பாசிசத்தை எதிர்கொள்ளத் தேவையான மொழி

பாசிசத்தை எதிர்கொள்ளத் தேவையான மொழி  (நூலறிமுகம்… தொடர்: 045)  மு.சிவகுருநாதன்   (புதிய ஜனநாயகம் வெளியிட்ட    ‘கார்ப்பரேட் – காவி பாசிசம்’ என்ற கட்டுரைத் தொகுப்பு குறித்த பதிவு.)      உலகம் கார்ப்பரேட் பாசிசத்தின் பிடியில் சிக்கியுள்ளது. இதற்கு தனியார்மயம், தாராளமயம், உலகமயம் என்று பெயர்கள் சொல்லப்பட்டாலும் இதற்குள் ஒளிந்திருப்பது பாசிசமே. இந்தியச் சூழலில் இடதுசாரிகள் கார்ப்பரேட் பாசிசத்துடன் கூடவே காவிப் பாசிசத்துடனையும் எதிர்த்துப் போராட வேண்டியுள்ளது. இந்தப் போராட்டங்களில் நமது ஆயுதங்களை எதிரிகளே முடிவு செய்கிறார்கள்“பாசிசத்தை எதிர்கொள்ளத் தேவையான மொழி”-ஐ படிப்பதைத் தொடரவும்.

இந்தியப் பாம்புகளை அறிந்து கொள்வோம்!

இந்தியப் பாம்புகளை அறிந்து கொள்வோம்! (நூலறிமுகம்… தொடர்: 044)  மு.சிவகுருநாதன்   (ரோமுலஸ் விடேகர் எழுதி,  ஓ. ஹென்றி பிராசின்ஸ் மொழிபெயர்த்த,   ‘இந்தியப் பாம்புகள்’ என்ற நூல் குறித்த பதிவு.)      பாம்புகளைப் பற்றிய மூடநம்பிக்கைகளும் புனைவுகளும் சமூகத்தில் அதிகம். அதை அகற்றாமல் பாம்புகளை பாதுகாக்க இயலாது. ச.முகமது அலி எழுதிய  ‘பாம்பு என்றால்?’ என்ற நூல் தமிழில் குறிப்பிடத்தக்க ஒன்று. பொள்ளாச்சி இயற்கை வரலாறு அறக்கட்டளை டிசம்பர் 2008 இல் வெளியிட்ட இந்நூல் குறித்த அறிமுகத்தை“இந்தியப் பாம்புகளை அறிந்து கொள்வோம்!”-ஐ படிப்பதைத் தொடரவும்.

‘ஆதிவாசிகளின் புரட்சி’ வீராங்கனை

‘ஆதிவாசிகளின் புரட்சி’ வீராங்கனை  (நூலறிமுகம்… தொடர்: 043) மு.சிவகுருநாதன்    (சவுத் விஷன் புக்ஸ் வெளியிட்ட    ‘’கோதாவரி பாருலேகர்: பழங்குடி மக்களின் தாய்’  என்ற குறுநூல் குறித்த பதிவு.)       பெண்களின் பங்களிப்பு எல்லாத் துறைகளிலும் மறைக்கப்பட்ட / மறுக்கப்பட்ட ஒன்றாகவே இருக்கிறது. அறிவியல், சமூகம், அரசியல் என எந்தத் துறைகளும் இதற்கு விதிவிலக்கல்ல. மணலூர் மணியம்மாள் போல் எண்ணற்ற மறைக்கப்பட்ட வரலாறுகள் உண்டு. கட்சி அமைப்பிற்குள்ளும் வெளியிலும் செயல்படும் பெண்கள் ஆண்களுக்கு இணையாகப் போற்றப்படுவதும் கொண்டாடப்படுவதும்“‘ஆதிவாசிகளின் புரட்சி’ வீராங்கனை”-ஐ படிப்பதைத் தொடரவும்.

