உச்ச நீதிமன்றத் தீர்ப்பு வரும் வரை…

உச்ச நீதிமன்றத் தீர்ப்பு வரும் வரை… மு.சிவகுருநாதன்      அ.இ.அ.தி.மு.க. பொதுச்செயலாளராக வி.கே. சசிகலா தேர்வாகியிருக்கிறார். இது எதிர்பார்த்த ஒன்றுதான்; அதிர்ச்சியளிக்கக் கூடியதல்ல. விரைவில் தமிழக முதல்வராகக் கூட தேர்ந்தெடுக்கப்பட வாய்ப்பிருக்கிறது. தமிழக அரசியலைக் கூர்ந்து அவதானிப்பவர்களுக்கு இது ஒன்றும் பெரிய விஷயமே அல்ல. இப்படி நடக்காமல் இருந்தால்தான் வியப்படைய வேண்டியிருக்கும். சட்டப்படியான தகுதிகளைத் தவிர தார்மீகத் தகுதிகள் பற்றி விவாதிக்க ஜனநாயகத்தில் இடமில்லை. மக்களின் தீர்ப்பு இன்னும் நான்கரை ஆண்டுகளுக்கு அ.இ.அ.தி.மு.க. கட்சிக்கு உள்ளது. பொதுச்செயலாளாராக“உச்ச நீதிமன்றத் தீர்ப்பு வரும் வரை…”-ஐ படிப்பதைத் தொடரவும்.

பகத்சிங் மக்கள் சங்கம்

பகத்சிங் மக்கள் சங்கம் அறிமுக விழா மற்றும் கொடியேற்று விழா நாள்: 01.01.2017 ஞாயிற்றுக்கிழமை நேரம்: காலை 10:30 மணி இடம்: சோ.கோ. அறக்கட்டளை – நீதிபதி கிருஷ்ணய்யர் அரங்கம் அப்போலோ மருத்துமனை அருகில், க.க. நகர், மதுரை.              இந்த சங்கம் இந்திய அவலங்களையும், அரசியல் சீரழிவுகளையும் துடைத்தெறிய மக்களோடு இணைந்து இயக்கம் நடத்த உருவாக்கப்பட்டது. அரசியல் சட்டத்தின் நோக்கங்களை மையப்படுத்தி இயக்கம் நடத்தப்படும். ஊழலை அம்பலப்படுத்தவும், ஊழல்வாதிகளின் சொத்துகளை பறிமுதல் செய்யவும்“பகத்சிங் மக்கள் சங்கம்”-ஐ படிப்பதைத் தொடரவும்.

100% தேர்ச்சி என்னும் மோசடி

100% தேர்ச்சி என்னும் மோசடி மு.சிவகுருநாதன் 10, 12 வகுப்புகளில் பொதுத் தேர்வுக்கான மாணவர்கள் பட்டியல் (Nominal Roll) தயாரிக்கும்போது, வருகைப் பதிவேட்டில் உள்ள அனைத்து மாணவர்களும் விடுபடுதல் இல்லாமல் சேர்க்கப்பட வேண்டும் என்று பள்ளிக் கல்வி இயக்குநர் உத்தரவிட்டுள்ளதாக நாளிதழ்களில் (28.1.2016) செய்தி வெளியாகியுள்ளது. காலம் கடந்த நடவடிக்கை என்றாலும் பாராட்டுவோம். 10, 12 வகுப்புகளில் 100% தேர்ச்சிக் கணக்குக் காட்டுவதற்காக பள்ளிகள் பல்வேறு விதமான மோசடிகளில் ஈடுபடுகின்றன. இதில் சுயநிதி, உதவிபெறும், அரசுப் பள்ளிகளும்“100% தேர்ச்சி என்னும் மோசடி”-ஐ படிப்பதைத் தொடரவும்.

