கற்றல்விளைவுகள்:தொடரும் திணிப்புகள்

கற்றல் விளைவுகள்: தொடரும் திணிப்புகள் மு.சிவகுருநாதன்            இன்று பள்ளிக்கல்வியில் வேறு எதைக்காட்டிலும் இன்று கற்றல் விளைவுகளுக்கு அதிக முக்கியத்துவம் தரப்படுகிறது. பயிற்சியில் எல்லாம் கற்றல் விளைவுகள் பற்றியே கதைக்கிறார்கள். இதற்கு நீண்ட விளக்கமெல்லாம் அளிக்கப்படுகிறது. மேலிருந்து கீழ்வரை கல்வித்துறையை மேற்பார்வையிடும் அலுவலர்கள் கற்றல் விளைவு பற்றியே வினா எழுப்புகின்றனர்.  வேறு எதுவும் இல்லாவிட்டாலும் பரவாயில்லை, கற்றல் விளைவுகள் இருந்தால் போதும் என்றாகிவிட்டது.        கற்றல் நோக்கங்கள், விளைவுகள் எல்லாம் மாணவர்களுக்கு அளிக்கப்படும் பாடநூலை ஒட்டியே அமைபவை.“கற்றல்விளைவுகள்:தொடரும் திணிப்புகள்”-ஐ படிப்பதைத் தொடரவும்.

பாடநூல்களில் வெறுப்பு அரசியல்

பாடநூல்களில் வெறுப்பு அரசியல் மு.சிவகுருநாதன்          குழந்தைகளுக்கான பாடநூல்கள் மிகுந்த கவனத்துடனும் பொறுப்பு உணர்வுடனும் எழுதப்பட வேண்டியது அவசியம். தவறான செய்திகளும் கருத்துகளும் ஒருபுறமிருக்க, சனாதனத்துக்கு, இந்துத்துவத்துக்கு வலுச் சேர்க்கும் கருத்தோட்டங்கள் பள்ளிப் பாடநூல்களில் தூவப்பட்டிருப்பது அதிர்ச்சியளிக்கக் கூடியதாகும். பாடப் புத்தகங்களில் வெறுப்பு அரசிலைப் புகுத்தி குழந்தைகளின் மனத்தில் நஞ்சை விதைக்க அனுமதிக்கக் கூடாது. அப்படியான நச்சுக் கருத்துகளை இனங்கண்டு அகற்ற வேண்டியது காலத்தின் கட்டாயம்.           தமிழ்நாட்டுப் பாடநூல்களில் காணப்படும் இத்தகைய விஷயங்களிலிருந்து சிலவற்றை இங்கு“பாடநூல்களில் வெறுப்பு அரசியல்”-ஐ படிப்பதைத் தொடரவும்.

மடங்களும் மடாலயங்களும்

மடங்களும் மடாலயங்களும்  (தமிழகப் பாடநூல்களில் இந்துத்துவம் – 10) மு.சிவகுருநாதன்             தமிழ் இலக்கணத்தில் ‘விகாரம்’ என்பது இயல்பு மாற்றமாகும். செய்யுளில் எதுகை, மோனைகளுக்காகவும் ஓசை ஒத்திசைவுக்காகவும் சில சொற்கள் தன் இயல்பு மாற்றத்தோடு கையாளப்படுகின்றன. அவை, வலித்தல் விகாரம், மெலித்தல் விகாரம், நீட்டல் விகாரம், குறுக்கல் விகாரம், விரித்தல் விகாரம், தொகுத்தல் விகாரம் என வகைப்படுத்தப்படும்.         மேலும் ‘விகாரம்’ என்பதற்கு கோரம், அவலட்சணம் என்றெல்லாம் பொருளுண்டல்லவா! பவுத்த வழிபாட்டிடமான விகார் (Vihar) என்பதை விகாரைமடங்களும் மடாலயங்களும்-ஐ படிப்பதைத் தொடரவும்.

வேத, குருகுலக் கல்வியை எப்படிக் கொண்டாட முடியும்? 

