சீனிவாச ராமாநுஜம்  நூல்கள்

சீனிவாச ராமாநுஜம்  நூல்கள் (புத்தகத் திருவிழாப் பரிந்துரைகள் – 018) மு.சிவகுருநாதன்             தோழர் ராமாநுஜம் தமிழிலக்கிய உலகில் மிகவும் அறிமுகமான எழுத்தாளர்; மொழி பெயர்ப்பாளர், நாடகவியலாளர். ‘ஆடுகளம்’ நவீன நாடகக்குழுவில் இயங்கியவர். ஆறாவது வார்டு, மழை, காட்டு நகரம், நாங்கள் நியாயவாதிகள், நிரபராதிகளின் காலம் போன்ற நாடகங்களை இயக்கி நடித்தவர்.         காந்தியின் உடலரசியல், தற்கொலைகளைக் கொண்டாடுவோம், சந்நியாசமும் தீண்டாமையும், இந்துமதம்: ஒரு விசாரணை ஆகிய நூல்களின் ஆசிரியர். மண்ட்டோ படைப்புகள், அங்கிள் சாமுக்கு (மண்ட்டோ“சீனிவாச ராமாநுஜம்  நூல்கள்”-ஐ படிப்பதைத் தொடரவும்.

சிவகுமார் முத்தய்யாநூல்கள்

சிவகுமார் முத்தய்யா  நூல்கள் (புத்தகத் திருவிழாப் பரிந்துரைகள் – 017) மு.சிவகுருநாதன்       தோழர் சிவகுமார் முத்தய்யா திருவாரூர் தண்டலை கிராமத்தைச் சேர்ந்தவர். ஒடுக்கப்பட்ட சமூகப் பின்புலத்திலிருந்து வந்த இவர் இன்று வளர்ந்துவரும் எழுத்தாளர். தமது எழுத்துகளில் அடித்தட்டு, விளிம்புநிலை மக்களின் வாழ்வியலைப் பதிவு செய்து வருகிறார்.          சிவகுமார் முத்தய்யா காட்சி, அச்சு ஊடகங்களில் பணியாற்றிய அனுபவம் மிக்கவர். இவர் தற்போது நாளிதழ் ஒன்றின் செய்தியாளராகப் பணிபுரிகிறார். கதை, கவிதை தவிர அரசியல், சமூகம், கலை,“சிவகுமார் முத்தய்யாநூல்கள்”-ஐ படிப்பதைத் தொடரவும்.

சி.எம்.முத்து  நூல்கள்

சி.எம்.முத்து  நூல்கள் (புத்தகத் திருவிழாப் பரிந்துரைகள் – 016) மு.சிவகுருநாதன்           தஞ்சாவூர் அருகிலுள்ள இடையிருப்பில்  சந்திரஹாசன் – கமலாம்பாள் தம்பதிக்குப் பிறந்த மாரிமுத்து தனது பெயரை சி.எம்.முத்து என சுருக்கி வைத்துக் கொண்டார். வெள்ளாந்தியான இந்த கிராமத்து மனிதர் நாட்டுப்பாடல்களை அழகாகப் பாடக்கூடியவர்.          மேலதஞ்சைப் பகுதியில் வாழ்வியலை அவர்களது வட்டாரத் தன்மையுடன் படைப்பில் கொண்டு வருபவர். பிற வட்டார வழக்கிற்கு உள்ள ஏற்புடைமை தஞ்சைப் பகுதிக்கு இல்லை. கீழத்தஞ்சையில் சோலை சுந்தரபெருமாளுக்கு நிகழ்ந்ததுதான் மேலத்தஞ்சையில்“சி.எம்.முத்து  நூல்கள்”-ஐ படிப்பதைத் தொடரவும்.

