கற்றல்விளைவுகள்:தொடரும் திணிப்புகள்

கற்றல் விளைவுகள்: தொடரும் திணிப்புகள் மு.சிவகுருநாதன்            இன்று பள்ளிக்கல்வியில் வேறு எதைக்காட்டிலும் இன்று கற்றல் விளைவுகளுக்கு அதிக முக்கியத்துவம் தரப்படுகிறது. பயிற்சியில் எல்லாம் கற்றல் விளைவுகள் பற்றியே கதைக்கிறார்கள். இதற்கு நீண்ட விளக்கமெல்லாம் அளிக்கப்படுகிறது. மேலிருந்து கீழ்வரை கல்வித்துறையை மேற்பார்வையிடும் அலுவலர்கள் கற்றல் விளைவு பற்றியே வினா எழுப்புகின்றனர்.  வேறு எதுவும் இல்லாவிட்டாலும் பரவாயில்லை, கற்றல் விளைவுகள் இருந்தால் போதும் என்றாகிவிட்டது.        கற்றல் நோக்கங்கள், விளைவுகள் எல்லாம் மாணவர்களுக்கு அளிக்கப்படும் பாடநூலை ஒட்டியே அமைபவை.“கற்றல்விளைவுகள்:தொடரும் திணிப்புகள்”-ஐ படிப்பதைத் தொடரவும்.

பாசிஸ்ட்கள் கைகளில் கல்வி

பாசிஸ்ட்கள் கைகளில் கல்வி மு.சிவகுருநாதன்            தேசியக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம்  (NCERT) ஒன்றிய அளவில்  பள்ளிகளுக்கான கலைத்திட்டம், பாடத்திட்டம் போன்றவற்றை வடிவமைத்து,  1-12 வகுப்புகளுக்கான பாடநூல்களையும் தயாரித்து வெளியிடுகிறது. ஒன்றிய அரசின் கல்வித்துறையின் கீழ் இவ்வமைப்பு செயல்படுகிறது. இந்தப் பாடநூல்களையே மத்தியக் கல்வி வாரியம் (CBSE), கேந்திரிய வித்யாலயா (KV), நவோதயா (NV) போன்ற பள்ளிகள் பயன்படுத்துகின்றன.           மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் (SCERT) மாநில வாரியத்திற்கான பாடத்திட்டம்“பாசிஸ்ட்கள் கைகளில் கல்வி”-ஐ படிப்பதைத் தொடரவும்.

இன்னும் எவ்வளவு காலம் ஏமாறுவது?

இன்னும் எவ்வளவு காலம் ஏமாறுவது? மு.சிவகுருநாதன்          தேசியக் கல்விக் கொள்கை 2020ஐ ஏற்கவில்லை எனவும் அதை அமல்படுத்த மாட்டோம் என்று தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. மேலும் தமிழ்நாட்டிற்கென தனியாக கல்விக் கொள்கையை உருவாக்க ஓர் உயர்மட்டக் குழு ஒன்றையும் அமைத்துள்ளது. தமிழக முதல்வர், உயர்கல்வி மற்றும் பள்ளிக்கல்வி அமைச்சர்கள் நமது கல்விக் கொள்கையின் படியே நாம் செயல்படுவோம் என்று அடிக்கடி கூறி வருகின்றனர்.          ஆனால் அரசின் பல கல்வித் திட்டங்கள் அரசின் தேசியக் கல்விக்கொள்கை“இன்னும் எவ்வளவு காலம் ஏமாறுவது?”-ஐ படிப்பதைத் தொடரவும்.

