எஸ்.வி.ராஜதுரை 85:  தமிழ் அறிவுலகின் பேராளுமை

எஸ்.வி.ராஜதுரை 85:  தமிழ் அறிவுலகின் பேராளுமை மு.சிவகுருநாதன்             சமகாலத் தமிழ் அறிவுச்சூழலை உயிர்ப்புடன் வைத்துக்கொண்டிருக்கும் அறிஞர் எஸ்.வி.ராஜதுரை. மார்க்சியம், பெரியாரியம், அம்பேத்கரியம் போன்ற கோட்பாடுகளுடனும் அவற்றைத் தாண்டியும் அரசியல், கலை, இலக்கியம், சமூகம், பொருளாதாரம், மனித உரிமை சார்ந்த படைப்புவெளியில் மட்டுமல்லாது, களப் போராளியாகவும் இயங்கிவருகிறார்.         நா.வானமாமலை, தொ.மு.சி.ரகுநாதன், க.கைலாசபதி, கா.சிவத்தம்பி, கோ.கேசவன், கோவை ஞானி, எஸ்.என்.நாகராஜன் என்கிற வரிசையில் தமிழ் அறிவுச்சூழலுக்குப் பாரிய பங்களிப்பை நல்கியவர் எஸ்.வி.ராஜதுரை. தமிழ் அறிவுலகுக்கு மக்கள் சார்ந்த“எஸ்.வி.ராஜதுரை 85:  தமிழ் அறிவுலகின் பேராளுமை”-ஐ படிப்பதைத் தொடரவும்.

இந்திய ஜனநாயகத்தின் எதிர்காலம்?

இந்திய ஜனநாயகத்தின் எதிர்காலம்? மு.சிவகுருநாதன்          தேர்தல் தேதிகள் அறிவிக்கப்பட்டாயிற்று. ஜூன் 4இல் இந்தியாவின் எதிர்காலம் தெரிந்துவிடும். அதில்தான் இந்திய ஜனநாயகத்தின் எதிர்காலமும் அடங்கியிருக்கிறது. சுதந்திர இந்தியாவுடன் உருவான பாகிஸ்தானை விட சிறந்த ஜனநாயக நாடாகத் திகழ்வதற்கு நம்முடைய அரசியல் சாசனம், ஜனநாயகத்தின் தூண்கள், மதச்சார்பின்மை கொள்கைகள், அரசியல், சமூக, பொருளாதாரச் செயல்பாடுகள், தன்னலமற்ற தலைவர்கள், மக்களின் சகிப்புத்தன்மைமிக்க வாழ்வு  போன்றவை அடித்தளமாக அமைந்தவை. அவற்றில் சிற்சில குறைபாடுகள் இருக்கலாம். எனினும் தகர்த்தெறிய வேண்டிய அளவிற்கானவை அல்ல. “இந்திய ஜனநாயகத்தின் எதிர்காலம்?”-ஐ படிப்பதைத் தொடரவும்.

விழியன் நூல்கள்

விழியன் நூல்கள் (புத்தகத் திருவிழாப் பரிந்துரைகள் – 004) மு.சிவகுருநாதன்           விழியன் என்கிற உமாநாத் செல்வன் தனியார் மென்பொருள் நிறுவனத்தில் பொறியாளர். குழந்தை இலக்கியப் படைப்பாளியாக மட்டுமில்லாமல் செயல்பாட்டாளராகவும் வலம் வருபவர். குழந்தைகளுக்கான பல்வேறு வகையான கதைகளைத் தொடர்ந்து எழுதிவருகிறார். இவர் நூற்றுக்கணக்கான கதைகளையும் பல்வேறு குழந்தைகளுக்கான சிறிய நூல்களை எழுதியுள்ளார்.      தனிக் குடும்பச் சூழலில் இன்று குழந்தைகளுக்கு கதை சொல்ல தாத்தா, பாட்டிகள் இல்லை. எனவே அந்த இடத்தை பெற்றோர்களே எடுத்துக் கொள்ள“விழியன் நூல்கள்”-ஐ படிப்பதைத் தொடரவும்.

