கல்விக்குழப்பங்கள் தொடர் பகுதி 41 முதல் 45 முடிய.

41. சாதி முறையைக் காப்பாற்றிய பொற்காலம்! ஒன்பதாம் வகுப்பு சமூக அறிவியலில் ‘தமிழ்நாட்டின் பண்பாட்டு மரபுகள்’ என்றொரு பாடம் இருக்கிறது. இதிலுள்ள பல்வேறு கருத்துகளும் செய்திகளும் மிகவும் அபத்தம். இவற்றில் சிலவற்றைப் பற்றி முன்பே எழுதியுள்ளேன். தமிழின் சங்ககாலம் குறித்த தொன்மம் இங்கே தொடர்ந்து பரப்பப்பட்டு வந்துள்ளது. தொல்காப்பியப் பொருளதிகாரம் காட்டும் சமூக நிலைப்படி, “தமிழர்களிடம் பிறப்பை அடிப்படையாகக் கொண்ட சாதிமுறை காணப்படவில்லை” என்று சொல்லப்படுகிறது. இது பற்றி கொஞ்சம். சங்ககால தமிழகத்தில் தொழில் அடிப்படையில் அளவர்,“கல்விக்குழப்பங்கள் தொடர் பகுதி 41 முதல் 45 முடிய.”-ஐ படிப்பதைத் தொடரவும்.

கல்விக் குழப்பங்கள் தொடர் பகுதி 36 முதல் 40 முடிய.

கல்விக் குழப்பங்கள் தொடர் பகுதி 36 முதல் 40 முடிய. – மு.சிவகுருநாதன் 36. கதிர்வீச்சால் பதப்படுத்தப்பட்ட உணவு பாதுகாப்பானதா? “X – கதிர்கள் அல்லது காமாக் கதிர்கள் அல்லது புற ஊதாக்கதிர்கள் மூலம் உணவில் உள்ள பாக்டீரியங்கள் மற்றும் பூஞ்சைகளைக் கொல்லும் முறை கதிர்வீச்சு முறைஆகும். அக்கதிர்வீச்சு உணவின் சுவை மற்றும் உணவின் தரம் இவற்றை அழிக்கின்றதா? இல்லை. கதிர்வீச்சு உணவில் உள்ள சுவை மற்றும் தரத்தை அழிப்பதில்லை. வெங்காயம், உருளைக்கிழங்கு முளைவிட்ட பயறு வகைகள்“கல்விக் குழப்பங்கள் தொடர் பகுதி 36 முதல் 40 முடிய.”-ஐ படிப்பதைத் தொடரவும்.

04. ஆளும் வர்க்கம் புறக்கணித்த அறிஞர்கள்

04. ஆளும் வர்க்கம் புறக்கணித்த அறிஞர்கள் (இந்நூல் என் வாசிப்பில்… புதிய தொடர்) – மு.சிவகுருநாதன் (‘Books for Children’ வெளியிட்டுள்ள. ‘ஆயிஷா’ இரா.நடராசன் எழுதிய ‘இந்திய அறிவியலின் இருண்ட சரித்திரம்’ என்னும் குறுநூல் அறிமுகம்) அண்மையில் சில தலைவர்கள் மற்றும் அறிஞர்களின் அஞ்சல்தலைகள் திரும்பப் பெறப்பட்டன. அதில் அறிவியல் அறிஞர் சர்.சி.வி.ராமன் அஞ்சல் தலையும் அடக்கம். ராமன் விளைவைக் கண்டுபிடித்து நோபல் பரிசு பெற்ற சாதனையாளர் மீது இந்துத்துவாதிகளுக்கு அவ்வளவு வெறுப்பு. இவர் பல்வேறு எதிர்ப்புகள்“04. ஆளும் வர்க்கம் புறக்கணித்த அறிஞர்கள்”-ஐ படிப்பதைத் தொடரவும்.

