110 ஆண்டு ஓடம்போக்கி இயக்கு அணை!

110 ஆண்டு ஓடம்போக்கி இயக்கு அணை! மு.சிவகுருநாதன்           விளமல் கல் பாலம் என்றழைக்கப்படும் விளமல் இயக்கு அணை (ரெகுலேட்டர்) திருவாரூர்  ஓடம்போக்கி ஆற்றில் அமைந்துள்ளது.         இது 110 ஆண்டு பழமையானது. பிரிட்டிஷ் ஆட்சியில்  1912 இல் கட்டப்பட்டது. இன்று நாங்கள் மூவரும் (கவி, கயல்) இந்த இயக்கு அணையைப் பார்வையிட்டோம். சில படங்கள்… 100 வயதை  நெருங்கும் ரெகுலேட்டருடன் கூடிய விளமல் கல் பாலம்                                                     கட்டப்பட்ட ஆண்டு :1912                                                        100 வது“110 ஆண்டு ஓடம்போக்கி இயக்கு அணை!”-ஐ படிப்பதைத் தொடரவும்.

பாரதியின் தலைமறைவு வாழ்க்கையில்…

பாரதியின் தலைமறைவு வாழ்க்கையில்… மு.சிவகுருநாதன்         104 ஆண்டுகளுக்கு முன்பு 1918 இல் பாரதியின் தலைமறைவு வாழ்க்கையில் 10 நாள்கள் தங்கியிருந்த இடம் மேலநாகை என்னும் கிராமம்.  திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி வட்டம் நெடுவாக்கோட்டை ஊராட்சிக்கு உள்பட்ட மேலநாகை என்னும் இச்சிற்றூர் உள்ளது.     அங்கு  தியான மண்டபம் ஒன்றைக்  கட்டியிருக்கிறார்கள்.     27.05.2018  அன்று  மாலை எனது மூத்த மகள் கவிநிலாவுடன் ஒருமுறை  மேலநாகை சென்று வந்தேன். அப்போது எடுக்கப்பட்ட மூன்று படங்களும் இங்கே உள்ளன.“பாரதியின் தலைமறைவு வாழ்க்கையில்…”-ஐ படிப்பதைத் தொடரவும்.

பரண் 0009 தப்பாட்டம்: அகமும் புறமும்

பரண் 0009 தப்பாட்டம்: அகமும் புறமும் -மு.சிவகுருநாதன் ஓர் முன் குறிப்பு: வட்டார வழக்குகளை மொழிப்பிரயோகங்களை அதிகார வர்க்கம் இழிவானது என்று ஒதுக்கியே வந்துள்ளது. சோலை சுந்தரபெருமாளின் நாவல்கள், சிறுகதைகள் ஆகியன கல்லூரி, பல்கலை பாடநூல்களில் இடம்பெறுவது பல நேரங்களில் சர்ச்சைக்குள்ளாக்கப்படுகிறது. சோலை சுந்தரபெருமாள் நாவல்களில் பல மாற்றுக் கருத்துக்கள் உள்ளபோதிலும் வட்டார வழக்கு உள்ளிட்ட சில அம்சங்களுக்காக அவருடைய நாவல்களை நேர்மறையாக அணுகும்முறையை பல தடவை கடைபிடித்துவந்திருக்கிறேன். ஆனால் அவரது சமீபத்திய நாவல்களான மரக்கால், தாண்டவபுரம்“பரண் 0009 தப்பாட்டம்: அகமும் புறமும்”-ஐ படிப்பதைத் தொடரவும்.

பரண் – 0008 பலியாடுகள் – கணையாழி (புதுமலர்) சிறுகதை

பரண் – 0008 பலியாடுகள்  – கணையாழி (புதுமலர்)  சிறுகதை                                    -மு.சிவகுருநாதன் முன்கதை சுருக்கம்:        வாழ்வனுபவத்தை சிறுகதையாக்க கணையாழி இலக்கிய இதழில் புதுமலர் சிறுகதை  என்ற பகுதி தொண்ணூறுகளில் தொடக்கத்தில் ஆரம்பித்திருந்தார்கள். கி.கஸ்தூரிரங்கன் பொறுப்பில் வந்த கணையாழிக் காலமது. ஜூலை 1994 கணையாழி இதழில் என்னுடைய இந்த பலியாடுகள் சிறுகதை வெளியானது. இதை ஓர் சிறுகதை என்று சொல்வதைவிட பள்ளி வன்முறைக்கெதிரான பதிவு என்று வேண்டுமானால் சொல்லிக்கொள்ளலாம். இதில் வரும் எனது தொடக்கப்பள்ளி“பரண் – 0008 பலியாடுகள் – கணையாழி (புதுமலர்) சிறுகதை”-ஐ படிப்பதைத் தொடரவும்.