இந்திரன் நூல்கள்

இந்திரன் நூல்கள் (புத்தகத் திருவிழாப் பரிந்துரைகள் – 015) மு.சிவகுருநாதன்          இந்திரன் ஓவியர், கவிஞர்,  கலை விமர்சகர், இலக்கிய விமர்சகர், மொழிபெயர்ப்பாளர் என்ற பன்முக ஆளுமை கொண்ட படைப்பாளி. கவிதைகளை மட்டுமல்லாமல் எதிர் கவிதைகளையும் எழுதியவர்.           வழக்கமான சொற்களையும் களத்தையும் குலைத்து, தன்னையும் ஓட்டுமொத்த மனித குலத்தையும் பகடி செய்து, கவிதைக்குப்  பதிலாக கதை சொல்லும் உத்தியை ‘மேசை மேல் செத்த பூனை’ தொகுப்பில் பயன்படுத்துகிறார். அவரது கவிதைகளில் ‘சாம்பல் வார்த்தைகள்’ அதிகம் பேசப்பட்ட“இந்திரன் நூல்கள்”-ஐ படிப்பதைத் தொடரவும்.

சோலை  சுந்தரபெருமாள் நூல்கள்

சோலை  சுந்தரபெருமாள் நூல்கள் (புத்தகத் திருவிழாப் பரிந்துரைகள் – 014) மு.சிவகுருநாதன்           எழுத்தாளர் சோலை சுந்தரபெருமாள் (1953-2021) கிராவின் கரிசல் பாணியில் வட்டார மொழியில் மருதநில மக்களின் வாழ்வைப் பதிவு செய்தார். வண்டல் எழுத்து என தனி வகைமையை உருவாக்க பல்வேறு வழிகளில் முயன்றார். வெறும் படைப்பாளியாக மட்டும் இருந்துவிடாமல், தஞ்சை வட்டாரச் சொல்லகராதி, வாய்மொழி வரலாறு, வண்டல் உணவுகள், வண்டல் இலக்கிய வட்டம் போன்றவை இவ்வழியில் அவரது தொடர் நடவடிக்கைகளாகும்.         10 நாவல்கள்,“சோலை  சுந்தரபெருமாள் நூல்கள்”-ஐ படிப்பதைத் தொடரவும்.

பக்தவத்சல பாரதி நூல்கள்

பக்தவத்சல பாரதி நூல்கள் (புத்தகத் திருவிழாப் பரிந்துரைகள் – 013) மு.சிவகுருநாதன்         தமிழில் மானிடவியல், இனவரைவியல் நூல்கள் பலவற்றை எழுதியுள்ள பக்தவத்சல பாரதி தமிழ்ச்சூழலில் நன்கறியப்பட்ட ஆய்வறிஞர். மானிடவியல் சார்ந்த பல்வேறு நூல்களை எழுதி அத்துறைக்கு பல புதிய திறப்புகளை ஏற்படுத்தியுள்ளார்.            பண்பாட்டு மானிடவியல், தமிழர் மானிடவியல், வரலாற்று மானிடவியல், இலக்கிய மானிடவியல், மானிடவியல் கோட்பாடுகள், தமிழகப் பழங்குடிகள், பாணர் இனவரைவியல், இலங்கையில் சிங்களவர், தமிழகத்தில் நாடோடிகள் (தொ) ஆகியன அவற்றுள் சில.         “பக்தவத்சல பாரதி நூல்கள்”-ஐ படிப்பதைத் தொடரவும்.

ஷோபாசக்தி நூல்கள்

ஷோபாசக்தி நூல்கள் (புத்தகத் திருவிழாப் பரிந்துரைகள் – 012) மு.சிவகுருநாதன்        இலங்கை யாழ்ப்பாணம் அல்லைப்பிட்டியில் பிறந்த ஷோபாசக்தி  புலம்பெயர்ந்து பிரான்சில் வசிக்கிறார். இவரது படைப்புகள் தனித்துவமானவை. இவரது எழுத்துகளின் வாயிலாக ஈழத்தமிழரின் வாழ்வியல் புதிய கோணத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது. இவரது புதிய நாவல் ‘ஸலாம் அலைக்’ இருமுனைகளிலிருந்து  தொடங்கிச் சொல்லப்படும் கதை வளையமாக உருவாகியுள்ளது.      தனது நாவல்கள், சிறுகதைகளின் வழி சோதனை முயற்சிகள் பலவற்றை மேற்கொண்டு வருகிறார். கட்டுரைகளின் வழி தனது கோட்பாடுகளை வலியுறுத்தும்“ஷோபாசக்தி நூல்கள்”-ஐ படிப்பதைத் தொடரவும்.