பாடநூல்களில் வெறுப்பு அரசியல்

பாடநூல்களில் வெறுப்பு அரசியல் மு.சிவகுருநாதன்          குழந்தைகளுக்கான பாடநூல்கள் மிகுந்த கவனத்துடனும் பொறுப்பு உணர்வுடனும் எழுதப்பட வேண்டியது அவசியம். தவறான செய்திகளும் கருத்துகளும் ஒருபுறமிருக்க, சனாதனத்துக்கு, இந்துத்துவத்துக்கு வலுச் சேர்க்கும் கருத்தோட்டங்கள் பள்ளிப் பாடநூல்களில் தூவப்பட்டிருப்பது அதிர்ச்சியளிக்கக் கூடியதாகும். பாடப் புத்தகங்களில் வெறுப்பு அரசிலைப் புகுத்தி குழந்தைகளின் மனத்தில் நஞ்சை விதைக்க அனுமதிக்கக் கூடாது. அப்படியான நச்சுக் கருத்துகளை இனங்கண்டு அகற்ற வேண்டியது காலத்தின் கட்டாயம்.           தமிழ்நாட்டுப் பாடநூல்களில் காணப்படும் இத்தகைய விஷயங்களிலிருந்து சிலவற்றை இங்கு“பாடநூல்களில் வெறுப்பு அரசியல்”-ஐ படிப்பதைத் தொடரவும்.

+2 தேர்வு முடிவுகள்: ஒரு பார்வை மு.சிவகுருநாதன்             இன்று (08/05/2023) தமிழ்நாடு பள்ளிக் கல்வி வாரியத்தின் +2 தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளன.  தேர்ச்சி விழுக்காடு அதிகரித்துள்ளது. தேர்வு எழுதியோர்களின் எண்ணிக்கை மட்டுமே தேர்ச்சி விழுக்காட்டில் வரும். தேர்விற்கு வருகை தராத சுமார் 50,000 மாணவர்களை சேர்த்தால் விழுக்காடு குறையலாம்.          சென்ற ஆண்டைவிட அதிகம் என்பது பெருமையை விட அனைத்து மாணவர்களும் தேர்ச்சி என்ற அளவில் இருப்பதுதான் உண்மையான பெருமையாகும். அதற்கு தேர்வு முறைகள், வினாத்தாள்-ஐ படிப்பதைத் தொடரவும்.

தடுமாறுகிறதா பள்ளிக் கல்வித் துறை?

தடுமாறுகிறதா பள்ளிக் கல்வித் துறை? மு.சிவகுருநாதன்           கல்வித் துறையில் திமுக அரசு முன்னெடுத்த குறிப்பிடத்தக்க பணிகள் என இரண்டைக் குறிப்பிடலாம். முதலாவது, கல்விக் கொள்கை உருவாக்கக் குழு ஒன்றை அமைத்தது; மற்றொன்று ஆதிதிராவிடர், பழங்குடியினர், சீர்மரபினர் உள்ளிட்டோருக்கான நலப் பள்ளிகளை பள்ளிக் கல்வித் துறையின்கீழ் கொண்டுவருவதாக பட்ஜெட் கூட்டத்தொடரில் அறிவித்தது.         கல்விக் கொள்கை உருவாக்கும் குழுவின் பணி ஓராண்டு என வரையறுக்கப்பட்டது. இது ஓராண்டில் முடியக்கூடிய பணியல்ல. இதன்துணைக் குழுக்கள் ஓராண்டு கழித்து அமைக்கப்பட்டது“தடுமாறுகிறதா பள்ளிக் கல்வித் துறை?”-ஐ படிப்பதைத் தொடரவும்.

+2 பொதுத்தேர்வை எழுத 50,000 பேர் ஏன் வரவில்லை

+2 பொதுத்தேர்வை எழுத 50,000 பேர் ஏன் வரவில்லை? மு.சிவகுருநாதன்       தமிழ்நாட்டுக் கல்வி வாரியத்தின்  +2 பொதுத்தேர்வு மார்ச் 13 (13/03/2023)  தொடங்கி நடைபெற்று வருகிறது. இன்று (15/03/2023)  இரண்டாவது தேர்வு நடைபெற்றுள்ளது. இதுவரையில் நடந்த இரு தேர்வுகளையும் 50,000 பேர் எழுதவில்லை என்று தகவல் வெளியாகியுள்ளது. ஊடகங்களில் இது அதிர்ச்சியளிக்கும் செய்தியாகப் பார்க்கப்படுகிறது.         தமிழ்நாட்டின் கல்வியைத் தொடர்ந்து கவனித்துவரும் எவருக்கும் இது அதிர்ச்சியளிக்கக் கூடிய ஒன்றாக இருக்காது“+2 பொதுத்தேர்வை எழுத 50,000 பேர் ஏன் வரவில்லை”-ஐ படிப்பதைத் தொடரவும்.

