அறிவார்ந்த சிந்தனைகளுக்கான இதழ்

அறிவார்ந்த சிந்தனைகளுக்கான இதழ் (புதுமலர் – சிற்றிதழ் அறிமுகம்) மு.சிவகுருநாதன் முதல் இதழ்:           தோழர் கண.குறிஞ்சி ‘இடது’ என்ற மார்க்சியச் சிற்றேட்டை நடத்தி வந்தார். அது தனது முதற்சுற்றை முடித்துக்கொண்டது.  அதன் நீட்சியாகவும் இரண்டாம் சுற்றாகப் ‘புதுமலர்’ என்ற பெயரில் சமூக, அரசியல், கலை, இலக்கியக் காலாண்டிதழைத் தொடங்கியிருக்கிறார். பிரகடனங்கள் எவற்றையும் உரத்து முழங்கப் போவதில்லை, என்கிற அறிவிப்புடன் இதழ் வெளிவந்துள்ளது. ஆனால் இதழ் கருத்தியல் சார்ந்து இயங்கும் என்பதற்கு இதில் இடம்பெறும் படைப்புகளே சாட்சியாக“அறிவார்ந்த சிந்தனைகளுக்கான இதழ்”-ஐ படிப்பதைத் தொடரவும்.

கலைந்து போகுமா கல்விக் கனவு?

கலைந்து போகுமா கல்விக் கனவு? மு.சிவகுருநாதன்              பாஜக தலைமையிலான மத்திய அரசு உருவாக்கிய தேசியக் கல்விக் கொள்கையை (2020), தார்மிகரீதியாக எதிர்த்துவந்த ஒரே மாநிலம் தமிழ்நாடுதான். அதனால்தான், புதிய கல்விக் கொள்கைக்கு எதிராக, மாநில அளவிலேயே ஒரு கல்விக் கொள்கை உருவாக்கப்படுகிறது எனும் செய்தி பெரும் எதிர்பார்ப்பையும் நம்பிக்கையையும் ஏற்படுத்தியிருந்தது. ஆனால், மாநிலக் கல்விக் கொள்கை உருவாக்கக் குழுவில் ஏற்பட்டிருக்கும் சலனம், இது தொடர்பான நம்பிக்கைகளைச் சிதறடித்துவிடுமோ எனும் அச்சத்தை ஏற்படுத்தி இருக்கிறது. திமுக அரசின்“கலைந்து போகுமா கல்விக் கனவு?”-ஐ படிப்பதைத் தொடரவும்.

மணல்வீடு இதழ் 47 வெளிவந்துவிட்டது!

மணல்வீடு இதழ் 47 வெளிவந்துவிட்டது! மு.சிவகுருநாதன்         மணல்வீடு இதழ் 47 (ஏப்ரல் 2023) வெளிவந்துவிட்டது. பல்வேறு நெருக்கடியிலும் இதழ் தொடர்ந்து வெளியாவது மகிழ்ச்சியளிக்கிறது.  இதற்காக மணல்வீடு மு.ஹரிகிருஷ்ணன் அவர்களைப் பாராட்டியாக வேண்டும். அவர் தன்மீதான பாலியல் குற்றச்சாட்டிற்கு தலையங்கத்தில் விளக்கமளித்துள்ளார்.         இந்த இதழில் தமிழ்நாடு வேளாண் நிதிநிலை அறிக்கை 2023-2024 ஐ பாலசுப்பிரமணியம் முத்துசாமியின் கட்டுரை ஆராய்கிறது. தேசியத்திற்குப் பாதை சமைக்கும் திராவிட மாடலை ஞானயூனன் கட்டுரை விமர்சிக்கிறது.       மார்கரெட் அட்வுட் கவிதையின்“மணல்வீடு இதழ் 47 வெளிவந்துவிட்டது!”-ஐ படிப்பதைத் தொடரவும்.

