அப்பாவும் தஞ்சாவூரும்

அப்பாவும் தஞ்சாவூரும் மு.சிவகுருநாதன்                 அப்பா மிகுந்த சிரமங்களுக்கிடையே தொடக்கக் கல்வி முடித்து,  பள்ளிக்காகக் காத்திருந்து எட்டாம் வகுப்பை (ESLC) நிறைவு செய்து ஆசிரியர் பயிற்சிக்குச் செல்கிறார். இது 1948-1950 காலகட்டமாக இருக்கலாம். தஞ்சாவூர் அரண்மனை வளாகத்தில் அரசினர் ஆதாரப் பயிற்சிப் பள்ளி செயல்பட்டிருக்கிறது. அங்குதான் இடைநிலை ஆசிரியர் பயிற்சியை முடித்தார். அதனால்தான் என்னவோ தஞ்சை அவருக்கு மிகவும் பிடித்த ஊராக மாறியிருந்தது.          எங்களை தஞ்சாவூர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும்போது பயணநேரத்தில் அது பற்றிய சம்பவங்களை“அப்பாவும் தஞ்சாவூரும்”-ஐ படிப்பதைத் தொடரவும்.

திருவாரூர் தாஜ்மஹால்!

திருவாரூர் தாஜ்மஹால்! திருவாரூர் அம்மையப்பன் ஜெய்லானி பீவி மஹால் (ஜெயிலானியா மர்கஸ்) மு.சிவகுருநாதன் திருவாரூர் அருகே அம்மையப்பன் என்ற கிராமத்தில் தாயின் நினைவாக ரூபாய் 5 கோடி செலவில் தாஜ்மஹால் போன்ற வடிவமைப்பில் நினைவிடம் உருவாக்கப்பட்டு, திறக்கப்பட்ட செய்தி நேற்று (09/06/2023) காட்சியூடகங்களில் செய்தியாக வெளியானது. இன்றைய (10/06/2023) அச்சு ஊடகங்களில் அச்செய்தி இடம்பெற்றுள்ளது. இன்று (10/06/2023) மாலை நிலாக்களுடன் அங்கு கிளம்பினோம். அம்மையப்பனிலிருந்து திருக்கண்ணமங்கை செல்லும் சாலையில் இந்த மர்கஸ் அமைந்துள்ளது. மாலை வேளையில் நல்ல“திருவாரூர் தாஜ்மஹால்!”-ஐ படிப்பதைத் தொடரவும்.

மணல்வீடு இதழ் 47 வெளிவந்துவிட்டது!

மணல்வீடு இதழ் 47 வெளிவந்துவிட்டது! மு.சிவகுருநாதன்         மணல்வீடு இதழ் 47 (ஏப்ரல் 2023) வெளிவந்துவிட்டது. பல்வேறு நெருக்கடியிலும் இதழ் தொடர்ந்து வெளியாவது மகிழ்ச்சியளிக்கிறது.  இதற்காக மணல்வீடு மு.ஹரிகிருஷ்ணன் அவர்களைப் பாராட்டியாக வேண்டும். அவர் தன்மீதான பாலியல் குற்றச்சாட்டிற்கு தலையங்கத்தில் விளக்கமளித்துள்ளார்.         இந்த இதழில் தமிழ்நாடு வேளாண் நிதிநிலை அறிக்கை 2023-2024 ஐ பாலசுப்பிரமணியம் முத்துசாமியின் கட்டுரை ஆராய்கிறது. தேசியத்திற்குப் பாதை சமைக்கும் திராவிட மாடலை ஞானயூனன் கட்டுரை விமர்சிக்கிறது.       மார்கரெட் அட்வுட் கவிதையின்“மணல்வீடு இதழ் 47 வெளிவந்துவிட்டது!”-ஐ படிப்பதைத் தொடரவும்.

