+2 பொதுத்தேர்வை எழுத 50,000 பேர் ஏன் வரவில்லை

+2 பொதுத்தேர்வை எழுத 50,000 பேர் ஏன் வரவில்லை? மு.சிவகுருநாதன்       தமிழ்நாட்டுக் கல்வி வாரியத்தின்  +2 பொதுத்தேர்வு மார்ச் 13 (13/03/2023)  தொடங்கி நடைபெற்று வருகிறது. இன்று (15/03/2023)  இரண்டாவது தேர்வு நடைபெற்றுள்ளது. இதுவரையில் நடந்த இரு தேர்வுகளையும் 50,000 பேர் எழுதவில்லை என்று தகவல் வெளியாகியுள்ளது. ஊடகங்களில் இது அதிர்ச்சியளிக்கும் செய்தியாகப் பார்க்கப்படுகிறது.         தமிழ்நாட்டின் கல்வியைத் தொடர்ந்து கவனித்துவரும் எவருக்கும் இது அதிர்ச்சியளிக்கக் கூடிய ஒன்றாக இருக்காது“+2 பொதுத்தேர்வை எழுத 50,000 பேர் ஏன் வரவில்லை”-ஐ படிப்பதைத் தொடரவும்.

  சென்னைப் புத்தகக் காட்சி: தொடரும் துயரங்கள்

  சென்னைப் புத்தகக் காட்சி: தொடரும் துயரங்கள் மு.சிவகுருநாதன்           ‘பபாசி’ என்று அழைக்கப்படும்  தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கம் (BAPASI) சென்னைப் புத்தகக் காட்சியை தொடர்ந்து நடத்தி வருகிறது. 1976 இல்  மிகச்சிறிய அளவில் சுமார் 30 கடைகள் என்றளவில் தொடங்கிய  இப்புத்தகத் திருவிழா 46 ஆண்டுகளில் 900க்கும் மேற்பட்ட கடைகளில் என்கிற பிரமாண்ட அளவில் விரிவடைந்துள்ளது. இதற்கு நூல்களை வாங்கி வாசிக்கும் பெரும் வாசகர் கூட்டமே காரணமாகும். தமிழ் அறிவுலகம் பெருமை”  சென்னைப் புத்தகக் காட்சி: தொடரும் துயரங்கள்”-ஐ படிப்பதைத் தொடரவும்.

ஒரு நாள் போதுமா?

ஒரு நாள் போதுமா? மு.சிவகுருநாதன் இவ்வாண்டு சென்னைப் புத்தகக் காட்சிக்கு பொங்கல் விடுமுறையில் செல்லலாம் என்று நினைத்திருந்தேன். தவிர்க்க இயலாத காரணங்களால் ஞாயிறன்று (08/01/2023) புத்தகக் காட்சிக்கு சென்று திரும்பினேன். கண்காட்சி தொடங்கி மூன்றாவது நாள். எனவே புதிய நூல்களின் வரவு குறைவு. புத்தகக் கண்காட்சியின் கடைகள் பட்டியல் (site map) கூட இல்லை. உள்ளே நுழைய முடியாத குறுகலான கழிப்பறை; கழிவுகள் ஆறாக ஓட மெரினா மாற்றுத்திறனாளி மரப்பாலம் போல பிளைவுட் பலகையில் நடந்து வெளியேற“ஒரு நாள் போதுமா?”-ஐ படிப்பதைத் தொடரவும்.