பரண் – 0007 :- தரப்படுத்தலின் அதிகாரமும் நசுக்கப்படும் கிளைமொழிகளும்

பரண் – 0007 :- தரப்படுத்தலின் அதிகாரமும் நசுக்கப்படும் கிளைமொழிகளும்                                                                               – மு.சிவகுருநாதன் (வட்டார வழக்கில் எழுதப்படுகிற படைப்புகளை பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகள் பாடமாக வைக்க மறுத்து வருகின்றன. அப்படி பாடமாக வைக்கப்பட்டாலும் பின்னாட்களில் எதிர்ப்பு வருகின்றது என்கிற பெயரில் அவைகள் நீக்கப்படுகின்றன. தொன்னூறுகளின் இறுதியில் சோலை சுந்தரபெருமாளின் ‘ஒரே ஒரு ஊர்ல…’ என்ற நாவல் ஒர் கல்லூரிப் பாடத்திட்டத்திலிருந்து நீக்கப்பட்டதையொட்டி இக்கடிதம் தினமணிக்கு எழுதப்பட்டது. ஆனால் தினமணி வெளியிடவில்லை. பிறகு ‘கேப்பியார்’ இதழில் வெளிவந்தது.“பரண் – 0007 :- தரப்படுத்தலின் அதிகாரமும் நசுக்கப்படும் கிளைமொழிகளும்”-ஐ படிப்பதைத் தொடரவும்.

பரண்-0006:- அ.மா.வின் சுபமங்களா நேர்காணல் எதிர்வினைக்கான பதில்

பரண்-0006:- அ.மா.வின் சுபமங்களா நேர்காணல் எதிர்வினைக்கான பதில்                                                                   -மு.சிவகுருநாதன் இடமிருந்து அப்துல் காதர், அ.மார்க்ஸ், மு.சிவகுருநாதன், பா.ரவிக்குமார், த.பிரிட்டோ 1995 இல் அ.மா.வின் நேர்காணலை சுபமங்களாவிற்காக கும்பகோணத்தில் த.பிரிட்டோ, மணலி அப்துல் காதர், லிங்கம், திருத்துறைப்பூண்டி ரவிக்குமார், மு.சிவகுருநாதன் ஆகிய நாங்கள் பதிவு செய்தோம். இதை த.பிரிட்டோ தொகுத்து எழுதினார். பின்னர் அ.மா.விடம் காட்டி திருத்தம் செய்து நேர்காணல் இறுதி வடிவம் பெற்றது. இந்த நேர்காணல் சுபமங்களா ஜூலை-1995 இதழில் வெளியானது. த.பிரிட்டோ, மணலி அப்துல்“பரண்-0006:- அ.மா.வின் சுபமங்களா நேர்காணல் எதிர்வினைக்கான பதில்”-ஐ படிப்பதைத் தொடரவும்.

பரண்-0005 : கிழக்குக் கடற்கரைச் சாலை, கடற்படை மற்றும் வேதாரண்யம்

பரண்-0005 : கிழக்குக் கடற்கரைச் சாலை, கடற்படை மற்றும் வேதாரண்யம்                                                                           – மு.சிவகுருநாதன் (நாளை (14.03.2012) இந்திய நாடாளுமன்றத்தில் ரயில்வே நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட உள்ளது. இதில் திருவாரூர்-காரைக்குடி, திருத்துறைப்பூண்டி-கோடியக்கரை ஆகிய அகலப் பாதைப் பணிகளுக்கு நிதி ஒதுக்கப்படுமா என்பது பெரும் கேள்விக் குறியாக உள்ளது. தொண்ணூறுகளின் மத்தியில் கிழக்குக் கடற்கரைச் சாலை வேண்டும் என்று போராடியவர்கள் இன்று அகல ரயில்ப்பாதைக்காக போராடிக்கொண்டுள்ளனர். டி.ஆர்.பாலு போன்ற காரியவாதிகளால் இது நடப்பது சத்தியமில்லை என்றே நினைக்கத்“பரண்-0005 : கிழக்குக் கடற்கரைச் சாலை, கடற்படை மற்றும் வேதாரண்யம்”-ஐ படிப்பதைத் தொடரவும்.