+2 தேர்வு முடிவுகள்: ஒரு பார்வை மு.சிவகுருநாதன்             இன்று (08/05/2023) தமிழ்நாடு பள்ளிக் கல்வி வாரியத்தின் +2 தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளன.  தேர்ச்சி விழுக்காடு அதிகரித்துள்ளது. தேர்வு எழுதியோர்களின் எண்ணிக்கை மட்டுமே தேர்ச்சி விழுக்காட்டில் வரும். தேர்விற்கு வருகை தராத சுமார் 50,000 மாணவர்களை சேர்த்தால் விழுக்காடு குறையலாம்.          சென்ற ஆண்டைவிட அதிகம் என்பது பெருமையை விட அனைத்து மாணவர்களும் தேர்ச்சி என்ற அளவில் இருப்பதுதான் உண்மையான பெருமையாகும். அதற்கு தேர்வு முறைகள், வினாத்தாள்-ஐ படிப்பதைத் தொடரவும்.

இந்தியாவில் பாரிஸ்டர் காந்தி

இந்தியாவில் பாரிஸ்டர் காந்தி (மகாத்மாவின் கதை தொடரின் ஐந்தாவது அத்தியாயம்.) மு.சிவகுருநாதன்             தாயகம் திரும்பிய காந்திக்குப் பெரும்  அதிர்ச்சி காத்திருந்தது. யாரைப் பார்க்க வேண்டும் என்று நினைத்திருந்தாரோ,  யாரைக் கட்டித் தழுவி தனது அன்பை வெளிப்படுத்த நினைத்தாரோ அவர் உயிருடன் இல்லை என்பதே அது. காந்தி இங்கிலாந்தில் இருக்கும்போதே தாயார் புத்லிபாய் கரம்சந்த் காந்தி (1844-1891) மரணமடைந்து விட்டார். காந்தியால் ஊருக்கு வர இயலாது என்பதால் அச்செய்தியை சொல்லாமல் மறைத்துவிட்டனர். வீடு திரும்பியது அவருக்குச் சொல்லப்பட்ட“இந்தியாவில் பாரிஸ்டர் காந்தி”-ஐ படிப்பதைத் தொடரவும்.

புராணங்கள் மீது கட்டமைக்கப்படும் தலித் வாழ்வியல்

நூல் விமர்சனம்: புராணங்கள் மீது கட்டமைக்கப்படும் தலித் வாழ்வியல் மு.சிவகுருநாதன் ஒன்று:             துறவிநண்டு, திணைப்புனம் போன்ற கவிதை நூல்கள், நெற்குஞ்சம், கூனல்பிறை ஆகிய சிறுகதைத் தொகுப்புகள் மற்றும் சில ஆய்வுநூல்கள் வழியே அறியப்பட்ட தேன்மொழியின் முதல் நாவல் ‘அணுக்கி’. ‘அணுக்கி’யை தோழி, காதலி என்று சொல்லலாம். இந்நாவலில் வரும்  மகிழ்நன் – மங்களம் ஆத்தா;  மங்களம் ஆத்தா – முல்லை; ஜக்கரியா  – முல்லை; ஆதன் – முல்லை; இனியன் – சித்திரப்பாவை;  சித்திரப்பாவை –“புராணங்கள் மீது கட்டமைக்கப்படும் தலித் வாழ்வியல்”-ஐ படிப்பதைத் தொடரவும்.

தடுமாறுகிறதா பள்ளிக் கல்வித் துறை?

தடுமாறுகிறதா பள்ளிக் கல்வித் துறை? மு.சிவகுருநாதன்           கல்வித் துறையில் திமுக அரசு முன்னெடுத்த குறிப்பிடத்தக்க பணிகள் என இரண்டைக் குறிப்பிடலாம். முதலாவது, கல்விக் கொள்கை உருவாக்கக் குழு ஒன்றை அமைத்தது; மற்றொன்று ஆதிதிராவிடர், பழங்குடியினர், சீர்மரபினர் உள்ளிட்டோருக்கான நலப் பள்ளிகளை பள்ளிக் கல்வித் துறையின்கீழ் கொண்டுவருவதாக பட்ஜெட் கூட்டத்தொடரில் அறிவித்தது.         கல்விக் கொள்கை உருவாக்கும் குழுவின் பணி ஓராண்டு என வரையறுக்கப்பட்டது. இது ஓராண்டில் முடியக்கூடிய பணியல்ல. இதன்துணைக் குழுக்கள் ஓராண்டு கழித்து அமைக்கப்பட்டது“தடுமாறுகிறதா பள்ளிக் கல்வித் துறை?”-ஐ படிப்பதைத் தொடரவும்.