வாஸ்கோடகாமா – கயல்நிலா – கடல்

வாஸ்கோடகாமா – கயல்நிலா – கடல் மு.சிவகுருநாதன்         முதல் வகுப்பு படிக்கும் எங்கள் இளைய மகள் கயல்நிலா இதுவரையில் கடலை நேரில் பார்த்ததில்லை. அதற்கான வாய்ப்புகள் அமையவில்லை. கொரோனாப் பெருந்தொற்று பயணங்களை முற்றாக அபகரித்துக் கொண்டது.          முதல் மகள் கவிநிலாவுக்கு  வேளாங்கண்ணி, தரங்கம்பாடி என இருமுறை கடற்கரைக்கு சென்று வந்த அனுபவம் உண்டு. மேலும் கல்லணை, தஞ்சாவூர் பெரியகோவில், கங்கைகொண்ட சோழபுரம், தாராசுரம், சிதம்பரம் போன்ற“வாஸ்கோடகாமா – கயல்நிலா – கடல்”-ஐ படிப்பதைத் தொடரவும்.

ஆட்சியாளர்களுக்கு உண்மையில் கல்வி மீது அக்கறையுண்டா?

ஆட்சியாளர்களுக்கு உண்மையில் கல்வி மீது அக்கறையுண்டா? மு.சிவகுருநாதன்            நேற்று (20/03/2022) தமிழகத்தின் அனைத்து அரசுப் பள்ளிகளிலும் ‘பள்ளி மேலாண்மைக் குழுவை’ வலுப்படுத்தும் முன்னோட்டக் கூட்டம் நடந்து முடிந்திருக்கிறது.         குழந்தைகளின் கல்வியில் பெற்றோர்களின் பங்கு முதன்மையானதாகும். ஆனால் அது எத்தகையதாக இருக்க வேண்டும் என்பதில்தான் வேறுபாடுகள் உள்ளன.         ஒன்றிய அரசின் புதிய கல்விக் கொள்கை பள்ளி மேலாண்மைக் குழு மற்றும் தன்னார்வலர்களை ‘அவுட் சோர்சிங்’காகவே அணுகுகிறது என்பதுதான் உண்மை.           பதிலி ஆசிரியராகச் செயல்படுதல்,“ஆட்சியாளர்களுக்கு உண்மையில் கல்வி மீது அக்கறையுண்டா?”-ஐ படிப்பதைத் தொடரவும்.

சங்க இலக்கியத் தொகுப்பு அரசியல் மீதான விசாரணை

சங்க இலக்கியத் தொகுப்பு அரசியல்  மீதான விசாரணை மு.சிவகுருநாதன்           ஒவ்வொரு செயலுக்குப் பின்னாலும் அரசியல் இருக்கிறது. அச்செயலில் ஈடுபட்டோருக்கும் அவர்களது சார்புகளுக்கும் ஏற்றவாறு இவ்வரசியல் தொழிற்படுகிறது.  சங்க இலக்கியப் பனுவல்கள் மட்டும் இதற்கு விதிவிலக்காக இருக்க இயலாது. இங்கும் தொகுப்பாசிரியர், உரையாசிரியர் போன்றோரது அரசியலும் பக்கச் சாய்வும்  வெளிப்படவே செய்கின்றன. இத்தகைய விமர்சனங்களை பேரா. வையாபுரிப்பிள்ளை போன்ற சிலர் சுட்டியுள்ளனர். ஆனால் தமிழ் அறிவுலகம் இவற்றை முறையாகச்  செவிமெடுக்கவில்லை.           அரசு, குடும்பம் போன்று இங்கு“சங்க இலக்கியத் தொகுப்பு அரசியல் மீதான விசாரணை”-ஐ படிப்பதைத் தொடரவும்.

‘பன்மை’யின் ஐந்தாவது வெளியீடு

‘பன்மை’யின் ஐந்தாவது வெளியீடு            பேரா.  தென்னவன் வெற்றிச்செல்வன்  எழுதிய  ‘தமிழ்ச் செவ்வியல் – மீளாய்வும் மேலாய்வும்’ என்ற ஆய்வு நூல் பன்மையின் ஐந்தாவது வெளியீடாக வந்துள்ளது. 45 வது சென்னைப் புத்தகக் காட்சியின்போது இந்நூல் வெளியானது. பன்மை வெளியீடு: 05 தமிழ்ச் செவ்வியல் – மீளாய்வும் மேலாய்வும் (ஆய்வுக் கட்டுரைகள்)  பேரா.  தென்னவன் வெற்றிச்செல்வன் முதல் பதிப்பு: பிப்ரவரி 2022 பக்கங்கள்:  136 விலை: ₹ 125 ISBN:   978-81-951842-9-3    நூலின் அணிந்துரையிலிருந்து….        “‘பன்மை’யின் ஐந்தாவது வெளியீடு”-ஐ படிப்பதைத் தொடரவும்.