03. உணவுப் பண்பாட்டரசியல்

03. உணவுப் பண்பாட்டரசியல் (இந்நூல் என் வாசிப்பில்… புதிய தொடர்) – மு.சிவகுருநாதன் (எழுத்தாளரும் நாவலாசிரியருமான தோழர் சோலை சுந்தரபெருமாள் அவர்கள் அண்மையில் வெளியான இரு நூற்களை என்னிடம் அளித்தார். ஒன்று பாரதி புத்தகாலயம் வெளியிட்ட ‘பால்கட்டு’ நாவல்; மற்றொன்று பாவை பப்ளிகேஷன்ஸ் வெளியிட்டுள்ள ‘வண்டல் உணவுகள்’ கட்டுரைத் தொகுப்பு. நாவலை இன்னும் படிக்கவில்லை. இது ‘வண்டல் உணவுகள்’ பற்றிய விமர்சனக் குறிப்பு.) பெயரில் என்ன இருக்கிறது என்று சொல்வதைப்போல உணவில் என்ன இருக்கிறது என்றும் சிலர்“03. உணவுப் பண்பாட்டரசியல்”-ஐ படிப்பதைத் தொடரவும்.

02. பசுவின் புனிதம் பற்றிய கட்டுக்கதைகளை அம்பலப்படுத்தும் ஆய்வு

02. பசுவின் புனிதம் பற்றிய கட்டுக்கதைகளை அம்பலப்படுத்தும் ஆய்வு (இந்நூல் என் வாசிப்பில்… புதிய தொடர்) – மு.சிவகுருநாதன் (‘பசுவின் புனிதம்: மறுக்கும் ஆதாரங்கள்’ என்னும் டி.என்.ஜா வின் நூல் வெ.கோவிந்தசாமி மொழிபெயர்ப்பில் பாரதி புத்தகாலய வெளியீடாக டிச. 2011 இல் வந்துள்ளது. அந்நூல் குறித்தப் பதிவு இங்கே.) “The Hindus did not eat beef.” (page: 73, English 8 th std. The brave Rani of Jhansi.) “பசுக்களை இந்து சமயத்தினர்“02. பசுவின் புனிதம் பற்றிய கட்டுக்கதைகளை அம்பலப்படுத்தும் ஆய்வு”-ஐ படிப்பதைத் தொடரவும்.

கல்விக் குழப்பங்கள் – தொடர் – பகுதி 31 முதல் 35 முடிய.

கல்விக் குழப்பங்கள் – தொடர் – பகுதி 31 முதல் 35 முடிய. – மு.சிவகுருநாதன் 31. கவிதையும் உரைநடையும் “தீ சுடும்” என்றால் அது உரைநடை. ஆனால் பாரதி “தீ இனிது” என்கிறார். இதுவே கவிதை எனப்படுகிறது. இதை யாராவது தமிழாசிரியர்களுக்கும் தமிழ்ப் பேராசிரியர்களுக்கும் எடுத்துச் சொன்னால் தேவலாம். இந்நோய் இன்று தமிழ் என்று பேசும் அனைவரிடமும் பரவலாகக் காணப்படுகிறது. நமது கல்விமுறையும் பாடநூற்களும் இத்தகைய வகைமாதிரிகளையே உருவாக்குகின்றன. நாமக்கல் கவிஞர் ராமலிங்கம் பிள்ளை உப்பு“கல்விக் குழப்பங்கள் – தொடர் – பகுதி 31 முதல் 35 முடிய.”-ஐ படிப்பதைத் தொடரவும்.

‘ஆசிரியக் கோமாளி’ நல்லமுத்து

‘ஆசிரியக் கோமாளி’ நல்லமுத்து – மு.சிவகுருநாதன் அரசுப்பள்ளிகள், ஆசிரியர்கள் மீதுள்ள தப்பெண்ணங்களை மாற்ற எங்கோ கடைக்கோடி குக்கிராமத்தில் யாரோ சிலர் அல்லும் பகலும் உழைத்து வருகின்றனர். இவர்களில் பலருக்கு ஊடக வெளிச்சம் படவும் வாய்ப்பில்லை. ‘ஆனந்த விகடன்’ போன்ற வெகுஜன இதழ்கள் இம்மாதிரியான முகங்களை பொதுவெளிக்குக் கொண்டுவருவது பாராட்டிற்குரியது. பாரதி தம்பியின் ‘கற்க கசடற, விற்க அதற்குத் தக’ தொடர் மற்றும் அதற்குப் பின்னால் அரசுப்பள்ளிகளின் நம்பிக்கை நட்சத்திரமாக பலரை அறிமுகப்படுத்தி வருகிறது. ‘அறம் செய விரும்பு’“‘ஆசிரியக் கோமாளி’ நல்லமுத்து”-ஐ படிப்பதைத் தொடரவும்.

