சுயநிதிப்பள்ளிகளின் தரம் என்னும் மாயை!

சுயநிதிப்பள்ளிகளின் தரம் என்னும் மாயை! மு.சிவகுருநாதன்        இன்றைய (18/06/2021) ‘இந்து தமிழ் திசை’ நாளிதழின் தலையங்கம்  கொரோனாப் பெருந்தொற்றுப்  பொது முடக்கத்தின் காரணமாக ஏற்பட்ட பொருளாதார இழப்பால் அரசுப்பள்ளிகளை அதிகம் பேர் நாடுவதைம், அரசுப்பள்ளிகளில் அதற்கான வசதிகள் இருக்கின்றனவா என்ற கேள்வியை எழுப்பியுள்ளது. இப்பெருந்தொற்றால் ஏற்பட்ட அனுபவத்திலிருந்து கல்வித்துறை உரிய பாடங்கள் கற்பதும் உரிய நடவடிக்கைகளும் நெகிழ்வான அணுகுமுறைகளும் கைக்கொள்ளப் படவேண்டும் என்பதும் சிறப்பான ஒன்றாக உள்ளது.     அரசுப்பள்ளிகளில் அடிப்படை வசதிகளை உரிய“சுயநிதிப்பள்ளிகளின் தரம் என்னும் மாயை!”-ஐ படிப்பதைத் தொடரவும்.

பார்ப்பனர்களைப் பாதிக்கப்பட்டோராக மாற்றும் தத்துவார்த்தச் சொல்லாடல்கள்

பார்ப்பனர்களைப்  பாதிக்கப்பட்டோராக மாற்றும் தத்துவார்த்தச் சொல்லாடல்கள் மு.சிவகுருநாதன் (சந்நியாசமும் தீண்டாமையும், இந்துமதம்: ஒரு விசாரணை மற்றும் விரிசல் கண்ணாடி (மொ) ஆகிய நூல்கள் குறித்த விமர்சனம்.)       தோழர் ராமாநுஜம் தமிழிலக்கிய உலகில் மிகவும் அறிமுகமான எழுத்தாளர்; மொழி பெயர்ப்பாளர், நாடகவியலாளர். ‘ஆடுகளம்’ நவீன நாடகக்குழுவில் இயங்கியவர். ஆறாவது வார்டு, மழை, காட்டு நகரம், நாங்கள் நியாயவாதிகள், நிரபராதிகளின் காலம் போன்ற நாடகங்களை இயக்கி நடித்தவர். காந்தியின் உடலரசியல், தற்கொலைகளைக் கொண்டாடுவோம், சந்நியாசமும் தீண்டாமையும், இந்துமதம்: ஒரு“பார்ப்பனர்களைப் பாதிக்கப்பட்டோராக மாற்றும் தத்துவார்த்தச் சொல்லாடல்கள்”-ஐ படிப்பதைத் தொடரவும்.

முழுமையான அரசியல் உரையாடல்

முழுமையான அரசியல் உரையாடல் செல்வ புவியரசன்        ( ஜூன் 05, 2021 இந்து தமிழ் திசை நூல்வெளியில் வெளியான விமர்சனம்)       இளைய தலைமுறையின் நம்பிக்கைக்குரிய அரசியல் கட்டுரையாளர்களில் ஒருவர் இரா.மோகன்ராஜன். எழுத்தை ஓர் அரசியல் செயல்பாடாகவே முன்னிலைப்படுத்துபவர். காவிரி கடைமடைப் பகுதியான முத்துப்பேட்டையில் மருத்துவர் ச.மருதுதுரை முன்னெடுத்த ‘நிலவொளி’ இயக்கத்திலிருந்து எழுத்துலகுக்கு அறிமுகமானவர். அடிப்படையில் கவிஞரும் சிறுகதை எழுத்தாளருமான அவர், ‘உயிர் எழுத்து’, ‘காக்கைச் சிறகினிலே’ உள்ளிட்ட இதழ்களில் கடந்த சில“முழுமையான அரசியல் உரையாடல்”-ஐ படிப்பதைத் தொடரவும்.

+2 பொதுத்தேர்வு வேண்டுமா? வேண்டாமா?

 +2 பொதுத்தேர்வு வேண்டுமா? வேண்டாமா? மு.சிவகுருநாதன் பகுதி 01        மத்தியக் கல்வி வாரியம் (CBSE) +2 பொதுத்தேர்வை ரத்து செய்யததையொட்டி தமிழ்நாட்டில்  +2 பொதுத்தேர்வை நடத்துவதா, வேண்டாமா என்ற விவாதம் எழுந்துள்ளது.       தமிழக அரசின் பள்ளிக் கல்வித்துறை  இது குறித்த கருத்துக் கணிப்பை நடத்துகிறது. இது வரவேற்கக்கூடிய அம்சம் என்றாலும் பள்ளி வழியாக +2 மாணவர்கள், அவர்களது பெற்றோர்கள், முதுகலை பாட ஆசிரியர்கள் மட்டுமே கருத்துரைக்க வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.“+2 பொதுத்தேர்வு வேண்டுமா? வேண்டாமா?”-ஐ படிப்பதைத் தொடரவும்.