இட ஒதுக்கீட்டின் அறம்

இட ஒதுக்கீட்டின் அறம் மு.சிவகுருநாதன்        இந்திய அரசியல் சட்டம் அனைவருக்குமான நீதி, சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் ஆகியவற்றை வளர்க்க உறுதியேற்கிறது. அந்த வகையில் ஒடுக்கப்பட்ட, பின்தங்கிய பட்டியல் வகுப்பினர் மற்றும் பழங்குடியினருக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில் முன்னுரிமை அளிப்பதை ஏற்கிறது. அதனடிப்படையிலேயே இங்கு இட ஒதுக்கீடு அமலாகிறது.       சமத்துவத்தை நோக்கியப் பாதையில் பல்வேறு அசமத்துவங்களை இந்தச் சமூகம் எதிர்கொள்கிறது. இவற்றைச் சரிசெய்வதற்காகவே ஒதுக்கீடுகள் தேவைப்படுகின்றன. இதன் மூலம் ஒரு குறிப்பிட்ட கால அளவிற்குள்ளாக அசமத்துவச்“இட ஒதுக்கீட்டின் அறம்”-ஐ படிப்பதைத் தொடரவும்.

பெரியார் ஏன் இன்றும் தேவைப்படுகிறார்?

பெரியார் ஏன் இன்றும் தேவைப்படுகிறார்?     மு.சிவகுருநாதன்     பகுதி: ஒன்று       இது பெரியார் பிறந்த மண். இங்கு இந்துத்துவம் காலூன்றவே முடியாது என்று ஒருசிலர் முழக்கம் எழுப்புகின்றனர். இது மிகவும் அபாயகரமான போக்கு. இது ஒரு வகையில் மூட நம்பிக்கையும் கூட. காந்தி பிறந்த மண்ணான குஜராத்தில்தான் நாட்டுப் பிரிவினைக்கு அடுத்தபடியாக 2000 இல் நடந்த இந்துத்துவ வெறியாட்டத்தில் இஸ்லாமியர்கள் ஆயிரக்கணக்கில் படுகொலை செய்யப்பட்டனர். மகாத்மா ஜோதிபா புலே“பெரியார் ஏன் இன்றும் தேவைப்படுகிறார்?”-ஐ படிப்பதைத் தொடரவும்.

தமிழக காவல்துறையின் அட்டூழியங்கள்

தமிழக காவல்துறையின் அட்டூழியங்கள் – மு. சிவகுருநாதன் (இன்று டிசம்பர் 10, உலக மனித உரிமைகள் நாள்)   உலகம், இந்தியா, தமிழ்நாடு என எந்தப் பகுதியை எடுத்துக்கொண்டாலும் பேரளவில் மனித உரிமை மீறல்களில் ஈடுபடுவது ராணுவமும் காவல்துறைகளும் என்பதை அன்றாட நிகழ்வுகள் நிரூபிக்கின்றன. ஈராக் குடிமக்களை கொடுமைகளுக்குள்ளாக்கிய அபு கிரைப் சிறையில் அமெரிக்க ராணுவ வீரர்களின் வீடியோக்களை நாம் அவ்வளவு எளிதில் மறந்து விட முடியாது. இலங்கையில் நமது அமைதிப்படை வீரர்கள் பண்ணிய அக்கிரமங்கள் பழங்கதை.“தமிழக காவல்துறையின் அட்டூழியங்கள்”-ஐ படிப்பதைத் தொடரவும்.