யூமா வாசுகி நூல்கள்

யூமா வாசுகி நூல்கள் (புத்தகத் திருவிழாப் பரிந்துரைகள் – 003) மு.சிவகுருநாதன்         தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டையை சேர்ந்த யூமா வாசுகி பன்முக ஆளுமை கொண்ட படைப்பாளி. கவிஞர், ஓவியர், நாவலாசிரியர், சிறுகதை எழுத்தாளர், மொழிபெயர்ப்பாளர், இதழாசிரியர், குழந்தை இலக்கியம் எனப் பல தளங்களில் குறிப்பிடத் தகுந்த படைப்புகளைத் தமிழுக்குத் தந்தவர்.              ‘ரத்த உறவு’, ‘மஞ்சள் வெயில்’ போன்ற தமிழிலக்கிய உலகில் பேசப்பட்ட சிறப்பான நாவல்களைத் தந்தவர். ‘உயிர்த்திருத்தல்’ என்கிற சிறுகதைத் தொகுப்பும் வெளியாகியுள்ளது. ஓ.வி.“யூமா வாசுகி நூல்கள்”-ஐ படிப்பதைத் தொடரவும்.

நக்கீரன் நூல்கள்

நக்கீரன் நூல்கள் (புத்தகத் திருவிழாப் பரிந்துரைகள் – 001) மு.சிவகுருநாதன்            திருவாரூரில் மார்ச் 25 முதல் ஏப்ரல் 02 முடிய புத்தகக் கண்காட்சி நடைபெற உள்ளது. தமிழ்நாட்டின் தலைநகர் சென்னையில் 46 ஆண்டுகளாக புத்தகக் கண்காட்சி நடைபெற்று வருகிறது. கடந்த 10 ஆண்டுகளாக மதுரை, ஈரோடு போன்ற பெருநகரங்களில் மட்டும் கண்காட்சிகள் நடத்தப்பட்டு வந்தன.      தற்போது மாநில அரசின் பள்ளிக்கல்வித்துறை, பொது நூலகத்துறை, தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கம் (BAPASI- பபாசி)“நக்கீரன் நூல்கள்”-ஐ படிப்பதைத் தொடரவும்.

மகாத்மாவின் கதை -01 

மகாத்மாவின் கதை – 01  இளமைக்காலம் மு.சிவகுருநாதன்            இந்தியத் துணைக்கண்டத்தின் தென்பகுதி இந்தியத் தீபகற்பம் என அழைக்கப்படுகிறது. மூன்றுபுறம் நீராலும் ஒருபுறம் நிலத்தாலும் சூழப்பட்ட பகுதியை நாம் தீபகற்பம் என்கிறோம். இந்தியாவிலுள்ள மற்றொரு சிறிய தீபகற்பம் கத்தியவார் அல்லது சௌராஷ்டிரா ஆகும். இத்தீபகற்பத்தின் வடக்கே கட்ச் வளைகுடா மேற்கே அரபிக்கடல் கிழக்கு மற்றும் தென்கிழக்கே காம்பே வளைகுடா என மூன்றுபக்கம் கடலும் ஒருபக்கம் குஜராத்தின் இதர பகுதிகளும் உள்ளன. குஜராத்தின் போர்பந்தர், ராஜ்கோட், ஜாம்நகர், பவநகர்,“மகாத்மாவின் கதை -01 “-ஐ படிப்பதைத் தொடரவும்.

கல் மரம்!

கல் மரம்! மு.சிவகுருநாதன்           மரங்கள் கல்லாக மாறுமா?  சுமார் 2 கோடி ஆண்டுகளுக்கு முன்னதாக மண்ணில் புதையுண்ட மரங்களின் தொல் படிமங்கள்  விழுப்புரம் மாவட்டம் வானூர் வட்டம் திருவக்கரையில் நூற்றுக்கணக்கில் கிடைத்துள்ளன.       இந்தக் கல் மரங்கள் பட்டையில்லாத தாவரப்  (Psilophyton) பேரினத்தைச் சேர்ந்தவையாகும்.  இவற்றைப் பாதுகாக்க வேண்டும் என்கிற நோக்கில்,   இந்திய  தேசியப்  புவியியல் துறை 1951 இல்  ஒரு பூங்காவை அமைத்தது.  சங்கராபரணி ஆற்றங்கரையில் இப்பூங்கா  உள்ளது.         இப்பூங்காவிலிருந்து ஒரு கல்“கல் மரம்!”-ஐ படிப்பதைத் தொடரவும்.

