பழ.அதியமான்நூல்கள்

பழ.அதியமான் நூல்கள் (புத்தகத் திருவிழாப் பரிந்துரைகள் – 029) மு.சிவகுருநாதன்          ஆய்வாளர் பழ.அதியமான் (1961) விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்தவர். அகில இந்திய வானொலியில் பணியாற்றி  ஓய்வு பெற்றவர். இவரது முனைவர் பட்ட ஆய்வு வ.ரா. பற்றியது. வரலாற்று ஆய்வு நூல்களை எழுதி வருகிறார்.         அறியப்படாத ஆளுமை: ஜார்ஜ் ஜோசப்,  வைக்கம் போராட்டம், சேரன்மாதேவி குருகுலப் போராட்டமும் திராவிட இயக்கத்தின் எழுச்சியும்  போன்றவை இவரது முதன்மையான நூல்களாகும்.      எழுத்தாளர் கு.அழகிரிசாமி ஆக்கங்களை தொகுத்துள்ளார். பாரதி“பழ.அதியமான்நூல்கள்”-ஐ படிப்பதைத் தொடரவும்.

ஜமாலன் நூல்கள்

ஜமாலன் நூல்கள் (புத்தகத் திருவிழாப் பரிந்துரைகள் – 028) மு.சிவகுருநாதன்               தமிழில் மொழி, உடல், அரசியல் குறித்தும் நவீன கோட்பாடுகள் குறித்தும் எழுதியுள்ள வெகுசிலரில் ஜமாலன் முக்கியமானவர். இவர் கும்பகோணத்திற்கு அருகிலுள்ள திருநாகேஸ்வரத்தைச் சேர்ந்தவர்.        மொழி ஒரு உடலின் ஆறாவது புலனாகவும் சமூகத்தையும் ஓர் உயிருள்ள உடலையும் இணைக்கும் பொதுப்புலனாக உள்ளது என்பார் ஜமாலன். மேலும் மொழி ஒரு கூட்டுச் செயலாக இருப்பதால் சமூகத்தையும் மனிதர்களையும் கட்டமைக்கிறது என்கிறார்.       கோட்பாட்டுத் திறனாய்வுகள் மற்றும்“ஜமாலன் நூல்கள்”-ஐ படிப்பதைத் தொடரவும்.

சு.கி.ஜெயகரன் நூல்கள்

சு.கி.ஜெயகரன் நூல்கள் (புத்தகத் திருவிழாப் பரிந்துரைகள் – 027) மு.சிவகுருநாதன்  சூழலியல், திரைப்படம் சார்ந்த பல்வேறு நூல்களை எழுதிய தியோடர் பாஸ்கரனின் சகோதரர் சு.கி.ஜெயகரன் ஆவார். இவர் எழுதிய தமிழில் வெளியானவை நான்கு நூல்கள் மட்டுமே. அவை தமிழில் குறிப்பிடத்தக்க நூல்களாக உள்ளன.        குமரி நில நீட்சி, மணல்மேல் கட்டிய பாலம்  ஆகிய மூன்று நூல்கள் தற்போது அச்சில் காலச்சுவடு பதிப்பகத்தால்  வெளியிடப்பட்டுள்ளது. தளும்பல் அச்சில் இல்லை. கிண்டிலில் கிடைக்கிறது.      ‘லெமூரியா’ சொல்லின் பெயர்க்காரணமே“சு.கி.ஜெயகரன் நூல்கள்”-ஐ படிப்பதைத் தொடரவும்.

