வரலாற்றினூடாகத் தொன்மப் பயணம்

வரலாற்றினூடாகத் தொன்மப் பயணம் மு.சிவகுருநாதன்            இது ஒரு வரலாற்று நூல் அல்ல. கதவு என்கிற புள்ளியை மையமாகக் கொண்டு ஆதிமனிதனில் தொடங்கி வரலாறு மற்றும் தொன்மங்களின் ஊடாக பயணிக்கும் நூல். நூலாசிரியர் ஒரு பயண ஆர்வலர் என்றும் பரந்த வாசிப்பனுபவம் கொண்டவர் என்று பதிப்புரை சொல்வதற்கேற்ப வரலாற்றினூடாகப் பயணிப்பதற்கு வாசிப்பு பேருதவியாக இருப்பதை இந்நூல் உணர்த்தி நிற்கிறது. இருப்பினும் வழமையான வரலாற்று அணுகுமுறையின் போதாமையும் வெளிப்படுகிறது. கதவுகளைப் பொருண்மையாக எடுத்துக்கொண்டு அதன் முன்னும் பின்னுமாக வரலாறு,“வரலாற்றினூடாகத் தொன்மப் பயணம்”-ஐ படிப்பதைத் தொடரவும்.

தென்னாப்பிரிக்காவில்  காந்தியின் சத்தியாக்கிரகம்

தென்னாப்பிரிக்காவில்  காந்தியின் சத்தியாக்கிரகம் (மகாத்மாவின் கதை தொடரின் எட்டாவது அத்தியாயம்.) மு.சிவகுருநாதன்             தென்னாப்பிரிக்காவில் குடியேறிய டச்சுக் குடியேறிகளின் வம்சாவளியினர் போயர்கள் (ஆப்பிரிக்க நேர்கள்) என்றழைக்கப்பட்டனர். இவர்களது மொழி ஆப்பிரிக்கான்ஸ் ஆகும். 1886இல் டிரான்ஸ்வாலில் தங்கம் கண்டுபிடிக்கப்பட்ட பிறகு சுரங்கத்தொழில் சார்ந்தோர் ஜோகனஸ்பெர்க் மற்றும் அதன் அருகே குடியேறினர். இவர்களை போயர்கள் யுட்லேண்டர்ஸ் (Utilanders—அயலவர்கள்) என்று அழைத்தனர். இவர்களுக்கிடையே உரிமைப்போர் ஏற்பட்டது. இந்தப் போயர் போர்கள் மூன்றாண்டுகள் (1899-1902) நீடித்தது. ஆங்கிலப்படைகளால் போயர்கள் தோற்கடிக்கப்பட்டு பிரிட்டோரியா கைப்பற்றப்பட்டது.“தென்னாப்பிரிக்காவில்  காந்தியின் சத்தியாக்கிரகம்”-ஐ படிப்பதைத் தொடரவும்.