சூழலியல் கற்பிதங்களை தகர்க்கும் அறவியல் பார்வை

சூழலியல் கற்பிதங்களை தகர்க்கும்  அறவியல் பார்வை மு.சிவகுருநாதன் (நக்கீரனின் ‘இயற்கை 24*7 – சுற்றுச்சூழல் வழிகாட்டி நூல்’ குறித்த அறிமுகப்பதிவு.)          சூழலியல் கற்பிதங்களையும் அதன் பின்னாலிருக்கும் அரசியலையும் சூழலியல் அறத்தையும் 18 தலைப்புகளில் நுட்பமாகவும் சுருக்கமாகவும் அதே சமயம் மிகத் தெளிவாகவும் இந்நூலில் எழுதியிருக்கிறார் நக்கீரன்.  அறிவியல் என்ற பிரிவில்  ஆறாம் அழிவு, புடவி (பிரபஞ்சம்), உயிர்க்கோளம், பெருங்கடல், கடற்கரை, மணல், தண்ணீர், காற்று, ஒளியும் ஒலியும், காடு  ஆகிய 10 தலைப்புகளும்  அரசியல் பிரிவில்“சூழலியல் கற்பிதங்களை தகர்க்கும் அறவியல் பார்வை”-ஐ படிப்பதைத் தொடரவும்.

வரலாற்றினூடாகத் தொன்மப் பயணம்

வரலாற்றினூடாகத் தொன்மப் பயணம் மு.சிவகுருநாதன்            இது ஒரு வரலாற்று நூல் அல்ல. கதவு என்கிற புள்ளியை மையமாகக் கொண்டு ஆதிமனிதனில் தொடங்கி வரலாறு மற்றும் தொன்மங்களின் ஊடாக பயணிக்கும் நூல். நூலாசிரியர் ஒரு பயண ஆர்வலர் என்றும் பரந்த வாசிப்பனுபவம் கொண்டவர் என்று பதிப்புரை சொல்வதற்கேற்ப வரலாற்றினூடாகப் பயணிப்பதற்கு வாசிப்பு பேருதவியாக இருப்பதை இந்நூல் உணர்த்தி நிற்கிறது. இருப்பினும் வழமையான வரலாற்று அணுகுமுறையின் போதாமையும் வெளிப்படுகிறது. கதவுகளைப் பொருண்மையாக எடுத்துக்கொண்டு அதன் முன்னும் பின்னுமாக வரலாறு,“வரலாற்றினூடாகத் தொன்மப் பயணம்”-ஐ படிப்பதைத் தொடரவும்.

விளிம்புநிலை மக்களின் வாழ்வும் கலையும்

விளிம்புநிலை மக்களின் வாழ்வும் கலையும் (சிவகுமார் முத்தய்யாவின் ‘குரவை’ நாவல் விமர்சனம்) மு.சிவகுருநாதன்          குரவைக் கூத்து பழங்காலத்திருந்து தொடரும் ஒரு கலை வடிவம். துணங்கை, தழூஉ  என்றெல்லாம் வகைப்படுத்தியுள்ளனர். குடக்கூத்து எனப்படும் கரகாட்டமும் கூத்தின் ஒரு வகைதான். காலப்போக்கில் அக்கால மக்களின் அன்றாட நிகழ்வாக இருந்த கலைகளில் சில மேனிலையாக்கம் பெறவும் சில அடித்தட்டு மக்களின் தலையில் சுமையாகவும் திணிக்கவும் வழிவகுக்கப்பட்டது. கிராமியக் கலை  நிகழ்ச்சி, கரகாட்டம் என்றெல்லாம் அழைக்கப்பட்டாலும் குறவன் குறத்தி ஆட்டத்தை மையப்படுத்தியே“விளிம்புநிலை மக்களின் வாழ்வும் கலையும்”-ஐ படிப்பதைத் தொடரவும்.