சு.தமிழ்ச்செல்வி நூல்கள்

சு.தமிழ்ச்செல்வி நூல்கள் (புத்தகத் திருவிழாப் பரிந்துரைகள் – 026) மு.சிவகுருநாதன்                திருவாரூர் மாவட்டத்தின் தென்கோடியில் அலையாத்திக் காடுகளை ஒட்டிய  புதிய முத்துப்பேட்டை வட்டத்தைச் சேர்ந்த கற்பகநாதர்குளம் கிராமத்தைச் சேர்ந்தவர் எழுத்தாளர் சு.தமிழ்ச்செல்வி. அரசுப்பள்ளி ஆசிரியரான இவர் ‘களம் புதிது’ கவிஞர் கரிகாலனின் இணையர். தற்போது கடலூர் மாவட்டம்  விருத்தாசலத்தில் வசிக்கிறார்.       இவர் தமது 30 வயதிற்கு மேல் எழுத்துலகில் நுழைந்தார். தொடர்ந்த பல நாவல்களையும் சில சிறுகதைகளையும் எழுதி பலரது கவனிப்பைப் பெற்றார். இவரது“சு.தமிழ்ச்செல்வி நூல்கள்”-ஐ படிப்பதைத் தொடரவும்.

தியோடர் பாஸ்கரன் நூல்கள்

தியோடர் பாஸ்கரன் நூல்கள் (புத்தகத் திருவிழாப் பரிந்துரைகள் – 025) மு.சிவகுருநாதன்           இந்திய அஞ்சல்துறையில் உயர் அதிகாரியாக இருந்து ஓய்வு பெற்றவர். சுற்றுச்சூழலியர், திரை விமர்சகர், திரைப்பட வரலாற்றாளர் போன்ற  பன்முகத் தன்மையை தமது எழுத்துகளில் வெளிப்படுத்துபவர்.       சூழலியல், திரைப்படம் சார்ந்த பல்வேறு நூல்களை ஆங்கிலத்திலும் தமிழிலும் எழுதியவர். இத்துறை சார்ந்த நூல்களையும் தொகுத்துள்ளார். இவரது திரை ஆய்வுகள் மிக அதிக எண்ணிக்கையிலானவை.      ரோஜா முத்தையா நூலகத்தின் இயக்குநராக பணியாற்றினார். ‘அவள் பெயர்“தியோடர் பாஸ்கரன் நூல்கள்”-ஐ படிப்பதைத் தொடரவும்.

தென்னவன் வெற்றிச்செல்வன்  நூல்கள்

தென்னவன் வெற்றிச்செல்வன்  நூல்கள் (புத்தகத் திருவிழாப் பரிந்துரைகள் – 024) மு.சிவகுருநாதன்          நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணிக்கு அருகிலுள்ள பெரியதும்பூரில் பிறந்த தென்னவன் வெற்றிச்செல்வன் தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக் கழகத்தின் அயல் நாட்டுத் தமிழ்க் கல்வித்துறை இணைப் பேராசிரியராக பணிபுரிகிறார்.          கவிஞர், சிறுகதையாளர், ஆய்வாளர், பேச்சாளர், குறும்பட மற்றும் ஆவணப்பட இயக்குநர், விமர்சகர் என்று தமிழ் இலக்கியப் பரப்பில் செயல்படும் பேராசிரியராக இருக்கிறார். இளம் எழுத்தாளர்களை அடையாளம் கண்டு ஊக்கப்படுத்தும் செயல்பாடுகளை முன்னெடுத்து“தென்னவன் வெற்றிச்செல்வன்  நூல்கள்”-ஐ படிப்பதைத் தொடரவும்.

இரா.காமராசு  நூல்கள்

இரா.காமராசு  நூல்கள் (புத்தகத் திருவிழாப் பரிந்துரைகள் – 023) மு.சிவகுருநாதன்           திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி மேலவாசலில் பிறந்த இரா.காமராசு தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக் கழகத்தின் நாட்டுப்புறவியல் துறை துறைத்தலைவராகப் பணியாற்றி வருகிறார். தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றத்தின் பொதுச் செயலாளர் பொறுப்பு வகிக்கிறார்.         கவிஞர், சிறுகதை எழுத்தாளர், விமர்சகர், ஆய்வாளர், சொற்பொழிவாளர், பேராசிரியர் என்ற நிலைகளில் பல்வேறு இலக்கியப் பணிகளை மேற்கொண்டு வருகிறார். பல இளம் படைப்பாளிகளைக் கண்டுபிடித்து பாராட்டியும் விமர்சனங்கள் செய்தும் இலக்கிய“இரா.காமராசு  நூல்கள்”-ஐ படிப்பதைத் தொடரவும்.

