இருண்மை வெளியில் அல்லாடும் கலையும் கலைஞர்களும்

இருண்மை வெளியில் அல்லாடும் கலையும் கலைஞர்களும் மு.சிவகுருநாதன் (சிவகுமார் முத்தய்யாவின் ‘குரவை’ நாவல் வெளியீடு மற்றும் விமர்சன அரங்கு குறித்த பதிவு.)             திருவாரூர் அருகேயுள்ள தண்டலை என்னும் கிராமத்தைச் சேர்ந்த சிவகுமார் முத்தய்யா நான்கு சிறுகதைத் தொகுப்புகள், ஒரு குறுநாவல் தொகுப்புகள், ஒரு கட்டுரைத் தொகுப்பு உள்ளிட்ட 7 நூல்களின் ஆசிரியர். அவர் எழுதிய ‘குரவை’ என்னும் முதலாவது நாவலை யாவரும் பதிப்பகம் வெளியிட்டுள்ளது. இதன் வெளியீடு மற்றும் அறிமுகக் கூட்டம் 11/03/2023 மாலை 5“இருண்மை வெளியில் அல்லாடும் கலையும் கலைஞர்களும்”-ஐ படிப்பதைத் தொடரவும்.

பள்ளிக் கலைத் திருவிழா: தாக்கமும் மாற்றமும்

பள்ளிக் கலைத் திருவிழா: தாக்கமும் மாற்றமும் மு.சிவகுருநாதன்              இதுநாள்வரை தமிழகப் பள்ளிகளில் ஆண்டு விழாக்களில் மாணவர்களுக்கான போட்டிகள் நடத்தப்படும். ஆண்டுவிழா நடைபெறாத  பள்ளிகளும் உண்டு. மேலும் விடுதலை நாள், குடியரசு நாள், கல்வி வளர்ச்சி நாள் மற்றும் சூழலியல் மற்றும் சாலைப் பாதுகாப்பு விழிப்புணர்வு   போன்ற நேரங்களில் மாணவர்களுக்குச் சில போட்டிகள் நடத்தப்படுவது வாடிக்கை. இவற்றில் பெருந்திரள் மாணவர்களின் பங்கேற்பு இருக்காது.             இந்தக் கல்வியாண்டு முதல் அரசுப்பள்ளிகளில் மாணவர்களின் தனித்திறமையை வளர்க்க கலைத்“பள்ளிக் கலைத் திருவிழா: தாக்கமும் மாற்றமும்”-ஐ படிப்பதைத் தொடரவும்.

திறப்பு விழா!

திறப்பு விழா! மு.சிவகுருநாதன்            இன்று (20/10/2022) திருவாரூர் மாவட்டம் காட்டூர் அரசு மேனிலைப்பள்ளியில் மூன்று வகுப்பறைக் கட்டடம், இரு திறன் (Smart Class)  வகுப்பறைகள், தொடக்கப்பள்ளியில் ஒரு திறன் வகுப்பறை,  சுற்றுச்சுவர், முன்னாள் தமிழக  முதல்வர்  கலைஞர் மு.கருணாநிதி ‘மணி மகுடம்’ என்ற பெயரில் நாடகம் நடத்தி நன்கொடை வசூலித்துக் கட்டிய தொடக்கப்பள்ளிக் கட்டடத்தைப் புதுப்பித்து  ‘முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் மு.கருணாநிதி நினைவு நூலகம்’ என்ற பெயரில் நூலகம்,  தண்ணீர் வசதியுடன் கூடிய ஆண்கள்,“திறப்பு விழா!”-ஐ படிப்பதைத் தொடரவும்.

கல்விப்புலம் காணாத பாடங்கள்!

கல்விப்புலம் காணாத பாடங்கள்! மு.சிவகுருநாதன் பகுதி: ஒன்று           “உலகின் ஆபத்தான விலங்கு மனிதன்”, என்று குழந்தைகளிடம் நேரடியாகச் சொன்னால் சரிவருமா?  எனவே முகம் பார்க்கும் கன்ணாடியை வழியே  அதன் மூடியைக் கவனமாகத் திறந்து பார்க்கச் சொல்லி புதிர் போடுவதன் மூலமாக உண்மைநிலை இயல்பாக உணர்த்தப்படுகிறது.  இதைப் படிக்கும் குழந்தைகள் கூடுதல் ஆர்வம் தொற்றிக் கொள்ள நூலில் எளிதாக நுழைந்துவிடுகிறார்கள். புவியில் கடைசியாக தோன்றிய மனிதன் கோடிக்கணக்கான ஆண்டுகளாக இப்புவியில் வாழ்ந்துவரும் உயிரினங்களின் அழிவுக்குக் காரணமாக உள்ளான்“கல்விப்புலம் காணாத பாடங்கள்!”-ஐ படிப்பதைத் தொடரவும்.