தமிழில் அசோகரின் சுருக்கமான வரலாறு

தமிழில் அசோகரின் சுருக்கமான வரலாறு (நூலறிமுகம்… தொடர்: 042)  மு.சிவகுருநாதன்   (முனைவர் பிக்கு போதி பால எழுதிய ‘மாமன்னர் அசோகர் வரலாறும் அவரது சாசனங்களும்’ என்ற நூல் குறித்த பதிவு.)      தமிழில் அசோகர் வரலாறு இரண்டு ஆங்கில நூல்களின் மொழியாக்கமாகக் கிடைக்கிறது. ஒன்று: பேரரசன் அசோகன்: மறக்கப்பட்ட மாமன்னனின் வரலாறு – சார்ல்ஸ் ஆலன் (தமிழில்) தருமி, எதிர் வெளியீடு. இரண்டு: அசோகர்: இந்தியாவின் பௌத்த பேரரசர் – வின்சென்ட் ஏ. ஸ்மித் (தமிழில்) சிவ.“தமிழில் அசோகரின் சுருக்கமான வரலாறு”-ஐ படிப்பதைத் தொடரவும்.

பகைச் சதியை முறியடிக்கும் முயற்சி

பகைச் சதியை முறியடிக்கும்  முயற்சி  (நூலறிமுகம்… தொடர்: 041)  மு.சிவகுருநாதன்    (கோ.ரகுபதியின்   விரிவான முன்னுரையுடன் ‘’இரட்டைமலை சீனிவாசனின் மத நிலைப்பாடு’ என்ற தொகுப்பு நூல் குறித்த பதிவு.)      ஆய்வாளர் கோ.ரகுபதி காவேரிப் பெருவெள்ளம் 1924 – படிநிலைச் சாதிகளில் பேரழிவின் படிநிலை, தலித்துகளும் தண்ணீரும், தலித் பொதுவுரிமைப் போராட்டம், ஆனந்தம் பண்டிதர்: சித்த மருத்துவரின் சமூக மருத்துவம் (தொ) வெளியீடு: காலச்சுவடு, பறையன் பாட்டு: தலித்தல்லாதோரின் கலகக் குரல் (தொ) வெளியீடு: தடாகம், சி. லஷ்மணனுடன்“பகைச் சதியை முறியடிக்கும் முயற்சி”-ஐ படிப்பதைத் தொடரவும்.

தாவரங்களும் தமிழர்களும்

தாவரங்களும் தமிழர்களும்   (நூலறிமுகம்… தொடர்: 040) மு.சிவகுருநாதன்  (பேரா. கு.வி. கிருஷ்ணமூர்த்தியின் நேர்காணல் வடிவக் குறுநூலான ‘தமிழர்: தாவரங்களும் பண்பாடும்’ குறித்த பதிவு.)      தமிழரும் தாவரமும், அறிவியலின் வரலாறு போன்ற அரிய நூல்களை எழுதிய பேரா. கு.வி. கிருஷ்ணமூர்த்தி சூழலியல் சார்ந்த எழுத்து மற்றும் செயல்பாடுகளை முன்னெடுக்கும் அறிஞர். அவரது நேர்காணலே இக்குறுநூலாகியுள்ளது. இதன் ஒரு பகுதி சுதீர் செந்திலின் ‘உயிர் எழுத்து’ (ஆகஸ்ட் 2012) இதழில் வெளியானது.      இயல் தாவரங்களும் அயல் தாவரங்களும்,“தாவரங்களும் தமிழர்களும்”-ஐ படிப்பதைத் தொடரவும்.

எல்லைக்கோடுகளின் பாசிசம்!

எல்லைக்கோடுகளின்  பாசிசம்! மு.சிவகுருநாதன்        கொரோனா உலகைப் புரட்டிப் போட்டுள்ளது. உலகமய ஏகாதிபத்தியம் இதையும் தமக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டுள்ளது; வருங்காலத்தில் இன்னும் மேலதிகமாகவும் பயன்படக்கூடும். எதையும் பணமாக மாற்றுவதே முதலாளித்துவத்தின் வேலை, அதற்கு கொரோனாவும் விதிவிலக்கல்ல. வணிகத்திற்கு தேச எல்லைகளே இல்லை என்கிறது; கொரோனா மாவட்ட எல்லைகளை மூடுகிறது.      அரசுகளுக்குக் கூட கொரோனா வெகுமதி என்றே சொல்ல வேண்டும். ஊதியக் குறைப்பு, ஆட்குறைப்பு, எட்டுமணி நேர வேலை உரிமை பறித்தல்“எல்லைக்கோடுகளின் பாசிசம்!”-ஐ படிப்பதைத் தொடரவும்.

