மாற்று மருத்துவ முறைகளை அழித்தொழிக்கும் முயற்சி

மாற்று மருத்துவ முறைகளை அழித்தொழிக்கும் முயற்சி – மு. சிவகுருநாதன் “மேற்கத்திய வைத்திய முறையை முற்றாகப் பின்பற்றவுமில்லாமல் அதன் அறிவியற் செறிவை மட்டும் இறக்கிக்கொண்டு (தொழில் நுட்பத்தையும் நுணுக்க அறிவையும் மட்டும் மையமாகக் கொள்ளாமல்) நமது பாரம்பரிய நாட்டு வைத்திய முறையுடன் இணைக்கப்பட்ட ஒரு வைத்திய முறை இங்கு உருவாக்கப்பட வேண்டும். நாட்டு வைத்திய ஆய்வுகட்கு முன்னுரிமை வழங்குவதோடு அதன் இயல்பான சனநாயகத்தன்மை காக்கப்பட்டு மருத்துவ நலச் சேவையில் அதற்கு முன்னுரிமை வழங்கப்பட வேண்டும்”. – அ.மார்க்ஸ்“மாற்று மருத்துவ முறைகளை அழித்தொழிக்கும் முயற்சி”-ஐ படிப்பதைத் தொடரவும்.

சோதிடம் சொல்லும் விஞ்ஞானிகள்

சோதிடம் சொல்லும் விஞ்ஞானிகள் – மு.சிவகுருநாதன் (ஓர் முன் குறிப்பு:- பல்கலைக்கழகங்களில் பட்டம் பெற்று கூலிக்கு மாரடிக்கும் பலர் விஞ்ஞானிகளாக இருப்பதில்லை என்பதே நடைமுறை உண்மை. திறந்த மனத்துடன் ஆய்வு செய்யும் மனப்போக்கு அறிவியலின் அரிச்சுவடி என்பதைக் கூட தெரியாதவர்களை எப்படி விஞ்ஞானிகள் என்று சொல்வது? கூடங்குளம் விவகாரத்தில் அப்துல் கலாம் உள்பட விஞ்ஞானிகள் என்று நம்பப்பட்ட பலரது முகமுடிகள் கழன்று விழுந்துகொண்டே இருக்கின்றன. ‘விஞ்ஞானிகள்’ என்று இங்கு நான் குறிப்பிடுவது பொதுவான ஒரு பயன்பாட்டுக்கு தானே“சோதிடம் சொல்லும் விஞ்ஞானிகள்”-ஐ படிப்பதைத் தொடரவும்.

35 -வது சென்னைப்புத்தகக்கண்காட்சியின் இறுதி நாளில் ஓர் பருந்துப்பார்வை

35 -வது சென்னைப்புத்தகக்கண்காட்சியின் இறுதி நாளில் ஓர் பருந்துப்பார்வை                                                                                                                                         -மு.சிவகுருநாதன்   இந்த ஆண்டின் 35 -வது சென்னைப்புத்தகக்கண்காட்சி ஜனவரி-05 முதல் 17 முடிய நடைபெற்றது. கூடங்குளம் பயணம், உடல்நலக்குறைவு, பிற பணிகள் என்று நீண்டதால் இவ்வாண்டு புத்தகக்கண்காட்சிக்குச் செல்ல முடியாமல் போய்விடுமோ என்ற பயம் தொற்றிக்கொண்டு விட்டது. கடைசியாக இறுதிநாளில் (17.02.2012) சென்னை சென்று திரும்பிய பிறகுதான் சற்று நிம்மதி ஏற்பட்டது. எப்போதும் போலவே வழக்கமான பல்வேறு குறைபாடுகளுடன் புத்தகச் சந்தை நிகழ்வுகள் அரங்கேறுகின்றன.“35 -வது சென்னைப்புத்தகக்கண்காட்சியின் இறுதி நாளில் ஓர் பருந்துப்பார்வை”-ஐ படிப்பதைத் தொடரவும்.

நமது கல்விமுறை எங்கே செல்கிறது?

