கழிப்பறை; கழிவுகள் ஆறாக ஓட மெரினா மாற்றுத்திறனாளி மரப்பாலம் போல பிளைவுட் பலகையில் நடந்து வெளியேற“ஒரு நாள் போதுமா?”-ஐ படிப்பதைத் தொடரவும்.

அனைவருக்குமான பொதுவுடைமைப் பாடங்கள்

அனைவருக்குமான பொதுவுடைமைப் பாடங்கள் மு.சிவகுருநாதன்         மார்க்சிய செவ்வியல் நூல்கள் வரிசையில் ‘பொதுவுடைமை  குழந்தைகளுக்காக…’ என்ற நூல் எம்.பாண்டியராஜனின் அழகான மொழியாக்கத்தில் வெளியாகியுள்ளது. உண்மையில் இந்நூல் குழந்தைகளுக்கானது மட்டுமா என்றால் பொதுவுடைமையைப் புரிந்து கொள்ள விரும்பும் அனைவருக்குமானது. புரிந்துகொள்ள முடியவில்லை என்போரும் இதன் மூலம் பொதுவுடைமையைக் கற்கலாம்; விவாதிக்கலாம்.           இந்நூல் மூன்று பகுதிகளானது. முதல் பகுதியில் பொதுவுடைமை, முதலாளித்துவம், உழைப்பு, சந்தை, நெருக்கடி, முதலாளித்துவம் தோன்றிய முறையும் எடுத்துக்காட்டப்படுகிறது. முதலாளித்துவ சமுதாயத்தில் மக்கள் படும்“அனைவருக்குமான பொதுவுடைமைப் பாடங்கள்”-ஐ படிப்பதைத் தொடரவும்.

மொழி அரசியல்: அன்றும் இன்றும்

    மொழி அரசியல்: அன்றும் இன்றும் மு.சிவகுருநாதன்             வரி வடிவம் இல்லாத தொல் பழங்காலங்களில் பாறை ஓவிய மொழியே உணர்வுகளை வெளிப்படுத்தும் வழியாக இருந்தது. இந்த ஓவியங்கள் ஒரு கட்டத்தில் சித்திர எழுத்துகளாக உருமாற்றம் அடைகின்றன. இதுவே சிந்துவெளி சித்திர எழுத்துக் குறியீடுகளாக நமக்குக் கிடைத்துள்ளது. அவை ஓவியத்தைப் போலவே மறைபொருளைக் கொண்டதாக இருந்தது; இன்றும் இருக்கிறது. ஐராவதம் மகாதேவன், அஸ்கோ பர்போலா போன்றோர் இந்தப் புதிர்களை ஓரளவு விடுவித்துள்ளனர். எழுத்தும் வரி வடிவங்களும் உருவான“மொழி அரசியல்: அன்றும் இன்றும்”-ஐ படிப்பதைத் தொடரவும்.

பள்ளிக் கலைத் திருவிழா: தாக்கமும் மாற்றமும்

பள்ளிக் கலைத் திருவிழா: தாக்கமும் மாற்றமும் மு.சிவகுருநாதன்              இதுநாள்வரை தமிழகப் பள்ளிகளில் ஆண்டு விழாக்களில் மாணவர்களுக்கான போட்டிகள் நடத்தப்படும். ஆண்டுவிழா நடைபெறாத  பள்ளிகளும் உண்டு. மேலும் விடுதலை நாள், குடியரசு நாள், கல்வி வளர்ச்சி நாள் மற்றும் சூழலியல் மற்றும் சாலைப் பாதுகாப்பு விழிப்புணர்வு   போன்ற நேரங்களில் மாணவர்களுக்குச் சில போட்டிகள் நடத்தப்படுவது வாடிக்கை. இவற்றில் பெருந்திரள் மாணவர்களின் பங்கேற்பு இருக்காது.             இந்தக் கல்வியாண்டு முதல் அரசுப்பள்ளிகளில் மாணவர்களின் தனித்திறமையை வளர்க்க கலைத்“பள்ளிக் கலைத் திருவிழா: தாக்கமும் மாற்றமும்”-ஐ படிப்பதைத் தொடரவும்.

