புதிய பாடநூல்களும் ஆசிரியர்களும்

புதிய பாடநூல்களும் ஆசிரியர்களும்  மு.சிவகுருநாதன்   (2019 – 2020 ஆம் கல்வியாண்டின் புதிய பாடநூல்களுக்கான விமர்சனத் தொடர்: 43)  புதிய பாடநூற்கள் மாணவர்களிடம் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது என்பதைவிட அவை ஆசிரியர்களிடம் எவ்வாறு சென்று சேர்ந்திருக்கிறது என்பதை அறிவது மிகவும் அவசியம் என்று நினைக்கிறேன். ஆசிரியர்களிடம் தேடல், வாசிப்பு அடியோடு குறைந்து போய்விட்டது. இதற்காக யாரும் வருத்தமடைய வேண்டாம். உண்மை நிலை இதுதான். சரியான ஊதியமில்லாத சாமான்யர்களை வாசிக்கச் செலவளிப்பதைவிட ஆசிரியர்களின் வாசிப்புச் செலவு முற்றிலும் குறைவு.“புதிய பாடநூல்களும் ஆசிரியர்களும்”-ஐ படிப்பதைத் தொடரவும்.

பாடநூல்கள் வேதநூல்களாகும் அவலம்!

பாடநூல்கள் வேதநூல்களாகும் அவலம்!  மு.சிவகுருநாதன்  (2019 – 2020 ஆம் கல்வியாண்டின் புதிய பாடநூல்களுக்கான விமர்சனத் தொடர்: 42) பாடநூல்களில் பல்வேறு பிழைகள் இருக்கிறது என்றால், “குடும்பத்தை விட்டு அல்லும் பகலும் உழைத்தோம், தவறு என்று சொல்ல நீ யார்?”, என்று சண்டைக்கு வருகின்றனர். “இந்தியாவின் ஆட்சிமொழி இந்தியே”, என வம்புக்கு வந்தார் மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவன விரிவுரையாளர் ஒருவர். சென்ற கல்வியாண்டில் (2018-2019) ஒன்பதாம் வகுப்பு சமூக அறிவியல் பாடத்திற்குச் சுற்றறிக்கை மூலம் வெளியிட்ட“பாடநூல்கள் வேதநூல்களாகும் அவலம்!”-ஐ படிப்பதைத் தொடரவும்.

பிற்காலச் சோழர்கள் காலத்திலிருந்து இன்றும் தொடரும் சாதியக் கட்டுமானம்: சில குறிப்புகள்

பிற்காலச் சோழர்கள் காலத்திலிருந்து இன்றும் தொடரும் சாதியக் கட்டுமானம்: சில குறிப்புகள்  மு.சிவகுருநாதன்        சில நாள்களுக்கு முந்தைய ‘தமிழக வரலாற்றெழுதியலின் துயரம்’ எனும் எனது புதிய பாடநூல் விமர்சனக் கட்டுரை தொடர்பான எதிர்வினை வாட்ஸ் அப் குழு ஒன்றில், குடவோலை முறை, சாதியடுக்குகள், சாதிக் கட்டுமானங்கள், இன்றும் தொடரும் கிராம நிர்வாகம் குறித்த பதிவை நண்பர் ஒருவர் இட்டிருந்தார். அதை யாரும் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை போலும்! அதுகுறித்து எவ்வித எதிர்வினையும் இன்றுவரை பதிவாகவில்லை. அது பற்றிய“பிற்காலச் சோழர்கள் காலத்திலிருந்து இன்றும் தொடரும் சாதியக் கட்டுமானம்: சில குறிப்புகள்”-ஐ படிப்பதைத் தொடரவும்.

தமிழகக் கல்வித் துறையின் அறிவிப்புகள் செல்லும் பாதை

தமிழகக் கல்வித் துறையின் அறிவிப்புகள் செல்லும் பாதை  மு.சிவகுருநாதன்      கடந்த சில ஆண்டுகளாக தமிழகக் கல்வித்துறையில் பல்வேறு மாற்றங்கள் நடைபெற்று வருகிறது. அவற்றில் ஒன்றிரண்டு நல்ல திட்டங்களும் இருக்கின்றன. எனவே எல்லாவற்றையும் கண்ணை மூடிக்கொண்டு எதிர்க்க வேண்டிய அவசியமில்லை. +1 வகுப்பிற்கு பொதுத்தேர்வுகள். +1, +2 வகுப்புகளுக்கு மொழிப்பாடங்கள், செய்முறைப் பயிற்சி இல்லாத பாடங்களுக்கும் 10 மதிப்பெண்கள் அகமதிப்பீடு. +1, +2 வகுப்புகளுக்கு மொழிப்பாடங்களுக்கு ஒரு தாள். 10 ஆம் வகுப்பு மொழிப்பாடங்களுக்கும் ஒரே தாள்.“தமிழகக் கல்வித் துறையின் அறிவிப்புகள் செல்லும் பாதை”-ஐ படிப்பதைத் தொடரவும்.

