07. காடுகளுக்காக மரணத்தை எதிர்கொண்ட போராளி

07. காடுகளுக்காக மரணத்தை எதிர்கொண்ட போராளி (இந்நூல் என் வாசிப்பில்… புதிய தொடர்) – மு.சிவகுருநாதன் (எதிர் வெளியீடாக டிச. 2014 –ல் வெளியான, பேரா.ச.வின்சென்ட் மொழிபெயர்த்த ‘காடுகளுக்காக ஒரு போராட்டம்’ – சிக்கோ மென்டிஸ் நூல் குறித்த பதிவு இது.) “இந்தக் காடு முழுவதையும் பாதுகாப்பது தான் எனது கனவு. ஏனென்றால் அது அதில் வசிக்கின்ற மக்களின் வருங்காலத்திற்கு உத்திரவாதம் தருகிறது. அது மட்டுமில்லை. அமேசான் பொருளாதாரத்தின் வளமான ஒரு பகுதி நமக்கு மட்டும் இல்லை;“07. காடுகளுக்காக மரணத்தை எதிர்கொண்ட போராளி”-ஐ படிப்பதைத் தொடரவும்.

06. புத்திசாலித்தனமான முட்டாள் கதைகள்

06. புத்திசாலித்தனமான முட்டாள் கதைகள் (இந்நூல் என் வாசிப்பில்… புதிய தொடர்) – மு.சிவகுருநாதன் (உயிர்மை பதிப்பக வெளியீடாக டிச. 2009 –ல் வெளியான, சஃபி மொழிபெயர்த்த முல்லா நஸ்ருத்தீன் கதைகள் ‘என்றார் முல்லா’ நூல் குறித்த பதிவு இது.) நீதிக்கதைகள் என்றதும் நமக்கு பல்வேறு கதைகள் நினைவுக்கு வருகின்றன. பீர்பால், கதைகள், தெனாலிராமன் கதைகள், பஞ்சதந்திரக் கதைகள், ஈசாப் நீதிக்கதைகள், புராணக் கதைகள், ராமாயண-மகாபாரதக் கதைகள் என்று நிறைய இருக்கின்றன. நமது அரசுகள் பாடநூல்களில் இத்தகைய“06. புத்திசாலித்தனமான முட்டாள் கதைகள்”-ஐ படிப்பதைத் தொடரவும்.

05. மத நிறுவனத்திற்குள்ளே ஒடுக்கப்பட்ட மக்களின் கலகங்கள்

05. மத நிறுவனத்திற்குள்ளே ஒடுக்கப்பட்ட மக்களின் கலகங்கள் (இந்நூல் என் வாசிப்பில்… புதிய தொடர்) – மு.சிவகுருநாதன் (புலம் வெளியீடாக (டிச.2014) வந்துள்ள ‘நாமசூத்திரர்கள் இயக்கம்’ – சேகர் பந்தோபாத்யாயாவின் (தமிழில்: அப்பணசாமி) குறுநூல் குறித்த பதிவு.) ஒடுக்கப்பட்ட மக்களின் போராட்டங்கள் பல்வேறு வடிவங்களில் வெளிப்பட்டுள்ளன. வருண தர்மத்தை கட்டி சாதியை வளர்க்கும் வைதீக மத நிறுவனங்களுக்குள்ளேயும் வெளியேயும் பல கலகங்கள் வரலாற்றின் நெடுகிலும் நடைபெற்றுள்ளன. நம்மூரில் நந்தன் செய்த கலகத்தைப் போல கிழக்கு வங்கத்தில் அந்த்யஜா“05. மத நிறுவனத்திற்குள்ளே ஒடுக்கப்பட்ட மக்களின் கலகங்கள்”-ஐ படிப்பதைத் தொடரவும்.

வரலாறு முக்கியம் அமைச்சரே!

வரலாறு முக்கியம் அமைச்சரே! – மு.சிவகுருநாதன் குல்ஜாரிலால் நந்தா என்றொரு பெயரைக் கேள்விப்பட்டதுண்டா? காந்தியவாதி, பொருளாதார அறிஞர் என்ற சிறப்புகள் பெற்ற இவர் இருமுறை இந்தியாவின் தற்காலிகப் பிரதமராக பதவி வகித்திருக்கிறார். ஜவகர்லால் நேரு, லால்பகதூர் சாஸ்திரி ஆகிய இரு இந்தியப் பிரதமர்கள் மறைந்த வேளையில் தலா 13 நாள்கள் தற்காலிகப் பிரதமராக பொறுப்பேற்றுள்ளார். நேருவின் மரணத்திற்குப் பிறகு 1964 மே 27 லிருந்து ஜூன் 09 முடிய 13 நாள்களும், லால்பகதூர் சாஸ்திரியின் திடீர் மறைவிற்குப்“வரலாறு முக்கியம் அமைச்சரே!”-ஐ படிப்பதைத் தொடரவும்.

கல்விக்குழப்பங்கள் தொடர் பகுதி 46 முதல் 50முடிய.

கல்விக்குழப்பங்கள் தொடர் பகுதி 46 முதல் 50முடிய. 46. முதலாம் குலோத்துங்கனின் இரண்டாம் கலிங்கப்போர் ஒன்பதாம் வகுப்பு தமிழ்ப் பாடநூலைப் (இரண்டாம் பருவம்) புரட்டிக் கொண்டிருந்தேன். ஜயங்கொண்டாரின் இரு கலிங்கத்துப்பரணி செய்யுள்கள் அதில் உள்ளன. நூற்குறிப்பில் முதலாம் குலோத்துங்கன் வென்ற கலிங்க மன்னன் அனந்தபன்மன் என்று வருகிறது. இரண்டாம் கலிங்கப் போரின்போது கலிங்க அரசன் அனந்தவர்மன் என்பதே சரியானது. அனந்தவர்மன் சோழகங்கன் என்று அழைக்கப் பட்டவன். இதை அனந்தவர்மன் சோடகங்கன் என்றும் சொல்வாரும் உண்டு. அக்காலத்தில் அரசர்கள்“கல்விக்குழப்பங்கள் தொடர் பகுதி 46 முதல் 50முடிய.”-ஐ படிப்பதைத் தொடரவும்.

என்ன செய்யலாம் தீபாவளியை! (தீபாவளி: சில குறிப்புகள்)

என்ன செய்யலாம் தீபாவளியை! (தீபாவளி: சில குறிப்புகள்) – மு.சிவகுருநாதன் தீபாவளி ஆரியப் பண்டிகை; எனவே திராவிடர்கள் கொண்டாட வேண்டாம்! தீபாவளி இந்துப் பண்டிகை; ஆகவே தமிழர்களே கொண்டாடதீர்கள்! தீபாவளி சமணப் பண்டிகை; இந்துக்கள் ஏன் கொண்டாட வேண்டும்? தீபாவளி இந்துப் பண்டிகையே இல்லை; பிறகு ஏன் கொண்டாடவேண்டும்? அசுரன் நரகாசுரன் திராவிடன் (தமிழன்); அவன் கொலையுண்டதை கொண்டாடலாமா? வர்த்தமான மகாவீரர் வடநாட்டவர்; அவர் இறப்பை தமிழர்கள் ஏன் கொண்டாடவேண்டும்? தீபாவளியைக் கொண்டாடதீர்கள்! மாறாக அனைவரும் பொங்கல்“என்ன செய்யலாம் தீபாவளியை! (தீபாவளி: சில குறிப்புகள்)”-ஐ படிப்பதைத் தொடரவும்.