பாடநூல்களில் வெறுப்பு அரசியல்

பாடநூல்களில் வெறுப்பு அரசியல்       சென்ற ஆண்டு (2021) புதிய பள்ளிப் பாடநூற்கள் குறித்த ஆய்வுநூலாக ‘கல்வி அபத்தங்கள்’ வெளியானது. இந்நூல் 104 கட்டுரைகளுடன் 600 பக்க அளவைக் கொண்டது.      இத்தொகுப்பிலுள்ள பாடநூல் வெறுப்பரசியலைப் பேசும் 12 கட்டுரைகளைத் தனியே தொகுப்பாக்கி, ‘பாடநூல்களில் வெறுப்பு அரசியல்’ என்ற குறுநூலாக ‘இலக்கியச்சோலை’ வெளியிட்டுள்ளது.        இந்நூல் குறித்த விவரங்கள் கீழே தரப்படுகின்றன: பாடநூல்களில் வெறுப்பு அரசியல் இலக்கியச் சோலை வெளியீடு டிசம்பர்: 2021 பக்கங்கள்: 124 விலை:“பாடநூல்களில் வெறுப்பு அரசியல்”-ஐ படிப்பதைத் தொடரவும்.

2021 இன் கல்வி நூல்களில் ஒன்றாக ‘கல்வி அபத்தங்கள்’

 2021 இன் கல்வி நூல்களில் ஒன்றாக  ‘கல்வி அபத்தங்கள்’                ‘இந்து தமிழ் திசை’ பட்டியலிட்ட 2021 இன் கல்வி நூல்களில் ஒன்றாக  ‘கல்வி அபத்தங்கள்’ இடம்பெற்றது. அதன் குறிப்பும் உடன் இடம் பெற்ற நூல்களின் அறிமுகக் குறிப்பையும் இங்கு பதிவிடுகிறேன். –         மு.சிவகுருநாதன்   2021-ன் கல்வி நூல்கள் – ‘இந்து தமிழ் திசை’ – திசைகாட்டி   கல்வி அபத்தங்கள் மு.சிவகுருநாதன், பன்மை, தொடர்புக்கு: 98424 02010              தமிழ்நாடு பாடநூல் – கல்வியியல்“2021 இன் கல்வி நூல்களில் ஒன்றாக ‘கல்வி அபத்தங்கள்’”-ஐ படிப்பதைத் தொடரவும்.

சாரதா என்கிற அக்கம்மா

சாரதா என்கிற அக்கம்மா (தோற்றம்: 30-06-1940 –  மறைவு:  01-01-2022) மு.சிவகுருநாதன் 01           அன்றும் மளிகைக்கடைகளில் கடலைமிட்டாய், முறுக்கு, பிஸ்கட் போன்ற பல்வேறு தின்பண்டங்கள் இருக்கும். இவற்றை ஒவ்வொன்றாக எடுத்துக்காட்டி கெஞ்சியபிறகும் கொஞ்சமும் விடுவதாக இல்லை. “எனக்குப் பலாச்சுளைதான் வேணும்”, என்று மேலும் கீழும் குதித்து அடம்பிடிக்கத் தொடங்கியதைக் கண்டவுடன் கடையை அப்படியே விட்டுவிட்டு சைக்கிளை எடுத்துக் கொண்டு முத்துப்பேட்டையை நோக்கி மிதிக்கத் தொடங்கினார். பலாச்சுளை வந்தபிறகுதான் அவளது அடம் நின்றது. இது எப்போதும் நடக்கின்ற“சாரதா என்கிற அக்கம்மா”-ஐ படிப்பதைத் தொடரவும்.

குழந்தைகளுக்கான உணவுகள்

குழந்தைகளுக்கான உணவுகள் மு.சிவகுருநாதன் உணவே மருந்து என்பார்கள். உணவுதான் நம்மை இயங்கவும் வாழவும் வைக்கிறது. எனவே இது முதன்மையானதாகவும் சிறப்பானதாகவும் இருக்க வேண்டியது அவசியமாகிறது. சரிவிகித உணவு, சீருணவு, சத்துணவு என்பதெல்லாம் வெறும் சொற்களல்ல; இதன் பின்னணியில் நீண்ட மரபு இருக்கிறது. இன்றைய வணிக உலகில் அம்மரபு தொலைக்கப்பட்டது. கர்ப்பிணிப் பெண்களுக்கும் கருவில் வளரும் குழந்தைகளுக்கு உணவூட்டத்தில் அளிக்கப்படும் முக்கியத்துவம் குழந்தை பிறந்தவுடன் சற்றுக் குறைந்துவிடுவது இயல்பாக காணப்படுகிறது. இதற்குப் பல்வேறு புறக்காரணிகள் உள்ளன. 3 வயதுக்குப்“குழந்தைகளுக்கான உணவுகள்”-ஐ படிப்பதைத் தொடரவும்.