தொ.பரமசிவன் நூல்கள்

தொ.பரமசிவன் நூல்கள் (புத்தகத் திருவிழாப் பரிந்துரைகள் – 007) மு.சிவகுருநாதன்         மறைந்த பண்பாட்டியல் அறிஞர், ஆய்வறிஞர் தொ.பரமசிவன் (1950-2020) எழுதியது பிறரை ஒப்பிடும்போது மிகவும் குறைவு. தனது ‘அழகர்கோயில்’ ஆய்வேட்டின் மூலம் வழக்கமான கல்விப்புல ஆய்வுகளை மடைமாற்றினார். இருப்பினும் அது காலம் கடந்துதான் கவனிப்பைப் பெற்றது.         தன்னை 95% பெரியாரிஸ்ட் என்று சொன்னவர். நாட்டார் மரபுகள் வைதீகத்திற்கு எதிரானது என்பதை நிறுவியவர். “ஒன்றே குலம், ஒருவனே தேவன்”, என்பது மக்கள் விரோதச் சித்தாந்தம் என்றார்.“தொ.பரமசிவன் நூல்கள்”-ஐ படிப்பதைத் தொடரவும்.

  சென்னைப் புத்தகக் காட்சி: தொடரும் துயரங்கள்

  சென்னைப் புத்தகக் காட்சி: தொடரும் துயரங்கள் மு.சிவகுருநாதன்           ‘பபாசி’ என்று அழைக்கப்படும்  தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கம் (BAPASI) சென்னைப் புத்தகக் காட்சியை தொடர்ந்து நடத்தி வருகிறது. 1976 இல்  மிகச்சிறிய அளவில் சுமார் 30 கடைகள் என்றளவில் தொடங்கிய  இப்புத்தகத் திருவிழா 46 ஆண்டுகளில் 900க்கும் மேற்பட்ட கடைகளில் என்கிற பிரமாண்ட அளவில் விரிவடைந்துள்ளது. இதற்கு நூல்களை வாங்கி வாசிக்கும் பெரும் வாசகர் கூட்டமே காரணமாகும். தமிழ் அறிவுலகம் பெருமை”  சென்னைப் புத்தகக் காட்சி: தொடரும் துயரங்கள்”-ஐ படிப்பதைத் தொடரவும்.

இங்கிலாந்தில்  காந்தி

இங்கிலாந்தில்  காந்தி (மகாத்மாவின் கதை தொடரின் இரண்டாவது அத்தியாயம்) மு.சிவகுருநாதன்             பொதுவாக கடற்பயணத்தில் பலருக்கும் ஏற்படும் வாந்தி,  மயக்கம் காந்திக்கு வரவில்லை. ஆனால் அவருடைய சிக்கல் வேறு மாதிரியாக இருந்தது. அவருக்கு இயல்பாக இருந்த கூச்ச உணர்வு, ஆங்கிலத்தைத் தவறாகப் பேசிவிடுவோம் என்ற எண்ணத்தில் யாருடனும் கலக்காமல் தனியே அறையில் கிடப்பதை விரும்பினார். கப்பலில் உணவுப் பணியாளர்களிடம் கூட பேசக் கூச்சம் தடுத்தது. உணவில் எது சைவம், எது அவைசம் என்பதையும் வேறுபடுத்தவும், கேட்டு அறியவும்“இங்கிலாந்தில்  காந்தி”-ஐ படிப்பதைத் தொடரவும்.

இந்திய அரசியலமைப்பிற்கு மாற்றாக சனாதனம்!