பள்ளிக் கலைத் திருவிழா: தாக்கமும் மாற்றமும்

பள்ளிக் கலைத் திருவிழா: தாக்கமும் மாற்றமும் மு.சிவகுருநாதன்              இதுநாள்வரை தமிழகப் பள்ளிகளில் ஆண்டு விழாக்களில் மாணவர்களுக்கான போட்டிகள் நடத்தப்படும். ஆண்டுவிழா நடைபெறாத  பள்ளிகளும் உண்டு. மேலும் விடுதலை நாள், குடியரசு நாள், கல்வி வளர்ச்சி நாள் மற்றும் சூழலியல் மற்றும் சாலைப் பாதுகாப்பு விழிப்புணர்வு   போன்ற நேரங்களில் மாணவர்களுக்குச் சில போட்டிகள் நடத்தப்படுவது வாடிக்கை. இவற்றில் பெருந்திரள் மாணவர்களின் பங்கேற்பு இருக்காது.             இந்தக் கல்வியாண்டு முதல் அரசுப்பள்ளிகளில் மாணவர்களின் தனித்திறமையை வளர்க்க கலைத்“பள்ளிக் கலைத் திருவிழா: தாக்கமும் மாற்றமும்”-ஐ படிப்பதைத் தொடரவும்.

தகைசால் பள்ளிகளும் பிஎம் ஶ்ரீ பள்ளிகளும்

தகைசால் பள்ளிகளும் பிஎம் ஶ்ரீ பள்ளிகளும் மு.சிவகுருநாதன்              தமிழகத்தில் திமுக அரசு பதவியேற்று ஓராண்டு நிறைவடைந்ததை முன்னிட்டு, அரசு, ஊராட்சி ஒன்றிய, நகராட்சி மற்றும் மாநகராட்சி தொடக்கப் பள்ளி மாணவர்களுக்கு காலைச் சிற்றுண்டி, குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து மருத்துவ பரிசோதனை, தகைசால் பள்ளிகள், நகர்ப்புற மருத்துவ நிலையம், ‘உங்கள் தொகுதியில் முதல்வர்’ திட்ட விரிவாக்கம் உள்ளிட்ட ஐந்து  திட்டங்களை  மே 07, 2022 அன்று சட்டப்பேரவையில் 110 விதியின்கீழ் முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.             “ஏப்ரல் மாதம்தகைசால் பள்ளிகளும் பிஎம் ஶ்ரீ பள்ளிகளும்-ஐ படிப்பதைத் தொடரவும்.

அக்னி நட்சத்திரம் என்றால் என்ன? 

அக்னி நட்சத்திரம் என்றால் என்ன?  (தமிழகப் பாடநூல்களில் இந்துத்துவம் – 04)         மு.சிவகுருநாதன்             பத்தாம் வகுப்பு சமூக அறிவியல் புவியியல் பகுதியில் ‘தமிழ்நாடு – இயற்கைப் பிரிவுகள்’ என்ற பாடத்தினூடாக கீழக்கண்ட வினா எழுப்பப்படுகிறது. முன்பு  ‘கண்டறிக’ என்ற தலைப்பில் கொடுத்திருந்தனர். தற்போது அதை மட்டும் நீக்கிவிட்டு இரண்டு கேள்விகளை மட்டும் வைத்துள்ளனர்.  அக்கேள்விகள் கீழே:  “1. அக்னி நட்சத்திரம் என்றால் என்ன?   2. தமிழகத்தை குறைந்த, மிதமானஅக்னி நட்சத்திரம் என்றால் என்ன? -ஐ படிப்பதைத் தொடரவும்.

அகத்திய முனிவரின் கமண்டலத்தில்  தோன்றிய தாமிரபரணி!

அகத்திய முனிவரின் கமண்டலத்தில்  தோன்றிய தாமிரபரணி! (தமிழகப் பாடநூல்களில் இந்துத்துவம் – 03)         மு.சிவகுருநாதன்          பத்தாம் வகுப்பு சமூக அறிவியல் புவியியல் பகுதியில் ‘தமிழ்நாடு – இயற்கைப் பிரிவுகள்’ என்ற பாடம்  உள்ளது. அதில் ஆறுகளைப் பற்றிச் சொல்லும்போது கீழக்கண்ட வரிகள் காணப்படுகின்றன.            “தாமிரபரணி, அம்பாசமுத்திரம் வட்டம் பாபநாசத்திலுள்ள மேற்கு தொடர்ச்சி மலையின் பொதிகை மலை முகடுகளில் தோன்றுகிறது. இவ்வாற்றின் தோற்றம் அகத்திய முனிவரோடு தொடர்புடையதாகக் கருதப்படுகிறது”. (பக்.220)அகத்திய முனிவரின் கமண்டலத்தில்  தோன்றிய தாமிரபரணி!-ஐ படிப்பதைத் தொடரவும்.