வேத, குருகுலக் கல்வியை எப்படிக் கொண்டாட முடியும்?  (தமிழகப் பாடநூல்களில் இந்துத்துவம் – 08) மு.சிவகுருநாதன்                  எட்டாம் வகுப்பு  சமூக அறிவியல் வரலாற்றுப் பகுதியின் அலகு 05 இல் ‘இந்தியாவில்  கல்வி வளர்ச்சி’ என்றொரு பாடம் உள்ளது. இதில் இந்தியக் கல்வி என்று வேதக் கல்வியையும் குருகுலக் கல்வியையும் முன்னிறுத்துவதோடு அதன் பெருமைகளை விண்டுரைக்கவும் செய்கிறது. ‘இஸ்ரோ’ கஸ்தூரிரங்கன் குழுவினரை அடியொற்றி பாடநூல்கள் வேத, குருகுலக் கல்வியைப் பரப்புரை செய்வது மிக மோசமானது. கல்வியாளர்கள் இதனைவேத, குருகுலக் கல்வியை எப்படிக் கொண்டாட முடியும்? -ஐ படிப்பதைத் தொடரவும்.

 உடன்கட்டை ஏறுதல் என்னும் ‘சதி’யைப் போற்றும் தமிழகப்பாடநூல்!

 உடன்கட்டை ஏறுதல் என்னும் ‘சதி’யைப் போற்றும் தமிழகப்பாடநூல்! (தமிழகப் பாடநூல்களில் இந்துத்துவம் – 07) மு.சிவகுருநாதன்                      எட்டாம் வகுப்பு சமூக அறிவியலில் ‘காலங்கள்தோறும் இந்தியப் பெண்களின் நிலை’ என்ற பாடம்‘சதி’யைப் பற்றிய இந்துத்துவப்  பார்வை எப்படித் திணிக்கப்படுகிறது என்று பாருங்கள்.         “இந்திய சமூகத்தில் நிலவிய  மற்றொரு சமூகதீமை சதி ஆகும். குறிப்பாக ராஜபுத்திரர்களிடையே இப்பழக்கம்  காணப்பட்டது. அப்போதிருந்த நிலப்பிரபுத்துவ சமூகம் சதி எனும் சடங்கை ஆதரித்தது. இதன்  பொருள் ‘கணவனின் சிதையில் தானாக  முன்வந்து விதவைகள் எரித்துக்கொள்ளுதல்’  ஆகும். ஆரம்ப காலத்தில் தாமாகவே முன்வந்து செய்துகொண்டனர்” உடன்கட்டை ஏறுதல் என்னும் ‘சதி’யைப் போற்றும் தமிழகப்பாடநூல்!-ஐ படிப்பதைத் தொடரவும்.

பெண்களுக்கு எதிரான கொடுமைகளுக்கு  காரணம்  அந்நியப் படையெடுப்புகளா? 

பெண்களுக்கு எதிரான கொடுமைகளுக்கு  காரணம்  அந்நியப் படையெடுப்புகளா?    (தமிழகப் பாடநூல்களில் இந்துத்துவம் – 06) மு.சிவகுருநாதன்              எட்டாம் வகுப்பு சமூக அறிவியலில் ‘காலங்கள்தோறும் இந்தியப் பெண்களின் நிலை’ என்ற பாடத்தில் பெண்களின் நிலைக்கான சமூக, அரசியல், பண்பாட்டுக் காரணங்கள் விண்டுரைக்கப்படுகின்றன!  கொஞ்சம் அதையும் பார்த்து விடுவோம்.         “பண்டைய இந்தியாவில்  அதிலும் குறிப்பாக முந்தைய வேதகாலத்தில்  பெண்கள் சமமான உரிமைகளை பெற்று  மதிக்கப்பட்டனர். ஆனால் தொடர்ச்சியான  வெளிநாட்டு படையெடுப்புகளின் விளைவாக  சமூகத்தில் அவர்களின் நிலைபெண்களுக்கு எதிரான கொடுமைகளுக்கு  காரணம்  அந்நியப் படையெடுப்புகளா? -ஐ படிப்பதைத் தொடரவும்.

