ஓசை நயமுள்ள பாடல்கள் வழிக் கற்பித்தல்

ஓசை நயமுள்ள பாடல்கள் வழிக் கற்பித்தல் மு.சிவகுருநாதன்         குழந்தைக் கவிஞர் அழ.வள்ளியப்பா (1922-2022) அவர்களின் 150வது பிறந்த ஆண்டைக் கொண்டாடி வருகிறோம். குழந்தைகளுக்காக இனிய, எளிய பாடல்களை எழுதி அனைவராலும் விரும்பப்பட்டவர். அவர் வாழ்ந்த காலத்தில் மொழி இன்றுள்ளது போல் அவ்வளவு எளிமையாக இல்லை; கலைச்சொல்லாக்கங்களும் குறைவு. இருப்பினும் எளிய மொழி நடையால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் ஈறாக அனைவரின் உள்ளத்தையும் கொள்ளை கொண்டவர்.          இத்தகு இனிமைக்கும் எளிமைக்கும் மகாகவி பாரதியே முன்னோடி. அவரது” ஓசை நயமுள்ள பாடல்கள் வழிக் கற்பித்தல்”-ஐ படிப்பதைத் தொடரவும்.

அறிவியலையும் சமத்துவத்தையும் வலியுறுத்தும் பாடல்கள்

 அறிவியலையும் சமத்துவத்தையும் வலியுறுத்தும் பாடல்கள் ஜெ.கிருஷ்ணமூர்த்தி, செயலர், பள்ளிக்கல்வி பாதுகாப்பு இயக்கம்,      தமிழ்நாடு-புதுச்சேரி         கேள்விகளுக்குப் பதில் சொல்வது மட்டும்தான் கல்வி என்ற நிலை மாற வேண்டும். சிறந்த  கேள்விகளைக் கேட்கும் திறனை வளர்ப்பதே    தலைசிறந்த கல்வி என்ற நிலை வர வேண்டும்.           தகவல்கள் தரும் புத்தகங்கள் ஏராளமாய் உள்ளன. தகவல்களைத் தேடி அறிந்து கொள்ளத் தூண்டும் புத்தகங்களே இன்றைய தேவை. ஒவ்வொரு பாடத்திற்குள்ளும் ஒருங்கிணைந்த கல்வி அவசியம். சமூகப் பிரச்சினைகளைத் தீர்க்கும் தேடல்“அறிவியலையும் சமத்துவத்தையும் வலியுறுத்தும் பாடல்கள்”-ஐ படிப்பதைத் தொடரவும்.

சூழலியல்   உணர்வூட்டும் பாடல்கள்

 சூழலியல்   உணர்வூட்டும் பாடல்கள்   மு.சிவகுருநாதன்            இன்றைய சூழலில் கற்றல்-கற்பித்தல் செயல்பாடுகள் மிகவும் சிக்கலான ஒன்றாக மாற்றப்பட்டுள்ளது. மின்னணு ஊடக வலையில் குழந்தைகளைச் சென்றடைந்திருக்கும் பொருண்மைகள் நம்மை அச்சப்பட வைக்கின்றன. இன்றைய குழந்தைகளில் ஒருபகுதியினர் இந்த வலையில்தான் சிக்கியுள்ளனர். இதன் மறுபுறம் இந்த மின்னணு வசதிகள் எட்டாத அடித்தட்டுக் குழந்தைகளும் உள்ளனர். இவர்கள் இரண்டு தரப்பிற்குமான பெரிய  இடைவெளி கல்வி உள்ளிட்ட அனைத்துத் தளங்களிலும் எதிரொளிக்கவே செய்கிறது. இதை வெறும் கற்றல் இடைவெளி என்று மட்டும் கடந்துவிட முடியாது;“சூழலியல்   உணர்வூட்டும் பாடல்கள்”-ஐ படிப்பதைத் தொடரவும்.

‘பன்மை’யின் உலக புத்தக தின வெளியீடு: பாட்டும் பாடமும்

‘பன்மை’யின் உலக புத்தக தின வெளியீடு: பாட்டும் பாடமும் (‘பன்மை’யின் ஆறாவது வெளியீடு)                 ‘பன்மை’யின் ஆறாவது வெளியீடாக குருங்குளம் முத்து ராஜாவின்  ‘பாட்டும் பாடமும்’ என்கிற சிறுவர் பாடல்கள் உலக புத்தக தினத்தன்று (ஏப்ரல் 23) வெளியாக இருக்கிறது. நூலின் அணிந்துரையிலிருந்து…           ‘பாட்டும் பாடமும்’ புத்தகத்திலுள்ள 75 பாடல்களையும் ஒன்று விடாமல் வாசித்தேன். சில பாடல்கள் என்னை அதற்குள் வசிக்க வைத்துவிட்டன. அறிவியல் கருத்துள்ள பாடல்கள், தமிழ் மொழி/தமிழன் பெருமை உணர்த்தும் பாடல்கள், சூழலியல்“‘பன்மை’யின் உலக புத்தக தின வெளியீடு: பாட்டும் பாடமும்”-ஐ படிப்பதைத் தொடரவும்.