மணலி அப்துல்காதரின் ‘நன்னூல்’ பதிப்பக வெளியீடுகள்

மணலி அப்துல்காதரின் ‘நன்னூல்’ பதிப்பக வெளியீடுகள் மு.சிவகுருநாதன்              இன்று (15/04/2022) நெடுநாளைய நண்பர் தோழர் மணலி அப்துல்காதர் திருவாரூர் வந்திருந்தார். 1990களில் ‘கிழக்கு’ எனும் சிற்றிதழ் நடத்தியவர். அப்போதிலிருந்து பழக்கம். ‘நிறப்பிரிகை’ கும்பகோணத்தில் நடத்திய புதுமைப்பித்தன் கருத்தரங்கில்தான் முதன்முதலில் சந்தித்தோம். அன்றைய தினம் மறைந்த த.பிரிட்டோ, கொளப்பாடு ச.பாண்டியன் போன்றோருடன் நண்பராகும் வாய்ப்பும் அமைந்தது. பிறகு ராயநல்லூர் பூங்குன்றப் பாண்டியன், இரவிக்குமார், செல்லப்பா போன்றோருடன் நட்புடன் வாசிப்பும் தொடர்ந்தது. தொடர்ந்து இல்லாவிட்டாலும் அவ்வப்போது இலக்கிய, நுண்ணரசியல்“மணலி அப்துல்காதரின் ‘நன்னூல்’ பதிப்பக வெளியீடுகள்”-ஐ படிப்பதைத் தொடரவும்.

‘பன்மை’யின் ஐந்தாவது வெளியீடு

‘பன்மை’யின் ஐந்தாவது வெளியீடு            பேரா.  தென்னவன் வெற்றிச்செல்வன்  எழுதிய  ‘தமிழ்ச் செவ்வியல் – மீளாய்வும் மேலாய்வும்’ என்ற ஆய்வு நூல் பன்மையின் ஐந்தாவது வெளியீடாக வந்துள்ளது. 45 வது சென்னைப் புத்தகக் காட்சியின்போது இந்நூல் வெளியானது. பன்மை வெளியீடு: 05 தமிழ்ச் செவ்வியல் – மீளாய்வும் மேலாய்வும் (ஆய்வுக் கட்டுரைகள்)  பேரா.  தென்னவன் வெற்றிச்செல்வன் முதல் பதிப்பு: பிப்ரவரி 2022 பக்கங்கள்:  136 விலை: ₹ 125 ISBN:   978-81-951842-9-3    நூலின் அணிந்துரையிலிருந்து….        “‘பன்மை’யின் ஐந்தாவது வெளியீடு”-ஐ படிப்பதைத் தொடரவும்.

இன்றைய பகல் பொழுதின் சில பக்கங்கள்…

இன்றைய பகல் பொழுதின் சில பக்கங்கள்… மு.சிவகுருநாதன்     நாங்கள் சென்றபோது முதல் அமர்வு முடிந்துபோயிருந்தது. கவிஞர் லார்க் பாஸ்கரனின் ‘மரணக்குறிப்புகள்’ என்ற கவிதைத் தொகுப்பிற்கான விமர்சனக் குறிப்பை கவிஞர் சுகன்யா ஞானசூரி நிறைவு செய்திருந்தார். அதன் பிறகு சிறப்பு அழைப்பாளராக பங்கேற்ற பேரா. அ.மார்க்ஸ் இன்றைய இளைஞர்களின் வாழ்வனுபவத்தில் வெளிப்படும் புது வகை எழுத்துமுறைகள் பற்றிக் குறிப்பிட்டு தனது சிறிய உரையை முடித்துக் கொண்டார்.     இரண்டாவது அமர்வு, எழுத்தாளர் ஜி.சரவணனின் ‘பார்த்தாவுக்கு எழுதாத கடிதம்’“இன்றைய பகல் பொழுதின் சில பக்கங்கள்…”-ஐ படிப்பதைத் தொடரவும்.