தேவதாசி முறை குறித்த வரலாற்றுப் புரட்டுகள்

தேவதாசி முறை குறித்த வரலாற்றுப் புரட்டுகள் (தமிழகப் பாடநூல்களில் இந்துத்துவம் – 05) மு.சிவகுருநாதன்            ‘தேவதாசி முறை’ குறித்து நமது பாடமெழுதிகளின் அறிவு வெளிப்பாட்டையும் புனைவுகளையும் எட்டாம் வகுப்பு சமூக அறிவியலில் காணலாம்.   எட்டாம் வகுப்பு சமூக அறிவியலில் ‘காலங்கள்தோறும் இந்தியப் பெண்களின் நிலை’ என்றொரு பாடம் உண்டு. அதில் ‘தேவதாசி முறை’ குறித்து கீழ்க்கண்டவாறு புலம்புகின்றனர். தீரர் சத்தியமூர்த்திக்கு இணையான புலம்பல் இது.     “தேவதாசி (சமஸ்கிருதம்) அல்லது தேவர் அடியாள் (தமிழ்) என்றதேவதாசி முறை குறித்த வரலாற்றுப் புரட்டுகள்-ஐ படிப்பதைத் தொடரவும்.

அக்னி நட்சத்திரம் என்றால் என்ன? 

அக்னி நட்சத்திரம் என்றால் என்ன?  (தமிழகப் பாடநூல்களில் இந்துத்துவம் – 04)         மு.சிவகுருநாதன்             பத்தாம் வகுப்பு சமூக அறிவியல் புவியியல் பகுதியில் ‘தமிழ்நாடு – இயற்கைப் பிரிவுகள்’ என்ற பாடத்தினூடாக கீழக்கண்ட வினா எழுப்பப்படுகிறது. முன்பு  ‘கண்டறிக’ என்ற தலைப்பில் கொடுத்திருந்தனர். தற்போது அதை மட்டும் நீக்கிவிட்டு இரண்டு கேள்விகளை மட்டும் வைத்துள்ளனர்.  அக்கேள்விகள் கீழே:  “1. அக்னி நட்சத்திரம் என்றால் என்ன?   2. தமிழகத்தை குறைந்த, மிதமானஅக்னி நட்சத்திரம் என்றால் என்ன? -ஐ படிப்பதைத் தொடரவும்.

அகத்திய முனிவரின் கமண்டலத்தில்  தோன்றிய தாமிரபரணி!

அகத்திய முனிவரின் கமண்டலத்தில்  தோன்றிய தாமிரபரணி! (தமிழகப் பாடநூல்களில் இந்துத்துவம் – 03)         மு.சிவகுருநாதன்          பத்தாம் வகுப்பு சமூக அறிவியல் புவியியல் பகுதியில் ‘தமிழ்நாடு – இயற்கைப் பிரிவுகள்’ என்ற பாடம்  உள்ளது. அதில் ஆறுகளைப் பற்றிச் சொல்லும்போது கீழக்கண்ட வரிகள் காணப்படுகின்றன.            “தாமிரபரணி, அம்பாசமுத்திரம் வட்டம் பாபநாசத்திலுள்ள மேற்கு தொடர்ச்சி மலையின் பொதிகை மலை முகடுகளில் தோன்றுகிறது. இவ்வாற்றின் தோற்றம் அகத்திய முனிவரோடு தொடர்புடையதாகக் கருதப்படுகிறது”. (பக்.220)அகத்திய முனிவரின் கமண்டலத்தில்  தோன்றிய தாமிரபரணி!-ஐ படிப்பதைத் தொடரவும்.

இந்திய நீதித்துறையில் மனு ஸ்மிருதி?

இந்திய நீதித்துறையில் மனு ஸ்மிருதி? (தமிழகப் பாடநூல்களில் இந்துத்துவம் – 02)     மு.சிவகுருநாதன்        வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் மனு நீதியைப் பொது நீதியாக்கும் வழக்கம் நமது பாடமெழுதிகளுக்கு உண்டு. மனுநீதிச் சோழன் புராணக்கதையை வரலாறாகப் பாவிப்பது இவர்களது புலமைக்குச் சான்றாகும். நான்காம் வகுப்பு இரண்டாம் பருவத் தமிழ்ப் பாடநூலில் மனுநீதிச்சோழன் பாடம் உண்டு.       நீதித்துறை என்று வரும்போது கூட மனுநீதியுடன் ஒப்பிட்டு எழுதுவதே வாடிக்கை.  எட்டாம் வகுப்பு சமூக அறிவியல் குடிமையியல் பகுதியில்இந்திய நீதித்துறையில் மனு ஸ்மிருதி?-ஐ படிப்பதைத் தொடரவும்.