தனிமையின் உரையாடல்

தனிமையின் உரையாடல் நூல் விமர்சனம்: கொய்யாவின் வாசனை (மொ) பிரம்மராஜன் மு.சிவகுருநாதன்            கொலம்பியா நாட்டைச் சேர்ந்த கேப்ரியல் கார்சியா மார்க்வெஸ் (1927-2014) தமிழுக்கு நன்கு அறிமுகமானவர். எழுத்தாளராகவும் பத்தரிக்கையாளராகவும் இயங்கியவர். அவரது சில படைப்புகள் தமிழில் மொழியாக்கம் செய்யப்பட்டுள்ளன. தமிழ்ச் சிறுபத்தரிக்கைச் சூழலில் வெகுவாக பேசப்பட்டவர். கல்குதிரை, புதுஎழுத்து போன்ற சிற்றிதழ்கள் இவருக்கு சிறப்பிதழ்களைக் கொண்டு வந்தன. இவரது மந்திர எதார்த்தவாதம் (Magical Realism) இங்கு பரந்த கவனிப்பைப் பெற்றது. பல தமிழ் எழுத்தாளர்கள் இதன்“தனிமையின் உரையாடல்”-ஐ படிப்பதைத் தொடரவும்.

ஆளுமைகளை நன்றியுடன் நினைவு கூர்தல்

ஆளுமைகளை நன்றியுடன் நினைவு கூர்தல் மு.சிவகுருநாதன்            இரு தொகுதிகளில் 18, 17 என 35 ஆளுமைகளை நன்றியுடன் நினைவு கூறும் நினைவோடைக் கட்டுரைகள் நிரம்பியது. முதல் தொகுதி பொருளடக்கத்தில் மௌனி விடுபட்டுள்ளார். இவர்கள் அனைவருக்கும் பல ஒற்றுமைகள் உள்ளன. அவற்றில் ஒன்று காலமாகிப் போனவர்கள் என்பதே. என்னதான் எழுத்தாளர்கள் எனும் ‘சிறப்பு உயர்திணை’யாக இருப்பினும் இவர்களும் மனிதர்கள்தானே! தனிமனிதக் குறைபாடுகளுடன் கூடவே அவர்களது வாழ்வையும் எழுத்துகள் பற்றிய சிறிய அறிமுகத்தையும் சித்திரத்தையும் இக்கட்டுரைகள் நமக்கு அளிக்கின்றன.“ஆளுமைகளை நன்றியுடன் நினைவு கூர்தல்”-ஐ படிப்பதைத் தொடரவும்.

ஷோபாசக்தி நூல்கள்

ஷோபாசக்தி நூல்கள் (புத்தகத் திருவிழாப் பரிந்துரைகள் – 012) மு.சிவகுருநாதன்        இலங்கை யாழ்ப்பாணம் அல்லைப்பிட்டியில் பிறந்த ஷோபாசக்தி  புலம்பெயர்ந்து பிரான்சில் வசிக்கிறார். இவரது படைப்புகள் தனித்துவமானவை. இவரது எழுத்துகளின் வாயிலாக ஈழத்தமிழரின் வாழ்வியல் புதிய கோணத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது. இவரது புதிய நாவல் ‘ஸலாம் அலைக்’ இருமுனைகளிலிருந்து  தொடங்கிச் சொல்லப்படும் கதை வளையமாக உருவாகியுள்ளது.      தனது நாவல்கள், சிறுகதைகளின் வழி சோதனை முயற்சிகள் பலவற்றை மேற்கொண்டு வருகிறார். கட்டுரைகளின் வழி தனது கோட்பாடுகளை வலியுறுத்தும்“ஷோபாசக்தி நூல்கள்”-ஐ படிப்பதைத் தொடரவும்.

வே.மு.பொதியவெற்பன் நூல்கள்

வே.மு.பொதியவெற்பன் நூல்கள் (புத்தகத் திருவிழாப் பரிந்துரைகள் – 010) மு.சிவகுருநாதன்             தோழர் வே.மு.பொதியவெற்பன் இடதுசாரி இயக்கச் செயல்பாட்டாளர், சி.பி.எம்மின் தமுஎச (இன்று தமுஎகச) தஞ்சாவூர் மாவட்டச் செயலாளாராகப் பணி புரிந்தவர். மா.லெ. குழுவினரின் புரட்சிப் பண்பாட்டு இயக்கத்தில் (புபஇ) சே.கோச்சடை, அ.மார்க்ஸ், பா.கல்யாணி, பழமலய் போன்றோருடன்  இணைந்து செயல்பட்டவர்.           கவிஞர் சூரியமுகி எனும் பெயரில் சூரியக் குளியல் என்ற கவிதை மற்றும் பாடல்கள் நூலை வெளியிட்டார். (புபஇ. வெளியீடு: ஜூன் 1986)  இப்போது பொதிகைச்சித்தர்“வே.மு.பொதியவெற்பன் நூல்கள்”-ஐ படிப்பதைத் தொடரவும்.

