இரண்டாம் உலகப்போரும் தீவிரமடைந்த இந்திய விடுதலைப் போரும்

இரண்டாம் உலகப்போரும் தீவிரமடைந்த இந்திய விடுதலைப் போரும் (மகாத்மாவின் கதை தொடரின் பதினான்காவது அத்தியாயம்.) மு.சிவகுருநாதன்               இந்திய தேசிய காங்கிரஸ் 1885இல் ஆலன் ஆக்டோவியன் ஹியூம் (Allan Octavian Hume) முயற்சியால் உருவாக்கப்பட்டது என்பதை நாம் அறிவோம். 1885 டிசம்பர் 28 பம்பாயில் நடந்த முதல் அமர்வில் உமேஷ் சந்திர பானர்ஜி முதல் தலைவராகத் தேர்வானார்.  அன்று காங்கிரஸ் தலைவர்கள் ராஷ்டிரபதி (President) என்றழைக்கப்பட்டார். ஆண்டுகொருமுறை புதிய தலைவரைத் தேர்ந்தெடுக்கும் நடைமுறை வழக்கத்தில் இருந்தது. இந்த“இரண்டாம் உலகப்போரும் தீவிரமடைந்த இந்திய விடுதலைப் போரும்”-ஐ படிப்பதைத் தொடரவும்.

காந்தியின் நிர்மாணத் திட்டங்களும் எதிர்ப்பும் 

காந்தியின் நிர்மாணத் திட்டங்களும் எதிர்ப்பும் (மகாத்மாவின் கதை தொடரின் பதிமூன்றாவது அத்தியாயம்.) மு.சிவகுருநாதன்                காந்தி அரசியல் பணிகளுடன் சமூகப்பணிகளையும் இணைத்தே செயல்படுத்தினார். அரசியல் விடுதலையுடன் சமூக, பொருளாதார விடுதலையும் பெற வேண்டும் என்பதில் பெருநம்பிக்கை கொண்டிருந்தார். நிர்மாணத் திட்டங்கள் என்று பெயரில் பல்வேறு காலகட்டங்களில் இவற்றை முன்னெடுத்துச் சென்றார். கதர் பரப்புரை, மதுவிலக்கு, வார்தா (ஆதார) கல்வித் திட்டம், தீண்டாமை ஒழிப்பு, முதியோர் கல்வி, நலக்கல்வி, கிராம சுகாதாரம், கிராமத் தொழில்கள், பொருளாதார சமத்துவம், பெண்கள்,“காந்தியின் நிர்மாணத் திட்டங்களும் எதிர்ப்பும் “-ஐ படிப்பதைத் தொடரவும்.

சமூக இடைவெளி!

சமூக இடைவெளி! மு.சிவகுருநாதன்            கொரோனா காலத்தில் பிரபலமானது சமூக இடைவெளி எனும் சொல்லாடல். நாம் இங்கு அந்தச் சமூக இடைவெளியைப் பற்றிப் பேசப்போவதில்லை. ஏழை – பணக்காரன், கிராமம் – நகரம், அறம் சார் வாழ்க்கை – போக்கிரி வாழ்வு, சாதி, மதம், மொழி, இனம் சார்ந்த இடைவெளிகள் தொடர்கின்றன. “இப்பெல்லாம் யாரு சாதி பாக்குறா”, என்பது மேம்போக்கான பார்வையாக நிலைத்துவிட்டது. சாதிகள் முன்பைவிட தீவிரமாக துலக்கம் பெற்றுள்ளன. பண்பாட்டு அடையாளங்களைத் தேடுதல் என்கிற பெயரில்“சமூக இடைவெளி!”-ஐ படிப்பதைத் தொடரவும்.