09. வேலூர் கலகமும் மாபெரும் புரட்சியும்

09. வேலூர் கலகமும் மாபெரும் புரட்சியும் – மு.சிவகுருநாதன் ‘ஆரியர்கள் வருகை’, ‘முகலாயர்கள் படையெடுப்பு’ என்கிற தலைப்புகளில் ஒரு சார்புக் கண்ணோட்டத்துடன் பாடநூல்கள் எழுதப்பட்டு வந்தன. இவற்றை மாற்ற கல்விப் புலத்தில் பெரும் போராட்டமே தேவைப்பட்டது. இந்துத்துவ அரசுகள் ஆட்சி செய்யும் மாநிலங்களில் காவிப் பாடங்கள் இது போன்று இருப்பது இயல்பான ஒன்று. திராவிடக் கட்சிகள் ஆளும் தமிழகத்தில் இந்நிலை என்பது விந்தையானது. கல்வி – கருத்தியல் குறித்து மனித உரிமைப் போராளி மறைந்த டாக்டர் பாலகோபால்“09. வேலூர் கலகமும் மாபெரும் புரட்சியும்”-ஐ படிப்பதைத் தொடரவும்.

60. வகுப்புவாத வன்முறையை எதிர்கொள்ள கருத்தாயுதம்

60. வகுப்புவாத வன்முறையை எதிர்கொள்ள கருத்தாயுதம்   (இந்நூல் என் வாசிப்பில்… தொடர்)   மு.சிவகுருநாதன் (சிந்தன் புக்ஸ் டிசம்பர் 2015 -ல் வெளியிட்ட க. மாதவ் மொழிபெயர்ப்பில் டாக்டர் பாலகோபாலின் ‘கருத்தாயுதம்: வகுப்புவாதத்தை எதிர்கொள்ள’ ‘கட்டுரைத் தொகுப்பு பற்றிய பதிவு இது.) பாலகோபால் இறந்த பிறகு (அக். 08, 2009) அவரது கட்டுரையையும் நேர்காணல் ஒன்றையும் ‘வன்முறைகளுக்கும் வன்முறையற்ற வழிமுறைகளுக்கும் அப்பால்…’ என்னும் குறுநூல் வெளியானது. அவரது தெலுங்குக் கட்டுரைகள் மாதவ் நேரடியாக தமிழில் மொழிபெயர்த்துள்ளார்.“60. வகுப்புவாத வன்முறையை எதிர்கொள்ள கருத்தாயுதம்”-ஐ படிப்பதைத் தொடரவும்.

துல்லியத் தாக்குதல்

துல்லியத் தாக்குதல்   மு.சிவகுருநாதன்     பணமதிப்பு நீக்கம் கருப்புப் பணத்தை ஒழிக்க என்றனர். நம்பினீர்கள்… கள்ளப் பணத்தைத் தடுக்க என்றனர். நம்பினீர்கள்… இன்று மின்னணு பரிவர்த்தனையே இலக்கு என்கின்றனர். இன்னுமா நீங்கள் நம்பிக் கொண்டிருக்கிறீர்கள்… இன்னும் என்னென்ன கதைகள் இருக்கின்றனவோ! காத்திருங்கள்…. வங்கி அல்லது ஏ.டி.எம். களில் காத்திருப்பதைப் போல!

59. பசுமைப் புரட்சியின் சோகக்கதை

59. பசுமைப் புரட்சியின் சோகக்கதை மு.சிவகுருநாதன் (இந்நூல் என் வாசிப்பில்… தொடர்.) (வம்சி / பூவுலகு வெளியீடாக ஜூலை 2016 –ல் வந்துள்ள வந்தனா சிவா எழுதிய ‘பசுமைப் புரட்சியின் வன்முறை’ என்ற நூல் பற்றிய அறிமுகப்பதிவு.) இந்தியாவின் உணவுப் பஞ்சத்தை, பட்டினிச் சாவுகளைத் தடுத்து நிறுத்தியது பசுமைப் புரட்சி என்கிற பெரிய பிம்பம் ஒன்றிருக்க, அவற்றிற்குப் பின்னாலுள்ள அரசியல் பற்றும் இந்திய வேளாண்மை நாசமாக்கப்பட்ட அவலத்தை பேசும் இந்நூல் சூழலியர் வந்தனா சிவா அவர்களால் எழுதப்பட்டது.“59. பசுமைப் புரட்சியின் சோகக்கதை”-ஐ படிப்பதைத் தொடரவும்.

