இந்திய அரசியலமைப்பிற்கு மாற்றாக சனாதனம்!

இந்திய அரசியலமைப்பிற்கு மாற்றாக சனாதனம்! மு.சிவகுருநாதன்             ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் முழுநேர மற்றும் பகுதிநேர ஊழியர்கள் தேசிய கல்விக் கொள்கை வகுக்கும் குழுவில் இடம்பெற்றனர். நாக்பூர் வழிகாட்டுதலில் கல்விக்கொள்கை உருவாக்கப்பட்டு அமலுக்கு வந்துள்ளது. வலதுசாரி பாசிசவாதிகளுக்கு வரலாறு, அறிவியல், இலக்கியம் எல்லாம் என்றும் ஆகாது. அவற்றைத் தங்களுக்கேற்ப வளைப்பதையும் திணிப்பதையும் கருத்தியலாகக் கொண்டு செயலாற்றுபவர்கள் இவர்கள். அடல் பிஹாரி வாஜ்பாய் காலம் தொட்டு இத்தகைய மோசடித் திணிப்புகள் தொடர்ந்து கொண்டுள்ளன. ஆய்வு நிறுவனங்கள், உயர்கல்வி அமைப்புகள் போன்றவற்றைச்“இந்திய அரசியலமைப்பிற்கு மாற்றாக சனாதனம்!”-ஐ படிப்பதைத் தொடரவும்.

புதிய பாதையில் தேசிய கல்விக்கொள்கை?

புதிய பாதையில் தேசிய கல்விக்கொள்கை? மு.சிவகுருநாதன்          வெறும் எழுத்தர்களை உருவாக்குவது மெக்காலே கல்விமுறை என்ற விமர்சனம் தொடர்ந்து வைக்கப்படுகிறது. இந்த அடிப்படைவாதிகள் இதற்கு மாற்றாக முன்வைப்பது குருகுலக்கல்வி முறைதான். பெரும்பாலானோரின் கனவிலும் நனவிலும் இக்கருத்துகள் உறைந்துள்ளதை அவதானிக்க முடிகிறது. ஒன்றிய அரசின் கருத்தியலுடன் இணைந்தது குருகுலக்கல்வி முறை. எனவே அவர்களது கல்வித்திட்டத்திலும் கொள்கையிலும் இதற்கு இடமிருக்கிறது. ஆனால் திராவிட மாடலில் அதற்குரிய இடம் கேள்விக்குரியது. பெரியார் சொன்னதுபோல் நமது மூளைகளில் தேங்கிப்போன கசடுகளை அகற்றுவது அவ்வளவு“புதிய பாதையில் தேசிய கல்விக்கொள்கை?”-ஐ படிப்பதைத் தொடரவும்.

மிகை மதிப்பீடு!

மிகை மதிப்பீடு! மு.சிவகுருநாதன்          இன்றைய (16/07/2022) தலையங்கத்தில் குறிப்பிடப்படும் பள்ளிக்கல்விப் பேரெழுச்சி என்பது மிகைப்படுத்தப்பட்ட ஒன்று. நாளை வெளியாகவிருக்கும் 10 ஆம் வகுப்புத் தேர்வு முடிவுகளுக்கான டிரெய்லர் போல இது உள்ளது. (தேர்வு முடிவுதள்ளி வைக்கப்பட்டுவிட்டது.) இவ்வளவு பாராட்டிற்குப் பள்ளிக்கல்வித் துறை தகுதியானதுதானா என்ற கேள்வி நம்முன் எழுகிறது.             தொடக்க/நடுநிலைப் பள்ளிகள் பெரும்பாலும் 2 அல்லது 4 ஆசிரியர்களைக் கொண்டு இயங்குகின்றன. ‘இல்லம் தேடிக் கல்வி’த்திட்டத்திற்காக பல ஆசிரியர்கள் விடுவிக்கப்பட்ட நிலையில் ‘எண்ணும் எழுத்தும்’“மிகை மதிப்பீடு!”-ஐ படிப்பதைத் தொடரவும்.

