சூழலியல் கற்பிதங்களை தகர்க்கும் அறவியல் பார்வை

சூழலியல் கற்பிதங்களை தகர்க்கும்  அறவியல் பார்வை மு.சிவகுருநாதன் (நக்கீரனின் ‘இயற்கை 24*7 – சுற்றுச்சூழல் வழிகாட்டி நூல்’ குறித்த அறிமுகப்பதிவு.)          சூழலியல் கற்பிதங்களையும் அதன் பின்னாலிருக்கும் அரசியலையும் சூழலியல் அறத்தையும் 18 தலைப்புகளில் நுட்பமாகவும் சுருக்கமாகவும் அதே சமயம் மிகத் தெளிவாகவும் இந்நூலில் எழுதியிருக்கிறார் நக்கீரன்.  அறிவியல் என்ற பிரிவில்  ஆறாம் அழிவு, புடவி (பிரபஞ்சம்), உயிர்க்கோளம், பெருங்கடல், கடற்கரை, மணல், தண்ணீர், காற்று, ஒளியும் ஒலியும், காடு  ஆகிய 10 தலைப்புகளும்  அரசியல் பிரிவில்“சூழலியல் கற்பிதங்களை தகர்க்கும் அறவியல் பார்வை”-ஐ படிப்பதைத் தொடரவும்.

விளிம்புநிலை மக்களின் வாழ்வும் கலையும்

விளிம்புநிலை மக்களின் வாழ்வும் கலையும் (சிவகுமார் முத்தய்யாவின் ‘குரவை’ நாவல் விமர்சனம்) மு.சிவகுருநாதன்          குரவைக் கூத்து பழங்காலத்திருந்து தொடரும் ஒரு கலை வடிவம். துணங்கை, தழூஉ  என்றெல்லாம் வகைப்படுத்தியுள்ளனர். குடக்கூத்து எனப்படும் கரகாட்டமும் கூத்தின் ஒரு வகைதான். காலப்போக்கில் அக்கால மக்களின் அன்றாட நிகழ்வாக இருந்த கலைகளில் சில மேனிலையாக்கம் பெறவும் சில அடித்தட்டு மக்களின் தலையில் சுமையாகவும் திணிக்கவும் வழிவகுக்கப்பட்டது. கிராமியக் கலை  நிகழ்ச்சி, கரகாட்டம் என்றெல்லாம் அழைக்கப்பட்டாலும் குறவன் குறத்தி ஆட்டத்தை மையப்படுத்தியே“விளிம்புநிலை மக்களின் வாழ்வும் கலையும்”-ஐ படிப்பதைத் தொடரவும்.

கதைக் கட்டுரைகளும் கட்டுரைக் கதைகளும்

கதைக் கட்டுரைகளும் கட்டுரைக் கதைகளும் (நூல் விமர்சனம்: அஞ்ஞை நீ ஏங்கி அழல் – பூமணி) மு.சிவகுருநாதன்                 பா.ஜெயப்பிரகாசத்தின் ‘தெக்கத்தி ஆத்மாக்கள்’ குறித்த ‘புது வாசனை’ எனும் கட்டுரையில், “இயல்பான அனுபவங்கள் அமுங்கி கருத்துச் சவாரியில் படைப்பு நிலை நீர்த்துப் போய் கட்டுரைத் தன்மை மேலொங்கியிருக்கும் கதைகளைக் கட்டுரைக் கதைகள் என்று சொல்லலாம். உணர்வுகள் கோர்க்கப்பட்ட, கதையம்சங்கள் நிறைந்த கட்டுரைகளை கதைக் கட்டுரைகள் என்று சொல்லலாமல்லவா. அப்படியானால் இவை கதைக் கட்டுரைகளே”, என்கிறார் பூமணி. இது“கதைக் கட்டுரைகளும் கட்டுரைக் கதைகளும்”-ஐ படிப்பதைத் தொடரவும்.