வேத, குருகுலக் கல்வியும் அவைதீகக் கல்வியும் (பவுத்த, சமண, ஆசீவகம்) எப்படி ஒன்றாகும்?

வேத, குருகுலக் கல்வியும் அவைதீகக் கல்வியும் (பவுத்த, சமண, ஆசீவகம்) எப்படி ஒன்றாகும்? (தமிழகப் பாடநூல்களில் இந்துத்துவம் – 09) மு.சிவகுருநாதன்          “பண்டைய இந்தியாவில் முறையான மற்றும் முறைசாரா கல்வி இரண்டுமே இருந்தன. இல்லங்கள், கோயில்கள், பாடசாலைகள், குருகுலங்கள் ஆகியவற்றில் அப்பகுதிக்கேற்றவாறு கல்வி வழங்கப்பட்டது.  வீடுகள், கிராமங்கள் மற்றும் கோயில்களில் இருந்த மக்கள், சிறு குழந்தைகளுக்கு பக்தியுடன் நேர்மையான வாழ்க்கை முறைகளை வாழ ஊக்குவித்தனர். கல்வி அளிப்பதிலும், கற்றல் மையமாக செயல்படுவதிலும் கோயில்கள் முக்கிய பங்குவேத, குருகுலக் கல்வியும் அவைதீகக் கல்வியும் (பவுத்த, சமண, ஆசீவகம்) எப்படி ஒன்றாகும்?-ஐ படிப்பதைத் தொடரவும்.

சூழலியல்   உணர்வூட்டும் பாடல்கள்

 சூழலியல்   உணர்வூட்டும் பாடல்கள்   மு.சிவகுருநாதன்            இன்றைய சூழலில் கற்றல்-கற்பித்தல் செயல்பாடுகள் மிகவும் சிக்கலான ஒன்றாக மாற்றப்பட்டுள்ளது. மின்னணு ஊடக வலையில் குழந்தைகளைச் சென்றடைந்திருக்கும் பொருண்மைகள் நம்மை அச்சப்பட வைக்கின்றன. இன்றைய குழந்தைகளில் ஒருபகுதியினர் இந்த வலையில்தான் சிக்கியுள்ளனர். இதன் மறுபுறம் இந்த மின்னணு வசதிகள் எட்டாத அடித்தட்டுக் குழந்தைகளும் உள்ளனர். இவர்கள் இரண்டு தரப்பிற்குமான பெரிய  இடைவெளி கல்வி உள்ளிட்ட அனைத்துத் தளங்களிலும் எதிரொளிக்கவே செய்கிறது. இதை வெறும் கற்றல் இடைவெளி என்று மட்டும் கடந்துவிட முடியாது;“சூழலியல்   உணர்வூட்டும் பாடல்கள்”-ஐ படிப்பதைத் தொடரவும்.

சங்க இலக்கியத் தொகுப்பு அரசியல் மீதான விசாரணை

சங்க இலக்கியத் தொகுப்பு அரசியல்  மீதான விசாரணை மு.சிவகுருநாதன்           ஒவ்வொரு செயலுக்குப் பின்னாலும் அரசியல் இருக்கிறது. அச்செயலில் ஈடுபட்டோருக்கும் அவர்களது சார்புகளுக்கும் ஏற்றவாறு இவ்வரசியல் தொழிற்படுகிறது.  சங்க இலக்கியப் பனுவல்கள் மட்டும் இதற்கு விதிவிலக்காக இருக்க இயலாது. இங்கும் தொகுப்பாசிரியர், உரையாசிரியர் போன்றோரது அரசியலும் பக்கச் சாய்வும்  வெளிப்படவே செய்கின்றன. இத்தகைய விமர்சனங்களை பேரா. வையாபுரிப்பிள்ளை போன்ற சிலர் சுட்டியுள்ளனர். ஆனால் தமிழ் அறிவுலகம் இவற்றை முறையாகச்  செவிமெடுக்கவில்லை.           அரசு, குடும்பம் போன்று இங்கு“சங்க இலக்கியத் தொகுப்பு அரசியல் மீதான விசாரணை”-ஐ படிப்பதைத் தொடரவும்.