போராடத் தூண்டும் அரசுகள்

போராடத் தூண்டும் அரசுகள் மு.சிவகுருநாதன் ஒரு முதுமரத்தைத் தேடி அகரத்திருநல்லூர் சுடுகாட்டிற்குச் சென்றபோது அவ்விடத்திற்கு சிறிதும் தொடர்பில்லாத ஒரு கட்டடம் காணப்பட்டது. இது என்ன என்று வினவியபோது டாஸ்மாக் என்று பதில் வந்தது. கடந்த ஒரு மாதமாகவே அங்கு கடை திறக்கப்போவதாக தகவல் வந்து கொண்டிருந்தது. அந்தக் கட்டடம் கட்டத் தொடங்கியதிலிருந்து பிரச்சினையும் ஆரம்பமானது. தொடர் போராட்டம் நடந்தபிறகு காவல்துறை குவிக்கப்பட்டது. பிறகு வேறு வழியின்றி கடை மூடிக்கிடக்கிறது. இந்த மூடல் தற்காலிமானதா. நிரந்தரமா எனத் தெரியவில்லை.“போராடத் தூண்டும் அரசுகள்”-ஐ படிப்பதைத் தொடரவும்.

யாருக்கு நன்றி சொல்வது?

யாருக்கு நன்றி சொல்வது? மு.சிவகுருநாதன் திருவாரூர் மாவட்ட ஆட்சியரகம் அமைந்துள்ள தண்டலை ஊராட்சிக்குட்பட்ட பகுதிகளில் “டாஸ்மாக் இல்லாத தண்டலை ஊராட்சியாக மாற்றிக்கொடுத்த திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அவர்களுக்கும் டாஸ்மாக் மேலாளர் அவர்களுக்கும் நன்றி… நன்றி… நன்றி…”, என சுவரொட்டிகள் ஒட்டப்படுள்ளன. தண்டலை ஊராட்சி கிராமவாசிகள் மற்றும் அனைத்து மகளிர் குழு, சேவை சங்கங்கள் என்கிற போர்வையில் இவர்கள் தங்களுக்கு தாங்களே இவ்வாறு போஸ்டர் அடித்து ஒட்டியுள்ளனர்! இது மிகவும் அபத்தமானது மட்டுமல்ல; இழிவாகவும் உள்ளது. டாஸ்மாக் மதுக்கடைகள்“யாருக்கு நன்றி சொல்வது?”-ஐ படிப்பதைத் தொடரவும்.

திட்டமிட்டுப் பரப்பப்படும் வதந்திகளின் அரசியல் பின்னணி

திட்டமிட்டுப் பரப்பப்படும் வதந்திகளின் அரசியல் பின்னணி மு.சிவகுருநாதன்   சசிகலாவை அ.இ.அதி.மு.க. பொதுச் செயலாளராக்கவும் முதல்வராக்கவும் கருத்தொற்றுமைப் பரப்புரை தொடர்ந்து மேற்கொள்ளப்படுகிறது. இதற்கு ஊடகங்களுக்குப் பெரும்பங்குண்டு. இதன்மூலம் ஒத்தக் கருத்து என்பதான பாவனைகளும் மாற்றுக்கருத்துகளை மூழ்கடிக்கும் சூழ்ச்சியும் நிறைந்திருக்கிறது. கட்சிக்குள் நடக்கும் இந்த பாவனைகளாவது தொலைந்து போகட்டும் என்று விட்டு விடலாம். பொதுவெளியில் இதற்கென திட்டமிட்டு உருவாக்கப்படும் வதந்திகள் மிக மோசமானவை. இந்துத்துவப் பரப்புரையாளர்கள் செய்யும் சமூக வலைத்தளப் பரப்புரைகளுக்கு இணையானதாக இது உள்ளது. கட்சிக்குள் இணக்கமான“திட்டமிட்டுப் பரப்பப்படும் வதந்திகளின் அரசியல் பின்னணி”-ஐ படிப்பதைத் தொடரவும்.

புத்தாண்டுச் சவால்கள்.

புத்தாண்டு எதிர்கொள்ளும் சவால்கள். மு.சிவகுருநாதன் பண மதிப்பு நீக்க நடவடிக்கைகள் மூலம் மக்களின் கவனம் முழுவதையும் திசை திருப்பிவிட்டு தனது மக்கள் விரோத, காவிமய, கார்ப்பரேட் ஆதரவு வேலைகளைச் சந்தடிச் சாக்கில் வெகுவிரைவாகச் செய்து வருகிறது மத்திய அரசு. ஒருசிலவற்றை மட்டும் இங்கு பட்டியலிடுவோம். ஊழல். தேசபக்திச் சொல்லாடல்கள். மதவெறி வன்செயல்கள். எல்லையில் வெறிக்கூச்சல். காஷ்மீரில் அப்பாவி மக்கள் மீதான வன்கொடுமைகள். அப்சா போன்ற அடக்குமுறைச் சட்டங்களின் கொடுங்கோன்மை. சிறுபான்மையினர் விரோதப் போக்கு. விவசாய விரோதக் கொள்கைகள்.“புத்தாண்டுச் சவால்கள்.”-ஐ படிப்பதைத் தொடரவும்.

