61. இந்து மதத்தை அம்பலப்படுத்துவதும் மாற்றுகளைக் கண்டடைதலும்

61. இந்து மதத்தை அம்பலப்படுத்துவதும் மாற்றுகளைக் கண்டடைதலும் மு.சிவகுருநாதன் (இந்நூல் என் வாசிப்பில்… தொடர்.) (பகத்சிங் மக்கள் சங்கம் சார்பில் வழக்கறிஞர் பொ.இரத்தினம் அவர்கள் தொகுத்து, ஜனவரி 2017 –ல் வெளியிட்ட இரண்டு சிறுவெளியீடுகள் பற்றிய அறிமுகப்பதிவு.) மனித உரிமைப் போராளி வழக்கறிஞர் பொ.இரத்தினம் அவர்கள் இதுவரையில் வெளியிட்டுள்ள துண்டறிக்கைகள், சிறு வெளியீடுகள் ஆகியவற்றைத் தொகுத்து வெளியிட்டால், அது மிகச் சிறந்த சமூக, அரசியல், மனித உரிமை ஆவணமாக அமையும். இந்திய சமூகத்தைப் பீடித்துள்ள சாதிய நோய்க்கூறைத்“61. இந்து மதத்தை அம்பலப்படுத்துவதும் மாற்றுகளைக் கண்டடைதலும்”-ஐ படிப்பதைத் தொடரவும்.

அம்பேத்கர் சட்ட உதவி சங்கம் தொடக்க விழா

அம்பேத்கர் சட்ட உதவி சங்கம் தொடக்க விழா, பகத்சிங் மக்கள் சங்கம் அறிமுக விழா நாள்: 29.01.2017 ஞாயிற்றுக்கிழமை நேரம்: காலை 10:00 மணி முதல் மாலை 5:00 மணி வரை. இடம்: டாக்டர் விஜயராகவாச்சாரியார் நினைவு நூலகக் கட்டிடம் (மாடிப்பகுதி) செரி ரோடு,    சேலம்.   (இது அமைப்பு விளக்கத் துண்டறிக்கை. பங்கற்பாளர்கள் பட்டியல் நிகழ்ச்சி நிரலுடன் பின்னர் வெளியாகும்.)       இந்திய அரசியல் சட்டத்தை மீறிச்செயல்படுகிற அரசுகளும், நிர்வாகங்களும் கூடிக்கொண்டுள்ளன. எங்கு பார்த்தாலும்“அம்பேத்கர் சட்ட உதவி சங்கம் தொடக்க விழா”-ஐ படிப்பதைத் தொடரவும்.

காந்தியும் இன்குலாப்பும் இணையும் புள்ளி மற்றும் ஜெயா மார்க்ஸ்

காந்தியும் இன்குலாப்பும் இணையும் புள்ளி மற்றும் ஜெயா மார்க்ஸ் மு.சிவகுருநாதன் தோழர் நெடுவாக்கோட்டை உ. ராஜேந்திரன். மா.லெ. இயக்கவாதி, ஓய்வு பெற்ற ஆசிரியர், அ.மார்க்சின் நெருங்கிய நண்பர், தோழர். அ.மா. வின் மன்னார்குடி நினைவுகளைக் கரைய வைப்பவர். அது பற்றிப் பேசும்போது இவரைக் குறிப்பிடத் தவறுவதில்லை அ.மார்க்ஸ். இரண்டு ராஜேந்திரன்களில் இவர் ஒருவர். மற்றொருவர் வழக்கறிஞர் சிவ.ராஜேந்திரன். பல்லாண்டுகளாக உடல் நலிவுற்று துன்பப்பட்டபோதிலும் கருத்தியல், கொள்கை, வாசிப்பு எதையும் மறக்காமலிருக்கும் தோழரை பொங்கலன்று (ஜன. 14, 2017)“காந்தியும் இன்குலாப்பும் இணையும் புள்ளி மற்றும் ஜெயா மார்க்ஸ்”-ஐ படிப்பதைத் தொடரவும்.