  பள்ளிக் கல்வித்துறை – இதழ்கள்- நூலக வாசிப்பு

பள்ளிக் கல்வித்துறை – இதழ்கள்-  நூலக வாசிப்பு மு.சிவகுருநாதன்           வெறும் புள்ளிவிவரங்களையும் EMIS ஐ மட்டும் பிடித்துத் தொங்கும் தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை மருந்திற்கு சில நல்ல செயல்களையும் செய்ய முனைகிறது.  இவை பாதியில் நின்றுபோகாமல் தொடர்ந்தால் நல்லது. மேலும் இம்முயற்சிகள் எந்தத் திசைநோக்கில் பயணிக்கிறது என்பதில்தான் இதன் தாக்கமும் வெற்றியும் அடங்கியிருக்கிறது.    1-5 வகுப்புக் குழந்தைகளுக்கு ‘ஊஞ்சல்’ இதழும் 6-9 வகுப்புக் குழந்தைகளுக்கு  ‘தேன்சிட்டு’ இதழும் ஆசிரியர்களுக்கு ‘கனவு”  பள்ளிக் கல்வித்துறை – இதழ்கள்- நூலக வாசிப்பு”-ஐ படிப்பதைத் தொடரவும்.

கல்விக் கொள்கையா? காவிக்கொள்கையா?

கல்விக் கொள்கையா? காவிக்கொள்கையா?              மேலே கண்ட தலைப்பிலான எனது கல்வி குறித்த 15 கட்டுரைகள் அடங்கிய நூல் 46வது சென்னைப் புத்தகக் காட்சியை ஒட்டி வெளியிடத் திட்டமிடப்பட்டுச் சற்றுத் தாமதமாக கண்காட்சி முடிந்ததும் வெளியாகியுள்ளது.       இந்நூலை ‘நன்னூல் பதிப்பகம்’ வெளியிட்டுள்ளது. நண்பர் நன்னூல் மணலி அப்துல்காதர் நூலை அழகாக வெளியிட்டுள்ளார். அட்டை மற்றும் நூல் வடிவமைப்பு நண்பர் சு.கதிரவன்.       இந்நூலில் இடம்பெறும் கட்டுரைகள் 2019 – 2022 காலகட்டங்களில் காக்கைச் சிறகினிலே, பேசும்“கல்விக் கொள்கையா? காவிக்கொள்கையா?”-ஐ படிப்பதைத் தொடரவும்.

மடங்களும் மடாலயங்களும்

மடங்களும் மடாலயங்களும்  (தமிழகப் பாடநூல்களில் இந்துத்துவம் – 10) மு.சிவகுருநாதன்             தமிழ் இலக்கணத்தில் ‘விகாரம்’ என்பது இயல்பு மாற்றமாகும். செய்யுளில் எதுகை, மோனைகளுக்காகவும் ஓசை ஒத்திசைவுக்காகவும் சில சொற்கள் தன் இயல்பு மாற்றத்தோடு கையாளப்படுகின்றன. அவை, வலித்தல் விகாரம், மெலித்தல் விகாரம், நீட்டல் விகாரம், குறுக்கல் விகாரம், விரித்தல் விகாரம், தொகுத்தல் விகாரம் என வகைப்படுத்தப்படும்.         மேலும் ‘விகாரம்’ என்பதற்கு கோரம், அவலட்சணம் என்றெல்லாம் பொருளுண்டல்லவா! பவுத்த வழிபாட்டிடமான விகார் (Vihar) என்பதை விகாரைமடங்களும் மடாலயங்களும்-ஐ படிப்பதைத் தொடரவும்.