இந்திய அரசியலமைப்பிற்கு மாற்றாக சனாதனம்! மு.சிவகுருநாதன்             ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் முழுநேர மற்றும் பகுதிநேர ஊழியர்கள் தேசிய கல்விக் கொள்கை வகுக்கும் குழுவில் இடம்பெற்றனர். நாக்பூர் வழிகாட்டுதலில் கல்விக்கொள்கை உருவாக்கப்பட்டு அமலுக்கு வந்துள்ளது. வலதுசாரி பாசிசவாதிகளுக்கு வரலாறு, அறிவியல், இலக்கியம் எல்லாம் என்றும் ஆகாது. அவற்றைத் தங்களுக்கேற்ப வளைப்பதையும் திணிப்பதையும் கருத்தியலாகக் கொண்டு செயலாற்றுபவர்கள் இவர்கள். அடல் பிஹாரி வாஜ்பாய் காலம் தொட்டு இத்தகைய மோசடித் திணிப்புகள் தொடர்ந்து கொண்டுள்ளன. ஆய்வு நிறுவனங்கள், உயர்கல்வி அமைப்புகள் போன்றவற்றைச்“இந்திய அரசியலமைப்பிற்கு மாற்றாக சனாதனம்!”-ஐ படிப்பதைத் தொடரவும்.

17 ஆம் ஆண்டு நினைவில்…

17 ஆம் ஆண்டு நினைவில்… திருமிகு ச.முனியப்பன் தோற்றம்: 07/03/1931  மறைவு: 19/11/2005             இன்று (19/11/2022) அப்பாவின் நினைவு நாள். அவர் மறைந்து 17 ஆண்டுகள் உருண்டோடி விட்டன. அம்மாவும் மறைந்து விரைவில் ஓராண்டு ஆகப்போகிறது. அப்பாவின் இந்த நினைவுநாளில் அம்மாவும் இல்லை.        எனது தந்தையார் திரு ச.முனியப்பன் (1931-2005) இடைநிலை ஆசிரியர் மற்றும் தொடக்கப் பள்ளித் தலைமையாசிரியராக பணியாற்றியவர். வ.உ.சி. அரசு உதவிபெறும் தொடக்கப்பள்ளியைத் தொடங்கி (1952) அப்பகுதி மக்களுக்கு கல்வி கிடைக்கக்“17 ஆம் ஆண்டு நினைவில்…”-ஐ படிப்பதைத் தொடரவும்.

திறப்பு விழா!

திறப்பு விழா! மு.சிவகுருநாதன்            இன்று (20/10/2022) திருவாரூர் மாவட்டம் காட்டூர் அரசு மேனிலைப்பள்ளியில் மூன்று வகுப்பறைக் கட்டடம், இரு திறன் (Smart Class)  வகுப்பறைகள், தொடக்கப்பள்ளியில் ஒரு திறன் வகுப்பறை,  சுற்றுச்சுவர், முன்னாள் தமிழக  முதல்வர்  கலைஞர் மு.கருணாநிதி ‘மணி மகுடம்’ என்ற பெயரில் நாடகம் நடத்தி நன்கொடை வசூலித்துக் கட்டிய தொடக்கப்பள்ளிக் கட்டடத்தைப் புதுப்பித்து  ‘முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் மு.கருணாநிதி நினைவு நூலகம்’ என்ற பெயரில் நூலகம்,  தண்ணீர் வசதியுடன் கூடிய ஆண்கள்,“திறப்பு விழா!”-ஐ படிப்பதைத் தொடரவும்.

110 ஆண்டு ஓடம்போக்கி இயக்கு அணை!

110 ஆண்டு ஓடம்போக்கி இயக்கு அணை! மு.சிவகுருநாதன்           விளமல் கல் பாலம் என்றழைக்கப்படும் விளமல் இயக்கு அணை (ரெகுலேட்டர்) திருவாரூர்  ஓடம்போக்கி ஆற்றில் அமைந்துள்ளது.         இது 110 ஆண்டு பழமையானது. பிரிட்டிஷ் ஆட்சியில்  1912 இல் கட்டப்பட்டது. இன்று நாங்கள் மூவரும் (கவி, கயல்) இந்த இயக்கு அணையைப் பார்வையிட்டோம். சில படங்கள்… 100 வயதை  நெருங்கும் ரெகுலேட்டருடன் கூடிய விளமல் கல் பாலம்                                                     கட்டப்பட்ட ஆண்டு :1912                                                        100 வது“110 ஆண்டு ஓடம்போக்கி இயக்கு அணை!”-ஐ படிப்பதைத் தொடரவும்.