பொ.வேல்சாமி நூல்கள்

பொ.வேல்சாமி நூல்கள் (புத்தகத் திருவிழாப் பரிந்துரைகள் – 011) மு.சிவகுருநாதன்           பொ.வேல்சாமி, தமிழறிஞர். புலவர் பட்டம் பெற்றவர். ‘நிறப்பிரிகை’ ஆசிரியர் குழுவில் இடம் பெற்றவர். இவரது  ஆய்வுக்கட்டுரைகள் மூலம் அனைவரும் கண்டடையாத புதிய திறப்புகளையும் வெளிச்சங்களையும் ஏற்படுத்தியவர். விளிம்பு நிலையினர் பற்றிய பார்வைக்கோணங்களை வெளிப்படுத்தியவர்.        இவர் எழுதியது மிகவும் குறைவு. இருப்பினும் தனது எழுத்துக்களின் மூலம் தமிழ்ச்சூழலில் அசைவை ஏற்படுத்தியவர். குடவோலை முறை எனும் திருவுளச்சீட்டு முறையை கேள்விக்குட்படுத்தியவர். எழுத்தாளர் ஜெயமோகனின் இலக்கியத் திருட்டை“பொ.வேல்சாமி நூல்கள்”-ஐ படிப்பதைத் தொடரவும்.

வே.மு.பொதியவெற்பன் நூல்கள்

வே.மு.பொதியவெற்பன் நூல்கள் (புத்தகத் திருவிழாப் பரிந்துரைகள் – 010) மு.சிவகுருநாதன்             தோழர் வே.மு.பொதியவெற்பன் இடதுசாரி இயக்கச் செயல்பாட்டாளர், சி.பி.எம்மின் தமுஎச (இன்று தமுஎகச) தஞ்சாவூர் மாவட்டச் செயலாளாராகப் பணி புரிந்தவர். மா.லெ. குழுவினரின் புரட்சிப் பண்பாட்டு இயக்கத்தில் (புபஇ) சே.கோச்சடை, அ.மார்க்ஸ், பா.கல்யாணி, பழமலய் போன்றோருடன்  இணைந்து செயல்பட்டவர்.           கவிஞர் சூரியமுகி எனும் பெயரில் சூரியக் குளியல் என்ற கவிதை மற்றும் பாடல்கள் நூலை வெளியிட்டார். (புபஇ. வெளியீடு: ஜூன் 1986)  இப்போது பொதிகைச்சித்தர்“வே.மு.பொதியவெற்பன் நூல்கள்”-ஐ படிப்பதைத் தொடரவும்.

எஸ்.வி.ராஜதுரை  நூல்கள்

எஸ்.வி.ராஜதுரை  நூல்கள் (புத்தகத் திருவிழாப் பரிந்துரைகள் – 009) மு.சிவகுருநாதன்           அறிஞர் எஸ்.வி.ராஜதுரைஅவர்களை தமிழ் அறிவுலகம் நன்கறியும். எஸ்.வி.ஆர். என்று அன்புடன் அழைக்கப்படும் சிந்தனையாளர், ஆய்வறிஞர் எஸ்.வி.ராஜதுரை  அவர்கள்  பல நூல்களை எழுதியுள்ளார்.  பெரியாரியம், மார்க்சியம், அம்பேத்கரியம் சார்ந்த பல்வேறு ஆய்வு நூல்கள் இதிலடங்கும். மனித உரிமைகள் சார்ந்த பல பணிகளில் ஈடுபட்ட போராளி. பல்வேறு மொழிபெயர்ப்புகள், கலை, இலக்கிய, திரைப்பட, அரசியல் விமர்சன ஆக்கங்கள் பலவற்றையும் தமிழுக்கு வழங்கியவர்.  2023 ஆண்டின் தமிழ்நாடு அரசு“எஸ்.வி.ராஜதுரை  நூல்கள்”-ஐ படிப்பதைத் தொடரவும்.