புதிய பகுதி – பரண் பரண் – 0001

புதிய பகுதி – பரண் பரண் – 0001 கவிஞர் இலக்குமி குமாரன் ஞான திரவியம் சொந்த முயற்சி மற்றும் நண்பர்கள் உதவியுடன் தொன்னூறுகளில் (1992 -1997) ‘மவ்னம்’ என்ற கவிதைச் சிற்றேட்டை நடத்தி வந்தார். கணையாழி பிபிரவரி -2012 இதழில் க.அம்சப்பிரியா ‘கவிதைத்தடம் ‘மவ்னம்’- ஒரு பதிவு ‘ என்கிற தலைப்பில் ஆறு பக்கக்கட்டுரை எழுதியுள்ளார். ‘மவ்னம்’- இதழ் எட்டில் (மார்ச்-1995) என்னுடைய கவிதை முயற்சி ஒன்று வெளியானது. கவிதைக்கான இதழ் ஒன்றில் எனது கவிதை“புதிய பகுதி – பரண் பரண் – 0001”-ஐ படிப்பதைத் தொடரவும்.

எனது கவிதை முயற்சிகள் – தலைப்பிடப்படாத இரு கவிதைகள்

எனது கவிதை முயற்சிகள் தலைப்பிடப்படாத இரு கவிதைகள் -மு.சிவகுருநாதன் 01 எவ்வளவோ வழிகள் சென்று திரும்ப அடைபட்டுப்போயினதென்றாலும் கிடைத்துவிட்டதாக முடியாத ஒன்றை சொல்லியும் விடலாந்தான் வந்து விட்டதற்கான சுய அடையாளங்களைத் தவிர்த்து எஞ்சியதையும் மாற்ற முடிந்தால்… இருப்பினும் விட்டுவிடத் தோன்றுகிறது இதுவும் நடக்கக்கூடும் பிடிமானம் கூடியிருக்காத வரையில்… 02 சாந்துப் பொட்டெடுத்து தூணில் எதோ எழுதிப் பார்க்கிறாள் தோளில் தொங்குகிற குழந்தையோடு எழுத்துக்கள் ஒன்றோடொன்று பிணைந்து குழந்தையைவிட வேகமாக அலறுகின்றன அவள் எழுதுவது எவன் பெயரை அறியத்துடிக்கும்“எனது கவிதை முயற்சிகள் – தலைப்பிடப்படாத இரு கவிதைகள்”-ஐ படிப்பதைத் தொடரவும்.