இந்தியாவில்  காந்தியின் தொடக்ககால சத்தியாக்கிரகங்கள்

இந்தியாவில்  காந்தியின் தொடக்ககால சத்தியாக்கிரகங்கள் (மகாத்மாவின் கதை தொடரின் ஒன்பதாவது அத்தியாயம்.) மு.சிவகுருநாதன்             கோபாலகிருஷ்ண கோகலேவை காந்தி தனது அரசியல் குருவாக ஏற்கத் தொடங்கியிருந்தார். அவரது வேண்டுகோளை ஏற்று இந்தியாவைப் புரிந்துகொள்ள பல சுற்றுப்பயணங்களை மேற்கொண்டார். பம்பாய் கவர்னர் காந்தியை சந்திக்க விரும்பும் செய்தியை கோகலே மூலம் அறிந்து கவர்னர் வெலிங்கடனைச் சந்தித்தார். அரசு தொடர்பான நடவடிக்கைகள் தொடங்கும் முன் நீங்கள் வந்து என்னைச் சந்திக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். எதிராளியின் கருத்துகளை அறிந்து“இந்தியாவில்  காந்தியின் தொடக்ககால சத்தியாக்கிரகங்கள்”-ஐ படிப்பதைத் தொடரவும்.

மொழி அரசியல்: அன்றும் இன்றும்

    மொழி அரசியல்: அன்றும் இன்றும் மு.சிவகுருநாதன்             வரி வடிவம் இல்லாத தொல் பழங்காலங்களில் பாறை ஓவிய மொழியே உணர்வுகளை வெளிப்படுத்தும் வழியாக இருந்தது. இந்த ஓவியங்கள் ஒரு கட்டத்தில் சித்திர எழுத்துகளாக உருமாற்றம் அடைகின்றன. இதுவே சிந்துவெளி சித்திர எழுத்துக் குறியீடுகளாக நமக்குக் கிடைத்துள்ளது. அவை ஓவியத்தைப் போலவே மறைபொருளைக் கொண்டதாக இருந்தது; இன்றும் இருக்கிறது. ஐராவதம் மகாதேவன், அஸ்கோ பர்போலா போன்றோர் இந்தப் புதிர்களை ஓரளவு விடுவித்துள்ளனர். எழுத்தும் வரி வடிவங்களும் உருவான“மொழி அரசியல்: அன்றும் இன்றும்”-ஐ படிப்பதைத் தொடரவும்.

தகைசால் பள்ளிகளும் பிஎம் ஶ்ரீ பள்ளிகளும்

தகைசால் பள்ளிகளும் பிஎம் ஶ்ரீ பள்ளிகளும் மு.சிவகுருநாதன்              தமிழகத்தில் திமுக அரசு பதவியேற்று ஓராண்டு நிறைவடைந்ததை முன்னிட்டு, அரசு, ஊராட்சி ஒன்றிய, நகராட்சி மற்றும் மாநகராட்சி தொடக்கப் பள்ளி மாணவர்களுக்கு காலைச் சிற்றுண்டி, குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து மருத்துவ பரிசோதனை, தகைசால் பள்ளிகள், நகர்ப்புற மருத்துவ நிலையம், ‘உங்கள் தொகுதியில் முதல்வர்’ திட்ட விரிவாக்கம் உள்ளிட்ட ஐந்து  திட்டங்களை  மே 07, 2022 அன்று சட்டப்பேரவையில் 110 விதியின்கீழ் முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.             “ஏப்ரல் மாதம்தகைசால் பள்ளிகளும் பிஎம் ஶ்ரீ பள்ளிகளும்-ஐ படிப்பதைத் தொடரவும்.

உணவும் இந்தியாவும்

உணவும் இந்தியாவும் மு.சிவகுருநாதன்          இந்திய உணவு என்று ஒன்றைச் சுட்ட முடியாது. இந்தியா என்பது பல்வேறு கலாச்சாரங்களின் தொகுப்பு. இவற்றில் பல நூறு வகையான உணவுமுறைகள் வழக்கில் உண்டு. அவை பழங்காலத்திலிருந்தே மத்திய ஆசியா, பாரசீகம், அரேபியா, ஐரோப்பா, சீனா, ஜப்பான் போன்ற பல பகுதி உணவுமுறைகளின் தாக்கங்களுக்கு ஆட்பட்டுள்ளன.       இவற்றை வட மற்றும் தென்னிந்திய உணவுகள் என்று வகைப்படுத்துவது கூட பொருத்தமாக இருக்காது. வடகிழக்கு மாநிலங்களின் கலாச்சாரமும் உணவுப்பண்பாடும் வேறானது. அதைப்போலவே ஜம்மு-காஷ்மீர்,“உணவும் இந்தியாவும்”-ஐ படிப்பதைத் தொடரவும்.