பரண்-0004 : பெண்களின் கூந்தலில் கட்டப்படும் தமிழ்ப் பண்பாடு

பரண்-0004 : பெண்களின் கூந்தலில் கட்டப்படும் தமிழ்ப் பண்பாடு -மு.சிவகுருநாதன் ஓர் முன் குறிப்பு:- தொழிற்சங்கவாதியும் இலக்கிய விமர்சகருமான தோழர் ஆர்.பட்டாபிராமன் அவர்களின் முயற்சியால் தோழர் என். வீரபாண்டியனின் ஆசிரியப் பொறுப்பில் ‘மேடை’ என்ற சிற்றிதழ் 1998 இல் மூன்று இதழ்கள் வெளியானது. முதலிரண்டு இதழ்களில் என்னுடைய கட்டுரைகள் வெளிடப்பட்டது. ‘மேடை’- மே- 1998 இல் பிரசுரமான இக்கட்டுரை மார்ச் -08 உலகப் பெண்கள் தினத்தையொட்டி பரண் பகுதியில் மீள் பிரசுரம் செய்யப்படுகிறது. ”நீ என்னை நேசிக்கிறாய்“பரண்-0004 : பெண்களின் கூந்தலில் கட்டப்படும் தமிழ்ப் பண்பாடு”-ஐ படிப்பதைத் தொடரவும்.

பரண் – 0003 ஒரு சிறு பத்திரிக்கைக் குறிப்பு

பரண் – 0003 ஒரு சிறு பத்திரிக்கைக் குறிப்பு சிறு பத்தரிக்கைகளின் நோக்கம் பலவாறு மாறித்தான் போயிருக்கிறது. அடிக்கடி நீர்க்குமிழ் போல் சிற்றிதழ்கள் தோன்றி மறைந்து கொண்டிருக்கின்றன. இதைக் குறையாகக் கொள்ளமுடியாது. இதன் நோக்கம் பற்றித்தான் சந்தேகப் படவேண்டிருக்கிறது. ‘நிராகரிக்கப்பட்ட படைப்புகளின் களம்’ என்று தஞ்சை ப்ரகாஷின் ‘குயுக்தம்’ வந்திருக்கிறது. வரவேற்போம். ஆனால் தன்னுடைய படைப்புகளுக்காக மட்டும் இதழ் தொடங்குவது நடந்து கொண்டுதானிருக்கிறது. இவ்வாண்டு (1995) ஜனவரியில் மணல் வீடு மாரப்பனின் ‘சதுக்கப்பூதம்’ வந்தது. அதிலுள்ள 7“பரண் – 0003 ஒரு சிறு பத்திரிக்கைக் குறிப்பு”-ஐ படிப்பதைத் தொடரவும்.

பரண்- 0002 : ‘கேப்பியார்’ இதழில் வெளியான குறிப்புகள்

பரண்- 0002 : ‘கேப்பியார்’ இதழில் வெளியான குறிப்புகள் கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளை அருகேயுள்ள பரணியரத்தலவிளை குக்கிராமத்திலிருந்து ‘கேப்பியார்’ என்றொரு சமூக, கலை,இலக்கிய இதழ் தொன்னூறுகளில் தொடர்ந்து வெளிவந்தது. கே.புஷ்பராஜ் (KPR) என்ற இலக்கிய, அரசியல் செயல்பாட்டளாரால் நடத்தப்பட்ட இப்பத்தரிக்கை அவருடைய பெயரில் வந்தாலும் மிகவும் சீரியசான இதழாக இது இருந்தது. வானவில் இலக்கிய வட்டம் என்ற அமைப்பை நடத்திய கேப்பியார் எல்லைத்தமிழன் என்ற புனைப்பெயரில் கவிதைகள் எழுதி வருபவர். குமாரசெல்வா, ஜெ.ஆர்.வி.எட்வர்ட் போன்றவர்களுடன் இணைந்து செயல்பட்டவர்.“பரண்- 0002 : ‘கேப்பியார்’ இதழில் வெளியான குறிப்புகள்”-ஐ படிப்பதைத் தொடரவும்.