வரலாறுகள் வெறும் பெருமிதங்களுக்கும், கொண்டாடவும் மட்டுமல்ல!

வரலாறுகள் வெறும் பெருமிதங்களுக்கும், கொண்டாடவும் மட்டுமல்ல! மு.சிவகுருநாதன்  (கல்ஹணரின் ‘ராஜதரங்கிணி’யை முன்வைத்து சில குறிப்புகள்.)      பழைய வரலாற்று நூல்களில் கல்ஹணரின் ‘ராஜதரங்கிணி’யைப் பற்றிய பெருமிதமும் கொண்டாட்டமும் மிகுந்துள்ளது. சமூக ஊடகங்களில் ஆய்வுகள் என்ற பெயரில் இந்த புகழ்பாடல்கள் நிகழ்த்தப்படுகின்றன. இந்நூல் சமஸ்கிருதத்தில் எழுதப்பட்டதும் எழுதியவர் காஷ்மீரி பிராமணர் (பண்டிட்) என்பதும் இத்தகைய புகழ்ச்சியின் அடிநாதமாக உள்ளது.       காஷ்மீர் பிராமணரான ஜவகர்லால் நேருவின் உறவினர் ஆர்.எஸ். பண்டிட் இதை ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்ததும் (1934) அதற்கு“வரலாறுகள் வெறும் பெருமிதங்களுக்கும், கொண்டாடவும் மட்டுமல்ல!”-ஐ படிப்பதைத் தொடரவும்.

குழந்தைகள் சொன்ன குட்டிக் கதைகள்!

குழந்தைகள் சொன்ன குட்டிக் கதைகள்!     (நூலறிமுகம்… தொடர்: 051) மு.சிவகுருநாதன் (குட்டி ஆகாயம் சிறார் பதிப்பகம் வெளியிட்ட  ‘சிறார் சொன்ன கதைகள்: 1, 2 & 3’  என்ற குட்டி நூல்கள் வரிசை  பற்றிய  பதிவு.)       எவ்வளவு நாள்கள்தான் குழந்தைகள் கதைகளைக் கேட்டுக் கொண்டிருப்பது? அவர்கள் படைப்பாளிகளாக மலர வேண்டாமா? மேலும் இருக்கின்ற கதைகளில் நிலவுகின்ற முறையியலை, நீதியைத் தலைகீழாக்கும் தன்மை அவர்களது படைப்பூக்கத்திலிருந்து கிடைக்கிறது.      குழந்தைகள்  எழுத்துகளை ஓவியமாக உணர்வதைப்போல எந்த நிகழ்வுகளையும்“குழந்தைகள் சொன்ன குட்டிக் கதைகள்!”-ஐ படிப்பதைத் தொடரவும்.

தமிழ்நாட்டின் சாதி அரசியலும் ஆய்வு அரசியலும்

தமிழ்நாட்டின் சாதி அரசியலும் ஆய்வு அரசியலும்  (நூலறிமுகம்… தொடர்: 050) மு.சிவகுருநாதன்   (பேரா. கா.அ. மணிக்குமார் எழுதிய ‘முதுகுளத்தூர் படுகொலை: தமிழ்நாட்டில் சாதியும் தேர்தல் அரசியலும்’  என்ற நூல் குறித்த பதிவு.)     பேரா. கா.அ. மணிக்குமாரின் ‘Murder in Mudukulathur: Caste and Electoral Politics in Tamil Nadu’ என்னும் ஆங்கில நூலை ச. சுப்பாராவ் தமிழாக்கியுள்ளார். முதுகுளத்தூர் கலவரங்கள் குறித்து விரிவான ஆய்வுகள் ஏதும் இல்லாத நிலையில் ஆங்கிலத்தில் எழுதி மொழிபெயர்க்கப்பட்டுள்ள இந்நூலுக்கு“தமிழ்நாட்டின் சாதி அரசியலும் ஆய்வு அரசியலும்”-ஐ படிப்பதைத் தொடரவும்.

ஓரணியில் திரண்டால்தான் வெற்றி!

ஓரணியில் திரண்டால்தான் வெற்றி!   (நூலறிமுகம்… தொடர்: 049) மு.சிவகுருநாதன் (முனைவர் மு.இனியவன் எழுதி,  அறிவாயுதம் பதிப்பக முதல் வெளியீடான, ‘ பீமா கோரேகான் – பேஷ்வாக்களை வீழ்த்திய மகர்களின் வீர வரலாறு’ என்ற நூல் குறித்த  பதிவு.)       01.01.1818 அன்று மகாராஷ்டிர மாநிலம் பூனா நகரிலுள்ள பீமா ஆற்றின் அருகே 20,000 வீரர்களைக் கொண்ட பார்ப்பன பேஷ்வாக்களின் படையை மகர்களை முதன்மையாகக் கொண்ட கிழக்கிந்திய கம்பெனியின் 500 பேர் கொண்ட படை வெற்றி கொண்ட நிகழ்வு ஆண்டுதோறும்“ஓரணியில் திரண்டால்தான் வெற்றி!”-ஐ படிப்பதைத் தொடரவும்.

ஜெயமோகனைக் கண்டிப்போம்!