இந்திய வரலாற்றில் ஒடுக்கப்பட்டோரின் விடுதலையை முன்னகர்த்திய தலைவர்

இந்திய வரலாற்றில் ஒடுக்கப்பட்டோரின் விடுதலையை முன்னகர்த்திய தலைவர் – மு. சிவகுருநாதன்     ‘உன்னதம்’ இதழின் ஆசிரியரும் எழுத்தாளருமான கெளதம சித்தார்த்தன் இன்றைய கல்வி முறையிலுள்ள குறைபாடுகளைச் சுட்ட, இன்று பள்ளியில் படிக்கும் மாணவியொருத்திக்கு விவேகானந்தரைப் பற்றி தெரிந்திருக்கவில்லை என்று அங்கலாய்த்திருக்கிறார். இதற்கு வேறு எந்த அர்த்தமிருப்பினும் விவேகானந்தரை நமது பாடத்திட்டம் உரிய முறையில் மாணவர்களுக்கு அறிமுகம் செய்யவில்லை என்ற ஆதங்கமும் உண்டு தானே!   பத்தாம் வகுப்பு சமச்சீர் கல்வி சமூக அறிவியலில் ’19ஆம்“இந்திய வரலாற்றில் ஒடுக்கப்பட்டோரின் விடுதலையை முன்னகர்த்திய தலைவர்”-ஐ படிப்பதைத் தொடரவும்.

தலித் விடுதலைக்கான வழக்கு ஆவணங்கள்

தலித் விடுதலைக்கான வழக்கு ஆவணங்கள் – மு. சிவகுருநாதன்     (வழக்குரைஞர் பொ. இரத்தினம் தொடுத்த ‘சென்னகரம்பட்டி கொலை வழக்கு’ வழக்கு மன்ற ஆவணத் தொகுப்பு குறித்த பதிவு) மதுரை மாவட்டம் மேலூர் சென்னகரம்பட்டியில் அம்மாசி, வேலு என்ற இரு தலித்கள் 05.07.1992 இல் ஆதிக்க சாதி வெறியர்களால் கொடூரமாக கொலை செய்யப்பட்டனர். அப்போது தமிழகத்தின் அதிகாரத்திலிருந்த அ.இ.அ.தி.மு.க.வின் காவல்துறை சரியான நடவடிக்கை எடுக்காமல் தன்னுடைய தலித் விரோதப் போக்கை வெளிப்படுத்தியது. வழக்குரைஞர் பொ. இரத்தினம்,“தலித் விடுதலைக்கான வழக்கு ஆவணங்கள்”-ஐ படிப்பதைத் தொடரவும்.

தமிழகத்தில் செத்துப்போன மனச்சாட்சிகள்

தமிழகத்தில் செத்துப்போன மனச்சாட்சிகள் – மு. சிவகுருநாதன்               செப்டம்பர் 09, 2011 ஆம் தேதி கமுதிக்குப் பக்கத்திலுள்ள மண்டலமாணிக்கம் என்ற கிராமத்திற்கருகில் உள்ள பள்ளப்பச்சேரியைச் சேர்ந்த பதினொன்றாம் வகுப்பு மாணவர் பழனிக்குமார் (16) மிகவும் கொடூரமான முறையில் வெட்டிக் கொலை செய்யப்படுகிறார். இச்சிறுவனுக்கு அஞ்சலி செலுத்த வந்த தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத் தலைவர் ஜான் பாண்டியன் தடுக்கப்பட்டு திருப்பியனுப்பப்படுகிறார். செப்டம்பர் 11, 2011 அன்று பரமக்குடியில்“தமிழகத்தில் செத்துப்போன மனச்சாட்சிகள்”-ஐ படிப்பதைத் தொடரவும்.

அருந்ததிய மக்களின் குரலாக வெளிவரும் ஓர் இதழ்

அருந்ததிய மக்களின்  குரலாக வெளிவரும் ஓர் இதழ்  (சிற்றிதழ் அறிமுகம்:- வெள்ளைக்குதிரை – இருமாத இதழ்)                                                                                    – மு. சிவகுருநாதன்       ஒடுக்கப்பட்ட மக்களில் கல்வி வேலை வாய்ப்புகளில் முறையான பங்கின்றி இதுவரையில் இருந்து வந்த அருந்ததிய மக்கள் தற்போதுதான் உள் ஒதுக்கீடு பெற்று சிறிது வெளிச்சத்திற்கு வந்திருக்கிறார்கள்.  ஒடுக்கப்பட்ட, நலிவுற்ற இம்மக்களின் குரலாக தமிழ்நாடு சாக்கிய அருந்ததி சங்கத்தின் சார்பில் மதுரை வீரனின் வாகனப் பெயரைத் தாங்கி, இருமாத இதழாக பிப்.-மார்ச்“அருந்ததிய மக்களின் குரலாக வெளிவரும் ஓர் இதழ்”-ஐ படிப்பதைத் தொடரவும்.