‘கல்விக் குழப்பங்கள்’ வாசிப்பு முகாம் அனுபவங்கள்

‘கல்விக் குழப்பங்கள்’ வாசிப்பு முகாம் அனுபவங்கள் மு.சிவகுருநாதன் எனது முதல் நூலான பாரதி புத்தகாலயத்தின் புக் ஃபார் சில்ரன் வெளியிட்ட ‘கல்விக் குழப்பங்கள்’ நூலின் முதல் நூல் விமர்சனக் கூட்டம் வாசிப்பு முகாமாக நேற்று (04.05.2017) ஈரோடு சத்தியமங்கலம் மைசூரு சாலையில் திம்பம் அருகே கொள்ளேகால் சாலையில் உள்ள அரேபாளையத்தில் நடைபெற்றது. காங்கேயம் வாசகர் வட்டமும் சுடர் தொண்டு நிறுவனமும் இந்நிகழ்வை ஒருங்கிணைத்தன. தோழர்கள் கல்வி மேம்பாட்டுக் கூட்டமைப்பு சு.மூர்த்தி, கனகராஜ், சுடர் நட்ராஜ் ஆகியோர் வெகு“‘கல்விக் குழப்பங்கள்’ வாசிப்பு முகாம் அனுபவங்கள்”-ஐ படிப்பதைத் தொடரவும்.

அரசுப் பள்ளிகளைப் பாதுகாப்பது எப்படி? அல்லது தனியார் பள்ளிகளை ஒழிப்பது எப்படி?

அரசுப் பள்ளிகளைப் பாதுகாப்பது எப்படி? அல்லது தனியார் பள்ளிகளை ஒழிப்பது எப்படி?                                                                                                     – மு.சிவகுருநாதன் (திருவாரூரில் (04.07.2015) நடைபெற்ற கலந்துரையாடல் பற்றியும் இப்பிரச்சினை குறித்த கருத்துக்களையும் இங்கு இணைத்துப் பதிவு செய்கிறேன். மேலும் கல்வி தொடர்பாக பல்வேறு காலகட்டங்களில் எழுதப்பட்ட கட்டுரைகளின் சுட்டிகளை இறுதியில் இணைத்துள்ளேன். இவற்றில் கூறியது கூறல் இருக்கலாம். மன்னிக்கவும்.) “அரசுப் பள்ளிகளை பாதுகாப்போம்; கல்வியில் தனியார்மயக் கொள்கையை ஒழிப்போம்” என்ற தலைப்பில் மாவட்ட அளவிலான கலந்துரையாடல் கூட்டம் திருவாரூர் தெற்குவீதி அ.மோ.தாசு“அரசுப் பள்ளிகளைப் பாதுகாப்பது எப்படி? அல்லது தனியார் பள்ளிகளை ஒழிப்பது எப்படி?”-ஐ படிப்பதைத் தொடரவும்.

புத்தகங்கள் வாங்க அரசு மானியம்

புத்தகங்கள் வாங்க அரசு மானியம் -மு.சிவகுருநாதன் அண்மையில் புதுச்சேரியில் நடைபெற்ற புத்தகக் கண்காட்சிக்குச் சென்றிருந்தேன். புதுச்சேரி அரசின் கலை பண்பாட்டுத்துறை 27.09.2013 முதல் 08.10.2013 முடிய ரோடியர் மில் திடலில் இக்கண்காட்சியை ஏற்பாடு செய்திருந்தது. தமிழகத்தில் நடைபெறும் கண்காட்சிகளில் வெளியீட்டாளர்கள், விற்பனையாளர்கள் நூற்களுக்கு 10% தள்ளுபடி வழங்குவது வாடிக்கையான நிகழ்வு. ஆனால் இங்கு புத்தகங்களுக்கு 25% தள்ளுபடி வழங்கப்பட்டது. இதில் வெளியீட்டாளர்கள், விற்பனையாளர்கள் நூற்களுக்கு 10% வழங்கும் தள்ளுபடி போக மீதம் 15% தள்ளுபடியை புதுச்சேரி அரசு“புத்தகங்கள் வாங்க அரசு மானியம்”-ஐ படிப்பதைத் தொடரவும்.