வாய் பேசமுடியாத காளைகளை வைத்து ஆதிக்க சாதிகளின் காலித்தன, காட்டுமிராண்டித்தன வேலைத்திட்டம்

வாய் பேசமுடியாத காளைகளை வைத்து ஆதிக்க சாதிகளின் காலித்தன, காட்டுமிராண்டித்தன வேலைத்திட்டம் பொ. இரத்தினம், வழக்கறிஞர், அமைப்பாளர் பகத்சிங் மக்கள் சங்கம் அலைபேசி: 94434 58118 கடந்த சில ஆண்டுகளாக பண்பாடு, கலாச்சாரம், வீர விளையாட்டு என்கிற போர்வையில் ஜல்லிக்கட்டு பற்றிய அதீத புனைவுகள் கட்டமைக்கப்பட்டு இளைஞர்கள் எழுச்சி என போலியான சித்தரிப்புகள் அரங்கேற்றப்படுகின்றன. ஜல்லிக்கட்டு பற்றி இங்கு பரப்பப் படுபவை பெரும்பாலும் பொய், பித்தலாட்ட மோசடிகளே. கலாச்சாரம், வீரத்தன்மை போன்றவற்றைச் சமூகம் சார்ந்ததாக சித்தரிப்பது ஆதிக்க“வாய் பேசமுடியாத காளைகளை வைத்து ஆதிக்க சாதிகளின் காலித்தன, காட்டுமிராண்டித்தன வேலைத்திட்டம்”-ஐ படிப்பதைத் தொடரவும்.

ஒரு நாள் போதுமா?

ஒரு நாள் போதுமா? – மு.சிவகுருநாதன்       (40 –வது சென்னைப் புத்தகக் கண்காட்சியில் ஒருநாள் வாசக அனுபவம்) சென்ற ஆண்டு ஜனவரியில் (2016) மழை வெள்ளத்தால் சென்னைப் புத்தகக் கண்காட்சி ஒத்திவைக்கப் பட்டது. பின்னர் 2016 மே மற்றும் ஜூனில் நடந்த கண்காட்சிக்கு குடும்பச் சூழலால் கலந்துகொள்ள இயலாமற் போய்விட்டது. இடைப்பட்ட காலத்தில் பாரதி புத்தகாலயம், நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் ஆகியவற்றிடமிருந்து நேரடியாக நூல்களை வாங்க முடிந்தது.        தற்போது நடந்துகொண்டுள்ள புத்தகக் கண்காட்சிக்கு“ஒரு நாள் போதுமா?”-ஐ படிப்பதைத் தொடரவும்.

திட்டமிட்டுப் பரப்பப்படும் வதந்திகளின் அரசியல் பின்னணி

திட்டமிட்டுப் பரப்பப்படும் வதந்திகளின் அரசியல் பின்னணி மு.சிவகுருநாதன்   சசிகலாவை அ.இ.அதி.மு.க. பொதுச் செயலாளராக்கவும் முதல்வராக்கவும் கருத்தொற்றுமைப் பரப்புரை தொடர்ந்து மேற்கொள்ளப்படுகிறது. இதற்கு ஊடகங்களுக்குப் பெரும்பங்குண்டு. இதன்மூலம் ஒத்தக் கருத்து என்பதான பாவனைகளும் மாற்றுக்கருத்துகளை மூழ்கடிக்கும் சூழ்ச்சியும் நிறைந்திருக்கிறது. கட்சிக்குள் நடக்கும் இந்த பாவனைகளாவது தொலைந்து போகட்டும் என்று விட்டு விடலாம். பொதுவெளியில் இதற்கென திட்டமிட்டு உருவாக்கப்படும் வதந்திகள் மிக மோசமானவை. இந்துத்துவப் பரப்புரையாளர்கள் செய்யும் சமூக வலைத்தளப் பரப்புரைகளுக்கு இணையானதாக இது உள்ளது. கட்சிக்குள் இணக்கமான“திட்டமிட்டுப் பரப்பப்படும் வதந்திகளின் அரசியல் பின்னணி”-ஐ படிப்பதைத் தொடரவும்.