உணவும்  உலகமும்

உணவும்  உலகமும் மு.சிவகுருநாதன்         உலகில் ஐந்து வகையான காலநிலைகள் நிலவுகின்றன.  அவை வெப்பமண்டல (Tropical), மித வெப்ப மண்டல (Moderate or Temperate), வறண்ட (Dry), கண்ட (Continental), துருவக் காலநிலைகள் (Polar)  என வகைப்படுத்தப்படுகின்றன. இவற்றில் உட்பிரிவுகளும் உண்டு. இதனையொட்டியே இயற்கைத் தாவரங்களும் வேளாண் பயிர்களும் வளர்கின்றன. நிலத்தோற்றம், மண்வளம், நீர்வளம், பணியாளர்கள்  போன்றவற்றைவிட வேளாண்மையை நிர்ணயிக்கும் காரணிகளில் முதன்மையான ஒன்றாக காலநிலை (Climate) இருக்கிறது. உதாரணமாக மிதவெப்பமண்டலப் பயிர் கோதுமையை வெப்பமண்டலமான தென்னிந்தியாவில்“உணவும்  உலகமும்”-ஐ படிப்பதைத் தொடரவும்.

குழந்தைகளுக்கான உணவுகள்

குழந்தைகளுக்கான உணவுகள் மு.சிவகுருநாதன் உணவே மருந்து என்பார்கள். உணவுதான் நம்மை இயங்கவும் வாழவும் வைக்கிறது. எனவே இது முதன்மையானதாகவும் சிறப்பானதாகவும் இருக்க வேண்டியது அவசியமாகிறது. சரிவிகித உணவு, சீருணவு, சத்துணவு என்பதெல்லாம் வெறும் சொற்களல்ல; இதன் பின்னணியில் நீண்ட மரபு இருக்கிறது. இன்றைய வணிக உலகில் அம்மரபு தொலைக்கப்பட்டது. கர்ப்பிணிப் பெண்களுக்கும் கருவில் வளரும் குழந்தைகளுக்கு உணவூட்டத்தில் அளிக்கப்படும் முக்கியத்துவம் குழந்தை பிறந்தவுடன் சற்றுக் குறைந்துவிடுவது இயல்பாக காணப்படுகிறது. இதற்குப் பல்வேறு புறக்காரணிகள் உள்ளன. 3 வயதுக்குப்“குழந்தைகளுக்கான உணவுகள்”-ஐ படிப்பதைத் தொடரவும்.

நவதாராளவாதம் எனும் பொருளாதார அடிமைமுறை

நவதாராளவாதம் எனும் பொருளாதார அடிமைமுறை மு.சிவகுருநாதன்     பேரா.அ.மார்க்ஸ்  அவர்கள் தமிழ்ச்சூழலில் நன்கறியப்பட்ட மார்க்சிய அறிஞர். இலக்கியம், அரசியல், மார்க்சியம், தலித்தியம், பெரியாரியம், அம்பேத்கரியம், காந்தியம், பின்நவீனத்துவம், அடித்தள ஆய்வுகள், பவுத்தம், இஸ்லாம், மனித உரிமைகள், கல்வி எனப் பல்வேறு களங்களில் கடந்த 40 ஆண்டுகளுக்கு மேலாகப் பணியாற்றி வருபவர்.         இவரின் நவதாராளவாதம் (Neoliberalization) குறித்த அறிமுகநூல் ஒன்றை எழுத்து பிரசுரம் (ஜீரோ டிகிரி பப்ளிஷிங்) வெளியிட்டுள்ளது. நவதாராளவாதததைக் கடுமையாக விமர்சிக்கும் இடதுசாரிச்“நவதாராளவாதம் எனும் பொருளாதார அடிமைமுறை”-ஐ படிப்பதைத் தொடரவும்.