மணலி அப்துல்காதரின் ‘நன்னூல்’ பதிப்பக வெளியீடுகள்

மணலி அப்துல்காதரின் ‘நன்னூல்’ பதிப்பக வெளியீடுகள் மு.சிவகுருநாதன்              இன்று (15/04/2022) நெடுநாளைய நண்பர் தோழர் மணலி அப்துல்காதர் திருவாரூர் வந்திருந்தார். 1990களில் ‘கிழக்கு’ எனும் சிற்றிதழ் நடத்தியவர். அப்போதிலிருந்து பழக்கம். ‘நிறப்பிரிகை’ கும்பகோணத்தில் நடத்திய புதுமைப்பித்தன் கருத்தரங்கில்தான் முதன்முதலில் சந்தித்தோம். அன்றைய தினம் மறைந்த த.பிரிட்டோ, கொளப்பாடு ச.பாண்டியன் போன்றோருடன் நண்பராகும் வாய்ப்பும் அமைந்தது. பிறகு ராயநல்லூர் பூங்குன்றப் பாண்டியன், இரவிக்குமார், செல்லப்பா போன்றோருடன் நட்புடன் வாசிப்பும் தொடர்ந்தது. தொடர்ந்து இல்லாவிட்டாலும் அவ்வப்போது இலக்கிய, நுண்ணரசியல்“மணலி அப்துல்காதரின் ‘நன்னூல்’ பதிப்பக வெளியீடுகள்”-ஐ படிப்பதைத் தொடரவும்.

இன்று நிலாக்களுடன் தீபங்குடி ஸ்ரீ தீபநாயக ஸ்வாமி ஜினாலயம்…

இன்று நிலாக்களுடன் தீபங்குடி ஸ்ரீ தீபநாயக ஸ்வாமி ஜினாலயம்… மு.சிவகுருநாதன்       இன்று (15/04/2022) (புனித) வெள்ளியன்று நிலாக்களுடன் தீபங்குடி ஸ்ரீ தீபநாயக ஸ்வாமி ஜினாலயம் (திகம்பர சமணப் பள்ளி) சென்று வந்தோம். ஏற்கனவே ஐந்துமுறை அங்கு சென்றுள்ளேன். இன்று முதன்முறையாக கவி நிலா மற்றும் கயல் நிலா உடன்…       திருவாரூர் கும்பகோணம் சாலையில் திருவாரூரிலிந்து 10 கி.மீ. தொலைவில் அரசவனங்காடு என்னும் ஊருக்கு உள்ளேயுள்ள அழகான சிற்றூர் தீபங்குடி ஆகும். கலிங்கத்துப்பரணி பாடிய ஜெயங்கொண்டார்இன்று நிலாக்களுடன் தீபங்குடி ஸ்ரீ தீபநாயக ஸ்வாமி ஜினாலயம்…-ஐ படிப்பதைத் தொடரவும்.

உணவும்  உலகமும்

உணவும்  உலகமும் மு.சிவகுருநாதன்         உலகில் ஐந்து வகையான காலநிலைகள் நிலவுகின்றன.  அவை வெப்பமண்டல (Tropical), மித வெப்ப மண்டல (Moderate or Temperate), வறண்ட (Dry), கண்ட (Continental), துருவக் காலநிலைகள் (Polar)  என வகைப்படுத்தப்படுகின்றன. இவற்றில் உட்பிரிவுகளும் உண்டு. இதனையொட்டியே இயற்கைத் தாவரங்களும் வேளாண் பயிர்களும் வளர்கின்றன. நிலத்தோற்றம், மண்வளம், நீர்வளம், பணியாளர்கள்  போன்றவற்றைவிட வேளாண்மையை நிர்ணயிக்கும் காரணிகளில் முதன்மையான ஒன்றாக காலநிலை (Climate) இருக்கிறது. உதாரணமாக மிதவெப்பமண்டலப் பயிர் கோதுமையை வெப்பமண்டலமான தென்னிந்தியாவில்“உணவும்  உலகமும்”-ஐ படிப்பதைத் தொடரவும்.