இந்து மதப் புனித இடங்கள் மட்டுமா?

இந்து மதப் புனித இடங்கள் மட்டுமா? (தமிழகப் பாடநூல்களில் இந்துத்துவம் – 01) மு.சிவகுருநாதன் நமது அரசியல் சட்டம் நாட்டை மதச்சார்பற்ற நாடாக வரையறுக்கிறது. இது வெறும் ஏட்டளவில் போய்விடும் அபாயம் நம்மை எதிர்நோக்கியுள்ளது. எங்கும் பெரும்பான்மை வாதம் தலை தூக்குகிறது. இது பிறர் (Others) மீதான வெறுப்பை வளர்க்கிறது. இந்த வெறுப்பரசியல் குழந்தைகளிடம் ஏற்படுத்தும் விளைவுகள் பாரதூரமானவை. இத்தகைய கசடுகளை வெளியேற்ற வேண்டிய கல்வியே, மாறாக அவற்றைத் திணிக்க முயல்வது மிக மோசமானதாகும். பாடநூல்களை மிக“இந்து மதப் புனித இடங்கள் மட்டுமா?”-ஐ படிப்பதைத் தொடரவும்.

சிபிசிஐடி விசாரணையை உயர்நீதிமன்றம் கண்காணிக்க வேண்டும்!

சிபிசிஐடி விசாரணையை உயர்நீதிமன்றம் கண்காணிக்க வேண்டும்! மு.சிவகுருநாதன்       கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் கனியாமூர் பள்ளி மாணவியின்  மரண விசாரணையை சிபிசிஐடி நடத்தும்விதம் விமர்சனத்திற்குரியதாக உள்ளது. இதன்மூலம் நீதி கிடைக்கும் என்கிற நம்பிக்கை பொய்த்துப் போயுள்ளது.        நீதிமன்றக் காவலில் இருக்கும் குற்றஞ்சாட்டுக்கு உள்ளானவர்களை  காவலில் எடுத்து விசாரிப்பது இயல்பான வழக்கு நடைமுறையாகும். பொதுவாக காவல்துறை கேட்கும் நாள்களில் சில நாள்களைக் குறைத்து நீதிமன்றம் உத்தரவிடும்.       இந்த வழக்கில் 72 மணி நேரம் அதாவது மூன்று“சிபிசிஐடி விசாரணையை உயர்நீதிமன்றம் கண்காணிக்க வேண்டும்!”-ஐ படிப்பதைத் தொடரவும்.

தமிழக அரசு தமிழ்வழிக் கல்வியை கைவிடுகிறதா?

தமிழக அரசு தமிழ்வழிக் கல்வியை கைவிடுகிறதா? மு.சிவகுருநாதன்          தமிழகத்தில் நிலவிவந்த மாநில வாரியக் கல்விமுறை, மெட்ரிக்குலேஷன், ஆங்கிலோ-இந்தியன், ஓரியண்டல், நர்சரிப்பள்ளிக் கல்வி என 5 வகையான கல்விமுறைகளுக்கு மாற்றாக சமச்சீர் கல்வி  தற்போது நடைமுறையில் உள்ளது. இதற்காக அமைக்கப்பட்ட பேரா.ச.முத்துக்குமரன் தலைமையில் ஒரு குழு (2006) அளித்த பரிந்துரையில் சில மட்டுமே ஏற்புக்கு வந்தன.         தாய்மொழி வழிக்கல்வி, மழலையர் பள்ளிகளை அரசே ஏற்று நடத்துதல், பாடச்சுமை நீக்கம், மாணவர் சேர்க்கை, பாடத்திட்டம், தேர்வு முறை“தமிழக அரசு தமிழ்வழிக் கல்வியை கைவிடுகிறதா?”-ஐ படிப்பதைத் தொடரவும்.