பொதுத்தேர்வு வன்முறைகள்: சில பார்வைகள்

பொதுத்தேர்வு வன்முறைகள்: சில பார்வைகள் மு.சிவகுருநாதன் இலவச கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம் 2009 இல் மத்திய அரசு மேற்கொண்ட திருத்தத்தையொட்டி 5 மற்றும் 8 வகுப்புகளுக்கு இக்கல்வியாண்டிலிருந்தே (2019-2020) பொதுத்தேர்வுகள் நடத்தப்போவதாக தமிழக அரசின் கல்வித்துறை அறிவித்துள்ளது. சென்ற ஆண்டு மத்திய அரசின் இந்தத் திருத்தத்தை பல மாநிலங்கள் ஏற்றுக் கொண்டபோதும் நாங்கள் ஏற்கவில்லை என்று ஊடகங்களில் முழங்கினர். ஆனால் சில மாதங்களில் முடிவில் ஏன் மாற்றம் என்பதை யாரும் சொல்லப் போவதில்லை. தமிழக அரசின்“பொதுத்தேர்வு வன்முறைகள்: சில பார்வைகள்”-ஐ படிப்பதைத் தொடரவும்.

பெரியாரை அறிதல்

பெரியாரை அறிதல்  மு.சிவகுருநாதன்   (தந்தை பெரியாரின் 141 வது பிறந்த நாளை ஒட்டி பேரா. அ.மார்க்ஸ் எழுதிய ‘பெரியார்?’ என்ற  பெரியாரை புதிய கண்ணோட்டத்தில் அணுகும் ஆய்வுக் குறுநூல் குறித்த அறிமுகப் பதிவு. தலைப்பிற்கு நன்றி: தரம்பால் – காந்தியை அறிதல்) பெரியார் மண் என்கிற பெருமை மற்றும் இறுமாப்பில் திரியும் பெரும்கூட்டம்  ஒன்று தொடர்ந்து இருந்து வருகிறது. கதாநாயகத் தன்மையுடன்,  கடவுளாக மாற்றப்பட்ட புத்தர் போன்று பெரியாரை வழிபடும் அல்லது  பெயரை மட்டும் சொல்லிப் பிழைப்பு“பெரியாரை அறிதல்”-ஐ படிப்பதைத் தொடரவும்.

தமிழக வரலாற்றெழுதியலின் துயரம்

தமிழக வரலாற்றெழுதியலின் துயரம்   மு.சிவகுருநாதன்    (2019 – 2020 ஆம் கல்வியாண்டின் புதிய பாடநூல்களுக்கான விமர்சனத் தொடர்: 41) இடைக்கால தமிழகத்தில் ‘நிலவுரிமை’ பற்றி ஏழாம் வகுப்பு வரலாற்றுப் பாடங்களில் (இடைக்கால இந்திய ஆதாரங்கள், தென் இந்தியப் புதிய அரசுகள்: பிற்காலச் சோழர்களும், பாண்டியர்களும்) சில தகவல்கள் கூறப்படுகின்றன. அவற்றின் ஊடாக ஏற்கனவே, புதிய பள்ளிப் பாடநூற்களில் சொல்லப்பட்ட ‘குடவோலை’ முறையை மக்களாட்சிப் பெருமிதங்களில் ஒன்றாகக் கட்டமைக்கின்றன. பிற்காலச் சோழப்பெருமைகளின் உச்சமாக இது போற்றப்படுகிறது. 6 முதல்“தமிழக வரலாற்றெழுதியலின் துயரம்”-ஐ படிப்பதைத் தொடரவும்.

NCERT பாடநூல்களில் தலித்கள் மற்றும் இஸ்லாமியர்கள் குறித்த மேட்டிமைப் பார்வைகள்

NCERT பாடநூல்களில் தலித்கள் மற்றும் இஸ்லாமியர்கள் குறித்த மேட்டிமைப் பார்வைகள்   (முதல் பகுதி) மு.சிவகுருநாதன்   NCERT பாடநூல்களைப் பயன்படுத்தும் கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் நடைபெற்ற சமூக அறிவியல் தேர்வொன்றின் வினாத்தாள் சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது. இவை படிப்போரை மிகவும் அதிர்ச்சிக்குள்ளாக்கும் வகையிலும் பலரது மனதைப் புண்படுத்தும் வகையிலும் அமைந்துள்ளது. அந்த வினாக்களில் சிலவற்றைக் கீழே காணலாம். 12. What does caste based discrimination lead to? (A) Prevents dailts from undertaking“NCERT பாடநூல்களில் தலித்கள் மற்றும் இஸ்லாமியர்கள் குறித்த மேட்டிமைப் பார்வைகள்”-ஐ படிப்பதைத் தொடரவும்.

சந்திராயன் தோல்விகள்: சில குறிப்புகள்

சந்திராயன் தோல்விகள்: சில குறிப்புகள்  மு.சிவகுருநாதன்     சந்திராயன் 02 திட்டம் இலக்கை எட்டாமல் தோல்வியில் முடிந்துள்ளது. இம்மாதிரியான நிகழ்வுகளில் தோல்வி ஏற்படுவது மிகவும் இயல்பான ஒன்று. ஆனால் நமது நாட்டில் இது அணுகப்படும் விதம் என்பது மிக மோசமானதாகவும் அறிவியலுக்குப் புறம்பானதாகவும் இருக்கிறது. சந்திராயன் 01 திட்டமும் ஓராண்டிற்கு முன்னதாகவே முடிவுக்கு வந்தது. அதை இன்றுவரை தோல்வி என்று யாரும் ஒப்புக்கொள்ளவில்லை. அது முன்னதாகவே 99% பணிகளை முடித்துவிட்டதாகவே இன்றும் சொல்லிக் கொண்டுள்ளனர். நிலவில் தரையிறங்கும்“சந்திராயன் தோல்விகள்: சில குறிப்புகள்”-ஐ படிப்பதைத் தொடரவும்.