நமது கல்விமுறை எங்கே செல்கிறது? -மு.சிவகுருநாதன் ஆசிரியை உமா மகேஸ்வரி   சென்னையில் ஒரு தனியார் பள்ளி வகுப்பறையில் ஆசிரியை மாணவர் ஒருவரால் குத்திக் கொலை செய்யப்பட்ட நிகழ்வு அதிர்ச்சி அலைகளை எழுப்பியுள்ளது. சென்னை பாரிமுனை அரண்மனைக்காரத் தெருவில் உள்ள செயின்ட் மேரீஸ் ஆங்கிலோ இந்தியன் மேல்நிலைப் பள்ளியில் இந்தி மற்றும் வேதியியல் ஆசிரியையாகப் பணிபுரிந்த மந்தைவெளி நார்மன் தெருவைச் சேர்ந்த ஆசிரியை உமா மகேஸ்வரியை (39) ஒன்பதாம் வகுப்புச் சேர்ந்த மாணவர் ஒருவர் கழுத்து மற்றும்“நமது கல்விமுறை எங்கே செல்கிறது?”-ஐ படிப்பதைத் தொடரவும்.

கானல் நீரான கல்வி உரிமை

கானல் நீரான கல்வி உரிமை – மு. சிவகுருநாதன் (மக்கள் கல்வி இயக்கம் வெளியிட்ட கல்வி உரிமைச் சட்டம் – நாம் ஏமாற்றப்பட்டக் கதை – என்ற குறுநூல் குறித்த பார்வை) கல்வியாளர் பேரா. அனில் சத்கோபால் எழுதிய பொதுப்பள்ளி முறை குறித்த கட்டுரை, தேர்வு முறைகேடுகள் குறித்த கே. சுப்பிரமணியன் எழுதிய கட்டுரை, இந்தியாவின் முன்னாள் வெளியுறவுத்துறைச் செயலாளர் முகுந்த் துபே எழுதிய ”கல்வி உரிமைச்சட்டம்” என்ற பெயரில் நாம் ஏமாற்றப்பட்டதை வெளிப்படுத்தும் கட்டுரை என“கானல் நீரான கல்வி உரிமை”-ஐ படிப்பதைத் தொடரவும்.

கருத்துரிமைக்கெதிராக சைவ-இந்துத்துவ வெறியர்கள்.

கருத்துரிமைக்கெதிராக சைவ-இந்துத்துவ வெறியர்கள். -மு.சிவகுருநாதன் இப்போதெல்லாம் தலையணை கனத்தில் நாவல் எழுவது பேஷனாகிவிட்டது. நாவலாசிரியர் சோலை சுந்தரபெருமாள் எழுதிய சமீபத்திய நாவலான தாண்டவபுரம் 700 பக்கங்கள் கொண்ட பெரிய நாவல். இவரது நாவல்களில் இதுதான் பெரியது என்று எண்ணுகிறேன். இந்நாவலை சென்ற ஆண்டு அக்டோபர் 10 , 2011 அவரிடமிருந்து வாங்கினேன். இந்த மாதிரி பெரிய நாவல்கள் புரட்டிப் படிக்கவே பெருமலைப்பை உண்டுபண்ணுகின்றன.எனவே படிப்பதை ஒத்திவைத்துவிட்டேன். இந்த நாவல் திருஞானசம்பந்தரையும் சைவமதத்தையும் இழிவுப் படுத்துகிறது என்று சொல்லி“கருத்துரிமைக்கெதிராக சைவ-இந்துத்துவ வெறியர்கள்.”-ஐ படிப்பதைத் தொடரவும்.

உலகில் முன் தோன்றியது தமிழும் தமிழ் நாகரிகமும் தான்!