புவியியல் அறிவுத் தேடலும் கொஞ்சம் நட்பும்…

புவியியல் அறிவுத் தேடலும் கொஞ்சம் நட்பும்… மு.சிவகுருநாதன்          டிசம்பர் 31, 2016 ‘தி இந்து’ நாளிதழில் “மழையை முன்கூட்டியே கணிக்கும் பள்ளி ஆசிரியர்” என்ற தலைப்பில் தோழர் ந.செல்வகுமாரைப் பற்றிய செய்தி வெளியானது. அச்செய்தி எனது பழைய பள்ளித் தோழரைப் பற்றியது. எனவே பழம் நினைவுகளைக் கிளறிவிட்டது. தற்போது மன்னார்குடிக்கு அருகே செருமங்கலம் ஊ.ஒ.ந. பள்ளியில் பணியாற்றும் செல்வகுமாரின் பூர்வீகம் வேதாரண்யத்தைச் சேர்ந்த தகட்டூர் கிராமம். திருவாரூருக்கு நட்ராஜ் மெஸ்சைப் போல தகட்டூருக்கு“புவியியல் அறிவுத் தேடலும் கொஞ்சம் நட்பும்…”-ஐ படிப்பதைத் தொடரவும்.

கல்வி உரிமையில் தலையிட இவர்கள் யார்?

கல்வி உரிமையில் தலையிட இவர்கள் யார்? மு.சிவகுருநாதன் வாட்ஸ் அப்பில் தோழர் சக்திவேல் கீழ்க்கண்ட பதிவென்று இட்டிருந்தார். “அன்புசால் கல்வியாளர்களே, 5 – ம் வகுப்பு வரை மட்டுமே கட்டாயத் தேர்ச்சி வரவேற்கக் கூடியதல்ல. காரணம் தேர்வு முறை மாற்றப் படவேண்டுமே தவிர தேர்ச்சி முறையினை அல்ல காலத்திற்கேற்ப தேர்வு முறை மாற்றத்தைக் காணவேண்டும் ஆனால் அதுபோல் வரையறைக்குட்பட்டு மாற்றத்தைக் கண்டிருந்த போதும் பொதுவாக சரியாக நடைமுறைப் படுத்தப் படவில்லை தேர்வு முறையினால் ஒழுக்கத்தை உருவாக்க முடியும்“கல்வி உரிமையில் தலையிட இவர்கள் யார்?”-ஐ படிப்பதைத் தொடரவும்.

புத்தாண்டுச் சவால்கள்.

புத்தாண்டு எதிர்கொள்ளும் சவால்கள். மு.சிவகுருநாதன் பண மதிப்பு நீக்க நடவடிக்கைகள் மூலம் மக்களின் கவனம் முழுவதையும் திசை திருப்பிவிட்டு தனது மக்கள் விரோத, காவிமய, கார்ப்பரேட் ஆதரவு வேலைகளைச் சந்தடிச் சாக்கில் வெகுவிரைவாகச் செய்து வருகிறது மத்திய அரசு. ஒருசிலவற்றை மட்டும் இங்கு பட்டியலிடுவோம். ஊழல். தேசபக்திச் சொல்லாடல்கள். மதவெறி வன்செயல்கள். எல்லையில் வெறிக்கூச்சல். காஷ்மீரில் அப்பாவி மக்கள் மீதான வன்கொடுமைகள். அப்சா போன்ற அடக்குமுறைச் சட்டங்களின் கொடுங்கோன்மை. சிறுபான்மையினர் விரோதப் போக்கு. விவசாய விரோதக் கொள்கைகள்.“புத்தாண்டுச் சவால்கள்.”-ஐ படிப்பதைத் தொடரவும்.