இந்துத்துவத்தின் பாசிசக் கூட்டணிகள்

இந்துத்துவத்தின் பாசிசக் கூட்டணிகள் (நூலறிமுகம்… தொடர்: 039) மு.சிவகுருநாதன்  (அ.மார்க்ஸ் எழுதிய அடையாளம் வெளியீடான  ‘இந்துத்துவமும் சியோனிசமும்’  ’ எனும்   நூல் பற்றிய  பதிவு இது.) பகுதி: ஒன்று     நூலுக்கு போகும் முன்பு 10 ஆம் வகுப்பு சமூக அறிவியலில் உள்ள சீயோனிய இயக்கம், பாலஸ்தீன பிரச்சினை குறித்த சில வரிகளைக் கவனிப்போம். ‘சீயோனிய இயக்கம்’ என்ற பெட்டிச் செய்தியாக,       “யூதர்களின் பூர்வீகப்பகுதியான  பாலஸ்தீனத்தில் 1900 இல் ஆயிரம் யூதர்களே குடியிருந்தனர். இவ்வினத்தின்“இந்துத்துவத்தின் பாசிசக் கூட்டணிகள்”-ஐ படிப்பதைத் தொடரவும்.

கல்வெட்டுக்களில் ஊடாடும் சாதியமும் சமூக நிலையும்

கல்வெட்டுக்களில் ஊடாடும் சாதியமும் சமூக நிலையும்  (நூலறிமுகம்… தொடர்: 038) மு.சிவகுருநாதன்  (நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிமிடெட் வெளியீடாக ஆ.சிவசுப்பிரமணியன்  எழுதிய  ‘பிராமண போஜனமும் சட்டிச் சோறும்’ என்ற  நூல் குறித்த பதிவு.)        கல்வெட்டுகளில் என்னென்ன செய்திகள் இருக்கும்? “மன்னர்களின் பரம்பரைப் பட்டியல், அவர்கள் நிகழ்த்திய போர்கள், கட்டுவித்த கோயில்கள், அவர்களது பட்டத்தரசியர், அறச்செயல்கள் என்பனவற்றைக் கடந்து வேறுபல செய்திகளையும் கல்வெட்டுகள் உணர்த்துவதை”, (பக்.v) முன்னுரையில் ஆய்வறிஞர் ஆ. சிவசுப்பிரமணியன் குறிப்பிடுகிறார். ‘வேறுபல“கல்வெட்டுக்களில் ஊடாடும் சாதியமும் சமூக நிலையும்”-ஐ படிப்பதைத் தொடரவும்.

EMI நீட்டிப்புச் சலுகை எனும் மோசடி!

     EMI  நீட்டிப்புச் சலுகை  எனும் மோசடி! மு.சிவகுருநாதன்       கொரோனா ‘சலுகை’யாக அறிவிக்கப்பட்ட மார்ச் முதல் மே வரையிலான மூன்று மாத தவணை நீட்டிப்பு தற்போது இன்னொரு 3 மாதங்கள் என (ஆகஸ்ட் 2020 முடிய) ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்தி காந்ததாஸ் அறிவித்திருக்கிறார்.  இது ஒரு வகையான மோசடியே.       வெறும் கையால் முழம்போட்டு, வெற்றுக் கூச்சல்கள் எழுப்பும் நரேந்திர மோடி, துளியூண்டு கண்ணியமும் இன்றி, “பெட்டி“EMI நீட்டிப்புச் சலுகை எனும் மோசடி!”-ஐ படிப்பதைத் தொடரவும்.