தமிழர் – தமிழ் –  தமிழகம்: தொன்மையும் வரலாறும்

தமிழர் – தமிழ் –  தமிழகம்: தொன்மையும் வரலாறும் (விவாதத்திற்கான சில குறிப்புகள்) மு.சிவகுருநாதன்           தமிழர் – தமிழ் – தமிழகம் என்ற இணைவின் தொன்மை, வரலாறு, மானுடவியல், நிலம், அரசியல், பண்பாடு, மெய்யியல், கலைகள், பொற்காலம், இருண்ட காலம், அந்நியர் போன்ற பல்வேறு தளங்களில் நமக்கான தெளிவை உண்டாக்க வேண்டிய தேவையிருக்கிறது. தமிழர்களின் வரலாற்றை எங்கிருந்து தொடங்குவது? சிந்துவெளியிலிருந்தா அல்லது கீழடியிலிருந்தா? எதிலிருந்து தொடங்குவது சரியாக இருக்கும்?         ஹரப்பா (பஞ்சாப்), மொகஞ்சதாரோ (சிந்து),“தமிழர் – தமிழ் –  தமிழகம்: தொன்மையும் வரலாறும்”-ஐ படிப்பதைத் தொடரவும்.

பன்முகப் பிரதிகள் ஊடாடும் விமர்சன முறையியல்

பன்முகப் பிரதிகள் ஊடாடும் விமர்சன முறையியல் மு.சிவகுருநாதன்          ‘கண்டறியாதன கண்டேன்’ என்ற தலைப்பில் பல நூல்கள் வெளிவந்துள்ளன. கி.வா.ஜகநாதன் எழுதி  ‘அல்லயன்ஸ்’ வெளியிட்ட பயண நூல் ஒன்று. சந்தியா பதிப்பகம் வெளியிட்ட சின்ன அண்ணாமலையின் நூல் மற்றொன்று. பயண நூலான இதுவும் ராஜாஜி, கல்கி ஆகியோர் பற்றிப் பேசுகிறது. ஸ்ரீநிவாச ராகவன் என்பவர் எழுதிய தமிழகத்திலுள்ள கோயில்கள் பற்றி பக்தி நூலொன்றும் இதே பெயரில் கிடைக்கிறது.     “கண்டறியாதன கண்டேன்”, என்பது திருநாவுக்கரசர் தேவாரத்தின் பாடல்“பன்முகப் பிரதிகள் ஊடாடும் விமர்சன முறையியல்”-ஐ படிப்பதைத் தொடரவும்.

மகாத்மாவின் கதை -01 

மகாத்மாவின் கதை – 01  இளமைக்காலம் மு.சிவகுருநாதன்            இந்தியத் துணைக்கண்டத்தின் தென்பகுதி இந்தியத் தீபகற்பம் என அழைக்கப்படுகிறது. மூன்றுபுறம் நீராலும் ஒருபுறம் நிலத்தாலும் சூழப்பட்ட பகுதியை நாம் தீபகற்பம் என்கிறோம். இந்தியாவிலுள்ள மற்றொரு சிறிய தீபகற்பம் கத்தியவார் அல்லது சௌராஷ்டிரா ஆகும். இத்தீபகற்பத்தின் வடக்கே கட்ச் வளைகுடா மேற்கே அரபிக்கடல் கிழக்கு மற்றும் தென்கிழக்கே காம்பே வளைகுடா என மூன்றுபக்கம் கடலும் ஒருபக்கம் குஜராத்தின் இதர பகுதிகளும் உள்ளன. குஜராத்தின் போர்பந்தர், ராஜ்கோட், ஜாம்நகர், பவநகர்,“மகாத்மாவின் கதை -01 “-ஐ படிப்பதைத் தொடரவும்.