உலகில் முன் தோன்றியது தமிழும் தமிழ் நாகரிகமும் தான்! மு.சிவகுருநாதன் திருவாரூர் இலக்கிய வளர்ச்சிக் கழகம் நடத்திய இலக்கியச் சந்திப்பு நிகழ்வு நேற்று (04.02.2012) மாலை 5 மணிக்கு திருவாரூர் தெற்கு வீதி கெளரிசாமி நகராட்சி நடுநிலைப் பள்ளியில் நடைபெற்றது. நாவலாசிரியர் சோலை சுந்தரபெருமாள் தலைமையில் நடந்த இந்த நிகழ்வில் இலக்கிய வளர்ச்சிக் கழகத்தின் பொதுச்செயலர் புலவர் எண்கண் சா.மணி வரவேற்றுப் பேசினார். நாவலாசிரியர் சோலை சுந்தரபெருமாள் தனது தலைமையுரையில் அரங்கில் கூட்டம் குறைவாக உள்ளதைக் குறிப்பிட்டு“உலகில் முன் தோன்றியது தமிழும் தமிழ் நாகரிகமும் தான்!”-ஐ படிப்பதைத் தொடரவும்.

எலி அம்மணமாகப் போன கதை!

எலி அம்மணமாகப் போன கதை! -மு.சிவகுருநாதன்                               இலங்கையில் ராஜ பக்சே யுடன் அப்துல் கலாம்   இந்திய – இலங்கை மீனவர்கள் பிரச்சினை தொடர்கதையாக நீடிக்கிறது. இதைத் தீர்க்க நமது அரசுகள் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் வாளாயிருக்கின்றன. ஒப்பீட்டளவில் பாகிஸ்தானுடன் கூட இவ்வளவு தீவிரமான மீன்பிடித் தகராறு இல்லை என்று கூட சொல்லலாம். இரு நாட்டுத்தூதர்கள், அமைச்சர்க்ள, தலைவர்கள், என பலமுறை பேசுகிறார்கள். ஆனால் கண்ணியமான தீர்வு எதுவும் எட்டப்படவில்லை. அண்மையில் நடைபெற்ற வெளியுறவுத்துறை“எலி அம்மணமாகப் போன கதை!”-ஐ படிப்பதைத் தொடரவும்.

அணுஉலைக்கு எதிரான இடிந்தகரை போராட்டத்தில் இரு நாட்கள்

அணுஉலைக்கு எதிரான இடிந்தகரை போராட்டத்தில் இரு நாட்கள் -மு.சிவகுருநாதன் பேரா. அ. மார்க்ஸ், புதுச்சேரி கோ. சுகுமாரன், வழக்குரைஞர் ரஜினி ஆகியோருடன் கூடங்குளம் அணு உலைகளுக்கு எதிராக இடிந்தகரையில் நடைபெற்று வரும் மக்கள் போராட்டத்தை இரு நாட்கள் அருகிலிருந்து கவனிக்கும் நல்வாய்ப்பு கிடைத்தது. ஜனவரி 05, 06 (2012) ஆகிய இரு தினங்கள் (தொடர் போராட்டத்தின் 142, 143 -வது நாட்கள்) போராட்டக்காரர்களுடன் பொழுதைக் கழித்த நாங்கள் ஜனவரி 07 (2012) மதுரையில் பத்திரிக்கையாளர் சந்திப்பை நடத்தினோம்.“அணுஉலைக்கு எதிரான இடிந்தகரை போராட்டத்தில் இரு நாட்கள்”-ஐ படிப்பதைத் தொடரவும்.

ஓடாத ரயில் பாதைக்கு சாலை மேம்பாலம்!

ஓடாத ரயில் பாதைக்கு சாலை மேம்பாலம்! -மு.சிவகுருநாதன் ஐந்தாண்டுகள் பா.ஜ.க தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி (NDA) அரசிலும் 8 ஆண்டுகள் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி (UPA) அரசிலும் அங்கம் வகித்த தி.மு.க தமிழகத்திற்கு பல்வேறு திட்டங்களை கொண்டு வந்திருப்பதாக மார் தட்டிக் கொள்கிறது. இவற்றில் சில உண்மைகளும் இருக்கலாம். ஆனால் தமிழகத்திற்கான ரயில் திட்டங்களின் அவலத்திற்கு எடுக்காட்டாய் நிற்பது திருவாரூர் – காரைக்குடி ரயில்பாதை. தமிழகத்தில் நடைபெறும் அகலப்பாதைப் பணிகள் மற்றும் திட்ட ஒதுக்கீடு அனைத்தும்“ஓடாத ரயில் பாதைக்கு சாலை மேம்பாலம்!”-ஐ படிப்பதைத் தொடரவும்.