தனிமையின் உரையாடல்

தனிமையின் உரையாடல் நூல் விமர்சனம்: கொய்யாவின் வாசனை (மொ) பிரம்மராஜன் மு.சிவகுருநாதன்            கொலம்பியா நாட்டைச் சேர்ந்த கேப்ரியல் கார்சியா மார்க்வெஸ் (1927-2014) தமிழுக்கு நன்கு அறிமுகமானவர். எழுத்தாளராகவும் பத்தரிக்கையாளராகவும் இயங்கியவர். அவரது சில படைப்புகள் தமிழில் மொழியாக்கம் செய்யப்பட்டுள்ளன. தமிழ்ச் சிறுபத்தரிக்கைச் சூழலில் வெகுவாக பேசப்பட்டவர். கல்குதிரை, புதுஎழுத்து போன்ற சிற்றிதழ்கள் இவருக்கு சிறப்பிதழ்களைக் கொண்டு வந்தன. இவரது மந்திர எதார்த்தவாதம் (Magical Realism) இங்கு பரந்த கவனிப்பைப் பெற்றது. பல தமிழ் எழுத்தாளர்கள் இதன்“தனிமையின் உரையாடல்”-ஐ படிப்பதைத் தொடரவும்.

புராணங்கள் மீது கட்டமைக்கப்படும் தலித் வாழ்வியல்

நூல் விமர்சனம்: புராணங்கள் மீது கட்டமைக்கப்படும் தலித் வாழ்வியல் மு.சிவகுருநாதன் ஒன்று:             துறவிநண்டு, திணைப்புனம் போன்ற கவிதை நூல்கள், நெற்குஞ்சம், கூனல்பிறை ஆகிய சிறுகதைத் தொகுப்புகள் மற்றும் சில ஆய்வுநூல்கள் வழியே அறியப்பட்ட தேன்மொழியின் முதல் நாவல் ‘அணுக்கி’. ‘அணுக்கி’யை தோழி, காதலி என்று சொல்லலாம். இந்நாவலில் வரும்  மகிழ்நன் – மங்களம் ஆத்தா;  மங்களம் ஆத்தா – முல்லை; ஜக்கரியா  – முல்லை; ஆதன் – முல்லை; இனியன் – சித்திரப்பாவை;  சித்திரப்பாவை –“புராணங்கள் மீது கட்டமைக்கப்படும் தலித் வாழ்வியல்”-ஐ படிப்பதைத் தொடரவும்.

ஆளுமைகளை நன்றியுடன் நினைவு கூர்தல்

ஆளுமைகளை நன்றியுடன் நினைவு கூர்தல் மு.சிவகுருநாதன்            இரு தொகுதிகளில் 18, 17 என 35 ஆளுமைகளை நன்றியுடன் நினைவு கூறும் நினைவோடைக் கட்டுரைகள் நிரம்பியது. முதல் தொகுதி பொருளடக்கத்தில் மௌனி விடுபட்டுள்ளார். இவர்கள் அனைவருக்கும் பல ஒற்றுமைகள் உள்ளன. அவற்றில் ஒன்று காலமாகிப் போனவர்கள் என்பதே. என்னதான் எழுத்தாளர்கள் எனும் ‘சிறப்பு உயர்திணை’யாக இருப்பினும் இவர்களும் மனிதர்கள்தானே! தனிமனிதக் குறைபாடுகளுடன் கூடவே அவர்களது வாழ்வையும் எழுத்துகள் பற்றிய சிறிய அறிமுகத்தையும் சித்திரத்தையும் இக்கட்டுரைகள் நமக்கு அளிக்கின்றன.“ஆளுமைகளை நன்றியுடன் நினைவு கூர்தல்”-ஐ படிப்பதைத் தொடரவும்.

  சிறுகதை நுட்பம் செறிந்த நினைவோடைகள்

சிறுகதை நுட்பம் செறிந்த நினைவோடைகள் மு.சிவகுருநாதன்            நினைவோடை எழுத்துகளில் பலவகை உண்டு. தங்களை மேம்படுத்திக் காட்டிக்கொள்வதற்காக பிறர் மீது அவதூறுகளையும் வசவுகளையும் அள்ளித் தெளிப்பது ஒருவகை. மயிலிறகால் வருடுவதுபோல் நட்பையும் அன்பையும் வெளிப்படுத்துவது இன்னொரு வகை. இந்த இரண்டாம் வகைக்கு எடுத்துக்காட்டாக விட்டல்ராவின் இந்த நூலைச் சொல்லலாம்.        ‘மின்னற் பொழுதுகள்’ எனும் கவித்துவமான தலைப்பில் விட்டல்ராவின் நினைவோடைகளை ‘பேசும் புதியசக்தி’ நூலாக்கியுள்ளது. இவற்றில் 15 ‘பேசும் புதிய சக்தி’ இதழிலும் 3 ‘அம்ருதா’ இதழிலும்”  சிறுகதை நுட்பம் செறிந்த நினைவோடைகள்”-ஐ படிப்பதைத் தொடரவும்.

