சமச்சீர் கல்வி வழக்கு :- முதல் கட்ட வெற்றி!

சமச்சீர் கல்வி வழக்கு :- முதல் கட்ட வெற்றி!                                                              -மு.சிவகுருநாதன்          சமச்சீர் கல்வியை  அமல்செய்ய சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு இடைக்காலத் தடைகோரிய தமிழக அரசின் மேல்முறையீட்டு மனுவை இன்று (21.07.2011) விசாரித்த  ஜே.எம். பாஞ்சால் தலைமையிலான  உச்சநீதிமன்றத்தின் மூன்று நீதிபதிகள் அடங்கிய அமர்வு சமச்சீர்கல்விக்கு தடை விதிக்க மறுத்துள்ளது. அத்துடன்  ஆகஸ்டு 02 ஆம் தேதிக்குள் அனைத்து வகுப்பு மாணவர்களுக்கும் சமச்சீர்கல்வி புத்தகங்களை வழங்கிடுமாறு தமிழக அரசுக்கு ஆணையிட்டுள்ளது. இவ்வழக்கில் இறுதிகட்ட “சமச்சீர் கல்வி வழக்கு :- முதல் கட்ட வெற்றி!”-ஐ படிப்பதைத் தொடரவும்.

அருந்ததிய மக்களின் குரலாக வெளிவரும் ஓர் இதழ்

அருந்ததிய மக்களின்  குரலாக வெளிவரும் ஓர் இதழ்  (சிற்றிதழ் அறிமுகம்:- வெள்ளைக்குதிரை – இருமாத இதழ்)                                                                                    – மு. சிவகுருநாதன்       ஒடுக்கப்பட்ட மக்களில் கல்வி வேலை வாய்ப்புகளில் முறையான பங்கின்றி இதுவரையில் இருந்து வந்த அருந்ததிய மக்கள் தற்போதுதான் உள் ஒதுக்கீடு பெற்று சிறிது வெளிச்சத்திற்கு வந்திருக்கிறார்கள்.  ஒடுக்கப்பட்ட, நலிவுற்ற இம்மக்களின் குரலாக தமிழ்நாடு சாக்கிய அருந்ததி சங்கத்தின் சார்பில் மதுரை வீரனின் வாகனப் பெயரைத் தாங்கி, இருமாத இதழாக பிப்.-மார்ச்“அருந்ததிய மக்களின் குரலாக வெளிவரும் ஓர் இதழ்”-ஐ படிப்பதைத் தொடரவும்.

குடிமக்களை கிரிமினல்கள் போல் பாவித்து அந்தரங்க உரிமைகளைப் பறிக்கும் அரசுகள்

குடிமக்களை கிரிமினல்கள் போல் பாவித்து அந்தரங்க உரிமைகளைப் பறிக்கும் அரசுகள்                                                                                                 – மு. சிவகுருநாதன் (‘ஆதார அடையாள அட்டை என்னும் ஆபத்து’ என்கிற அ. மார்க்ஸ்-இன் குறுநூலின் ஊடாக ஒரு பயணம்.)         இந்தியாவின் முதல் தேசிய அடையாள அட்டை மகாராஷ்டிராவில் ரஜ்னா சோனாவானே என்ற பழங்குடிப் பெண்ணுக்கு வழங்கியிருப்பதை பெருமை பொங்க குறிப்பிடும் தினமணி, இந்திய தேசிய அடையாள அட்டை ஆணையம் (NIDAI) ஏற்கனவே சொன்னது போல் முதல் ஆதார அட்டை ஆகஸ்ட் 2010“குடிமக்களை கிரிமினல்கள் போல் பாவித்து அந்தரங்க உரிமைகளைப் பறிக்கும் அரசுகள்”-ஐ படிப்பதைத் தொடரவும்.