விஷ்ணுபுரம் சரவணன்  நூல்கள்

விஷ்ணுபுரம் சரவணன்  நூல்கள் (புத்தகத் திருவிழாப் பரிந்துரைகள் – 022) மு.சிவகுருநாதன்           விஷ்ணுபுரம் சரவணன் கவிஞர், இதழியலாளர்; குறிப்பிடத்தகுந்த குழந்தை இலக்கியப் படைப்பாளியாக விளங்குகிறார். வழமையான நீதிகளைக் குழந்தைகளிடம் திணிப்பது இவரது பணியல்ல. அவர்களைச் சுயமாகச் சிந்திக்க வைக்கவும் அவர்களின் அறிவுத் தேடலை விரிவாக்கவும் இவரது படைப்புகள் உதவுகின்றன.         இன்றைய காலகட்டத்தின் சூழலியல் அவசியத்தையும் குழந்தைகளின் வழியே முன்னெடுக்கவும் அவர்களை ஈடுபடுத்தவும் fantasy சார்ந்த ஒற்றைச் சிறகு ஓவியா போன்ற சிறார் கதைகளை எழுதி“விஷ்ணுபுரம் சரவணன்  நூல்கள்”-ஐ படிப்பதைத் தொடரவும்.

ச.மாடசாமி  நூல்கள்

ச.மாடசாமி  நூல்கள் (புத்தகத் திருவிழாப் பரிந்துரைகள் – 021) மு.சிவகுருநாதன்  கல்வியாளர் ச.மாடசாமி கல்வியை குழந்தைமயப்படுத்துவதிலும் மக்கள் மயபடுத்துவதிலும் தீவிரம் காட்டும் செயல்பாட்டாளர். அவருடைய எழுத்துகள் யாவருக்கும் புரியும்வண்ணம் எளிய நடையில் அமைந்தவை.        தமிழக அரசின் கல்விக்கொள்கைக் குழுவில் இருக்கிறார். நிறைய சிறுநூல்களைப் படைத்துள்ளார்.  என் சிவப்புப் பால்பாயிண்ட் பேனா, எனக்குரிய இடம் எங்கே?, ஆளுக்கொரு கிணறு, குழந்தைகளின் நூறு மொழிகள்  போன்ற நூல்கள் ஆழமான கல்விச்சிந்தனைகளை எளிய மொழியில் தருபவை.        ‘என்“ச.மாடசாமி  நூல்கள்”-ஐ படிப்பதைத் தொடரவும்.

இரா எட்வின்  நூல்கள்

இரா எட்வின்  நூல்கள் (புத்தகத் திருவிழாப் பரிந்துரைகள் – 020) மு.சிவகுருநாதன்           கல்விச் சிந்தனைகளை குழந்தைகள், பெரியவர்கள் என அனைவருக்குமான எளிய மொழி நடையில் எழுதுபவர்கள் என இப்போதைக்கு இருவரைச் சுட்டமுடியும். ஒருவர்: பேரா. ச.மாடசாமி, இன்னொருவர்: கவிஞர் இரா.எட்வின். இவர்கள் தங்களுடைய அனுபவங்கள் வாயிலாக சிக்கல் மிகுந்த கல்விப் பிரச்சினைகளை மிக  எளிமையாகவும் நேர்மையாகவும் அணுகி கல்விச் சிந்தனைகளை அகலிக்கச் செய்கின்றனர்.            கல்வித்துறையில் பணி செய்பவர்கள் பெரும்பாலும் கல்வியாளர்களாக இருப்பதில்லை. விதிவிலக்கு இரா.எட்வின்.“இரா எட்வின்  நூல்கள்”-ஐ படிப்பதைத் தொடரவும்.