அனைவருக்குமான பொதுவுடைமைப் பாடங்கள்

அனைவருக்குமான பொதுவுடைமைப் பாடங்கள் மு.சிவகுருநாதன்         மார்க்சிய செவ்வியல் நூல்கள் வரிசையில் ‘பொதுவுடைமை  குழந்தைகளுக்காக…’ என்ற நூல் எம்.பாண்டியராஜனின் அழகான மொழியாக்கத்தில் வெளியாகியுள்ளது. உண்மையில் இந்நூல் குழந்தைகளுக்கானது மட்டுமா என்றால் பொதுவுடைமையைப் புரிந்து கொள்ள விரும்பும் அனைவருக்குமானது. புரிந்துகொள்ள முடியவில்லை என்போரும் இதன் மூலம் பொதுவுடைமையைக் கற்கலாம்; விவாதிக்கலாம்.           இந்நூல் மூன்று பகுதிகளானது. முதல் பகுதியில் பொதுவுடைமை, முதலாளித்துவம், உழைப்பு, சந்தை, நெருக்கடி, முதலாளித்துவம் தோன்றிய முறையும் எடுத்துக்காட்டப்படுகிறது. முதலாளித்துவ சமுதாயத்தில் மக்கள் படும்“அனைவருக்குமான பொதுவுடைமைப் பாடங்கள்”-ஐ படிப்பதைத் தொடரவும்.

பன்முகப் பிரதிகள் ஊடாடும் விமர்சன முறையியல்

பன்முகப் பிரதிகள் ஊடாடும் விமர்சன முறையியல் மு.சிவகுருநாதன்          ‘கண்டறியாதன கண்டேன்’ என்ற தலைப்பில் பல நூல்கள் வெளிவந்துள்ளன. கி.வா.ஜகநாதன் எழுதி  ‘அல்லயன்ஸ்’ வெளியிட்ட பயண நூல் ஒன்று. சந்தியா பதிப்பகம் வெளியிட்ட சின்ன அண்ணாமலையின் நூல் மற்றொன்று. பயண நூலான இதுவும் ராஜாஜி, கல்கி ஆகியோர் பற்றிப் பேசுகிறது. ஸ்ரீநிவாச ராகவன் என்பவர் எழுதிய தமிழகத்திலுள்ள கோயில்கள் பற்றி பக்தி நூலொன்றும் இதே பெயரில் கிடைக்கிறது.     “கண்டறியாதன கண்டேன்”, என்பது திருநாவுக்கரசர் தேவாரத்தின் பாடல்“பன்முகப் பிரதிகள் ஊடாடும் விமர்சன முறையியல்”-ஐ படிப்பதைத் தொடரவும்.

நண்பர் முத்து ராஜாவின் இரண்டாவது நூல்!

நண்பர் முத்து ராஜாவின் இரண்டாவது நூல்! மு.சிவகுருநாதன் முத்துராஜாவின் ‘பாட்டும் பாடமும்’ நூல் ‘பன்மை’ (2022) வெளியீடாக வந்தது. அதற்கு முன்பே தயாரிப்பிலிருந்த ‘பன்மொழிப் பயணம் – நகைச்சுவைத் தருணம்’ என்ற நகைச்சுவை அனுபவக் கட்டுரை நூல் சற்றுக் காலதாமதமாகத் தற்போது வெளியாகியுள்ளது. 33 சிறிய கட்டுரைகளடங்கிய இக்குறுநூலின் மொத்த பக்கங்கள் 90 மட்டுமே. கட்டுரைகள் ஒரு பக்கம் அல்லது இரண்டு பக்க அளவில் சுருக்கமாக அமைந்துள்ளது. அவரது மாலத்தீவு மற்றும் உள்ளூர் அனுபவங்களைச் சுவைபட எழுதியுள்ளார்.“நண்பர் முத்து ராஜாவின் இரண்டாவது நூல்!”-ஐ படிப்பதைத் தொடரவும்.