பதநீர்ச் சோறு அல்லது பதநீர்ப் பொங்கல்

 பதநீர்ச் சோறு அல்லது பதநீர்ப் பொங்கல் மு.சிவகுருநாதன்         இன்று (21/11/2020) சில ஆண்டுகளாக உடல்நலம் குன்றி படுக்கையில் இருக்கும் அம்மாவைப் பார்க்கச் சென்றிருந்தேன்.      “என்னுடைய அப்பா, அம்மா இருந்தால் என்னை நல்லா பாத்துப்பாங்க…”, என்றார். 1994 இல் காலமான ஆத்தாவிற்கும் 2001 இல் காலமான தாத்தாவிற்கும் இன்று 100 வயதைக் கடந்திருக்கும். 80 ஐ 100 கள் எப்படிக் கவனிக்க முடியும்?       வயது ஆக ஆக குழந்தையாகவே மாறிவிடுவோம் போல. எனவே இந்த“பதநீர்ச் சோறு அல்லது பதநீர்ப் பொங்கல்”-ஐ படிப்பதைத் தொடரவும்.

மூன்றாம் வகுப்பாசிரியருடன் சினிமா பார்த்த கதை!

மூன்றாம் வகுப்பாசிரியருடன் சினிமா பார்த்த கதை! மு.சிவகுருநாதன்        எங்களூரில் ‘டூரிங் டாக்கீஸ்’ எனப்படும் சினிமாக் கொட்டகை இல்லை. அப்போது கிராமங்களில் கீற்றுக் கொட்டகையில்தான் சினிமா. பக்கத்து ஊரான துளசியாப்பட்டினத்தில் ஒரு டூரிங் டாக்கீஸ் இருந்தது; பெயர் கதிரவன் திரையரங்கம். இது இஸ்லாமியர் ஒருவரால் நடத்தப்பட்டது.         கும்பகோணம்  ஶ்ரீகிருஷ்ணா பள்ளி  தீ விபத்தால் பள்ளிகளில் கீற்றுக் கொட்டகைகள் இல்லாமல் ஆக்கப்பட்டதுபோல், எம்.ஜி.ஆர். ஆட்சிக்காலத்தில் ஒரு திரையரங்கில் நடத்த தீவிபத்தால் கீற்றுக்“மூன்றாம் வகுப்பாசிரியருடன் சினிமா பார்த்த கதை!”-ஐ படிப்பதைத் தொடரவும்.

‘ஏ.ஜி.கே. எனும் போராளி’ தொகுப்பு நூல் வெளிவந்துவிட்டது!

 ‘ஏ.ஜி.கே. எனும் போராளி’ தொகுப்பு நூல் வெளிவந்துவிட்டது!       மூன்றாண்டுகளாக முயற்சி செய்து பல்வேறு தோல்விகளுக்குப் பிறகும் ‘ஏ.ஜி.கே. எனும் போராளி’  என்ற ஏ.ஜி. கஸ்தூரிரெங்கன் குறித்த விமர்சனக் கட்டுரைகளின் தொகுப்பு ஒரு வழியாக இன்று (12/11/2020) வெளியாகியுள்ளது.      கீழத்தஞ்சையின் அடையாளங்களுள் ஒன்றாக போராடி வாழ்ந்து மறைந்த தோழர் ஏ.ஜி. கஸ்தூரிரெங்கனின் சித்திரத்தை பல்வேறு கோணங்களில் இந்நூலிலுள்ள கட்டுரைகள் நமக்கு வெளிப்படுத்துகின்றன.      தியாகு, வ.கீதா, பொதிகைச்சித்தர், சி.அறிவுறுவோன், நாகை மாலி, ஐ.வி.நாகராஜன், சாம்ராஜ், பாவெல்“‘ஏ.ஜி.கே. எனும் போராளி’ தொகுப்பு நூல் வெளிவந்துவிட்டது!”-ஐ படிப்பதைத் தொடரவும்.

அந்தக் காலத்தில் கூரைகள் இருந்தன!

அந்தக் காலத்தில் கூரைகள் இருந்தன! மு.சிவகுருநாதன்       இன்று (09/11/2020)  குழந்தைகள் கவிநிலா, கயல்நிலா இருவருக்கும் நான் படித்த தொடக்கப்பள்ளியைச் சுற்றிக் காட்டினேன். நான் இங்குதான் ஒன்று முதல் அய்ந்து முடிய 5 ஆண்டுகள் (1978 – 1983) என மொத்தம் 7 (1976 – 1983)  ஆண்டுகளைக் கழித்த இடமாகும்.       கூடுதலாக ஏன் இரண்டாண்டுகள் என்ற அய்யம் ஏற்படலாம். 5 வயதில் பள்ளியில் சேர்வதற்கு முன்பாகவே மூன்று வயதிலிருந்தே அக்கா“அந்தக் காலத்தில் கூரைகள் இருந்தன!”-ஐ படிப்பதைத் தொடரவும்.

தவறான முடிவு…

தவறான முடிவு… மு.சிவகுருநாதன்          கருத்துக் கணிப்பு நடத்தி 9, 10, +1, +2 வகுப்புகளைத் தொடங்குவது என்று பள்ளிக் கல்வித்துறை உத்தேசித்துள்ளது. இதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. 09/11/2020 பள்ளிகளில் கருத்துக் கேட்பு கூட்டம் நடைபெறுமாம்!       அந்தந்த பள்ளிகளில் பெற்றோர்கள் கருத்துக்கேற்ப பள்ளிகள் இயங்குமாம்! இது ரொம்ப அபத்தமாக உள்ளது.       கோவிட் 19 தொற்றுக்காக மக்கள் யாரும் ஊரடங்கு கேட்கவில்லை. மருத்துக் குழு அறிக்கை அடிப்படையில்தான் தொடர்ந்து ஊரடங்கு நீட்டிப்புகளும் சில தளர்வுகளும் அறிவிக்கப்பட்டுள்ளன.“தவறான முடிவு…”-ஐ படிப்பதைத் தொடரவும்.