விமர்சனங்களுக்கு  அப்பால்…

விமர்சனங்களுக்கு  அப்பால்… மு.சிவகுருநாதன்           எழுத்தாளர் ஜெயமோகன் தனது இணையப் பக்கத்தில் (நமது மாணவர்கள் – நவ. 23/2021) வாசகி ஒருவரின் மடலுக்குப் பதிலாக எழுதிய குறிப்பொன்றில் அரசுப்பள்ளிகளையும் மாணவர்களையும் (பொறுக்கிகள்) என்று விமர்சித்தது இன்று விவாதப் பொருளாகியுள்ளது. இது குறித்த மூன்று எதிர்வினைகளை மூத்த தோழர் வே.மு. பொதியவெற்பனார் எனும் திருவாளர் பொதிகைச் சித்தர் முகநூலில் பதிவிட்டு என்னையும் அதில் இணைத்திருந்தார். அதில் எனது கருத்தாக கீழ்க்கண்ட எதிர்வினையாற்றியிருந்தேன்.   “விமர்சனங்களுக்கு  அப்பால்…”-ஐ படிப்பதைத் தொடரவும்.

ஒரு நினைவுக் குறிப்பு

ஒரு நினைவுக் குறிப்பு மு.சிவகுருநாதன்             வேதாரண்யம் ஒன்றியம் சரபோஜிராஜபுரம் ஊ.ஒ.நடுநிலைப் பள்ளியில் (1983-1986)  நான் 6-8 வகுப்புகளைப் படித்தேன். அப்பள்ளி இன்று மேனிலைப்பள்ளி.  அப்போதெல்லாம் எட்டாம் வகுப்பிற்கு மாவட்ட அளவிலானப் பொதுத்தேர்வு உண்டு. அத்தேர்வை அருகிலுள்ள உயர்நிலை அல்லது மேனிலைப் பள்ளிகளில்தான் எழுத வேண்டும். நாங்கள் தகட்டூர் அரசு உயர்நிலைப்பள்ளியில் (இப்போது அது மேனிலைப்பள்ளியாக உள்ளது.)  எட்டாம் வகுப்புத் தேர்வுகளை எழுதினோம்.          ஒன்பதாம் வகுப்பிற்கு“ஒரு நினைவுக் குறிப்பு”-ஐ படிப்பதைத் தொடரவும்.

உரிமைப் போராட்டங்களின் எதிர்காலம்?

உரிமைப் போராட்டங்களின் எதிர்காலம்? மு.சிவகுருநாதன்       உத்தரப்பிரதேசம் லக்கிம்பூரில் பேரணியாக சென்ற விவசாயிகளில்  நால்வர்  ஒன்றிய உள்துறை இணையமைச்சரின் மகன் ஆசிஷ் மிஸ்ராவின் கார் ஏற்றிக் கொல்லப்பட்டுள்ளனர். பலர் காயமடைந்துள்ளனர். இந்தக் கோரப் படுகொலைகளை பதிவு செய்த உள்ளூர் பத்தரிக்கையாளர் ஒருவரும் கொல்லப்பட்டுள்ளார். உடன் நிகழ்ந்த வன்முறையில் மேலும் நால்வர் பலியாயினர்.       சற்றுப் பின்னோக்கிப் பார்த்தால் இது போன்ற, திட்டமிட்டு நிகழ்த்தப்படும்  பல்வேறு வன்முறை வெறியாட்டங்களை பட்டியலிட முடியும். ஒன்றிய அரசின் மூன்று வேளாண் சட்டங்களுக்கு“உரிமைப் போராட்டங்களின் எதிர்காலம்?”-ஐ படிப்பதைத் தொடரவும்.

இன்றைய பகல் பொழுதின் சில பக்கங்கள்…

இன்றைய பகல் பொழுதின் சில பக்கங்கள்… மு.சிவகுருநாதன்     நாங்கள் சென்றபோது முதல் அமர்வு முடிந்துபோயிருந்தது. கவிஞர் லார்க் பாஸ்கரனின் ‘மரணக்குறிப்புகள்’ என்ற கவிதைத் தொகுப்பிற்கான விமர்சனக் குறிப்பை கவிஞர் சுகன்யா ஞானசூரி நிறைவு செய்திருந்தார். அதன் பிறகு சிறப்பு அழைப்பாளராக பங்கேற்ற பேரா. அ.மார்க்ஸ் இன்றைய இளைஞர்களின் வாழ்வனுபவத்தில் வெளிப்படும் புது வகை எழுத்துமுறைகள் பற்றிக் குறிப்பிட்டு தனது சிறிய உரையை முடித்துக் கொண்டார்.     இரண்டாவது அமர்வு, எழுத்தாளர் ஜி.சரவணனின் ‘பார்த்தாவுக்கு எழுதாத கடிதம்’“இன்றைய பகல் பொழுதின் சில பக்கங்கள்…”-ஐ படிப்பதைத் தொடரவும்.

வாக்ரிகள் என்று அழைப்போம்!

வாக்ரிகள் என்று அழைப்போம்! மு.சிவகுருநாதன்      இன்றைய (01/11/2021) தலையங்கத்தில் வெளிப்படும் ஒரு விளிம்பு நிலைச் சமூகம் குறித்த கரிசனம் பாராட்டிற்குரியது. ஆனால் அச்சமூகம் ‘வாக்ரிபோலி’ என்ற மொழியடிப்படையில் வாக்ரிகள் என அழைக்கப்படுவதை ஒரு பாரம்பரிய தமிழ் நாளிதழ் கண்டுகொள்ளாமல் இருப்பது வியப்பைத் தருகிறது.      உங்களைப் போன்ற நாளிதழ்கள்தான் அடைப்புக்குறிக்குள்ளாவது இப்பெயர்களைக் குறிப்பிட்டு எழுதி, அவற்றைப் பொதுப் பயன்பாட்டிற்கு வர உதவி புரிய வேண்டும். ‘கூடா நட்பு’ போன்ற சொற்களின் பயன்பாட்டைப் போலவே இவற்றையும் வாசகர்களாகிய“வாக்ரிகள் என்று அழைப்போம்!”-ஐ படிப்பதைத் தொடரவும்.

புயல்களுக்குப் பெயர் வைப்பது ஏன்? எதற்கு? எப்படி?

புயல்களுக்குப் பெயர் வைப்பது ஏன்? எதற்கு? எப்படி? மு.சிவகுருநாதன்      புயல்களுக்கு ஏன் பெயர் வைக்கிறார்கள்? எதற்காக வைக்கப்படுகிறது? எப்படி வைக்கப்படுகிறது? என்று தெரிந்து கொள்வோமா! நமக்கு கூட பெயர் இருக்கிறதே! பெயர்கள் இல்லாவிட்டால் என்னாகும்? எப்படி இருக்கும்?      ஓராண்டில் ஒன்றுக்கு மேற்பட்ட புயல்கள் உருவாகக்கூடும். அவை உருவான நாள், மாதம் ஆண்டு, இடம் ஆகியவற்றை மட்டும் சொல்லும்போது பல்வேறு குழப்பங்கள் ஏற்படலாம். வானிலை மற்றும் காலநிலையை ஆய்வு செய்வோர், அறிவியலாளர்கள், பேரிடர் நிர்வாகத்தினர், ஊடகவியலாளர்கள்,“புயல்களுக்குப் பெயர் வைப்பது ஏன்? எதற்கு? எப்படி?”-ஐ படிப்பதைத் தொடரவும்.