ஆசிரியர்கள் மற்றும் இயக்கங்களின் சமூகப்பொறுப்பு

ஆசிரியர்கள் மற்றும் இயக்கங்களின் சமூகப்பொறுப்பு                                                                           – மு.சிவகுருநாதன் (அக்டோபர் 08, 2015 வியாழன் அன்று தமிழ்நாடு ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கைக் குழு (JACTTO) ஒருநாள் அடையாள வேலைநிறுத்தம் செய்யவிருக்கிறது. அனைவருக்கும் போராட்ட வணக்கங்களைத் தெரிவித்துக் கொள்வோம். நான் பலமுறை ஆசிரியர் போராட்டங்கள் குறித்து எழுதி கடும் வசவுகளை எதிர்கொண்டுள்ளேன். என்ன செய்வது? மீண்டும் சிலவற்றை பேசித்தான் ஆகவேண்டும். திட்டுவோர் இன்னும் நன்றாக திட்டட்டும்.) அரசுகள், கொள்கைகள், நடைமுறைகள் தேசிய அளவிலும் உலக அளவிலும் பெருத்த“ஆசிரியர்கள் மற்றும் இயக்கங்களின் சமூகப்பொறுப்பு”-ஐ படிப்பதைத் தொடரவும்.

01.ஈழத்தமிழர்கள் மீதான மானுட அக்கறையின் வெளிப்பாடு (இந்நூல் என் வாசிப்பில் … புதிய தொடர்)

01.ஈழத்தமிழர்கள் மீதான மானுட அக்கறையின் வெளிப்பாடு (இந்நூல் என் வாசிப்பில் … புதிய தொடர்) – மு.சிவகுருநாதன் இன்றைய அதி நவீன தொழில்நுட்ப வசதிகள் அழகான நூலாக்கம், அச்சமைப்பு, நூல்கட்டு, அட்டைப்படம் என்று பலவகைகளில் சிறப்பான முறையில் நூற் தயாரிப்பு மேற்கொள்ளப் படுகிறது. வணிகமயம் இருப்பினும் சில பதிப்பகங்கள் மூலம் பல நல்லநூற்கள் தொடர்ந்து வெளியாகின்றன. தமிழகமெங்கும் பரவலான புத்தகக் காட்சிகள் நடைபெறுகின்றன. தமிழகத்தின் 7 கோடி மக்கள்தொகைக்கேற்ப ஒப்பீட்டளவில் வாசிப்பு, விற்பனை பேரளவிற்கு அதிகரித்துள்ளதாக சொல்லமுடியாவிட்டாலும்“01.ஈழத்தமிழர்கள் மீதான மானுட அக்கறையின் வெளிப்பாடு (இந்நூல் என் வாசிப்பில் … புதிய தொடர்)”-ஐ படிப்பதைத் தொடரவும்.

மாற்றுச் சிந்தனைகளை உள்வாங்க இயலாமல் ‘அறிவு நிரம்பி வழியும்’ பெருங்கூட்டத்தில் இப்படியும் சில ஆசிரியர்கள்!

மாற்றுச் சிந்தனைகளை உள்வாங்க இயலாமல் ‘அறிவு நிரம்பி வழியும்’ பெருங்கூட்டத்தில் இப்படியும் சில ஆசிரியர்கள்!                                                                                                             – மு.சிவகுருநாதன் சுட்டி விகடனுக்கு அடுத்தபடியாக ‘புதிய தலைமுறை கல்வி’ 05, அக்டோபர், 2015 இதழில் திருவாரூர் மாவட்டம் கொரடாச்சேரி ஊராட்சி ஒன்றியம் மேல ராதாநல்லூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி அறிவியல் பட்டதாரி ஆசிரியர் தோழர் செ.மணிமாறன் அவர்களின் செயல்பாடுகள் குறித்த கட்டுரை ஒன்றை வெளியிட்டுள்ளது. தோழர் செ.மணிமாறன் அவர்களின் இதர செயல்பாட்டுடன் ‘கருத்து சுதந்தரப் பெட்டி’ என்ற“மாற்றுச் சிந்தனைகளை உள்வாங்க இயலாமல் ‘அறிவு நிரம்பி வழியும்’ பெருங்கூட்டத்தில் இப்படியும் சில ஆசிரியர்கள்!”-ஐ படிப்பதைத் தொடரவும்.