தொ.பரமசிவன் நூல்கள்

தொ.பரமசிவன் நூல்கள் (புத்தகத் திருவிழாப் பரிந்துரைகள் – 007) மு.சிவகுருநாதன்         மறைந்த பண்பாட்டியல் அறிஞர், ஆய்வறிஞர் தொ.பரமசிவன் (1950-2020) எழுதியது பிறரை ஒப்பிடும்போது மிகவும் குறைவு. தனது ‘அழகர்கோயில்’ ஆய்வேட்டின் மூலம் வழக்கமான கல்விப்புல ஆய்வுகளை மடைமாற்றினார். இருப்பினும் அது காலம் கடந்துதான் கவனிப்பைப் பெற்றது.         தன்னை 95% பெரியாரிஸ்ட் என்று சொன்னவர். நாட்டார் மரபுகள் வைதீகத்திற்கு எதிரானது என்பதை நிறுவியவர். “ஒன்றே குலம், ஒருவனே தேவன்”, என்பது மக்கள் விரோதச் சித்தாந்தம் என்றார்.“தொ.பரமசிவன் நூல்கள்”-ஐ படிப்பதைத் தொடரவும்.

ஆ.சிவசுப்பிரமணியன்  நூல்கள்

ஆ.சிவசுப்பிரமணியன்  நூல்கள் (புத்தகத்திருவிழாப் பரிந்துரைகள் – 006) மு.சிவகுருநாதன்        சமூக அறிவியலாளர் , நாட்டாரியல் அறிஞர், நா. வானமாமலை (நா.வா) அவர்களின் மாணவர்  பேரா. ஆ. சிவசுப்பிரமணியன், தமிழ்நாட்டின் சமூக விஞ்ஞானியாக போற்றப்படுபவர். இவர் பல்வேறு நூல்களை எழுதியுள்ளார்.  இவற்றுள் குறுநூல்கள், பதிப்பித்த நூல்களும் அடங்கும். அவற்றில் ஏதேனும் ஒன்றையாவது வாசித்தால் ஆ. சிவசுவை தொடர்ந்து வாசிக்க வேண்டிய உந்துதல் மற்றும் தேவையேற்படலாம்.       இங்கு வரலாறு என்பது மன்னர்களின், போர்களின் வரலாறாகச் சுருங்கிப் போய்விட்டது.“ஆ.சிவசுப்பிரமணியன்  நூல்கள்”-ஐ படிப்பதைத் தொடரவும்.

எஸ்.ஜெயசீல ஸ்டீபன் நூல்கள்

எஸ்.ஜெயசீல ஸ்டீபன் நூல்கள் (புத்தகத் திருவிழாப் பரிந்துரைகள் – 005) மு.சிவகுருநாதன்           வரலாற்று ஆய்வறிஞர் எஸ்.ஜெயசீல ஸ்டீபன் திருநெல்வேலியில் பிறந்தவர். சென்னை, ஐதராபாத், புதுச்சேரியில் கல்வி பயின்றவர். தற்போது புதுச்சேரியில் வசிக்கும் இவர் இந்திய – ஐரோப்பியவியல் ஆய்வு நிறுவன இயக்குநராக உள்ளார். இதற்கு முன்னர் பல்வேறு உலக ஆய்வு நிறுவனங்களில் பணிபுரிந்தவர்.            தமிழ், ஆங்கிலம் மட்டுமின்றி பிரஞ்சு, டச்சு, ஸ்பானிஷ், போர்ச்சுகீஷ், இத்தாலி, ஜெர்மானி, வங்காளி, இந்தி உள்ளிட்ட பன்மொழிப் புலமையுடையவர்.“எஸ்.ஜெயசீல ஸ்டீபன் நூல்கள்”-ஐ படிப்பதைத் தொடரவும்.