ஜெயமோகனைக் கண்டிப்போம்! மு.சிவகுருநாதன்      தமிழ் இலக்கிய உலகின் எச்.ராஜா, எஸ்.வி.சேகர், கரு.நாகராஜன் என்றெல்லாம் புகழக்கூடிய பெருமையுடையவர் ஜெயமோகன். தினமலர் வாசகர் கடிதங்களை அவர்களே எழுதிப் பிரசுரிப்பார்கள். அதைப்போல தனது ரசிகர்களின் கடிதங்கள் என்ற பெயரில் ஏதேனும் அவதூறுகளை அவரே எழுதி வெளியிடுவார்.      நாகர்கோவில் பார்வதிபுரம் ‘புளிச்ச மாவு’ பிரச்சினைக்குப் பிறகு யாரும் அவரைக் கண்டுக்கல. எஸ்.வி.ராஜதுரை, அ.மார்க்ஸ் போன்ற இடதுசாரி சிந்தனையாளர்களைச் சீண்டுவதும் அவதூறு பரப்புவதும் அவரது தலையணை சைஸ் எழுத்துப் பணிகளிடையே இதர“ஜெயமோகனைக் கண்டிப்போம்!”-ஐ படிப்பதைத் தொடரவும்.

பெரியவர்கள் குழந்தைகளாக மாறவேண்டிய தருணங்கள்!

பெரியவர்கள் குழந்தைகளாக மாறவேண்டிய தருணங்கள்!  (நூலறிமுகம்… தொடர்: 048) மு.சிவகுருநாதன் (குட்டி ஆகாயம் சிறார் பதிப்பகம் வெளியிட்ட  ‘குழந்தை அவள் செய்த முதல் தப்பு – உலகச் சிறுகதைகளும் கவிதைகளும்’ என்ற குறுநூல்  பற்றிய  பதிவு.)      குழந்தைகள் எப்போதும் குழந்தைகளாகவே இருக்கிறார்கள், நாம் கொஞ்சம் பெரிய மனிதத்தனத்தை விட்டொழித்து குழந்தைமையைக் கைக்கொள்ள வேண்டும். இது கொஞ்சம் சிக்கலானதுதான்; இல்லையென்றால் நம்மால் குழந்தைகளைப் புரிந்துகொள்ள இயலவே இயலாது. நாம் கடந்து வந்த குழந்தைமையை மீண்டும் நமக்கு உணர்த்த“பெரியவர்கள் குழந்தைகளாக மாறவேண்டிய தருணங்கள்!”-ஐ படிப்பதைத் தொடரவும்.

தமிழ்ச் சூழலுக்கானப் பண்பாட்டு உரையாடல்

தமிழ்ச் சூழலுக்கானப் பண்பாட்டு உரையாடல்  (நூலறிமுகம்… தொடர்: 047) மு.சிவகுருநாதன் (அடையாளம் வெளியீடான,  பக்தவத்சல பாரதியின் ‘பண்பாட்டு உரையாடல்:  முன்மொழிவுகள் – விவாதங்கள் – புரிதல்கள்’ எனும்   நூல் பற்றிய  பதிவு இது.)       தமிழில் மானிடவியல், இனவரைவியல் நூல்கள் பலவற்றை எழுதியுள்ள பக்தவத்சல பாரதி தமிழ்ச்சூழலில் நன்கறியப்பட்ட ஆய்வறிஞர். பண்பாட்டு மானிடவியல், தமிழர் மானிடவியல், வரலாற்று மானிடவியல், இலக்கிய மானிடவியல், மானிடவியல் கோட்பாடுகள், தமிழகப் பழங்குடிகள், பாணர் இனவரைவியல், இலங்கையில் சிங்களவர், தமிழகத்தில் நாடோடிகள்“தமிழ்ச் சூழலுக்கானப் பண்பாட்டு உரையாடல்”-ஐ படிப்பதைத் தொடரவும்.

படிநிலைச் சாதியமும் தீண்டாமையும்

படிநிலைச் சாதியமும் தீண்டாமையும்   (நூலறிமுகம்… தொடர்: 046)  மு.சிவகுருநாதன்   (புலம் வெளியிட்ட, சி. லஷ்மணன்    கோ.ரகுபதி எழுதிய ‘தீண்டாமைக்குள் தீண்டாமை: புதிரை வண்ணார் வாழ்வும் இருப்பும்’ என்ற ஆய்வு நூல் குறித்த பதிவு.)       சாதியம், தீண்டாமை குறித்து பல்வேறு ஆய்வுகள் வெளிவந்துள்ளன. தீண்டாமை என்பது விலக்குதல் அல்ல; மாறாக விலகியிருத்தல், என்றெல்லாம் புதிய ஆய்வுகள் வந்து கொண்டிருக்கின்றன. (பார்க்க: சந்நியாசமும் தீண்டாமையும் – ராமாநுஜம், புலம் வெளியீடு, இது குறித்து பிறிதொரு நேரத்தில் பார்ப்போம்.)  “படிநிலைச் சாதியமும் தீண்டாமையும்”-ஐ படிப்பதைத் தொடரவும்.