சமச்சீர் கல்வி :- வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த சென்னை உயர்நீதிமன்றம்த்தீர்ப்பு

சமச்சீர் கல்வி:- வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த சென்னை உயர்நீதிமன்றத் தீர்ப்பு -மு. சிவகுருநாதன்          நாம் எதிர்பார்த்ததுபோல   சமச்சீர் கல்வி விவகாரத்தில் சென்னை உயர்நீதிமன்றம் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பை இன்று (18.07.2011) வழங்கியுள்ளது. இன்று பிற்பகலில் தலைமை நீதிபதி இக்பால் மற்றும் நீதிபதி சிவஞானம் ஆகியோர் அடங்கிய முதன்மை அமர்வு  தனது சிறப்பு மிகுந்த தீர்ப்பை அளித்துள்ளது. இதன்மூலம் சமச்சீர் கல்வித் திட்டத்தை முடக்க நினைத்த ஜெயலலிதாவின் அரசுக்கு பெருத்த அடி கிடைத்துள்ளது.“சமச்சீர் கல்வி :- வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த சென்னை உயர்நீதிமன்றம்த்தீர்ப்பு”-ஐ படிப்பதைத் தொடரவும்.

திருவாரூரில் சமச்சீர்கல்வி கருத்தரங்கம் – மு.சிவகுருநாதன்

 திருவாரூரில் சமச்சீர்கல்வி கருத்தரங்கம்   -மு.சிவகுருநாதன்    அரசு கல்லூரி ஆசிரியர் மன்றம் (தமிழ்நாடு) 16.07.2011 சனி மாலை 6 மணிக்கு திருவாரூர்  நேதாஜி சாலை காமராஜர் திருமண மண்டபத்தில் சமச்சீர்கல்வி-ஒரு பார்வை என்றொரு கருத்தரங்கிற்கு ஏற்பாடு செய்திருந்தது.இவ்வரங்கில் பேரா.அ.மார்க்ஸ் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.          ஜி 8 போன்ற வளர்ந்த,மற்றும் ஏனைய வளரும் நாடுகளில் பொதுப்பள்ளி முறை அமலில் உள்ளதை சுட்டிக்காட்டிப் பேசிய அ.மார்க்ஸ், சமச்சீர்கல்வி என்பது வெறும் பாடநூற்களை பொறுத்து அமைவதில்லை“திருவாரூரில் சமச்சீர்கல்வி கருத்தரங்கம் – மு.சிவகுருநாதன்”-ஐ படிப்பதைத் தொடரவும்.

செயற்கைப்பேரிடருக்கு வழிவகுக்கும் மத்திய-மாநில அரசுகள்.

 செயற்கைப்பேரிடருக்கு வழிவகுக்கும் மத்திய-மாநில அரசுகள்.                                                                             – மு. சிவகுருநாதன்      டிசம்பர் 26, 2004 உலகை உலுக்கிய சுனாமியால் அதிகளவு உயிர்ப்பலி கொடுத்தது நாகப்பட்டினம் பகுதி.  மும்பை தாஜ் ஹோட்டல் மீது நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலுக்கு விரைந்து பல்வேறு நடவடிக்கைகள் எடுத்ததைப்போல சுனாமி மறுவாழ்வுப்பணிகளில் மத்திய-மாநில அரசுகள் வேகம் காட்டவில்லை.  பல்லாயிரம் கோடி ரூபாய்கள் வெளியூர் நிதியுதவியாக வந்த போதும் சுனாமியால் பாதிக்கப்பட்டோரை மீட்டு மறுகுடியமர்த்தல் உள்ளிட்ட பல்வேறு மறுவாழ்வுப்பணிகள் பல ஆண்டுகளாகியும் இன்னும் முடிந்தபாடில்லை. “செயற்கைப்பேரிடருக்கு வழிவகுக்கும் மத்திய-மாநில அரசுகள்.”-ஐ படிப்பதைத் தொடரவும்.

நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆண்டு ‘கமிஷன்’ ரூ. 5 கோடியாக உயர்வு

 நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆண்டு ‘கமிஷன்’   ரூ. 5 கோடியாக உயர்வு                                                                                            “நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆண்டு ‘கமிஷன்’ ரூ. 5 கோடியாக உயர்வு”-ஐ படிப்பதைத் தொடரவும்.