உச்ச நீதிமன்றத் தீர்ப்பு வரும் வரை…

உச்ச நீதிமன்றத் தீர்ப்பு வரும் வரை… மு.சிவகுருநாதன்      அ.இ.அ.தி.மு.க. பொதுச்செயலாளராக வி.கே. சசிகலா தேர்வாகியிருக்கிறார். இது எதிர்பார்த்த ஒன்றுதான்; அதிர்ச்சியளிக்கக் கூடியதல்ல. விரைவில் தமிழக முதல்வராகக் கூட தேர்ந்தெடுக்கப்பட வாய்ப்பிருக்கிறது. தமிழக அரசியலைக் கூர்ந்து அவதானிப்பவர்களுக்கு இது ஒன்றும் பெரிய விஷயமே அல்ல. இப்படி நடக்காமல் இருந்தால்தான் வியப்படைய வேண்டியிருக்கும். சட்டப்படியான தகுதிகளைத் தவிர தார்மீகத் தகுதிகள் பற்றி விவாதிக்க ஜனநாயகத்தில் இடமில்லை. மக்களின் தீர்ப்பு இன்னும் நான்கரை ஆண்டுகளுக்கு அ.இ.அ.தி.மு.க. கட்சிக்கு உள்ளது. பொதுச்செயலாளாராக“உச்ச நீதிமன்றத் தீர்ப்பு வரும் வரை…”-ஐ படிப்பதைத் தொடரவும்.

எங்கும் பாசிசமயம்!

எங்கும் பாசிசமயம்! மு.சிவகுருநாதன்   பாசிஸ்ட்களின் கூச்சல்கள் நாஜிகளின் வெறித்தனத்திற்கு ஈடாக உள்ளது. பணமதிப்பு நீக்க நடவடிக்கைக்கு ஆதரவாக இவர்கள் சொல்லும் அபத்தங்களுக்கு அளவில்லை. எஸ்.பி.அய். வங்கித் தலைவர் அருந்ததி பட்டாச்சார்யா எளிய மக்களை இழிவு செய்யும் கருத்தொன்றை திமிருடன் வெளிப்படுத்தியுள்ளார். 100 ரூபாய் நோட்டுக்களை யாரும் செலவு செய்யாமல் பத்திரப்படுத்துவதால் சில்லறைத் தட்டுப்பாடு ஏற்படுகிறதாம்! பார்த்தீர்களா! மோடியின் ஆட்சியில் எல்லாரும் மோடியைப் போல் சில்லறைத் தனமாகவே பேசுவார்கள் போலும்! எளிய மக்கள், பெண்கள் படும் இன்னல்களை“எங்கும் பாசிசமயம்!”-ஐ படிப்பதைத் தொடரவும்.

உச்சம் தொட்ட மோடியின் பாசிசம்

உச்சம் தொட்ட மோடியின் பாசிசம் மு.சிவகுருநாதன்     நரேந்திர மோடியின் பாசிசம் நாளுக்கு நாள் அம்பலமாகி வருகிறது. நேற்றைய இரு நிகழ்வுகள் மோடி வித்தைகளை அம்பலமாக்கியுள்ளது. கருப்புப் பணத்தை ஒழிக்கிறேன் என்ற முட்டாள்தனமான செயலில் இறங்கி நாட்டின் சாமான்ய, நடுத்தர மக்கள் தெருவில் ரூபாய் நோட்டுகளுக்காக அலைந்து கொண்டிருக்கும் நேரத்தில் நடந்த இது முக்கியத்துவம் வாய்ந்தது. ஒன்று. கருப்புபண முதலை விஜய் மல்லையா வின் ரூ. 1201 கோடிக் கடனை எஸ்.பி.ஐ. வங்கி தள்ளுபடி (write-off)“உச்சம் தொட்ட மோடியின் பாசிசம்”-ஐ படிப்பதைத் தொடரவும்.