ஜெ. ஜெயலலிதா: சாமான்ய மக்கள் கொண்டாடிய தலைவர்

ஜெ. ஜெயலலிதா: சாமான்ய மக்கள் கொண்டாடிய தலைவர் மு.சிவகுருநாதன். தமிழக முதல்வர் ஜெ.ஜெயலலிதா (68) 75 நாள்கள் நீண்ட மருத்துவப் போராட்டங்கள் பலனளிக்காமல் 05.12.2016 நள்ளிரவில் மரணமடைந்து விட்டார். இன்னும் நான்காண்டுகளுக்கு மேலாக ஆட்சி செய்ய பெரும்பான்மை மக்கள் அளித்த தீர்ப்பு கனவாகிப்போனது. எளிதில் அணுக முடியாத புதிரான தன்மையோடு இருந்த அவரது இறப்பு, மருத்துவச் சிகிச்சை அனைத்தும் புதிராக முடிந்தது வியப்பைத் தருவது. மறைந்த தலைவருக்கு அமைதியான முறையில் இறுதியஞ்சலி செலுத்திவதே அவருக்கு செய்யும் நன்றியாக“ஜெ. ஜெயலலிதா: சாமான்ய மக்கள் கொண்டாடிய தலைவர்”-ஐ படிப்பதைத் தொடரவும்.

இன்குலாப்: மானுடம் பாடிய கவிஞன்

இன்குலாப்: மானுடம் பாடிய கவிஞன் (டிச. 01, 2016, இன்று மரணித்த புரட்சியாளர், சிந்தனையாளர், கவிஞர், எழுத்தாளர் தோழர் இன்குலாப் அவர்களுக்கு இறுதி அஞ்சலி) மு.சிவகுருநாதன் “இன்குலாப் ஜிந்தாபாத்” எனும் எழுச்சி முழக்கம் இன்று புதிய பொருள் பெறுகின்றது”, (பேரா. அ.மார்க்ஸ் முகநூலில்…) “பொன்னேரி சிவந்ததடா – இருள்பொசுங்கும் பொழுதொன்று விடிந்ததடா என்று குரல் எழுப்பிக் கொடிய அடக்குமுறை நிலவிய அவசரநிலைக் காலம் உட்பட ,வாழ்நாள் முழுவதும் சொந்த வாழ்க்கையைப் பெரிதாக எண்ணாமல்,பொதுவாழ்க்கையையே பெரிதும் நேசித்த புரட்சியாளர்,“இன்குலாப்: மானுடம் பாடிய கவிஞன்”-ஐ படிப்பதைத் தொடரவும்.

08. கல்வி அபத்தங்கள்

08. கல்வி அபத்தங்கள் – மு.சிவகுருநாதன்              கல்வி விழிப்பை உண்டாக்குவது, சிந்திக்கத் தூண்டுவது. பெரியார் சொன்னது போல் நமது சிந்தனையில் தேங்கிப்போன கசடுகளை வெளியேற்றுவதாக கல்வி அமையவேண்டும். ஆனால் கல்விமுறையே அபத்தமாகவும், சிந்தனைகளுக்கு எதிராகவும் இருந்தால் என்ன செய்வது? நாம் வழக்கமாக ஏதோ ஒன்றுக்கு பழக்கப்பட்டுள்ளோம். அதை மாற்றவோ, கேள்வி கேட்க முடியாமல் மழுங்கடிக்கப்பட்டுள்ளோம். வருங்கால சமுதாயத்தையும் இவ்வாறு மழுங்கடிப்பதா கல்வி? சில கல்வி அபத்தங்களை பார்ப்போம். அபத்தம் – ஒன்று          “08. கல்வி அபத்தங்கள்”-ஐ படிப்பதைத் தொடரவும்.