சமச்சீர்க்கல்வியை ஒத்திவைக்கும் தமிழக அரசின் முயற்சிக்கு எதிராக கண்டனக்கூட்டம்.

 சமச்சீர்க்கல்வியை ஒத்திவைக்கும் தமிழக அரசின் முயற்சிக்கு எதிராக கண்டனக்கூட்டம்.                                                                                                                          -மு.சிவகுருநாதன்   05.07.2011   அன்று   செவ்வாய், மாலை 6 மணிக்கு சென்னை  எழும்பூர் மியூசியம் அருகில் உள்ள   ICSA அரங்கில் சமச்சீர்க்கல்வியை ஒத்திவைக்கும் தமிழக அரசின் முயற்சியைக் கண்டித்து கல்வியாளர் களின் தலைமையிலான அரங்கக் கூட்டம்  நடைபெற்றது. இக்கூட்டத்தில் டாக்டர். வே. வசந்தி தேவி, பேரா. பிரபா. கல்விமணி, பேரா. அ. மார்க்ஸ், பேரா. ப. சிவக்குமார், எழுத்தாளர் பா. செயப்பிரகாசம், கவிஞர்.“சமச்சீர்க்கல்வியை ஒத்திவைக்கும் தமிழக அரசின் முயற்சிக்கு எதிராக கண்டனக்கூட்டம்.”-ஐ படிப்பதைத் தொடரவும்.

தொடரும் சாருவின் உளறல்கள்…

 தொடரும் சாருவின் உளறல்கள்… – மு. சிவகுருநாதன்       சாரு நிவேதிதா தன்னுடைய எழுத்துகள் புனைவு, கட்டுரை என்ற இரண்டுக்கும் நடுவில் இருப்பதாக கருதுகிறார்.   ( த சன்டே இந்தியன் – பேட்டி:- ஜுன் 27 – ஜுலை 10, 2011) சாருவின் எழுத்துகளைத் தொடர்ந்து வாசித்து வருபவன் என்ற முறையில் புனைவு கட்டுரையாகவும் கட்டுரை புனைவாக வும் இருப்பதையே அவதானிக்க முடிகிறது.  புனைவுகளுக்கு கற்பனை அவசியந்தானே! எனவே தான் சாரு கட்டுரைகளில் நிறைய பொய்களை கூசாமல்“தொடரும் சாருவின் உளறல்கள்…”-ஐ படிப்பதைத் தொடரவும்.

கவனிப்பாரற்றுக் கிடக்கும் பி.எஸ்.ஆர். நினைவு மண்டபம்

 கவனிப்பாரற்றுக் கிடக்கும் பி.எஸ்.ஆர். நினைவு  மண்டபம் – மு. சிவகுருநாதன்           சீனிவாசன் என்ற பெயர் தலித் குடும்பங்களுக்கு தொடர்பில்லாத ஒரு பெயராக இருப்பினும் இப்பெயரை நிறைய தலித் குழந்தைகளுக்குச் சூட்டி மகிழக்காரணமானவர் கர்நாடக மாநில பார்ப்பனச்சேரியில் பிறந்து கீழத்தஞ்சை பறைச் சேரிகளில் வாழ்ந்து மறைந்த பி.எஸ்.ஆர். என்று தலித் விவசாயக் கூலிகளால் அன்புடன் போற்றப்பட்ட தோழர் பி.எஸ். சீனிவாசராவ். பண்ணையடிமைகளாய், சாணிப்பால், சவுக்கடிக்காட்பட்ட விவசாயக் கூலிகளான தலித் சமூகத்தை மீட்டெடுத்து, இயக்கம் கட்டி, போராடி கீழத்“கவனிப்பாரற்றுக் கிடக்கும் பி.எஸ்.ஆர். நினைவு மண்டபம்”-ஐ படிப்பதைத் தொடரவும்.